Friday, February 03, 2012

550. நானும் photographyயும் ... 5
*
பதிவர்கள் பலர் எடுத்த நிழற்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நெடுநாளாகப்  பார்க்காமல் விட்டுப்போன பொக்கிஷம் Naufal என்பவரின் படப் பதிவுகள். புகைப்படங்களை  வகை வகையாக எடுப்பதில் வல்லுனர்.  படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நிறைய experimental shots எடுப்பதில் அவருக்கிருக்கும் ஆவல் அவர் படங்களின் கோர்வைகளைப் பார்க்கும்போதே தெரிகிறது - panning, intentional shake, intended out of focus, long exposure shots... பல படங்கள் இது எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்விக் குறியுடன் எனக்குத் தோன்றின. இவரது தொகுப்பிலிருந்து எந்தெந்த படங்களை எடுத்துப் போடலாமென்பதே ஒரு கடினமான தேர்வு எழுதுவதுபோல் சிரமமாக இருந்தது.
NAUFAL
மூன்றாவது கண் எங்கேயோ இருக்குது!!

JUST A DROP, THAT IS ALL!
ஒரு துளி நீரும் ஜாலம் செய்கிறது;

LIGHT & SHADE 
விரிந்து பரந்த ஒரு பாலைவனமும் அழகுடன் பொலிகிறது.
A HIGH KEY PHOTO
high key photo - சரி .. ஆனால் அந்தக் கண்கள் எப்படி இவ்வளவு அழகாக பதியப்பட்டன? கேள்விதான் .. பதில் தெரியவில்லை.

DRAMATIC  (தனுஷ்கோடி)
தனுஷ்கோடியை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் உடைந்த கட்டிடங்களும், வானமும், கடலும், மணலும் பல கதைகள் சொல்லும். இயற்கையின் கொடூரம் இன்னும் அங்கே தங்கியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கொடூரத்தின் சில அடையாளங்களையும் அழகான வானத்தையும் நன்கு சிறைப்படுத்தியிருந்தார்.
A GRIPPING SHOT
இந்தப் படத்தைத் தயவு செய்து ஒவ்வொருவரும் அதன் ஒரிஜினலைப் பார்க்க வேண்டும். மேலேயுள்ள கிழிந்து தொங்கும் ஒவ்வொரு பழைய கீற்றும் மிக அழகாக இருக்கும். அந்தக் கீற்றுகளும், அமர்ந்திருக்கும் மனிதனும் படத்தை ஒரு ஆழமான படமாக மாற்றியிருக்கும். பார்க்கும் நம் மனதே இறுகும். ஆதரவற்ற ஒரு மனிதனின் பாவகரமான சூழல் நம்மை நிச்சயமாகத் தொடும்.
LOVELY CAPTURE
இது போன்ற படம் எடுக்க எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு ஆசை. gray tones மிக அழகாக படம் முழுவது விரவிக் கிடைப்பது எவ்வாறோ? பாப்பாவை இப்படி நிற்க வைப்பதற்காகவே 'படக்காரரைத்' தட்டிக் கொடுக்க வேண்டும்! குழந்தையும் பொறுமையாக நிற்க வேண்டும். நான் சொன்னது போல் படத்தின் எந்த இடமும் மறையாமல் gray tonesவரவேண்டும்.

அந்தக் காலத்தில் நிழற்படங்களைப் பற்றியெல்லாம்  நான் வகுப்பெடுத்திருக்கிறேனாக்கும்!!! ஆச்சரியப்படாதீர்கள். நானெல்லாம் 'அந்தக் காலத்து எக்ஸ்பெர்ட்!!!  அப்போது இதுபோன்று தனிப்பட்டவர்களை - profile or something like that -  எடுக்கும்போது, படத்தைப் பார்ப்பவர்கள் 'இந்தப் படத்தில் இருப்பது யார்? என்று கேட்டால் அந்தப் படம் நல்ல படமில்லை; ஆனால் படத்தைப் பார்த்ததும் இந்தப் படத்தை எடுத்தவர் யார்? என்று கேட்டால் மட்டுமே அந்தப் படம் சிறந்த படம்' என்று நான் define செய்தது உண்டு.

ஆமாம் ... இந்தக் குழந்தையின் படத்தை எடுத்தது யார்??!!  :-)


EVERYDAY SCENE BUT AN ARTIST'S LOOK!
நாம் பார்க்காத கூட்டங்களா .. இருப்பினும் அந்தக் கூட்டத்தை இப்படி ஒரு கற்பனையோடு பார்த்தது ஒரு கலைஞன். அது தான் இப்படி ஒரு அசையும் கூட்டத்தை எடுத்திருக்கிறார்.20 வினாடிகள் அசையாமல் நின்று தன்னையே படமெடுத்துள்ளார். நீர் திரவ நிலையிலிருந்து கடின நிலைக்குப் போனது போல் 'கட்டித் தங்கமான' படம் இது.

எம்புட்டு படிச்சாலும் சிலதுகளுக்கு மண்டையில எதுவும் ஏற மாட்டேங்குது. இந்த மாதிரி ஆளுக படத்தைப் பார்த்தா ஒண்ணு பெட்டியைத் தூக்கிப் போடணும்னு சில சமயம் தோணுது; இன்னொரு நாள் நமக்காச்சு .. நம் பொட்டிக்காச்சுன்னு தோணுது.
எப்படியோ வண்டி ஓடுது ....

*
Another great credit to Naufal: பொதுவாக 'பொட்டி தூக்குபவர்கள்' தங்கள் தொழில் 'ரகசியங்களை' அக்கறையாகப் பாதுகாப்பார்கள். ஆனால் இவர் தன் பட்ங்களோடு விளக்கங்களையும் சேர்த்தே தருகிறார். All exposure details are there for most of the pix.  A special thanks to him for this.


*14 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதமான படங்களைப் பற்றி அதி அற்புதமாக ஒரு பகிர்வு.

சித்திரவீதிக்காரன் said...

naufal உண்மையிலேயே அற்புதமான புகைப்படக்காரர். ஒவ்வொரு படமும் அருமை. தனுஷ்கோடி படம் ரொம்ப அழகாக இருந்தது. நான் இன்னும் தனுஷ்கோடி போனதில்லை. போகவேண்டும் போலிருக்கிறது. நல்ல பகிர்வு. நன்றி.

முகம்மது அஸிர்... said...

மச்சான் உங்களது அனைத்து படைப்புகளூம் மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்...

sultangulam@blogspot.com said...

அருமையான போட்டோகிராபர். நல்ல படங்கள். சிறந்த பதிவு. நன்றி

Jazeela said...

படங்களும் அதை ரசித்த விதமும் அருமை. என் பதிவை நானே படித்தது போன்ற உணர்வு. என்ன மாதிரியே ரசிக்கிறீங்கன்னு சொல்ல வரேன் :-)

குசும்பன் said...

தருமி ஐய்யா, மிகைப்படுத்தாம உண்மைய சொல்லனும் என்றால் இங்கிருக்கும் நண்பர்களிடம் இவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகம். இவர் படங்களை பார்த்து பலர் கேமிரா வாங்கியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்!

Unknown said...

எனக்கு முதல் படமும்,மூனாவது படமும் மிகவும் பிடித்து இருந்தது
தெளிவான படங்கல் அருமையாக உள்ளது.

தருமி said...

ராமலஷ்மி,
எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். உங்க படம் பார்த்த பிறகுதான் மற்ற எல்லாரின் படங்களையும் பார்த்து வெறுக்க .. இல்லையில்லை .. மயங்க ஆரம்பித்தேன்.

தருமி said...

சித்திரவீதிக்காரன்,
நானும் இவர் படத்தைப் பார்த்ததும் பேசாமல் தனுஷ்கோடிப் பக்கம் போய் 'உக்காந்திரலாமான்னு' நினச்சேன்!

தருமி said...

சுல்தான்,

loooooooong time .. no see ...

தருமி said...

குசும்பன்,
என்னைப் போல் ஒரு வான்கோழி ஆகாமல், மயிலாக மாற வாழ்த்து.

தருமி said...

ஜெஸிலா,
அரிஃப்,

நன்றி

ஆபிதீன் said...

பதிவுக்கு நன்றி தருமி ஐயா. குசும்பன் போன்றோர்கள் கேமரா வாங்க மட்டுமல்ல, என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கேமராவை தூக்கிப்போடவும் நௌஃபல்தன் காரணம்.

ஆபிதீன்

தருமி said...

ஆபிதீன் //என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கேமராவை தூக்கிப்போடவும்...//same blood. இருந்தாலும் கஷ்டப்பட்டு இன்னும் தூக்கிப் போடாமல் பெட்டியோடு 'சண்டை' போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Post a Comment