Tuesday, April 17, 2012

564. தினமும் செய்திதாட்கள் கட்டாயம் வாசிக்கணுமோ!

* காலையில கஷ்டப்பட்டு 6 மணிக்கு எழுந்திருச்சி ரெண்டு ஷட்டில் ஆட்டம் போட்டுட்டு ஒரு தம்ளர் கருப்பட்டிக் காப்பியோடு ஈசி சேர்ல உட்கார்ந்து இந்து பத்திரிகையை எடுத்தேன்.

முதல் செய்தி படங்களோடு நம்ம முதலமைச்சர்கள் பற்றியது. ஒவ்வொருத்தர் முகத்தையும் பார்த்தேன். அவர்களும் அலுப்போடு இருந்தது போலிருந்தது. பார்த்த எனக்கும் அது பற்றிக் கொள்ளக்கூடாதேன்னு அடுத்த செய்திக்குப் போனேன்.

 பீகார்ல எவனோ ஒரு நீதிபதிக்கு நியாய உணர்வு பீறிட்ட செய்தி ஒன்று.

1996-ல் நடந்த தலித்திய குடியிருப்பில் கொலைவெறியாட்டம் நடத்திய ரன்வீர் சேனா என்னும் ’சாதி’ இந்துக்களான ராஜ்புத், பூமிகார் என்ப்வர்களின் கூலிப்படையினரில் 23 பேரில் மூவருக்கு தூக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் செஷன்ஸ் கோர்ட் கொடுத்த தீர்ப்பை பீகார் உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. வெறியாட்டம் ஆடி பெண்கள், குழந்தைகள் என்று கொன்று குவித்ததற்கு கண்கூடான சாட்சிகள் இருந்தும் அந்த ... நீதிபதிக்கு அவைகள் பற்றவில்லையாம். சாட்சிகள் பற்றாது என்று சொல்லி கூண்டோடு எல்லோரையும் விடுதலை செய்துள்ளான் அந்த நீதிபதி. ஏற்கெனவே அந்த வெறியாட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவன் போன ஆண்டிலிருந்தே சிறையை விட்டு வெளியே வந்து ஆடிக்கொண்டிருக்கிறானாம்.

 நல்ல ஊருடா இது ...

 வழக்கமாக ஒன்று சொல்வார்கள்: இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது என்பார்கள். அந்த ...நீதிபதிக்கான வார்த்தைகள் இவை. 

*
 போனால் போகுதுன்னு இரண்டாவது செய்தி படிப்போம்னு அதே முதல் பக்கத்தில் இன்னொரு செய்திக்கு வந்தேன். திருவண்ண்மலையில் Mount St. Joseph Matriculation Hr. Sec. School என்று பள்ளியில் ஒட்டு மொத்தமாக பள்ளியே ‘பிட்’ தயார் செய்து மாணவர்களுக்குக் கொடுத்து பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வை நடத்தியிருக்கிறார்கள். பள்ளி நகலெடுக்கும் இயந்திரத்திலேயே இந்த பிட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏழு வாத்தியான்கள் பிட்டோடு அகப்பட்டிருக்கிறான்கள். ஒரு மாணவியின் பெயர் எழுதிய கவர் ஒன்றில் ரொக்கப்பணத்தோடு ஒரு வாத்தியான் அகப்பட்டிருக்கிறான். பத்தாம் வகுப்பிற்கே இந்த ஆட்டம் போட்ட பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எப்படி அழகாக நடத்தியிருக்கும்.

ஆனால் என்ன அடுத்த ஆண்டுக்கு இந்தப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முழு வேகத்தில் இருப்பார்கள். பள்ளியும், அந்த தலைமை ஆசிரியனும், மற்ற வாத்தியான்களும் ஜே .. ஜே.. ன்னு காசு குவிப்பானுங்க.

 வேலை பார்த்த காலத்தில் காசுக்கு மார்க் போடும், கேள்வித்தாள் கொடுக்கும் வாத்தியான்களைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இது போன்ற் ஆசிரியன்கள் தன் பொண்டாட்டி புள்ளையக் கூட வித்து விட்டு காசு பாப்பானுக ... 

*
 முதல் பக்க ரெண்டு செய்தியும் இப்படி ஆனதில் வெறுத்து அப்படியே கடைசிப் பக்கத்திற்குச் சென்றேன்.

 முதலில் ஒரு அநீதிபதி .. அடுத்தது ... ஆசிரியன்கள் ... இப்போது காவல்துறை...

இரண்டு கார் விபத்துகள் தில்லியில். இரண்டிலுமே விபத்துக்குள்ளான கார்கள் BMW. காரோட்டிகளின் தவறால் முதல் காரில் காலை நடைப்பயிற்சி எடுத்த ஒரு வயதானவர் அடித்துத் தூக்கியெறியப்பட்டார். கார் கவிழ்ந்து விட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் அடிபட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருந்தவரைக் கவனிக்காமல், கார்காரனைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள். ரத்தம் சிந்தி விபத்துக்குள்ளானவர் அங்கேயே மரணமடைந்து விட்டார்.

 அடுத்த விபத்தில் ட்ராபிக் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த காவலரையே காரில் அடித்துக் கொன்று விட்டான் ஒரு பணக்காரன். இங்கும் செத்த தங்கள் துறையின் போலீஸ்காரரைக்கூடக் கவனிக்காமல் காரோட்டிக்கு காவல் துறையினர் உதவிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

 நம்ம ஊர்ல எதைச் செஞ்சாலும் நிறைய காசு பணத்தோடு செய்யணும். மரியாதை வரும் தானாக ...

 *
பேப்பர் படிக்க மனசே வரலை. தூக்கிப் போட்டுட்டேன். ஆனால் அடுத்த வேலைக்கு பேப்பர் இல்லாமல் போய் பழக்கமில்லையா அதனால் அரை மனதோடு The Times Of India பேப்பரோடு ‘உள்ளே’ சென்றேன்.

முதல் செய்தியே பேப்பரின் இடது ஓரம் உள்ள சிறு செய்தித் துளிகள். திருனாமுல் காங்கிரஸ் இருக்கே .. நம்ம மம்தா தீதி கட்சி. அந்தக் கட்சியில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்களாம். சி.பி.எம். கட்சிக்காரங்க கூட அக்கா கட்சி ஆளுக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அந்தக் கட்சிக்காரங்க கூட கல்யாண உறவு எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அந்தக் கட்சிக்காரங்க கூட எந்தப் பேச்சு வார்த்தையும் வச்சிக்கக் கூடாதாம். 

நல்ல அரசியல்வாதிகள்.

 நம்ம ஊர் அ.தி.மு.க்.வை விட அல்லவா மோசமா போய் விட்டார்கள். தி.மு.க., ம்.தி.மு.க.வில் உள்ள தங்கள் பழைய தோழர்கள் செத்தால் கூட மாலை போட அ.தி.மு.க. ஆட்கள் போகக் கூடாதென்பது அந்தக் கட்சியின் உயர்ந்த தத்துவம். மம்மி காருக்குள் இருந்தால் கூட நம்பர் டூ முதல் எல்லா அமைச்சர்களும் தரையைத் தொட்டு நமஸ்கரிக்கணும் ...

 அ.தி.மு.க., தி.மூ.காங்கிரஸ் -- இரண்டில் எது ரொம்பக் கேவலம்னு தெரியலையே. உங்களுக்குத் தெரியுமா? * இன்னைக்கு இம்புட்டு பேப்பர் வாசிச்சது போதும்னு தூக்கிப் போட்டுட்டு என் வயித்தெரிச்சலை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறேன் ... தலைவிதி. 
பெரிய இந்திய நாடாம் ... போங்கடா போங்க ... *
*

முதல் செய்தியைக் கண்டனம் செய்து இன்று -25.4.12 - இந்துவில் ஒரு தலையங்கம் வந்துள்ளது.


A travesty of justice*

6 comments:

வல்லிசிம்ஹன் said...

நீங்களுமா:)
நான் இப்போ மெயின் பேப்பர் படிக்கிறது இல்ல. இணைப்புகளைத்தான் படிக்கிறேன்.

Gurusamy Thangavel said...

என்னத்துக்கு இப்பிடி பேப்பர் படிச்சி எங்க உயிரை வாங்கணும்.

ப.கந்தசாமி said...

என்ன ஐயா? இந்த வயசில எத்தனையப் பாத்தாச்சு? இதுகளையும் பார்த்துத்தான் ஆகணும்.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா
வட இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் இன்னும் அமலில் இருக்கிறது.நில பிரபுக்கள் ஒவ்வொருவரும் குண்டர் படை வைத்து இருப்பது மிக சாதரணமான விடயம்.இந்த ரன்வீர் சேனா என்பதும் அப்ப்டித்தான் பூமிகார் இன நில பிர்புக்களின் கூலிப்படை.
http://en.wikipedia.org/wiki/Ranvir_Sena
Ranvir Sena is a right-wing upper-caste landlord militia[1] mainly based in Bihar, India. This group is thought to be formed by Bhumihar landlords. It carries out actions against Dalits and other members of the scheduled caste community as well as the Naxalites. The Ranvir Sena have been connected to many murders, rapes and thefts.[2] It has, on several occasions, been accused of human rights abuses.[3] It is regarded as a terrorist group and classified accordingly by the Government of India.[4] Normally, the Ranvir Sena say themselves that they committed their crimes.[2] The Ranvir Sena has committed violent acts against Naxalite sympathisers and other members of the militant communist party. The Bihar State government banned the Ranvir Sena in July 1995 and since then the Ranvir Sena remains proscribed.


இந்த நீதிமன்றம் அரசிய‌ல் எல்லாம் அவர்களின் க்ட்டுக்குள்தான். நம் தமிழ்நாட்டிலும் கீழ்வெண்மணி போன்ற சில நிகழ்வுகள் உண்டு என்றாலும் இப்போது கொஞ்சம் வட இந்திய சூழலை விட பர‌வாயில்லை. இப்படிப்பட்ட சாதீய அடக்குமுறைகளினால் பல் பீஹாரிகள் தமிழகம் உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

குஜராத்தில் கலவரத்தில் வன்முறை நிகழ்த்தியவர்களும் இப்படி ஏதாவது சட்ட ஓட்டையில் வெளி வந்து விடுவார்கள்.சில பெருந்தலைகள் உத்தமர்கள் என நீதிமன்றம் ஏற்கெனவே கூறி விட்டது.

உலகம் முழுதும் இந்த சிறுபானமை,பெரும்பானமை பிரச்சினை உண்டு என்றாலும் [வட] இந்தியாவில் மிக அதிகம்!

&&&&&&&

கல்வி என்பது கற்று அறிதலும் புரிதலும் அல்ல தேர்வில் மதிப்பெண் பெறும் போட்டியாக மாறி விட்டது என்பதை நிரூபித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்!
அதிக மதிப்பெண் பெறுவதே சர்வ ரோஹ நிவாரணி!

கொடுமை!

நன்றி

அ. வேல்முருகன் said...

கேவலத்தை எதற்கு வரிசை படுத்த வேண்டும்.

தருமி said...

முதல் செய்தியைக் கண்டனம் செய்து இந்துவில் ஒரு தலையங்கம் இன்று - 25.4.12 - வெளிவந்துள்ளது.

A travesty of justice

Post a Comment