Sunday, July 15, 2012

579. THE GNOSTIC GOSPELS ... 4

*
*

*

THE GNOSTIC GOSPELSமற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 

 III

GOD THE FATHER / 
GOD THE MOTHER*

எகிப்து, பாபிலோனியா, கிரேக்கம், ஆப்ரிக்கா, இந்தியா, வடக்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் மதங்களில் இருப்பது போல் ஆபிரஹாமிய மதங்களில் பெண் தெய்வ வழிபாடு கிடையாது.  இம்மதங்கள் மூன்றிலும் கடவுளுக்கு பால் வேற்றுமை ஏதும் கிடையாது என்பர். கத்தோலிக்க கிறித்துவத்தில் மேரியைப் போற்றினாலும் வழிபடுவது இல்லையென்பர்.  (48)

 ஆயினும் கிறித்துவத்தில் தமதிருத்துவம் - Holy Trinity - என்ற கோட்பாடு உண்டு. இதில் முதல் இருவரை ஆணாகக் - தந்தை, தனயன் என்பதாகக் - காண்பிப்பதுண்டு. மூன்றாவதிற்கு, கிரேக்க மொழியில் பால் வேறுபாடற்ற ஆன்மா எனபதற்கான சொல்லை - pneuma -பயன்படுத்துவர். 

உதாரணமாக, தாமிஸ் விவிலியத்தில் ” சைமன் பீட்டர் ஏனைய சீடர்களிடம், ‘மேரியை விலக்கி விடுங்கள்; எந்தப் பெண்ணுக்கும் வாழ்க்கையில் அதற்கு மேலான தகுதியேதும் இல்லை.’ ஏசு அதற்காகச் சொல்கிறார்: ‘அவளை நான் வழிநடத்தி, அவளை ஒரு ஆணாக மாற்றி விடுகிறேன். அதனால் அவளும் மற்ற ஆண்களைப் போல் ஒரு முழுமையான ஆன்மாவாக ஆகி விடுவாள். ஆணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் பெண் மட்டுமே மோட்ச ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பாள்.’ 

gnostic கிறித்துவர்களில் ஒரு குழு ஏசுவிடமிருந்து கற்ற ஒரு ரகசிய வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இவர்களின் ஜெபம் தந்தைக் கடவுள், தாய்க் கடவுள் என்ற இருவரையும் நோக்கி உள்ளன. (49)

 gnostic கிறித்துவம் கடவுளை இரு கூறாகக் கருதியது. ஆண், பெண் இரு கூறுகளுமே அதில் உள்ளன - (சைனாவின் Yin - Yang   போல்)  ஆனால் ஏசு இறந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளின் பெண்மைப் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டது..பழமைக் கிறித்துவத்தில் இந்த இரு கூறுகள் முற்றிலுமாக எடுக்கப்பட்டு விட்டன. 

ஏன் இப்படி பெண்மைத்தனம் முற்றாக மாற்றப்பட்டன என்று gnostic கிறித்துவர்கள் பழமைக் கிறித்துவர்களிடம் கேள்வியெழுப்பினர். பெண் கடவுளின் அருள் பெற்றே ஆண் கடவுள் படைத்தல், காத்தல் செய்தது என்று Valentinus கிறித்துவர்கள் கருதினார்கள்.  (57)

gnostic கிறித்துவத்தினரின் இந்தக் கேள்விகளைப் பார்த்து டெர்டூலியன் போன்ற பழமைக் கிறித்துவர்களுக்கு பெரும் சினம் எழுந்தது. அவர்கள் பெண்கள் விடாது பேசுவது போலவும், மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முற்படுவது பற்றியும், விவாதங்களுக்குத் தயாராக இருப்பது பற்றியும், அவ்வளவு ஏன்,  ஞானஸ்நானம் கொடுக்கும் அளவிற்குப் போவதற்கும் மிகுந்த எதிர்ப்பைக் காண்பித்தார்கள். 

Valentinians போன்ற gnostic கிறித்துவர்கள் பெண்களின்  சமத்துவத்திற்கு ஆதரவளித்தனர். அதுபோன்ற பெண்களை ஆசிரியைகளாகவும், வரும்முன் உரைப்போராகவும், குருவினராகவும், ஏன் .. பிஷப் ஆகவும் மரியாதை கொடுத்தனர். (60)

கிறித்துவத்தின் ஆரம்பத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த உயரிய இடம் ஒரு ஆச்சரியமான விஷயம். ஏசுவும் யூத வழக்கங்களுக்கு எதிராக பெண்களுடன் சமமாகப் பேசினார். தன் குழுவிலும் அவர்களுக்கு இடம் கொடுத்தார். புதிய ஏற்பாட்டின் லூக் பகுதியில் மார்த்தா தன்க்கு தன் சகோதரி மரியா உதவியாக வேலை செய்யாமல் ஏசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதை எதிர்க்கும் போது, ஏசு மரியாவிற்கு ஆதரவாகப் பேசுவது இடம் பெறுகிறது. 

ஏசு இறந்து பத்து இருபது ஆண்டுகள் கழித்தும் சில பெண்கள் வேத ஊழியர்களாகவும், சமய ஆசிரியர்களாகவும், வரும்முன் உரைப்போராகவும் இருந்து வந்துள்ளனர். 

ஆனால் பின் வந்த பவுல் பெண்களுக்கான இடம் பற்றிய தன் கருத்துக்களை வெளியிடும்போது அவை அப்போதிருந்த யூத வழக்கத்தினை ஒட்டியிருந்தது. ’ஆண்கள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்;  ஆண்கள் பெண்களுக்காகப் படைக்கப்படவில்லை; ஆனால் பெண்கள் ஆண்களுக்காகப் படைக்கப் பெற்றவள் என்ற கருத்தே பவுலின் கருத்தாக இருந்தது. (61)

1 கொரிந்தியன் 14:34-ல் ‘பெண்கள் கோவில்களின் மெளனம் காக்க வேண்டும்; அவர்கள் ஆண்களை எதிர்த்துப் பேசாமல், அடங்கியவர்களாக இருக்க வேண்டும். கோவில்களில் பெண்கள் பேசுவது அவமானகரமான விஷயமாகும்.’ என்பதுவே பவுலின் கருத்தாக இருந்திருக்கிறது. 

பெண்களுக்கான சம உரிமைகள் ஏசுவின் இறப்பிற்குப் பின் இரு நூறு ஆண்டுகளில் முழுவதுமாக மாறிவிட்டது. யூதப் பெண்கள் முழுவதுமாக எந்தப் பொது நிகழ்வுகளிலிருந்தும், கல்வி கற்பதிலிருந்தும்,  கோவில் ஆராதனைகளை எடுத்து நடத்துவதிலிருந்தும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். ’பெண்கள் அமைதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்; கீழ்ப்படிதலோடு இருக்க வேண்டும். ஆண்களுக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” - இது போன்ற பவுலின் கருத்துக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதற்கான காரணம் என்ன என்பதற்கான பதில்கள் பலவும் உண்டு. Johannes Leipoldt என்ற அறிஞர் கிறித்துவத்திற்குள் நுழைந்த யூதர்களினால் இந்தத் தாக்கம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார். (63) Professor Morton Smith என்பவர் கிறித்துவம் எளிய ஏழை மக்களிடமிருந்து  நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்கிறார். எளிய மக்களிடம் குவிந்திருந்த வேலைகளை ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்து வந்தனர்; ஆனால் மத்திய தரத்தில் வேலைகள் பகிரப்பட்டன. கீழ்த்திசை நாடுகளிலும் கூட மத்திய தர மக்கள் மட்டுமே தங்கள் முகத்தை மறைத்து (ஹிஜாப் அணிந்து) வாழப் பழகினர். 
  
ஆனால்  gnostic கிறித்துவர்கள், பழமைக் கிறித்துவர்களின் எழுத்துகளில்  இந்தக் காரணங்கள் மேலும் அதிகமாக விவாதிக்கப்பட்டன. பிலிப் எழுதிய விவிலியத்தில்  - Gospel of Philip - ஏசுவின் ஆண் சீடர்களுக்கும் மரிய மக்தலேனாவிற்கும் நடுவில் ஒருந்த பகைமை உணர்வு தெளிவாகத் தெரிகிறது. அதில் ...        

  •  ‘ .... ஏசுவிற்கு மரிய மக்தலேனா மீது மற்ற சீடர்களையும் விட அதிக அன்பு இருந்தது. அவரை ஏசு இதழில் முத்தமிடுவதுண்டு. இதனைக் காணும் சீடர்கள் அதில் அதிருப்தி அடைந்ததுண்டு. அவர்கள் ஏசுவிடம், ‘ஏன் எங்களை விட அவரின் மேல் உங்களுக்கு அன்பு அதிகம்?’ என்று கேட்ட போது ஏசு அவர்களிடம், ‘ஏன் நான் உங்களிடம் அன்பு செலுத்துவது போல் அவரிடமும் அன்பு செலுத்தக் கூடாது?” என்றார். ("Why do I not love you as (I love) her?") 
  மரிய மக்தலேனா, தாமஸ், மத்தேயு இவர்களை ஏசு தனிப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் மற்ற இருவரையும் விட மரிய மக்தலேனாவை மேலும் புகழ்கிறார்.  ( ”...she spoke as a woman who knew the All" - in the Dialogue of the Savior.)

ஏனைய ரகசியப் பதிவுகளில் மரிய மக்தலேனா ஏனைய சீடர்களுக்குப் போட்டியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சீடர்கள் பீட்டரையே  தலைவராகக் கருதினர். 

Gospel of Mary -ல் ஏசு இறந்த பிறகு மரிய மக்தலேனா  மற்ற சீடர்களிடம் ஏசு தன்னிடம் ரகசியமாகச் சொன்னவைகளைப் பகிர்ந்து கொள்கிறார். பீட்டருக்கு இதைக் கண்டு, க்டும் கோபம் கொண்டு, ‘எங்களிடம் சொல்லாததை ஏசு உங்களிடம் சொன்னாரா?  எங்களை விட உங்களை அவர் அருகில் எடுத்துக் கொண்டாரா?’ என்று  கோபத்தில் கத்துகிறார். அதற்குப் பதிலாக, மரிய மக்தலேனா, ‘சகோதரரே! நானென்ன இதையெல்லாம் நானாகவே கற்பித்துக் கூறுகிறேனா? நம் நாயகரைப் பற்றி நான் இல்லாததெல்லாம் பேசுகிறேனா?’ என்று கேட்கிறார். (64)

லெவி இந்த விவாதத்தில் தலையிடுகிறார். அவர் பீட்டரைப் பார்த்து, ‘ஏசு மரிய மக்தலேனாவை சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருந்தால் அதை மறுக்க நாம் யார்? அவருக்குத் தெரியாதா? அவருக்கு மக்தலேனாவை நன்கு தெரிந்ததால் தான் அவரை மிகவும் நேசித்தார்’ என்கிறார் 

ஆனாலும் பழமைக் கிறித்துவர்களுக்கு ஒரு பெண்ணை இவ்வாறு உயர்வாக வைத்திருப்பது பொருந்தாததாகவே தோன்றியது. I & II . Timothy, Colossians, & Ephesians என்ற நூல்களில் பவுல் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்களே என்பதை வலியுறுத்துகிறார். (65)

இவ்வாறாக, இரு கிறித்துவ குழுமமும் இரு வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. gnostic கிறித்துவர்கள் கடவுளையே பாலியல் முறையில் பகுத்துப் பார்த்ததில்லை.  சமூக, அரசியல் வாழ்க்கைகளில் ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபடி செய்து பார்த்ததில்லை.  ஆனால், பழமைக் கிறித்துவர்கள் கடவுளை ஆணாக மட்டுமே பார்த்தார்கள். (66)

(இந்தக் கொள்கைகளில் பழமைக் கிறித்துவத்தின் பிடிப்பே இறுதியானதாகி விட்டது.)  ஏனெனில் 1977-ல் ஆறாவது பால் என்ற போப், ‘பெண்கள் குருமார்களாக ஆக முடியாது; ஏனெனில் கிறிஸ்து ஒரு ஆண்’, என்று அறிவித்து விட்டார். (69)

பி.கு.
இப்பதிவில் வந்துள்ள மரிய மக்தலேனாவைப் பற்றிய கருத்துக்களே டான் ப்ரவுண் எழுதிய டாவின்ஸி கோட் கதையின் மையப்புள்ளியாக உள்ளது.The Last Chalice  போன்றவைகளுக்கும் இதுவே ஒரு காரணியாக உள்ளது.
*

5 comments:

G.Ragavan said...

வரலாறு வெற்றியாளர்களால் திரிக்கப்பட்டே வந்திருக்கிறது. உலகில் எந்த நாடும் அதற்கு விதிவிலக்கில்லை போலும்.

வேறு எதையும் விட பெண்களை அடக்கி வைக்க மதம் நன்றாகப் பயன்படும். அதிலும் கடவுளின் பெயரைக் கோர்த்து விட்டு விட்டால் கேட்கவே வேண்டாம்.

தஜ்ஜால் said...

கிருஸ்துவத்தின் மற்றொரு பகுதியை அழகாக வெளிப்படுத்துகிறது. கற்கும் நிலையில் இருப்பதால் கருத்துக்களை கூறமுடியவில்லை.
”டாவின்ஸி கோட்” முழுவதும் கற்பனையென்றே நினைத்திருந்தேன்.

shakiribnu said...

gnostic gospels என்பன இந்து புராணக்கதைகள் போல. அவற்றில் உண்மை கிடையாது. கதை மூலம் ஒரு மறைவான உண்மையை வெளிக்காட்டுபவை.

இன்று பல ஆராய்ச்சியாளர்கள் இந்த கோஸ்பல்ஸ கதைகளிலிருந்து எழுந்த ஒரு கதை உண்மை என்று நம்பப்பட்டதே கிறிஸ்துவம் என்று கருதுகிறார்கள்.

அதாவது க்னாஸ்டிக் கதை மூலம். மார்க் சுவிசேஷம் பிறகு வந்த கிளைக்கதை.

அதாவது இயேசு கிறிஸ்து என்பது கற்பனை பாத்திரம்.

DEVAPRIYA said...

புதிய ஏற்பாட்டில் உள்ள 4 சுவி கதாசிரியர்களுக்கே ஏசு சீடர்களோடு எங்கே இயங்கினார் என்பதில் குழப்பம்.

மாற்கு - ஒரு வருஷத்திற்கும் குறைவு- முழுவதும் கலிலேயாவில், கடைசி வாரம் மட்டும் யூதேயாவில் என்பார். மத்தேயுவும்-லூக்காவும் இதை அப்படியே சொல்வர்.

ஆனால் நான்காவது சுவிக்கதை யோவானில் 2 வருடம் + சில நாட்கள் என வரும். கடைசி 7 மாதங்கள் யூதேயாவில்.(கூடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை- பாஸ்கா செப்டெம்பெர் முதல் ஏப்ரல் வரை.

சுவிசேஷக் கதாசிரியர்கள் உண்மையை தெரிந்து மறைத்துள்ளனர். நாசரேத் என்றொரு ஊர் முதல் நூற்றாண்டில் இருந்ததில்லை.
http://www.nazarethmyth.info/
அசோகர் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிரேக்க மொழியிலும் உண்டு. அசோகர் காலத்திற்குப் பின் தான் பழைய ஏற்பாடே இறுதி செய்யப்பட்டது. ஏசு காலத்தில் சட்டங்களும்-தீர்ர்க்கர்களும் என்று தான் இருந்தது. பின் 125 வாக்கிலான ஜாம்னியா யூதப் பாதிரிகள் கூட்டத்தில் தான் எழுத்துக்கள் என்னும் பிரிவே சேர்க்கப் பட்டது.

யாவே கர்த்தர் மனைவி அஸ்திரோத்துடன் தான் பழைய ஏற்பாடு காலம் வழிபட்டனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது.
http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_08.html

ஓறிரை வழிபாடு எல்லம் பொ.மு.300- 100 வாக்கில் ஆனது.

ஜெருசலேம் சர்ச் என்னும் முதல் கிறிஸ்துவர்கள் எபோனியர் எனப் பட்டனர். ஏசு சிடர்களும் அவர்களும் ஏசு - ஒரு நபி, கிறிஸ்து அவரிடம் ஞானஸ்நானத்தின் போது வந்து கைதின்போது விலகியது என்றனர். கன்னி மேரி கதையை நிராகரித்தனர். உலகம் அழியப் போகிறது- கிறிஸ்து தாவீது குடும்பத்தில் அதாவது ஏசுவுடன் பிறந்த யாக்கோபு தலைமையில் இருந்தது பவுல் கலாத்தியர் கடிதத்தில் பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Ebonite

ரோமிற்கு எதிராக எழுந்த பல்வேறு குழுக்களே பல்வேறு சர்ச்சுகள். எங்களுக்கு பிரபு ரோமன் ராயர் இல்லை என்பதற்கே மதம்.

DEVAPRIYA said...

எபொனியர் இணைப்பு தவறாக உள்ளது.
சரியானது கீழே

http://en.wikipedia.org/wiki/Ebionites

Post a Comment