Wednesday, February 27, 2013

640. ....ம்பரூவஷ்வி





*


நேத்து விஷவரூபம் படம் பாத்துட்டேன். நானும் டைட்டிலில் காமிக்கிறது மாதிரி தலைப்பை டைப் அடிச்சிப் பார்த்தேன். வித்தியாசமான படம் என்ற அர்த்தத்தில் அப்படிச் செய்யவில்லை.

அந்தக் காலத்தில் இங்கிலிபீசு படம் நண்பர்களோடு பாத்துட்டு, படம் முடிஞ்சதும் ஒரு டீ-கம்-தம் அடிச்சிக்கிட்டு அந்தப் படத்தை போஸ்ட்மார்ட்டம் பண்றது உண்டு. இதுக்கு மெயின் ரீசன் என்னன்னா, படத்தில இங்கிலிபீசு பேசுவாங்களா .. அதில கொஞ்சூண்டு மட்டும் நமக்குப் புரியுமா .. எனக்குப் புரிஞ்சது அவனுக்குப் புரிஞ்சிருக்காது .. அவனுக்குப் புரிஞ்சது எனக்குப் புரிஞ்சிருக்காது ... எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குழப்பி ... இதில நடுவில இங்கிலிபீசு படம் ரொம்ப பாக்காத ஒரு நண்பன் திடீர்னு, ‘ஏண்டா .. அந்த மொத சீன்ல செத்தவன் பிறகு நாலாவது சீன்ல உயிரோடு வர்ரானே’, அப்டிம்பான். ‘அடப் பாவி .. அவன் வேற .. இவன் வேற’, அப்டின்னா, ‘ஓ! எல்லா பயலுவ மூஞ்சும் ஒரே மாதிரி இருக்கா .. அதான் குழம்பிடுச்சி’, அப்டிம்பான்!

நேத்தும் அது மாதிரி கூட வந்த இரு நண்பர்களோடு ஒரு டீ மட்டும் அடிச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் படம் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். All said and done .... ஹே ராம்! மாதிரி இதிலும் மிகவும் வெகு கடுமையான உழைப்பு. பல இடங்களில் படம் பாக்கும்போது நினச்சிப் பாத்துக்கிட்டேன் - தமிழ்ப் படம் தானா என்று. அம்புட்டு நல்லா இருந்தது. தலைக்கு ஒரே ஒரு ஃபைட் ... விஷ்வரூபம் எடுக்கிறதுக்கு ... ரெண்டு சொட்டு தண்ணி உளுவுறதுக்குள்ள நடந்திடுது ... அதுனால ஒரு ரீவைண்ட் .. ஆஹா ..!

அதுக்குப் பிறகு பல இடங்களில் வழக்கமா ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருமே .. அது மாதிரி சுத்தி நின்னு ஷூட் பண்ணினாலும் ஹீரோ மட்டும் சுடப்படவே மாட்டார்.

டாக்கின்ஸ் செத்து போற இடம், F.B.I. chasing scenes, ஆப்கானிஸ்தான் செட், அங்கே நடக்கும் விஷயங்கள், அங்குள்ள landscape ... எல்லாம் ஜொலிக்குது. ரொம்ப வித்தியாசமா இருந்தது. ஆனாலும் பல இடங்கள் புரியலை. வசனம் எந்த மொழியில் இருக்குன்னு நான் நினச்சி முடிக்கிறதுக்குள் மக்கள் வசனம் பேசி முடிச்சிர்ராங்க. அதுக்குப் பிறகுதான் அவங்க பேசினது தமிழ்/இங்கிலிபீசு/தாலிபான் மொழி அப்டின்னு தெரிய ஆரம்பிக்குது.

நிறைய விஷயம் புரியலை. எல்லாம் ஒண்ணா நின்னு அதையெல்லாம் பேசினோம். அவர் யாரு டாக்கின்ஸ், இம்புட்டு கனமான ரோலுக்கு (!) சேகர் கபூர் எதுக்கு? (ஆனாலும் சேகர் கபூரை கமல் ‘அங்கிள்’ அப்டின்னு கூப்பிடுறது டூ இல்ல த்ரி ஆர் ஃபோர் மச்!) நைஜீரியாகாரன் எதுக்கு உடம்பு முழுவதும் ஷேவ் பண்ணிக்கிர்ரான், (இஸ்லாமியர் சவத்தை நன்கு ஷேவ் செய்து புதைப்பார்களாம். இவனும் ஒரு suicide bomber. அதான் அப்படி ஷேவ் பண்ணிக்கிறான் - அப்டின்னான் நண்பன். தலைவர் நல்லா யோசிச்சி படம் எடுத்திருக்கார் .. இல்ல?) இப்படி நிறைய டிஸ்கஸ் பண்ணினோம். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில் தெரியலை.

டாக்கின்ஸ் (அட.. நம்ம ஆளு பெயரையும் -ல்போட்டுட்டாங்க!) ஒரு antique shop-ல் ஆள் மாற்றிப் பெயர் சொல்லி ஒரு கவர் வாங்கிட்டு போறாரே .. அது என்னப்பா என்றேன். அது விஷ்வரூபம்-2-ல் பார்த்துக்கங்க என்றான் நண்பன்.

கமல் ரொம்ப அழகானவர் தான். ஆனாலும் இப்படி மீசை இல்லாமல் தாடி வச்சிட்டு வர்ரதைப் பார்த்ததும் அய்யோன்னு இருந்தது. இந்த ஸ்டைலைப் பார்த்தால் ரொம்ப அவலட்சணமாகவும், கொஞ்சம் funny ஆகவும் எனக்குத் தெரியும். யார் கண்டது .. கரண்டைக் காலுக்கு மேல் pants போட்டுக்கோ ... தாடி வச்சி கலர் அடிச்சுக்கோ .. அப்டின்றது மாதிரி இதுவும் ஒரு ஹதீசோ என்னவோ!

படத்தில ரொம்ப நல்லா நடிச்சது கமலின் மனைவியா வர்ர அம்மாதான்! அந்த அம்மாவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்த போது ‘இது என்ன நடிக்கும்.. சரி .. ஆண்ட்ரியா இருக்காங்களே’ன்னு நினச்சேன். ஆனால் இந்த அம்மா சும்மா கிளப்பியிருக்குது.

படம் பார்த்த பிறகு எங்க போஸ்ட்மார்ட்டத்தில் - யாருக்கும் பதில் தெரியாத - ஒரு முக்கியமான கேள்வி:

எதுக்காக கமல் இந்த படத்தை இம்புட்டு பணம் போட்டு எடுத்தார்? எப்படி அந்த ‘தைரியம்’ வந்தது? நிச்சயமான எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தும் ஏனிந்த 90 கோடி கொலைவெறி?

ஆனாலும் அந்த எதிர்ப்பே அவருக்கு முதலாகவும் மாறிப் போச்சு .. lucky man !




*


Monday, February 25, 2013

639. காணாமல் போன நண்பர்கள் - 13 - சயன்டிஸ்ட் ராமசாமி







*
அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறு பதிப்பு

*

1961-'64 ம் ஆண்டுகளில் ...


எதையோ படிக்க ஆசைப்பட்டு, எதோ ஒரு துறையில் சேர்ந்து இளங்கலைப்  பட்டப் படிப்பையும், முதுகலைப் பட்டப் படைப்பையும் இந்த ஐந்து ஆண்டுகளில் முடித்தேன். இளங்கலையில் முன்பே சொன்னது போல் சயன்டிஸ்ட்  ராமசாமி ஒரு நல்ல நண்பனாகவும், படிப்பில் ஒரு போட்டியாளனாகவும் இருந்தான். மேஜர் பாடங்களில் என்னைத் தோற்கடிப்பது என்றால் அவனுக்கு அம்புட்டு ஆசை. கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான். வகுப்பில் நிறைய கேள்வி கேட்பது இவனும், இன்னொரு நண்பன் -பால சுப்ரமணியன், ஏற்கெனவே  ஆசிரியராக வேண்டுமென்ற ஆவலில் ஆங்கிலத்தில் அடிக்கடி பேச முயலும் நண்பன் என்று கூறியிருந்தேனே அவன் தான் - இந்த இருவரும் தான். இந்த இருவரில் பாலு அதிகம் என்னோடு பழகியதில்லை. ஆனால் நம்ம சயன்டிஸ்ட்  ராமசாமி என்னோடு நல்ல நட்போடு இருந்தான்.

இளங்கலை முடித்ததும் நானும் இன்னும் இரு வகுப்புத் தோழர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு முட்டு முட்டினோம். அதைப் பற்றி பிறகு பேசுவோம். அந்த சோகக் கதை முடிந்ததும் மீண்டும் தியாகராஜர் கல்லூரியிலேயே முதுகலைக்குச் சேர்ந்தேன். அந்த ஆண்டு நான் மட்டுமே முதுகலை வகுப்பில் அங்கேயே படித்த ஒரே பழைய மாணவன்.

இதுவ்ரை தொடர்பில் இல்லாதிருந்த P.G. Professor, Dr. கண்ணன் என்னை ஓரிரு ‘வால் தனமான நேரங்களில்’ பார்த்து விட்டார். என்னைப் பற்றி பிற ஆசிரியர்களிடமும், என் சீனியர் மாணவர்களிடமும் நிறைய புகார் பட்டியல் கொடுத்திருக்கிறார். முதலாண்டில் அவரைக் கண்டாலே எனக்கு அரட்டியாகி விட்டது. பலரும் என்னை மிகவும் பயமுறுத்தி வந்தார்கள். ஆனால் முதலாண்டில் அவரிடம் மிகவும் பயந்து போயிருந்தேன். அந்த ஆண்டின் மதிப்பெண்கள் எங்களுக்குக் கிடைக்காது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் தான் மதிப்பெண்கள் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் என் முதலாண்டு மதிப்பெண்கள் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். தலைவர் காதிற்கும் அது போயிருக்கிறது, இதனால் இரண்டாமாண்டிலிருந்து நான் தலைவரின் செல்லப் பிள்ளையாகி விட்டேன். எதற்கும் தலைவர் என்னைத்தான் கூப்பிடுவார். நிறைய செல்லம் ... நிறைய உரிமை ... அதனாலேயே அந்தக் கல்லூரியிலேயே நான் ஆசிரியனாகச் சேர வேண்டுமென்று அவரே எனக்காக முயற்சித்தார். ஜாதியோ .. காலமோ ... கடவுளோ (???) .. வேறு விதமாக முயற்சிக்க எனக்கு அங்கு வேலை கிடைக்காமல்  போயிற்று.

இளங்கலை முடித்து விட்டு சயன்டிஸ்ட்  ராமசாமி ஓராண்டு ஆசிரியர் வேலைக்குப் போய் விட்டு,  அதன்பின் என் ஜூனியராக முதுகலைக்கு வந்தான். Ph.D. என்ற குறிக்கோளோடு படிக்க ஆரம்பித்தான். முதுகலை முடிந்ததும் நான் கல்லூரி ஆசிரியனாக தஞ்சைக்கருகில் உள்ள பூண்டி வாண்டையார் கல்லூரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன்.

முதுகலை முடிந்த பிறகு எனக்கும் சயன்டிஸ்ட்  ராமசாமிக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் அவன் என்னைத் தேடி நான் அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்ப்பது தெரிந்து ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தான். சயன்டிஸ்ட்  ராமசாமி இப்போது போலீஸ்கார  ராமசாமியாக ஆகியிருந்தான். கல்யாணம் ஆகியிருந்தது.  தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒரு D.S.P. ஆகியிருந்தான்.  போலீஸ்காரனாகவே என்னைப் பார்க்க கல்லூரிக்கு தனது ஜீப்பில் வந்திருந்தான்.  எங்கள் துறைக்குப் பக்கத்தில் இருவரும் ஜீப்புக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்கு என்னைப் பார்த்துப் பொறாமை! இப்படி ஒருஆசிரியனாக ஆகாமல் போய் விட்டேனே என்று கவலைப் பட்டான். எனக்கு அவனைப் பார்த்து- இப்படியெல்லாம் பெரிய ஆப்பிசராக இல்லாமல் போய்விட்டோமே என்று -  பொறாமை !!



அவன் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற பின் நண்பர் ஒருவர் 'யாரது' என்றார். சொன்னேன். அவர், ‘நீங்க ரெண்டு பேரும் பேசாம வேலையை மாத்திக்கலாம்’  என்றார்.

 ’ஏன்?’

‘இல்லை .. ரெண்டு பேரும் நிற்கும் போது அவர் நல்ல மனுஷன் மாதிரி கையைக் கட்டிக்கிட்டு softஆன ஆள் மாதிரி நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நீ ... பெருசா அந்த ஜீப்பே உன்னுடையது மாதிரி சாஞ்சு நின்னுக்கிட்டு பந்தா பண்ணிக்கிட்டு இருந்தது மாதிரி தெரிந்தது. அவரு வாத்தியாரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’ அப்டின்னார்.

அவரிடம் அவனது ஆசை, கவலை பற்றிச் சொன்னேன்.

அதற்குப் பிறகு சயன்டிஸ்ட்  ராமசாமியை ... இல்லை .. இல்லை ... போலீஸ் ராமசாமியைப் பார்க்கவேயில்லை. பெரிய அதிகாரியாக ஆகி இப்போது ஓய்வு பெற்றிருப்பான்.

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ...!!!



















*



Thursday, February 14, 2013

638. ஒச்சப்பனும் நானும்







*


ஒச்சப்பன் இந்த ஆண்டில் ‘அந்திமழை’ என்ற நூலுக்குக் கொடுத்த ஒரு செவ்வி. ஆங்கிலத்தில் அதை ஒச்சப்பனே தருகிறார்.


*  





Camera Eye &
The Madurai Lover 

Interview for the Andhi Mazhai Magazine by Perassi Kannan 


The Belgian man, Henk, is quite familiar with Madurai taking pictures in and around the town for the past 25 years, discovering lately more the life in villages and small towns around the big city. In his own accented Tamil, picked up from his continuous visit from 1987, talking to local Tamil people, he replied:



 “My mother tongue is Dutch, I’m living in the small town Lokeren - Belgium. When I studied for my degree on architecture I came across Indian architecture. That pulled me to Tamil Nadu through Delhi and finally arriving in Madurai.

 “Why did you select Madurai at all?”

“Madurai, I consider the center point of TN. I can reach any place in TN from here. Moreover I find that the essence of Tamil culture is very much alive in Madurai. Festivals like Chitra, Karthigai, Pongal … feels more vibrant celebrated here. The hospitality, the joy, the love and smile from their heart are livelier in Madurai than anywhere else.

 “My mother was attracted by the photos that I took in Madurai. She was then 72. Still she wanted to visit India. She did it for 10 years. Now I am coming alone … she passed away immediately after her last visit to TN. I am in my sixties. I worked for the Government of Justice as a high ranking officer. Presently I am retired. Photography is my hobby, a way to meet people, sharing the pleasure. In ’94 I discovered the real Jallikattu, nowadays losing its glamour.

 “When I first came to Madurai I met Ochappan, a load man, still a good friend using his derived name ‘oochappan’ on the internet. Anand is nowadays my right hand, helping, getting a day older.

Henk hibernates in Madurai from November till February. He likes so much our language as carrier of our culture and lives, hoping that Tamil doesn't lose its importance to English, a foreign language. His photographs are so brightly colored since he feels that colors reflect the happiness in the minds and lives of the Tamil people.

His dream is to exhibit once his Madurai photos on the pavement in the city, so that everyone will have the chance to see and enjoy them.

His photos can be seen in : http://www.flickr.com/photos/oochappan/


*

Tuesday, February 12, 2013

637. மனிதக் கழிவுகள் பற்றி அரசுக்கு ஒரு கடிதம்







*
28.செப்டம்பர் மாதம் 2007-ம் வருடம், அதாவது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன், மனிதக் கழிவுகளை மனிதன் தூக்கும் அவலைத்தை நிறுத்த மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கி, பரம்பரைத் தொழிலில் தவிக்கும் தலித்துகளை இத்தொழிலிலிருந்து தடுக்க வேண்டும் என்று மத்திய அரசால் நடத்தும் Grievance Cell  பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன்.

இன்று அதற்குப் பதில் வந்துள்ளது ....




ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் நமது வேண்டுகோள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் ஆனாலும் ஒரு பதில் கொடுத்துள்ளார்கள்.
பல தடவை நீதி மன்றங்கள் இவைகளைத் தடுத்தாலும் அந்த பழக்கம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.

இப்போதும் நீதி மன்றங்கள் தடை செய்து விட்டன. ஆனால் சுத்தம் செய்ய இயந்திரங்களை அரசு வாங்கி பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டதா? தெரியவில்லை.
ஆயினும் .. இந்த கேஸ் இப்போது முடிவடைந்து விட்டது என்ற செய்தி வந்துள்ளது.



http://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
http://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
எனக்கு இன்று வந்த மயில்:
Your Grievance with Registration No : DARPG/E/2007/06791 has been disposed . Logon to : http://pgportal.gov.in/ for further details. 




Current Status
:
CASE CLOSED
Date of Action
:
12 Feb 2013
Details
:
Clean and carriying human waster by men is prohibited by the Court. Hence those in such occupation are provided bank loan and training for other occupation vide lr.27458/ADW6/2011, dt.29.11.2010

*

இந்த பதிலைப் பார்த்து மகிழுவதா .. அல்லது  நல்லது ஏதும் இன்னும் நடக்கவில்லை என்று வருந்துவதா ....???? 

*

இன்னொரு சோகம்... நண்பர்கள் சிலர் சேர்ந்து 2008-ம் ஆண்டு  FIX MY INDIA என்று ஒரு பதிவை ஆரம்பித்தோம். அதுவும் தூங்கி விட்டது.
யாராவது எழுப்பினால் நலம் ....

*



சின்ன சிறு குறிப்பு:
 carriying human waster by men  - இப்படி பதில் எழுதுவோர் ஆங்கிலத்தை இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதி அனுப்பலாம்.










*