Wednesday, October 02, 2013

685. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ....... மிஸ்கின் ஒரு நல்ல மேய்ப்பன் !






*

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்ப்பதற்கு முன்பு எந்த திரை விமர்சனம் வாசிக்கக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தது போலவே  இருந்து நேற்று படம் பார்த்தேன். நானும் படக்கதை பற்றி ஏதும் எழுதப் போவதில்லை.

‘கண்ணிருப்போர் காணட்டும்’!

முதல் சீன். ஒரு மரம். முழு இரவில்  தனியாக ஒரு மரம். strikingly beautiful !
இடை வேளை முடிந்து மறுபடி  படம். இரவில் சில மரங்கள். வலது பக்கம் பச்சை வண்ணத்தில் சில செடிகள். இடது பக்கம் பல வண்ணத்தில் ஒரு மரம்.
 strikingly beautiful !

இருளில் நகரும் படம். சில இடங்களில் space logic  .. சில இடங்களில் time logic - உதைக்கிறது. யுத்தம் செய் படத்திலும் இந்தப் படத்திலும் உள்ள ஒரு ‘வெறுமை’ பிடிக்கவில்லை. இரு படத்திலும் கதைக்குரிய பாத்திரங்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். நடப்பது ஒரு பெரிய பொது இடத்தில். ஆயினும் வெறுமை மட்டும் இருக்கும்; அதனோடு நமது கதை மாந்தர்கள் மட்டும் இருப்பார்கள். இப்படத்தில் வரும் train sequence நன்றாக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயிலில் இரண்டே பேர் -  guide & driver. மருந்துக்கும் பயணிகள் இல்லை. இது மட்டுமே ஒரு சின்னக் குறையாக எனக்குத் தோன்றியது.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரே வேகம். படம் முடிந்து டைட்டில் கார்டுகள் வருகின்றன. படம் முடிய ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து கலைய ஆரம்பிப்பார்களே .. அப்படி ஏதும் நடக்கவில்லை. படம் முடிந்த பிறகும் விலகாத கூட்டம்.

நிரம்ப நாளாக பாடல் இல்லாத படம் என்ற ஆசை; இங்கே பாடல் இல்லை; கதாநாயகி இல்லை; (என்ன ஆச்சரியம்!); தனி காமெடி ட்ராக் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழ்ப் படம்! Hats off, Myskin! genre வாரியாகப் படம் வரவேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் நிறைவேறியது. நிச்சயமாக இது ஒரு தமிழ்ப்படம் அல்ல; அதையும் தாண்டிய நல்ல படம்.

படம் ஆரம்பிக்கும்போது இருவர் பெயர் மட்டும் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.ஒன்று இயக்குனர்; அடுத்தது - முன்னணி இசை - இளைய ராஜா என்று போட்டிருந்தது.  நிச்சயமாக முன்னணி இசை தான். படத்திற்கு ராஜா ஒரு foreign touch கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது.

ஆனாலும் மிஸ்கின், இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் இப்படத்தை இன்னொமொரு முறையாவது பார்த்தால் தான் முடியும்..

ஒரு genre-ல் தமிழ்ப்படம் என்றால் எனக்கு ’அந்த நாள்’ படம் நினைவிற்கு வரும்.இப்படமும் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, நேர்கோடாய் ஒரு படம். பிசிறில்லை. இது போன்ற படங்கள் மட்டும் வர ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்னச் சின்ன குறைகள் ...

ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து, நானும் புத்திசாலி ... படம் பார்க்க வருபவர்களும் புத்திசாலிகள் என்ற நினைப்பில் படம் எடுத்த இயக்குனருக்கு என் பாராட்டுகள்.




*




11 comments:

Thekkikattan|தெகா said...

நாளைக்கு முடிஞ்சா திரையரங்கு சென்று பார்த்து விடுகிறேன். கதை சொல்லாம எழுதினதுக்கு, டாங்கு :) ...

தருமி said...

//...திரையரங்கு சென்று பார்த்து விடுகிறேன்//

எந்த ஊரு திரையரங்கு?

குட்டிபிசாசு said...

//படம் முடிய ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து கலைய ஆரம்பிப்பார்களே .. அப்படி ஏதும் நடக்கவில்லை//

ஏன் படத்தில் மட்டுமல்லாமல் திரையரங்கிலும் வெறுமையா? :))

ilavanji said...

// படம் பார்ப்பதற்கு முன்பு எந்த திரை விமர்சனம் வாசிக்கக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தது போலவே இருந்து நேற்று படம் பார்த்தேன் //

தருமிசார்.. இதுக்கு மிகப்பெரிய மன உறுதி வேண்டுமே! நிஜமாகவே நன்மை பயக்கும் பழக்கம் இது.

நானெல்லாம் எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு கடைசியா பார்க்கறப்ப.. எல்லா உணர்வுகளையும் இழந்து ஆராயற புத்தியோடுதான் பார்க்க முடிகிறது :(

// நானும் புத்திசாலி ... படம் பார்க்க வருபவர்களும் புத்திசாலிகள் // அது :) இந்த கெத்தை தான் ராம் கோனார் நோட்சு போட்டு தவறவிட்டுட்டார்...

கரந்தை ஜெயக்குமார் said...

படம் பார்த்தேன் ஐயா. அருமையான படம். சிறந்த காட்சி அமைப்பு, எடுக்கப்பட்ட விதம் அனைத்தமே அருமை.
தங்கள் விமர்சனம் அருமை. நன்றி ஐயா

சிந்திக்கமாட்டார்களா said...

ஐயா வணக்கம் வித்தியாசமானவிமர்சனம்(நானும் இன்னும்படம் பார்க்கவில்லை) மிஸ்கின் என்றால் என்னா?? நன்றி

Unknown said...

ஒரு ஆங்கில படம் பார்த்த நிம்மதி,பாடல்,நகைச்சுவை,கவர்ச்சி,இவைகளைத் தவிர்த்து எடுக்கப்பட்ட படமானாலும் ரசனை அவைகளைத் தாண்டி ரசிக்க வைத்தது.தங்கள் விமர்சனம் அருமை..

Unknown said...

ஒரு ஆங்கில படம் பார்த்த நிம்மதி,பாடல்,நகைச்சுவை,கவர்ச்சி,இவைகளைத் தவிர்த்து எடுக்கப்பட்ட படமானாலும் ரசனை அவைகளைத் தாண்டி ரசிக்க வைத்தது.தங்கள் விமர்சனம் அருமை..

Unknown said...

செம்ம படம் மிஷ்கின் கதைய சொல்லும் போது அழுதுட்டேன் சூப்பர்

வலிப்போக்கன் said...

நான் தியேட்டர் போயி படம்பார்ப்பதில்லை, அதற்க்காக c.d யிலும் பார்ப்பதில்லை, எப்போதாவது டீவியல போடாமயாய்யா இருப்பாங்கோ.....

டிபிஆர்.ஜோசப் said...

இவரோட படத்துல இருட்டு, இருட்டு, இருட்டுதான் நிறைஞ்சி இருக்கும்....இந்த படத்த இதுவரைக்கும் பாக்கலை... நம்ம கண்ணு ஏற்கனவே கொஞ்சம் தூரப் பார்வை இல்லாதது.... பாக்கணுமான்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.... நம்ம ஊர்ல ஒரே தியேட்டர்தான்... அங்க இன்னும் வரலை... இதுக்குன்னு அண்னா நகர் போகணுமான்னு பாத்தேன்.... ஆனா நாயகி இல்லாத பாடல் இல்லாத.... படம்னா பாத்துற வேண்டியதுதான்..

Post a Comment