Thursday, November 07, 2013

694. வான தூதர் இறங்கி வந்தார் ...

*
கம்ப்யூட்டர் கைநாட்டுக்கு ஒரு உதவி என்று ஒரு பதிவிட்டேன். N.H.M. பயன்படுத்துவதில் ஒரு இடர்பாடு. முட்டி மோதிப் பார்த்தும் காரியம் ஒன்றும் நடக்கவில்லை. அதனாலேயே அந்தப் பதிவிட்டேன். பதிவும் தமிழ்மணத்தில் வர முடியாது போயிற்று. பலர் கண்களில் படாமலேயே எப்படியோ இந்த நிமிடம் வரை 102 பேர் அந்தப் பதிவு பக்கம் வந்ததாகத் தகவல் வந்தது. ஆறு பேர் ‘துக்கம்’ விசாரிக்க வந்தார்கள். அப்படியும் எனக்கு விடிவு கிடைக்கவில்லை.

பதிவிடுவதற்கு முன் தமிழ்வாசியிடம் இதைப் பற்றித் தொலைபேசியில் சொன்னேன்.   அவர் என்னை ‘அழகி’யிடம் போகச் சொன்னார். கம்ப்யூட்டரில் நாலும் தெரிந்த  அவர் சொன்னால் கேட்போம் என்று அவர் சொன்னபடி அழகியிடம் சென்றேன். அதைப் பயன்படுத்தியதும், அவள் அவசரத்திற்குப் பாவமில்லை என்று மட்டும் தோன்றியது. ஏனெனில் N.H.M. போல் இது முழுமையாகத் தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு N.H.M. போல் இதை தட்டச்ச முடியாது என்றிருந்தது.

என்னடா இது ... என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது எனக்குத் தெரிந்த ஒரு வான தூதர் எனக்குத் தெரியாத  ஒரு வான தூதரிடம் என் பிரச்சனை பற்றிச் சொல்லியிருக்கிறார். திரு திரு என்று முழித்துக் கொண்டிருந்த என் கண்கள் முன்னால் இந்த இரண்டாவது வான தூதரின் மெயில் ஒன்று வந்து நின்றது. உங்களுக்கு N.H.M.-ல் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என்றது. கை அலைபேசி எண் கொடுத்து ... அவர் எண் வாங்கி .. தகவல் சொன்னேன்.

சூ ... மந்திரக்காளி அப்டின்னு மந்திரம் போட்ட மாதிரி சில வேலை செய்யச் சொன்னார். முதலில் alt + 2 -ல் பிரச்சனை என்றதும் வலது பக்கம் task bar தெரியுமே அதில் வலது க்ளிக் என்றார். செய்தேன். அதில் வந்த ‘சாளரத்தில்’ (window!) alt + 2  என்பதற்குப் பதில் F4-யை போடச் சொன்னார். போட்டதும் பாதி பிரச்சனை முடிந்தது ‘மாதிரி’ இருந்தது. சில சமயங்களில் இந்தக் குறையால் N.H.M.அடிப்பதில் பிரச்சனை இருக்கலாம் என்றார்.

நன்றி சொல்லி விட்டு மறுபடி வேலையை ஆரம்பித்தால் N.H.M.தன் வேலையை மறுபடியும் காண்பிக்க ஆரம்பித்தது. ஆமாம் ... மறுபடியும் பிரச்சனை வந்தது. வான தூதருக்குத் தொலை பேசியில் அழைப்பைக் கொடுத்தேன். Team viewer போனோம். சில முயற்சிகள் எடுத்தார். விரைவில் அடுத்த ஒரு மாற்றம் சொன்னார். தட்டச்சும்போது font - latha வந்தது. அதை மறுபடி unicode font-க்கு மாற்றி அடிக்கச் சொன்னார். செய்தேன்.

பிரச்சனை தீர்ந்தது.

முதலில் வந்த, எனக்கு ஏற்கெனவே  தெரிந்த வான தூதர் - இலவசக் கொத்தனார். நான் உதவி கேட்டதைப் பார்த்து, சரியான வான தூதருக்குச் செய்தி சொல்லி, அந்த இரண்டாம் வான தூதரை எனக்கு மெயில் அனுப்ப வைத்த இ.கொத்தனாருக்குப் பெரும் நன்றி.

இரண்டாம் தூதர் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறார். இவர் தான் N.H.M.-மென் பொருளைக் கட்டமைத்தவராம். இவர் பங்களூரில் உள்ள திரு. நாகராஜன் K.S. மும்முறை அழைத்து பிரச்சனைகளைச் சொன்னதும் சிரமம் பாராது உடனே உதவிய வான தூதர் நாகராஜனுக்கு மிக்க மிக்க நன்றி.

திரு. வவ்வாலுக்கும் நன்றி சொல்லணும் ஏனெனில் அவரும் ஒரு வழி சொன்னார்; தலைகீழாக நின்று அதைச் செய்ய எனக்கு சோம்பேறித் தனம். ஆகவே எளிதான வேலையாக இரண்டாம் வான தூதரிடம் சென்று விட்டேன்.  வவ்வாலுக்கும் நன்றி.

ப.கு. நம்மை யாரென்று தெரியாமலே, நமக்கு என்ன தேவை என்றுணர்ந்து உதவியாற்றிய இவர்களை வான தூதர்கள் என்றழைத்தால் தான் என்ன!*

9 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

பிரச்சினை தீர்ந்ததில் சந்தோஷம்!

பாருங்க எங்கே இருந்தாலும் உதவிக்கு வராங்கனு , பவர் ஆஃப் சமூகவலை!

ஹி...ஹி இதுக்கு போய் நம்மள வானத்தூதர்னு சொல்லி பெருசா நன்றிலாம் சொல்லிக்கிட்டு, நாம வானரத்தூதர் ஆச்சே அவ்வ்!

நான் ரெண்டு மூனு தமிழ் செயலி இன்ஸ்டால் செய்ததால் எனக்கு இப்படி ஆச்சு, அப்புறம் என்னனென்னமோ செய்துட்டு இப்படி செய்தேன் சரியாச்சு. நாம என்ன தமிழ் செயலி வச்சிருக்கோம்னு வேர்டுக்கு அடையாளம் காட்டிவிடுறத செய்றோம்.

இப்போ எந்த ஃபான்ட் வச்சிருந்தாலும் வேலை செய்றாப்போலத்தான் எனக்கு தெரியுது, லதா ஃபான்ட் வச்சதாலவா இப்படி ஆச்சு,நாமளும் நோட் பண்ணிக்கனும் ,கை தவறுதலாக ஃபான்ட் மாத்திவிட வாய்ப்பு இருக்கு அவ்வ்.

நன்றி!
------------------

பின் குறிப்பு:

NHM writer ,google என கலந்து எழுதினால் ஒரே மாதிரியாக வருமானு கேட்டதுக்கு சொல்லாம விட்டுட்டேன், எனக்கு அப்படிலாம் மாறலை எல்லாம் ஒரே போலத்தான் வருது.

நான் பெரும்பாலும் கூகிள், எ.கலப்பை, அப்புறம் தமிழெடிட்டர் என மூன்று விதமா டைப் செய்து தான் பதிவு போடுறேன், ஒரே போல இருக்கு.

காரணம், நம்ம பிலாக்ல இருக்க ஃபாண்ட், மற்றும் எழுத்தளவு தான் பதிவில வரும்.

ப.கந்தசாமி said...

உங்கள் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்தால் இணைந்த நட்புகள் அல்லவா இவர்கள்.பாராட்டுக்குரியவர்கள். நன்றி ஐயா

Unknown said...

இக்கட்டான நேரங்களில் எனக்கும் சில வான தூதர்கள் உதவி இருக்கிறார்கள் ...அவர்கள் வாழ்க ,,வளமுடன் !
த ம 1

G.M Balasubramaniam said...

நான் ஆரம்பத்திலிருந்தே NHM Writer தான் உபயோகிக்கிறேன். முதலில் ms word -ல் தட்டச்சு செய்து பிறகு காப்பி பேஸ்ட் செய்வேன். nhm writer -ஐ பதிவிறக்கம் செய்த என்பேரன் தமிழுக்கு f 4 என்று சொல்லி இருந்தான்f 2 தட்டினால் ஆங்கில எழுத்துக்கள் தட்டச்சாகும். ms word -ல் f 4 தட்டினால் latha என்று தெரியும். குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி சொல்லிக் கொடுத்ததைச் செய்து வருகிறேன் so far , no problem; Touch wood.!

ராமலக்ஷ்மி said...

நல்லது:)!

பொன் மாலை பொழுது said...

நானும் பல வருடங்களாகவே NHM பயன் படுத்தி வருகிறேன் எதுவும் குழப்பம் இல்லை. திருவாளர் G.M. Balasubramaniam அவர்கள் சொல்வது சரியே.

வேகநரி said...

//நம்மை யாரென்று தெரியாமலே, நமக்கு என்ன தேவை என்றுணர்ந்து உதவியாற்றிய இவர்களை வான தூதர்கள் என்றழைத்தால் தான் என்ன!//

என்ன தேவையோ அதை தீர்த்து வைத்தவர்களை மிக தாராளமா கடவுள் என்றே அழைக்கலாம். டாக்டரிடம் சென்று ஒழுங்கா மருந்து எடுத்து நோயை மாற்றி பின்பு கடவுளை பிரார்த்தித்தேன் என் நோயை கடவுள் மாற்றி அற்புதம் புரிந்துவிட்டார் என்கின்ற நிலைமையிருக்கும் போது, உங்க கம்ப்யூட்டர் பிச்சனைகளை உங்க பிரார்த்தனை இல்லாம தீர்த்து வைத்தவர்கள் கடவுள்கள்.

தருமி said...

//உங்க கம்ப்யூட்டர் பிச்சனைகளை உங்க பிரார்த்தனை இல்லாம தீர்த்து வைத்தவர்கள் கடவுள்கள். //

appo neengalum oru கடவுள் தான்.
நன்றி

Post a Comment