*
முத்துலட்சுமி என்றொரு மாணவி.
மாற்று உதவிகளுக்காக அவள் அரசிடம் போனாள். செய்தித் தாளில் வந்த இந்த செய்தியைப் படித்த Chief Educational Officer ஜெயக்கண்ணு அதே பள்ளியில் மீண்டும் அவளை சேர்த்திருக்கிறார். அரை மனதோடு அந்தப் பள்ளிக்குத் திரும்ப சென்றிருக்கிறாள் முத்துலட்சுமி. இவருக்கு உதவ நினைப்பவர்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பி. கனகராணி - 9486559888 - என்பவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று தினசரியில் வந்துள்ளது.
இதில் எனக்குப் புரியாத ஒரே ஒரு விஷயம். இப்பெண்ணுக்குள்ள பிரச்சனை ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அவளுடைய அப்போதைய தேவை ஒரு hearing aid. அப்பெண்ணின் ஆசிரியைக்கு இது தெரிந்திருக்காதா? இப்போது அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டுமானால் என்று தலைமை ஆசிரியை எண் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தலைமை ஆசிரியைக்குத் தெரியாமல் போயிருக்குமா? தனிப்பட்ட ஒரு ஆசிரியர் கூட வேண்டாம். நான்கு, ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து அந்த பாவப்பட்ட பிள்ளைக்கு உதவ ஏன் அவர்களுக்கு மனம் வரவில்லை. அந்த அளவிற்கு -நல்ல சம்பளம் இப்போது வாங்கும் - ஆசிரியைகளுக்கு வரவில்லை என்றால் இவர்கள் என்னதை சொல்லிக் கொடுத்து கிழித்து விடுவார்கள் என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இது ஒரு அரசுப் பள்ளி. ரிசல்ட் நூறு விழுக்காடு வராவிட்டால் தனியார் பள்ளிகளில் போல் இங்கே யார் கழுத்தையும் வெட்ட மாட்டார்கள். ஆனால் ஆசிரிய “சேவை’ செய்யும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அந்தப் பெண்ணுக்கு அளித்த முதல் “உதவி” - அவளை பள்ளியிலிருந்து வெளியே அனுப்பியது.
இதே போல் முன்பு ஒரு செய்தி வந்தது. ஒரு பையனுக்கு வெண்குஷ்டம் என்று தவறாக தமிழில் ஒரு பெயர் வைத்துத் தொலைத்து விட்டார்களே அந்த leucoderma. அதனால் அவனைப் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பினார்கள். படித்த மேதாவிகளான அந்தப் பள்ளி ஆசிரியப் “பெருமக்களுக்கு” இது ஒரு வியாதி அல்ல; பரவவும் செய்யாது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவ்வளவு பெரிய முட்டாள்களா என்ற ஆச்சரியம் எனக்கு.
அந்த தலைமை ஆசிரியைக்கு உடனே ஒரு sms அனுப்ப முயற்சித்தேன். என்ன எழவோ.... அது போகவில்லை. அந்த sms:
Madam
I am a retired teacher.
Through you i want to talk to the teachers of Muthulakshmi, the expelled student.
Wonder how come all of them were so inhuman & heartless. Had i been in their shoes with the help from some more teachers i would have got a new hearing aid.
If teachers dont show this much humanness they are not only bad teachers - they are worthless dirty and lousy creatures or even less than that.
I request you to pass this sms to those (in)human beings.
So sad about the teaching community.
thanks
மாணவர்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத இது போன்ற ஜென்மங்கள் ஆசிரியர்களானால் ... இவர்கள் எதைக் கற்றுக் கொடுத்து கிழித்து விடுவார்கள். இவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி இவர்களின் மீது என்ன மரியாதை இருக்கும். இது போன்ற ஆசிரியர்களை நினைத்துப் பார்த்தாலே வயிறு எரிகிறது.
தாகத்துக்கு தண்ணி தராத கழிசடைகள்.
இந்த லட்சணத்தில் ஆசிரியத் தொழில் பெரிய உயர்ந்த தொழிலாம் ...
மனதில் தோன்றும் ஒரே எண்ணம்:
Chief Educational Officer ஜெயக்கண்ணு - உங்களுக்கு ஒரு வார்த்தை. நீங்க பிள்ளை குட்டியோடு நல்லா இருக்கணும். உங்கள் நல்ல மனதிற்கு என் நன்றியும் பாராட்டும்.
ஆனால், இது போன்ற ஆசிரியர்கள் எல்லோரும் பிள்ளை குட்டியோடு நல்லா இருப்பாங்களா.....?
*