*
இது ஒருபுது யுகம். கிரிக்கெட் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த நம்மூரில் புதியதாகத் தோன்றியுள்ள லீக் ஆட்டங்கள் புதிய விளையாட்டுகளையும் அதன் வீரர்களையும் மக்களிடையே பிரபலமாக்கிக் கொண்டு வருகின்றன. கபடி விளையாட்டும் தொலைக் காட்சியில் வரும்போது புதியதாக பலரும் விளையாட்டு ஆர்வலர்களாக ஆவதைக் காண முடிகிறது.
நான் பார்த்த ஒரு பெரிய மாற்றம்.... பலரும் விளையாட்டின் மீது புது ஆர்வம் காண்பிக்கிறார்கள். வயசான பலரும் shuttle cock விளையாடுவதும், இளைஞர்கள் அதுவும் சின்னப் பசங்க கால்பந்து விளையாடுவதும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சியாகி விட்டது. பெரும் மகிழ்ச்சி. கால்பந்து விளையாட்டிற்குக் காரணம் I.S.L. போட்டிகள் என்றால் மிகையில்லை.
கால்பந்து போட்டிகள் இவ்வளவு தீவிரமாகப் பரவ காரணமாயிருந்தவர்களுக்கு பெருத்த நன்றியும் வணக்கமும்.
திருமதி நிடி அம்பானி
ஹீரோ கம்பெனி
மற்றும் பல ஆதரவாளர்கள்....
.... இவர்களோடு மிக மிக முக்கியமாக நமது கிரிக்கெட் வீரர்கள் - selling coal in New Castle என்பதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் வினையாற்றியிருக்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்த அளவு பிரபலமாக இருக்கும் போது அவர்களே அடுத்த ஒரு விளையாட்டை ‘வாங்கி’ அதனைப் பிரபலப்படுத்துகிறார்கள். நிச்சயம் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். I.S.L-ல் அவர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் பலரையும் இந்த விளையாட்டின் மீதும் ஆர்வம் கொள்ள வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கிரிக்கெட் வீரர்களோடு, நடிகர்களும் இதில் கலந்து கொண்டது பெரும் வீச்சை கால்பந்து விளையாட்டிற்குக் கொடுத்துள்ளது. Celebrity Cricket என்பது போல் celebrity foot ball என்றும் ஒன்று ஆரம்பித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடடா ... கால்பந்து விளையாட்டு எங்கோ போய் விடும்! நடிகர்களை வைத்து ஒரு போட்டியை யாராவது ஆரம்பயுங்களேன் ... ப்ளீஸ்.
மேற்சொன்ன அனைவருக்கும் ஒரு கால்பந்து ரசிகனான எனது பணிவான நன்றியும், வணக்கங்களும், பாராட்டும்.
இன்னும் சில சிந்தனைகள்:
நிச்சயமாக I.S.L, 3 அடுத்த ஆண்டு நடக்கும். இப்போதுள்ள நியதிப் படி ஒவ்வொரு அணியிலும் 6 இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் ‘சூடு’ பிடிக்கும்.
6 இந்திய விளையாட்டு வீரர்கள் என்பதை 3 + 3 என்றாக்கலாம். அதாவது 6 இந்திய வீரர்கள் என்பதைவிட எந்த மாநிலத்தின் பெயரில் அணி இருக்கிறதோ அந்த மாநில வீரர்கள் மூவரும், மீதி மூவர் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். இன்னும் மூன்று பேர் வெளிநாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆக
விளையாடும் போது 3 மாநில வீரர்கள் + 3 வேற்று மாநில வீரர்கள் + 3 வெளிநாட்டு வீரர்கள் + 2 from any category
சென்னைக்கு எதிரே நமது மாநில மோகன்ராஜ் கொல்கத்தா அணியில் அழகாக ஆடிய போது, ஆஹா... இந்த ஆள் நம் அணியில் ஆடியிருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது.
இப்படி நமது மாநிலம், அடுத்த மாநில வீர்ர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க I.S.L. தவிர அடுத்த போட்டிகள் பலவும் நடக்க வேண்டும்.
கிரிக்கெட்டில் ராஞ்சி போட்டி நடப்பது போல் inter state tournaments கால்பந்து விளையாட்டிற்கும் நடக்க வேண்டும். இப்போட்டியின் முடிவின் படி எத்தனை அணிகள் வேண்டுமோ அத்தனை அணிகளை, இதில் விளையாடும் வீர்ர்களை ஏலத்தில் எடுத்து அமைக்கலாம்.
எல்லோரும் சொல்லும் grass root level அளவிலேயே கால்பந்திற்கு இந்த வழிமுறை மூலம் சிறப்பிடம் கிடைக்கும்.
I.S.L. போல் மற்ற விளையாட்டிற்கும் பெரும் அளவில் போட்டிகளும் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு கிழவனின் கவலை ...
இது பல இளைஞர்கள் கண்களிலும், கருத்துகளிலும் போய்ச் சேர வேண்டுமென்ற ஆவலில் இதனை எழுதுகிறேன்.
*