Monday, January 04, 2016

883. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்*


பதான்கோட்டில் அந்நியர் ஊடுறுவல் ...அவர்கள் மீது தொடுத்த போரில் நமது பக்கம் 7 பேர் கொலை செய்யப்பட்டார்கள்...

இறந்தவரில் மலையாளி ஒருவர்..15மாதக் கைக்குழந்தை அவருக்கு ...
கமாண்டோ வீரர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் 

இன்னொருவர் திருமணம் ஆகி 45 நாளே ஆகின்றன.

நேற்று மாலை வட இந்திய தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்வு பற்றி நிறைய வாக்கு வாதங்களும் செய்தி தொகுப்புகளும் நடந்து கொண்டிருந்தன.

அர்னாப் கோஸ்வாமி வழக்கம் போல் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் பெரிய வியாதி .. யாரையும் பேச விடாமல் அவரே பேசிக்கொண்டிருப்பார். இதனால் வருவோரும் அவரைப் போலவே அசராமல் அவர்களும் கத்திக் கொன்டிருப்பார்கள். அதில் ஒருவர் ஆங்கிலம் என்றால் இன்னொருவர் இந்தியில் பேசிக்கொண்டிருப்பார். நமக்கு சுத்தமாக ஏதும் புரியாது.

நேற்றும் அப்படித்தான். கூச்சல் மட்டும் கேட்டது. புதிய பாணி ஒன்று கோஸ்வாமிக்குச் சொல்லிக் கொடுக்கலாமென நினைக்கிறேன். இவர் முன்னால் இருக்கும் பட்டனைத் தட்டினால் தான் விவாதிக்க வருவோர்கள் முன்னே இருக்கும் மைக் வேலை செய்வது போல் வைத்து விடலாம் ... நாமும் கோஸ்வாமி பேசுவதை மட்டும் ஒழுங்காகக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவர் விரும்பினால் மற்றவர்கள் பேசுவதை அவ்வப்போது கேட்கலாம். இது தான் சரியான வழி என்று நினைக்கிறேன்.


சென்னையில் வெள்ளம் வந்தபோது வட நாட்டுச் செய்திகளில் இதைப் பற்றி தொலைபேசியில் எதுவும் அதிகமாகக் குறிப்பிடவில்லை என்று இங்கு எல்லோரும் மாய்ந்து போனோம்.லேட்டாகவே அவர்கள் களத்தில் இறங்கினார்கள்.

ஆனால் கடந்த இரு நாட்களில்  இந்த ஊருறுவல் பற்றிய அதிகத் தகவல்களை நமது தொலக்காட்சிகள் அளித்தது போல் எனக்குத் தெரியவில்லை.

அட ...நீயா நானா நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு ஒரு அஞ்சலி செய்து அதன்பின் நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கலாம்.

 அவ்வளவு தான் போலும் ....


வடக்கும் தெற்கும் இணையாதா.....?

 **************************** "


நீயா நானா" நிகழ்ச்சி. ஒரு பக்கம் அதிகமாக மாணவர்கள். இன்னொரு பக்கம் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட்டால் முறுக்கி / முடிக்கி விடப்பட்ட ஆசிரியப் பெருந்தகைகள்!!! இந்தப் பெருந்தகைகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்த போது இவர்களுக்கெல்லாம் மண்டையில் மசாலாவே இருக்காதா? என்று தான் என் மனதில் தோன்றியது.

இவர்கள் எல்லாம் கல்லூரி ஆசிரியர்களா இல்லை 'ஒண்ணாங்கிளாஸ் ..ரெண்டாங்கிளாஸ் ... வாத்தியார்களா என்று தோன்றியது. 'சார்.. என்னக் கிள்ளிப்புட்டான்... தள்ளிப்புட்டான் .. என்று சொல்லும் சின்னப்பிள்ளைகளுக்கு இவர்களை வாத்தியார்களாக ஆக்கினால் ஒரு வேளை நன்றாக 'மேய்ப்பார்கள்'!

530 மார்க் வாங்கியவனை ஏன் சேர்க்கிறார்களோ தெரியவில்லை... சேர்த்து விட்டு அவனுக்கு எட்டாம் கிளாஸ் கணக்கு கூடத் தெரியவில்லை என்ற பேருண்மையக் கண்டுபிடிக்கிறார்கள். அவனைப் பாஸ் ஆக்குவதற்கு நிறைய ஃபைன் போடுவார்கள் போலும்!

இது போனற மட்டமான கல்லூரிக்கு நிறைய காசு கொடுத்து தன்பிள்ளைகளைச் சேர்க்கும் முட்டாள் பெற்றோர்களைத் திட்டுவதா? காசு பார்க்க கல்லூரி நடத்தும் 'கல்வித் தந்தைகளைப்' பாராட்டுவதா இப்படி நூத்துக் கணக்கில் கல்லூரி ஆரம்பிக்க அனுமதித்த நம் அரசுகளைத் திட்டுவதா? 

ஒன்றும் புரியவில்லை ........

சாதாரண கல்லூரிகளில் வேலை பார்த்து அங்குளள் மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்பது என் ஆவல் .... என் குறிக்கோள் என்றார் நண்பர் கார்த்திகைப் பாண்டியன். இவர் போன்ற சில நல்ல ஆசிரியர்களே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் அப்படிப்பட்ட ஆசிரியர் யாரையும் நான் காணவில்லை. மேனேஜ்மென்ட்டுக்கு குடை பிடிக்கும் ஆசிரியர்களே கண்ணில் அதிகமாகப் பட்டார்கள்.


 நாம் எங்கே போகிறோம் ...........????

 *

4 comments:

சார்லஸ் said...

சார்

நானும் நீயா நானா நிகழ்ச்சி பார்த்தேன் . தற்போதைய அமைச்சர்கள் போலவே அத்தனை ஆசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களையும் மாணவிகளையும் தள்ளி வைத்துப் பார்ப்பதை தங்கள் தலையாய பணி என்று பேசினார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு மழுங்கிப் போன மாணவ சமுதாயத்தை படைக்கும் இந்த ஆசிரியர்களும் நிறுவனங்களும் நம் சமுதாயத்திற்கு சாபக்கேடுகள். ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

sermathi said...

It is all because of mind set of people. They think there is a 'prestigious' way of living. So allow them to 'BE' themselves.
எல்லாம் மனோபாவமே காரணம். வேலையில் ஒரு ‘கெளரவம்’ வேண்டும் இல்லையா?

சந்திரசேகர்.ஜே.கே said...

மோடியின் திடீர் பாகிஸ்தான் விஜயமும்,பத்தான்கோட் நிகழ்வும் பொருந்துகிறார்போல் உள்ளது.இங்கே அம்மாவின் ஆணைப்படி என்பது போல் மோடிக்கு ஒபாமா ஆணைப்படி போலும்.

சந்திரசேகர்.ஜே.கே said...

மோடியின் திடீர் பாகிஸ்தான் விஜயமும்,பத்தான்கோட் நிகழ்வும் பொருந்துகிறார்போல் உள்ளது.இங்கே அம்மாவின் ஆணைப்படி என்பது போல் மோடிக்கு ஒபாமா ஆணைப்படி போலும்.

Post a Comment