Tuesday, February 16, 2016

888. உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.








*

Siachen bravehearts laid to rest என்று இன்றைய தினசரிகளில் வந்த தலைப்பு. இறந்தவர்கள் bravehearts அல்ல …just ‘cold hearts’! தன் தலைவிதியை நொந்து கொள்ளும் சில போர்வீரர்களும் அவர்களது பாவப்பட்ட குடும்பங்களும்.


700 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இந்த பனிபடர்ந்த இடம் 5,753 m /18,875 ft உயரத்தில் உள்ளது. உலகின் மிக உயரமான படைத் தளம். சிம்லா உடன்படிக்கையை பாக்கிஸ்தான் மீறியதால் 1984ல் Operation Meghdoot என்ற பெயரில் இந்தியா போர் தொடுத்து Siachen Glacier முழுவதையும் தன் “குடைக்குக் கீழ்’ கொண்டு வந்தது.

பாதுகாப்பு அமைச்சர் Rao Inderjit Singh பாராளுமன்றத்தில் இது வரை 869 படைவீர்ர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். (1000 வீர்ர்கள் இறந்ததும் நாமெல்லோரும் அதைக் கொண்டாடுவோமா?)

இவர்கள் எதிர்களோடு போரிட்டு மாளவில்லை. இயற்கையோடு போராடி உயிரைத் தந்துள்ளார்கள்.

இந்த லட்சணத்தில் Siachen என்ற பெயருக்கு “ரோஜாக்களால் நிரம்பிய இடம்” என்று பொருளாம்! அடப்பாவமே!

இந்த அழகில் இப்போது இவ்விடத்தின் பொறுப்பு 16 madras regiment இடம் உள்ளதாம். அப்படியானால் நம் ஏரியாக்கார்ர்கள் அதிகமாக இருப்பார்களோ? (இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?)

பயனில்லாத, தேவையில்லாத இட்த்தில் ஒரு போர்க்களம். போரில்லாமல் இயற்கையின் இறுக்கத்தில் உயிரை அனாவசியமாக இழக்கும் நம் வீர்ர்கள். இறந்தவர்களின் பட்டியல்:

(1) Subedar Nagesha TT r/o vill Tejur, Hassan Dist, Karnataka.
(2) Havildar Elumalai M r/o vill Dukkam Parai, Vellore Dist, Tamil Nadu. 
(3) Lance Havildar S Kumar r/o vill Kumanan Thozhu, Teni Dist, Tamil Nadu.
(4) Lance Naik Sudheesh B r/o vill Monroethuruth, Kollam Dist, Kerala.
(5) Lance Naik Hanamanthappa Koppad r/o vill Betadur , Dharwad Dist, Karnataka.
(6) Sepoy Mahesha PN r/o vill HD Kote, Mysore Dist, Karnataka.
(7) Sepoy Ganesan G r/o village Chokkathevan Patti, Madurai Dist, Tamil Nadu.
(8) Sepoy Rama Moorthy N r/o vill Gudisatana Palli , Krishna Giri Dist, Tamil Nadu. 
(9) Sep Mustaq Ahmed S r/o vill Parnapalle, Kurnool Dist, Andhra Pradesh.
(10) Sepoy Nursing Assistant Suryawanshi SV r/o village Maskarwadi, Satara Dist, Maharashtra

4 பேர் தமிழர்கள்; 9 பேர் தென்னிந்தியர்கள். 

 மனசு கேட்காமல் கீழேயுள்ள நாலைந்து கீச்சுகள் - twitters - போட்டேன்.

"வீரர்கள் இங்கு அனுப்பப்படும்போது தன் குடும்பத்தினரிடம் "நாங்கள் திரும்பி வந்தால் பார்த்துக் கொள்வோம்" என்று சொல்வார்களாம்."* 

‘two baldies fighting for a single comb” நல்ல உதாரணம். இன்னும் இதற்காக உயிரை விட்டுக் கொன்டிருக்க வேண்டுமா?*  

"உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறோம் என்பது தவிர என்ன பயனோ? தேவையில்லாத உயிர்ப்பலிகள். நிறுத்துங்களேன்." 

"போர் எதுவும் இல்லாமலேயே வெறும் பாதுகாப்புப் பணியிலேயே பல உயிரைப் பலிகொடுக்கிறோம். இது தேவை தானா?"

இப்படி எழுதியும் எந்த விதமான ஆதரவும் என் கீச்சுகளுக்குக் கிடைக்கவில்லை. யார் கடைக்கண்ணும் என் கீச்சுகள் மீது விழவில்லை. முகப் புத்தகத்தில் இட்டேன். அதே கதி தான். ஒரு வேளை எனது profile photoவை மாற்றிப் போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எக்கச்சக்கமாக பலரின் பார்வையும், பகிர்தலும் வந்து விடும். 'விசாரணை' பற்றி எழுதியிருந்தாலும் பற்றிக் கொண்டிருக்கும்.  இல்ல ...?

சமூகத் தளங்களில் போட்டோவிற்கும், சினிமாவிற்கும் இருக்கும் இடம் சீரியசான விஷயங்களுக்குக் கிடைக்காதோ...

மனது இன்னும் வெறுத்து நாடு தழுவி சமூக ஊடகங்கள் வழியாக இதை நாம் எதிர்க்க முடியாதா? முயற்சிக்கக் கூடாதா? என்று ஒரு கீச்சு விட்டேன்.

இதற்கும் எந்த வித பயனுமல்ல. அதனால் உங்களனைவருக்கும் என் ஒரு கேள்வி:

சமூக ஊடகங்கள் வழியே பெரும் புரட்சிகளே ஏற்படும் என்றெல்லாம் சொல்கிறீர்களே …. அது ஏன் நம்மூரில் நிகழ மாட்டேன் என்கிறது.
நம் தோல் அவ்வளவு தடிப்பா?
அல்லது … நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழாமல் இருந்தால் போதும் என்ற மேனாமினிக்கித் தனமா?
இல்லை .. வேறு பெயர் ஏதும் இதற்குண்டா?


அட ... இதுதான் போகுதுன்னு நம்மூர் விஷயம் ஒண்ணு போட்டேன். அதுவும் ஒரு சீரியஸான விஷயம் தான். அதுவும் சேற்றில் விழுந்த கல் போலானது.

#சீப்மினிஸ்டர் சொல்லிட்டாங்க. அதிகாரிகள் மேல் ஊழல்கேஸ் போடக்கூடாதாம்.இனிமே under the table வேண்டாம் எல்லாம் இனிமே over the table தான். ஜாலி … ஜாலி … OPEN BUSINESS ……

------------
சமூகத் தளங்களை வெறும் 'ஜாலிக்காக' மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா?  ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தவே கூடாதா?
 ----------


அட ...போங்கப்பா ...நீங்களும் உங்கள் சமூகத்தளங்களும் ....


----------


 *1 ... From Letters to the Editor from THE HINDU






 *

16 comments:

Anonymous said...

தருமி சார்,

பல வருடங்கள் பாடுபட்ட உண்மையான மேரி கோம்-க்கு 5 லட்சமும், 6 மாதம் மேரி கோம்-ஆக நடித்த பிரியங்கா சோப்ரா-விற்கு 5 கோடியும் கொடுக்கும் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சார்.

அப்துல் கலாமும், ரஜினியும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் ஒரு மீட்டிங் நடத்தினால், எந்த கூட்டத்திருக்கு மக்கள் அதிகமாக வருவார்கள் என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.

இப்படிபட்ட மக்களிடமிருந்து நீங்கள் எழுதிய நல்ல விஷயத்திற்கு ஆதரவு எல்லாம் எதிர்பார்க்கலாமா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான் ஐயா bravehearts அல்ல …just ‘cold hearts’! நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு பல இன்னுயிர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Yaathoramani.blogspot.com said...

ஆம் .நியாய அ நியாயங்கள்
நல்லது கெட்டது என்பதற்கெல்லாம்
ஒரு பொது மதிப்பீடு இன்றி
சொல்பவனைப் பொருத்தே என
முடிவெடுக்கிற கூட்டம் அதிகமாயிருக்கையில்

அ. வேல்முருகன் said...

எத்தனை like பெற்றேன். எத்தனை நண்பர்கள், இப்படிதான் இந்த சமூகதளங்கள் இயங்குகின்றன. ஒரிருவர் தவிர பெரும்பான்மையோர் நீங்கள் சொன்ன ஜாலிக்காக இதை பயன்படுத்தலாம் அல்லது சயீது பெயரில் போலி கணக்கை துவங்கி மத வெறுப்பை ஏற்படுத்தலாம். அதிக சமூக அக்கறையோடு செயல்பட்டால் உங்கள் தளம் முடக்கப்படலாம்.

வீரர்களின் பலி அரசியல். தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. தீர்க்க விரும்பாத பிரச்சினை. ஆக தொடரத செய்யும், பலிகளும்

Anonymous said...

Frankly I don't understand what you want to know from others. It may be you want to know why India is protecting Siachin area. Just because it is near Pakistan who are ready to occupy it if we don't guard it. British colonial army designed and developed regiments for each ethnic or geographical groups. They thought there would be mutual cooperation and solidarity among the troops if they were from the same group. So Madras Regiment for South India was designed where only the soldiers from all the four states get recruited. In case I have to agree with you that we just don't guard Siachin it being cold and deadly taking the avoidable toll of Tamilians (You are concerned about them!), there are other hostile territories too bordering Pak and other neighbours where too soldiers die guarding them. Can we ask soldiers to go to plains leaving the borders? A soldier's life is to guard and protect the nation. If the families don't want them to do so, why to send them to Army?

Anonymous said...

I would add that Army does not place a regiment at one place permanently.It is rotating regiments. For e.g. after Madras Regiment completes its tenure of guarding Siachin, other regiment will take from them; and Madras regiment go to plains.

alwin said...

கேட்பதினால் பலனொன்றும் இல்லை என்பதால் தானோ என்னவோ....

வேகநரி said...

நீங்க சொன்னது சரியானதே. இந்தியா, பாகிஸ்​தா​ன் இருதரப்பிலும் உயிர் இழந்து இருக்கிறார்கள். சண்டையினால் அல்ல வீம்புக்காக. உயிர்களும் பெரும் தொகை பணமும் வீணாக்கபடுகிறது.அது ஒரு ராணுவ முக்கியத்துவம் கொண்ட இடமும் இல்லையாம்!
சமூகத் தளங்களை பொறுத்தவரை ஜாலிக்காக காலாய்ப்பதற்கு தான்.

Thekkikattan|தெகா said...

தருமி, உங்களுக்கு இன்னுமா நம்பிக்கை இருக்கிறது. முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியை தோண்டும் தேசமாகி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது.

எவர் ஒருவருக்கேனும் சொரணை வந்து இப்படி பேசிவிட்டால், அவர் மீது தேசத் துரோக வழக்கு பாய்கிறது. இந்த லட்சனத்தில் எவன் முண்டுவான். அருந்ததி ராய்க்கும் அதே கதைதான்... இது ஒரு ஜனநாயக பூமியல்ல, வல்லவன் ஜெயித்துக் கொள்ளும் பூமி...

http://www.telegraphindia.com/1160216/jsp/frontpage/story_69576.jsp#.VsOIc7QrLIX

மீரா செல்வக்குமார் said...

உயிர்கள் மட்டுமல்ல...அதற்கென இவர்கள் காட்டும் கணக்கும் சாக வைக்கிறது...இரண்டு ரூபாய் பொருளை ஹெலிகாப்டரில் தான் கொண்டு போகனுமாம்...
உலகம் எல்லாம் கூடி இந்த ரானுவம் என்கிற அமைப்பையே நீக்கிவிடலாம்...கண்டிப்பாய் நடக்காதுதான்...பின் எப்படி சவப்பெட்டியில் கணக்கெழுதுவது..த்தூ

தருமி said...

Balasundara Vinayagam
dont accept many of your arguments of the first comment and your second is totally correct

//Frankly I don't understand what you want to know from others//
nothing sir 'from others' like you.

..British colonial army designed ..//
hail the british!

// If the families don't want them to do so why to send them to Army?//
an irrefutable and noble comment. feel the shade of hitler!

i will be sorry to know the other 'hostile areas' you mention. pl. do give a list.

முதல் பின்னூட்டம் - அதிக ரத்த வாடை தெரிகிறது.

தருமி said...

https://www.change.org/p/educationists-say-no-to-police-action-in-jnu-and-all-universities
இதற்கு ஒரு பெட்டிஷன் ஆரம்பித்திருக்கிறார்கள் -Feb 13, 2016 அன்று. 10,000 கையெழுத்து சேர்க்கும் முயற்சி. இன்று - 5 நாட்களுக்குள் - என்னையும் சேர்த்து 7,935 பேர் கையெழுத்திட்டிருக்கிறோம். இது ஒரு நல்ல முயற்சி.

சுரணை உள்ளவர்கள் வெற்றிகரமாக ஆரம்பித்த முயற்சி. அதுவாவது வெல்லட்டும்.




7,935

sermathi said...

இது நல்ல கேள்வி.

தருமி said...

//இது நல்ல கேள்வி.//

ஒரு நல்ல பதில் ...?

சார்லஸ் said...

இயற்கை விபத்து என்று ஒதுக்க முடியாது. பாதுகாப்பையும் தவிர்க்க முடியாது. ஆனால் உயிர்ப்பலிகளை தவிர்க்கலாம் . செலவு அதிகமாகும் . நாட்டைப் பாதுகாப்பவர்களின் பாதுகாப்புக்கு நமது அரசாங்கம் அவ்வளவு செலவு செய்யுமா?

சமூக வலை தளங்களில் சமூக அக்கறையுடன் உணர்வுகளை வெளிப்படுத்துவோர் அருகி வருகிறார்கள். கவர்ச்சிக்கும் அடுத்தவரை கவருவதிலுமே முக்கியத்துவம் கொடுக்கும் கூட்டத்தில் அக்கறையுள்ளவரை தேடுகிறீர்கள்.

கையேடு said...

Thought of writing in detail..may be sometimes later. but as a one liner..
Ignoring Identity of any form has to happen unanimously for human kind.. I believe only some strange survival threat could drive us there..

Post a Comment