Wednesday, October 19, 2016

911. தமிழுக்கும் எனக்கும் நடக்கும் நீண்ட நெடும் போர் .......

* இன்றைக்கு இன்னொரு கூத்து.

இப்போதெல்லாம் தமிழில் தட்டச்ச தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் வேலையை செய்ய வேண்டியதாகி விட்டது. Windows 10.1 version போட்டதிலிருந்து ஒரு தலைவலி போய் அடுத்த தலைவலின்னு வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது. NHM writer, e-kalappai…. எதுவும் வேலைக்காகவில்லை. இப்போது அது இது என்று சுற்றித் திரிந்து விட்டு google tools வழியாக கஷ்டப்பட்டு ஏதேதோ தட்டச்சி பொழப்பை ஒரு மாதிரியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேன். பல கஷ்டங்கள்.... அதில் ஒன்று ‘ஞ்’ என்ற எழுத்துக்கு நெடில் எப்படி தட்டச்சுவது என்றே தெரியவில்லை.

 ------------------------------

இப்போது தமிழில் தனியாகத் தட்டச்சி அதை என் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். Publish என்பதை அழுத்தி விட்டு பதிவைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்ன ஆச்சோ ... ஏது ஆச்சோ ... தெரியவில்லை. நான் தமிழில் தட்டச்சியது எப்படியோ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி என்னைப் பார்த்து முழித்து நின்றது. அதை வாசித்து விட்டு நானும் முழித்து நின்றேன். அப்படி ஒரு அழகிய மொழிபெயர்ப்பு!!!! நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

 ------------------------------

 அடுத்துவரும் முதல் பத்தி நான் தமிழில் எழுதியது. அடுத்து இரண்டாம் பத்தி அதுவாகவே மொழி பெயர்ப்பாகி நின்ற கோலம்.

 --------------------------------

 ' ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ' சிடி சினிமாவில் ஓடியது போல் எனக்கு ஒரு நினைவு. நிச்சயமாகத் தெரியாது.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது. நாயக்கர் மகாலில் இருந்து பார்த்தால் சிந்தாமணி தியேட்டரின் elevation வித்தியாசமாகத் தெரியும். அதன் நடுப்பகுதி பழைய காமிராவில் உள்ள bellows மாதிரி இருக்கும். அப்படி டிசைன் செய்திருக்கிறார்கள்.

முதன் முதல் கலர்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த தியேட்டரில் வந்தது. படம் பார்க்கனும்னு அப்பாட்ட கேட்டதும் பக்கத்து வீட்டில் இருந்தவர், என் நண்பனின் அப்பா அந்த தியேட்டரின் ஆப்பரேடர் ஆக இருந்தார். அவரோடு அனுப்பி வைத்தார்கள். அவர் மாட்னி நடக்கும் போதே என்னை உட்கார வைத்து விட்டுப் போய் விட்டார். படம் முடிந்ததும் எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தியேட்டர் மெத்தையில் கடைசி வரிசையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். முருக்கு வந்தது. சாப்பிட்டுக் கொண்டு 'அம்பேல்' என்று உட்கார்ந்திருந்தேன். அதன் பின் மாலைப் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன். 

 ------------------------------------

Blogger Tarumi said ... 

 'Apoorva Chintamani bought a thousand head, "I have a memory like CD and ran in the cinema. We do not know. 

There comes to mind. From the elevation of the theater Chintamani Nayak Mahal incorporating knew differently. In its mid old bellows camera model. Design done so. 

The first came in this theater kalarpatam Alibaba and forty thieves. Image parkkanumnu appatta neighbor had heard, my friend's father was the theater of the operator. He was sent to. Matni happens when he went from me to sit. The film was finished, everyone was gone. I sat alone in the last row of the theater of the mattress. Was mur. Eating 'ampel he sat down. After that evening I came home from watching the film. 

======================
இப்படம் வந்த ஆண்டு 1955. என் வயது அப்போது 11

===========================


இப்படி மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்???
*

5 comments:

ப.கந்தசாமி said...

ஆஹா, மொழி பெயர்ப்பு பிரமாதம்.

நானும் விண்டோஸ் 10.1 தான் வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். நான் வைத்திருப்பது ஒரிஜினல் விண்டோஸ். 10000 ரூபாய் கொடுத்து வாங்கினது. இதில் NHM Writer நன்றாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது.

"ஹூம், மயிறுள்ள சீமாட்டி எப்படி வேண்டுமானாலும் கொண்டை போடலாம்" என்று நீங்கள் புலம்புவது என் காதிற்கு கேட்கிறது.

இங்க பாருங்க, உங்க "ஞா" ஞாலம், ஞாயிறு.

கரந்தை ஜெயக்குமார் said...

என் எச் எம் ரைட்டர் 2.9 வர்சனை தரவிறக்கம் செய்து விண்டாஸ் 10 இல் பயன்படுத்தலாம் ஐயா
இந்த கருத்துரையினை விண்டோஸ் 10 இல் என் எச் எம் மூலம்தான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.
ஒரு சிறு மாறுதல், எப்பொழுதும் செய்வதுபோல், திரையின் அடிப்பக்கம் உள்ள, மணியின் உருவப் படித்தின் மீது அம்புக்குறியினை வைத்துச் சொடுக்காதீர்கள், Alt+3 ஐ அழுத்துங்கள் தமிழ் தட்டச்சு செயல்படத் தொடங்கும்

தருமி said...

ப.கந்தசாமி,

நல்ல கொண்டை ...........வெளுத்து வாங்குங்கள்.

வேகநரி said...

சொந்த பாஷையுடன் போர் கிடையாது ஊடல் தான்.

சார்லஸ் said...

சார்

google translate முயற்சி செய்யலாமே! நான் அதில்தான் type செய்து copy மற்றும் paste செய்கிறேன் . amma என்று டைப் செய்தால் அம்மா என்று தமிழில் தோன்றும் . இடது பக்க பெட்டியை தமிழுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வலது பக்கம் நீங்கள் குறிப்பிட்ட கன்றாவி translation இருக்கும்

Post a Comment