Thursday, July 05, 2018

989. F.I.F.A. '18 -- 6








*

 1.7.2018

F.I.F.A. '18 

ரஷ்யா - ஸ்பெயின் 

ஒண்ணும் தேறாதுன்னு நினச்ச ரஷ்யா லீக் லெவல் தாண்டி வந்தாச்சு. பெரிய டீம் ஸ்பெயின் கூட மோதுதுன்னு நினச்சதும் சரி.. நாலஞ்சி இன்னைக்கி வாங்கிட்டு போகும்னு நினச்சிக்கிட்டு உட்கார்ந்தா ... நடந்தது வேறு.

பந்தும் ரஷ்யா பக்கமே அலைபாய்ந்து கொண்டு கிடந்தது. பதினோராவது நிமிடமே ஒரு கார்னர் ஷாட் ஸ்பெயினுக்குக் கிடைத்தது. தள்ளு முள்ளு ஆட்டம் ஆடினார் ரஷ்யாவின் இக்னேவிச். (இக்னேஷியஸ் .. என்ற பெயராக இருக்குமோ? சரி .. ஏதோ ஒரு witch!) வினை விதைத்தவன் கதையாகப் போய் விட்டது. ஸ்பெயின் முன் ஆட்டக்காரர் மேல் விழுந்து தடுக்கிறேன்னு மோதினாரா .. அப்போ அவர் காலில் பட்டு பந்து கோலுக்குள் சென்றது. சரியான witch தான் அவர்!

30வது நிமிடம் ஒரு கணக்கு சொன்னார்கள்: passes எண்ணிக்கை ஸ்பெயினுக்கு 250 என்றும் அதே எண்ணிக்கை ரஷ்யாவிற்கு வெறு 60 என்று சொன்னார்கள். வாழ்க்கையே இப்படித்தான் என்பது போல் திசை மாற்றங்கள் நடந்து முடிந்தது ஒரு பெரும் சோகம் தான்.

39வது நிமிடம். ரஷ்யாவின் ஆட்டக்காரர் கையில் பந்து பட்டு போனது. hand ball என்றார் நடுவர். ஆட்டக்காரர் நடுவரிடம் வாதாடினார்.கிடைத்தது ஒரு மஞ்சள் அட்டை. 40வது நிமிடம். ரஷ்யாவிற்கு பெனல்ட்டி கிடைத்தது. அடித்தது நம்ம witch தான். மனுஷன் ஓங்கி அடிச்சி... கோல் போட்டு செஞ்ச பாவத்திற்கு விமோசனம் எடுத்துக் கொண்டார். ஒரு poetic justice!

இரண்டாம் பாகம்.வேகமான விளையாட்டு தான். ஆனால் the very handsome Iniesta சரியாகவே விளையாட வாய்ப்பில்லை.ஆனால் இன்னொரு ஆட்டக்காரர் Pique நன்கு விளையாடினார். பந்து இரு பக்கங்களுக்கும் மாறி மாறிச் சென்றது. பார்வையாளர்களிடமிருந்து ரஷ்யாவிற்கு ஏகப்பட்ட வரவேற்பும், ஆதரவும்.

ஆட்டம் 1 : 1 என்று முடிந்தது.

அடுத்து சோகமான பெனல்ட்டி. முதல் கோலை இனியெஸ்டா போட்டார். ஸ்பெயினின் மூன்றாவது கோலை ரஷ்ய கோல் கீப்பர் ‘தடுத்தாட்கொண்டார்’! இன்னொரு பந்தை ஸ்பெயின்காரர் வெளியே அடிக்க 4 : 3 என்ற கணக்கில் ரஷ்யா வென்றது.

\




 * * * * *


அடுத்த ஆட்டம் க்ரோஷியா - டென்மார்க். பார்க்க முயற்சித்தேன். தூக்க தேவதை என்னக் கட்டிலுக்குக் கடத்திப் போய் விட்டாள்.




 * * * * *



 3.7.’18 


ஸ்வீடன் - ஸ்விட்சர்லாந்து 

களம் இறங்கிய இரு அணிகள் மாறி மாறி பந்தை புறம் மாற்றி போட்டியை விறுவிறுப்பாக்கின.. ஆனால் இரு அணிகளிலும் அந்த finishing touch இல்லாமல் போனது. இரு அணிகளுக்கும் அத்தனை அத்தனை வாய்ப்புகள், ஆனால் கோல் ஏதுமில்லாமல் ஆட்டம் தொடர்ந்தது. கிடைத்த நல்ல வாய்ப்புகள் பறி போகின. முட்டாள் தனமான ஷாட்கள் என்று தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் போலிருந்தது.

அதோடு இரு அணிகளுக்கும் ஆளுக்கொரு முறை hand ball ஆனது. ஓடிய நடுவரும் சரி, உட்கார்ந்திருந்த நடுவரும், சரி... இருவருமே கண்டுகொள்ளவில்லை.

இரண்டாம் பகுதியில் ஸ்வீடனின் வீர்ர் அடித்த பந்து கோலானது. தரத்தில் குறைந்திருந்தாலும் வெற்றியைப் பறித்துச் சென்றது.





 *

1 comment:

Balaji.paari said...

Sam, did you watch the Belgium-Japan game?
Looking forward to see it in your writing.
-Balaji Paari

Post a Comment