Thursday, July 19, 2018

994 A KUTTI "PHILOSPHER'S" REVELATION*

நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்றைப் பார்த்து விட்டேன். நன்றாக வாசிப்பவர்கள் .. அதிலும் ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய வாசிப்பவர்கள் ... அதுவும் அவர்கள் பெண்களாக இருந்தால் ... அவர்கள் ஒரு தனி ரகம் தான். நிச்சயமாக பாரதி கண்ட பெண் போல் நிமிர்ந்த பார்வை .. நேர்கொண்ட பார்வை ... etc., ..etc. இருக்கும். தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள்; யாரும் வலிய தங்கள் கருத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. . இது போல் பல விஷயங்கள் இருக்கும். அவைகளை  + என்றும் சொல்ல முடியாது; -- என்றும்  சொல்ல முடியாது. பொதுவாக சின்னப் பிள்ளைகள் தானே. (அப்படியும் நம்மை நினைக்க விட மாட்டார்கள்! முதிர்ந்தவர்கள் போன்றே நம்மிடம் காட்டிக் கொள்வார்கள்.)


பெரிய பேத்தியும் நிறைய்ய்ய்..ய வாசிக்கிறாள். ஆனால் அவளுக்குப் பிடித்தவைகளை மட்டும். P.G. Wodehouse,  Sherlock Holmes வாங்கிக் கொடுத்தேன். பயனில்லை. எந்த குண்டு புத்தகமாக இருந்தாலும் ஆச்சரியப்படும்படி வெகு விரைவாக முடித்து விடுகிறாள். நிறைய எழுதுகிறாள். ஆனால் யார் கண்ணுக்கும் காட்டுவதில்லை. ஏதோ ஒரு குழுவாக இணையத்தில் நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்குள் விவாதிப்போம் என்கிறாள். ஒரு சில சின்னப் பகுதிகள் கண்ணில் பட்டன. நன்றாக இருந்தன. சிலவற்றை அவளுக்காக ஆரம்பித்த ப்ளாக்கில் போட்டு வந்தேன். சொந்தமாகப் புத்தகம் எழுதி வெளியிட்ட சின்னச் சின்ன பெண்களைப் பற்றிச் சொன்னேன். அது போல் ஏன் நீ முயற்சிக்கக் கூடாது என்றேன். பயனில்லை.

நன்றாகப் படம் வரைகிறாள். மிக எளிதாக வரைகிறாள். வரைந்த்தை ப்ளாக்கில் போட்டேன். அதற்காகவே மதுரை வரும்போது ஓரிரு படங்களோடு வருவாள். அல்லது நான் சென்னை செல்லும் போது படங்கள் தருவாள். இப்போதெல்லாம் நிறுத்தியாகி விட்டது. ப்ளாக் ... படம் ... என்றால் தானே ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போட்டுக் கொள்கிறேன் என்றாள். சொன்னாள் .. ஆனால் இது வரை ஏதும் செய்யவில்லை. அதற்கு மேல் அழுத்திக் கேட்கவா முடியும்!


சென்ற முறை சென்னை சென்றிருந்தேன். அவளது அறைக்குப் போனேன். பழைய சில படங்களோடு அவளது மர அலமாரிக் கதவுகளில் சில புதிய படங்கள் இருந்தன. A sort of 'houseful'!
DOOR OF HER CUP-BOARD
ம்ம்...ம் ..NOT EVERY GIRL WANTS TO BE A PRINCESS, 'COZ I'M A QUEEN.   .... சரி...  இந்த இளம் வயதில் ‘தனிக்காட்டு ராஜாஎன்ற நினைப்பு நம் எல்லோருக்கும் இருக்குமே .. அது போல் இது ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

SELF PORTRAIT with her ever-attached head phone
& A PIECE OF HER PHILOSOPHY


அடுத்து ஒரு செல்ஃபியைப் படமாக வரைந்து வைத்திருந்தாள். இணைபிரியா head phone கூடவே வந்து விட்டது

ப்படத்தில் அவளது தத்துவம் ஒன்றும் இணைந்திருந்தது. Karma is real and I believe it. நான் மத மறுப்பாளன் என்பதும், எனது முதல் நூல் பற்றியும் அவளுக்குத் தெரியும். ஒரு சின்ன சந்தோஷம். அவளுக்கு பல பிறப்புகள் பற்றி நம்பிக்கை இல்லையாம். அவளுடையகர்மாமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது மாதிரியும், உன் வினை உன்னை உறுத்தி வந்து ஊட்டும் என்பது மாதிரியும் சொன்னாள். அதைப் போல் வகுப்பில் நடந்த நிகழ்வையும் சுட்டிக் காட்டினாள். போன ஜென்மம் ... இந்த ஜென்மம் என்று பேசிவிடுவாளோ என்ற நினைத்த பயம்  போய் விட்டது. என் பேத்தியல்லவா ...! அவளுக்கென்று ஒரு தத்துவம். அதுவும் நல்வழிப்படுத்தும் தத்துவம் என்பதால் மகிழ்ச்சியே!

The background looked better in this picture.

தன் பெயரின் முதலெழுத்தை எழுதியிருந்தாள். பின்னால் கொடுத்திருந்த பேக்ரவுண்டு இப்படத்தில் தோன்றுவதை விட நன்றாகவே இருந்தது.Asked her what is in the background.
She did not get the BG as she wanted. So filled it
with words as the backdrop.
அடுத்து, அமைதிச் சின்னம் வரைந்திருந்தாள். ஆனால் அதன் பின்னால் பொடி எழுத்தில் ஆங்கில வார்த்தைகளின் அடுக்கு இருந்தது. ஏனென்று புரியவில்லை. அவளிடமே கேட்டேன். ”ஒன்றுமில்லை... பின்னால் ஒரு கலர் ஷேட் கொடுத்தேன். பிடித்தது போல் அமையவில்லை. Want to redirect the attention to something else. So just added words ... என்றாள். நல்ல மனோதத்துவம் என்று நினைத்துக் கொண்டேன்.

வளரட்டும் ........


*

No comments:

Post a Comment