Monday, February 04, 2019

1032. ANOTHER MOTIVATION






*





உறவுக்காரர்கள் வீட்டில் ஒரு விசேஷம். மதிய உணவிற்குப் பின் வீட்டின் முன்னே ஒரு கூட்டம்; வீட்டின் உள்ளே புது மணமக்களை உட்கார வைத்து ஒரு கலாட்டாக் கூட்டம். என் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் என் பெரிய பேத்தியும், சின்னப் பேரனும் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் ஏதோ பேசும் போது என்னைக் காண்பித்து, ‘அவருக்கென்ன ... அவர் ஒரு சரியான atheist’ என்றார்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியேறினேன். கூடவே பேரப்பிள்ளைகளும் உடன் எழுந்து வந்தார்கள். தனியே நின்றோம். என்னிடம் அவர்கள் ‘நீங்கள் உண்மையிலேயே atheist தானா என்று கேட்டார்கள். நான் புத்தகம் எழுதியிருப்பது அவர்களுக்குத் தெரியும். உள்ளடக்கம் பற்றிச் சொன்னதில்லை. நூலைப் பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் சொல்லிவிட்டு வழக்கமாகச் சொல்லும் ஒன்றையும் சொன்னேன்.”அந்த நூல்களை உங்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்; ஆனால் நீங்கள் அதை வாசிக்கப் போவதில்லை” என்றேன். மொழித் தகராறு.

அவர்கள் என்னைப் புதிய கோணத்தில் பார்த்தது போல் இருந்தது. நிச்சயமாக அவர்கள் மதிப்பீட்டில் இப்போது நான் உயர்ந்து விட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிய சில வார்த்தைகள் என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவள் சொன்னாள்: Believers do always what others taught them". பேரன் உடனே "But atheists think and decide their ways" என்றான். கேட்டதும் எனக்குப் பெரு மகிழ்ச்சி. இதைத் தானே நாம் ‘கரடியாகக்’ கத்திக் கொண்டேயிருக்கிறோம் என்றும் தோன்றியது.


என் புத்தகத்தை நீங்கள் வாசிக்கவே முடியாதே என்று கவலையோடு அவர்களிடம் சொன்னேன். பேத்தி ”After all you are a translator; why not translate your own book. We will then read” என்றாள். 

Another motivation... செய்யணும். கொஞ்சம் கொஞ்சமாகவாவது .... செய்யணும்.







*


3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பேரப்பிள்ளைகளுக்கு நன்றிகூற வேண்டும். உங்களுக்கு புதிய வேலை தந்து விட்டார்கள் அல்லவா?

G.M Balasubramaniam said...

சில நேரங்களில் சரியாகக் கிடைக்கும் மோட்டிவேஷன்

vijay said...

மிகவும் வருத்தமாகவுள்ளது உங்களது பேரப்பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்பது.இது தமிழ் நாட்டில்தான் சாத்தியம்.

Post a Comment