Monday, April 06, 2020

1091. பால்கனி அரசிற்கு கமல்ஹாசனின் கடிதம்




*


6 ஏப்ரல் 2020
சென்னை
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு,

டீமானிடைசேசன் போதும் கூட நான் உங்களை நம்பலாம் என்று தான் முடிவெடுத்தேன். ஆனால் காலம் எனது முடிவு தவறென்று உணர்த்தியது. உங்களது முடிவும் தவறு என்றே காலம் கட்டியம் கட்டி சொன்னது.
இந்த நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் சுகாதரத்துறை ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும், நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள்
சொன்னவுடன் உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து கொண்டோர் கூட கைதட்டி உற்சாகமூட்டினர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அடிபணிகின்றோம் எனத் தாங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.


நான் மிகவும் அச்சப்படும் ஒரு விசயம் என்னவெனில், டீமானிடைசேசன் நேரத்தில் நடந்தது போன்ற ஒரு பெரும் தவறு இம்முறை, அதை விட மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான்.


 உங்களுடைய உலகம் எண்ணைய் விளக்குகளை தங்கள் பால்கனிகளில் ஏந்திகொண்டிருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதற்குக் கூட எண்ணைய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.


இது போன்ற மனநல யுக்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலைகளை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும்.


வெறும் பால்கனிவாழ் மக்களின் பால்கனி அரசா தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.


அடித்தளத்தை அசைத்துப்பார்த்தால், மேல்தட்டு சிதறிவிடும் என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. அறிவியலும் அதை ஒத்துக் கொள்ளும்


அய்யா, அதிலும் மிக முக்கியமாக தாங்கள் அடித்தட்டு மக்களை காப்பாற்றுவதை தவிர்த்து, மற்ற அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கின்றது.


சரிவுகளை சரி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று புரிந்துகொள்வதை விட்டு, தாங்கள் எப்பொழுதும் கையிலெடுக்கும் தேர்தல் நேரத்து பிரச்சார யுக்திகளிலேயே இருக்க விரும்புவதை நாம் காண்கின்றோம்.


 அறிவாளிகள் என்று சொல்லியது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், ஏனெனில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன் அவர்கள் அறிவாளிகள் என்பதும் எனக்குத் தெரியும்.


நாடு முழுதும் பல்வேறு இடங்களில் பல்வேறு மதரீதியான கூட்டங்களை தடுத்திருக்கவேண்டிய உங்கள் அரசு செய்யவில்லை. இது போன்ற இடங்களே சமூக தொற்றுகளை அதிகம் பரவச் செய்தது. இது போன்ற அலட்சிய போக்கினால் ஏற்பட்ட உயிர் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?

திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண் விழித்த போது, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, நான்கே மணி நேர கால அவகாசம் கொடுத்து, 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.
நான்கு மாதங்கள் யோசிக்கவும் செயல்படவும் இருந்த போதிலும் , அந்த நான்கு மாதங்களைக் கடந்து, திடீரென தீவிரம் புரிந்து, 1.4 பில்லியன் மக்களுக்கு 4 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது .
இவ்வளவு பெரிய / தீவிரமான ஒரு தேசிய இக்கட்டிற்கு சரியான முறையில் தயாராகவில்லை என்று மக்களை குறை சொல்ல முடியாது.ஆனால் உங்களை குறை சொல்லலாம் ; சொல்லுவோம் .
மக்களின் அடிப்படை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்காகத் தானே இந்த அரசும், அரசு அதிகாரிகளும்….

உண்மையான அக்கறையுடன் இருக்கும் குரல்களை கேட்க வேண்டிய காலமிது


நாங்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றோம்
இருந்தாலும் உங்களுடன் இருக்கின்றோம்.
ஜெய்ஹிந்த்
கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.









*






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு விதத்தில் வியப்பு என்றாலும், பல மய்யமான உண்மைகள்...

அ. வேல்முருகன் said...

என்ன இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்

Post a Comment