Sunday, August 09, 2020

1103. கொரானாவும் நானும் ….. 1


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

,*

                          

 

எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20

வலைக்கு வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.   ஏழுமலை ... ஏழுகடல் தாண்டிய அனுபவம்தான்  இதுவரை.   என்னென்னவோ நடந்தது ..எப்படி எப்படியோ இருந்ததுஎல்லாம்  ஆங்காங்கே  நினைவுகளாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. துடைத்துப் போடவும் முடியவில்லைதொகுத்துத் தரவும் முடியவில்லை

தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …

 

 5.8.20

பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும்பெறாமல் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கட்டி இழுத்து வந்து இதுவரை கொண்டு வந்து விட்டார்கள்அவர்கள் மட்டும்தானாபெரிய படையே அல்லவா  திரண்டு என் பின்னால்  நின்றதுஎத்தனை கரிசனம்எத்தனை அன்புஎங்கெங்கிருந்தோ உதவி.  

 

உங்களையெல்லாம்  மீண்டும் என் மனதிற்குள்  ஒரு தரிசனம்  செய்ய ஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.

 

6.8.20

ஜூன் மாத கடைசி வாரம்வலது பக்கம் தோள்பட்டை வலிஅத்தனை அசதிபாரசிட்டமால்  வாங்கப் போனால் கடையில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்விற்பனைக்கு இல்லையாம். ICMR ல் வேலை பார்க்கும் நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’ என்றால் அனேகமாக அவன் ஒரு மாணவ நண்பன் என்று கொள்ளவும்.).  சில மாத்திரைகள் சொன்னான்இரண்டு நாள் சாப்பிட்டேன்பயனேதுமில்லைஅவனுக்கு வாட்ஸ்அப்பில்  வாய்ஸ் மெசேஜ் கொடுத்தேன்என்னப்பா பண்றது என்று கேட்டிருந்தேன்மூன்று நாளாகியும் பதில் இல்லைஆச்சரியம்இன்னொரு நண்பனுக்கு செய்தி சொன்னேன்சிறிது நேரத்தில் ICMR நண்பரிடமிருந்து  போன் வந்தது. “அக்காவிடம் கொடுங்கள்என்றான்மனைவியிடம் கொடுத்தேன்அவன் பேச ஆரம்பித்ததும் மனைவி என்னிடம் சைக்கினையில்  அழுகிறான் என்றாள். வாங்கி நான் பேச ஆரம்பித்தேன்அவன் நான்கு நாட்களாகாக குவாரண்ட்டையினில்  இருக்கிறான்அதனால் என் செய்தியை வாசிக்கவில்லைஅதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. 

 

 9.8.20 (இன்று எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)

 

அடுத்த நாள் காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார். நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம்  நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ். மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார். மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக் கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.

 

அதற்குள் நண்பர்கள் என் பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என் மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை. மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

8 மணியாயிற்று. தகவல் இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ் வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம் என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல் சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.

 

மருத்துவமனைப் பொறுப்பை மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது, மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!

 

மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல் கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர் - தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன் பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும் அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

 

இன்னொரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.

 

ஏறத்தாழ ஒரு வாரம் மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும் முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.

 

20.7.20 மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில் வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.

 

முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப் பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் … அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில் பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும் முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான் என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து… புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

வீட்டிற்கு வந்ததும் இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள் நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும் உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன். ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி பேசினார்கள்’ என்றார்கள்.

 

(என்ன பிரச்சனை என்றால் இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)

 

 


*


19 comments:

Ravi said...

SIR
Idhuvum
kadandhu
Pogum/
vaalga nalamudan

அ. வேல்முருகன் said...

பொதுவெளியில் தங்கள் பதிவுகள் இல்லாத போதே நினைத்தேன் உடல் நலம் சரியில்லையோ என. மீண்டு வந்து வீட்டீர்கள். விரைவில் பூரண நலம் பெற விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

அ. வேல்முருகன் said...

ஆகச் சிறந்த பேராசியரிர் சொத்தே மாணவர்கள்தான். அதுவும் தங்களை போன்றோர், பேணப்பட வேண்டும். அதைதான் தங்கள் மாணவ செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

Srinivas Perumal said...

Good to read your periodical experience with Corona. It's easy to say get well soon and take care. But experiencing the reality every moment is not a easy thing. Happy to know you are back home. It's look like you are getting very emotional now a days. You are a strong personality. Take rest Sir. Will catch up later. Regards.

Avargal Unmaigal said...

நல்லபடியாக வீடு திரும்பியது அறிந்து மிக சந்தோஷம் ஐயா......ஒரு நல்ல ஆசிரியர் சேர்த்து வைக்கும் நல்ல சொத்து அவர்கள் மாணவர்கள்தான் அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது போல அதுமட்டுமல்ல நல்ல குடும்பமமும் உங்களுக்கு அமைந்தது இறைவன் தந்த வரம்தான்... நீங்கள் மிகவும் ஸ்ட் ராங்கான மனிதர் என்று நினைத்து இருந்த் எனக்கு நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - என்று நீங்கள் எழுதியதை கண்டு என் மனமும் உடைத்து போனது இதை ஏதோ சொல்ல வேண்டும் என எழுதவில்லை உண்மையாகவே என் மனம் உடைந்தது போலவே இருக்கிறது...


இங்கு நானும் என் மனைவியும் கொர்ரோனாவால் பாதிக்கப்பட்டு டாக்டரின் அறிவுறைப்படி 2 மாதங்களுக்கு மேலாக தனிமை சிகிச்சை வீட்டிலே எடுத்து கொண்டோம். என் மனைவி ஒரு ரூமுக்குள்ளும் நான் ஒரு ரூமுக்குள்ளும் குழந்தை நாய்குட்டி ஒன்னொரு ரூமிலும் தனி தனியாக் அவாழ்ந்து வந்தோம் எங்களுக்கு உதவியது என் மகள் மட்டுமே வெளியே யாருக்கும் நாங்கள் சொல்லவில்லை ஒவ்வொரு நாள் இரவு மட்டும் சாப்பிட்டு விட்டு அவரவர்கள் ரூம் வாசலில் இருந்து கூட்டு பிரார்த்தனை செய்து விட்டு பேசிக் கொண்டிருப்போம் எப்படியோ பிழைத்து கொண்டோம்...


என்ன கொரோனாவிற்கு பின் உடம்பு மிகவும் சோர்ந்து போய்விடுகிறது. அத்னாலயே நானும் இணையம் வருவது குறைந்து போய்விட்டது இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது ஏதாவது கிறுக்கி கொண்டு இருக்கிறேன். இந்த வருடம் குழந்தை கல்லூரீ செல்கிறாள் அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை மட்டும் உயிர் வாழ ஆசை அதன் பின் அவள் தன்னை பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது


வாழ்க வளமுடன் சார் வாழும் வரை சந்தோஷமாக வாழுங்கள்

Rajalakshmi said...

U r a fighter. Nice to see ur writing back

koilpillai said...

நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் எழுத்துக்களை காண நேர்ந்தது மகிழ்ச்சி என்றாலும் தங்கள் சமீபத்தைய சுகவீனம் எனக்கு வருத்தத்தை தருகிறது..

தாங்கள் பரிபூரண நலம் பெற என் நம்பிக்கைக்குரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தேவையான அளவிற்கு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். மனோ திடம் உங்களுக்கு அதிகம் என்பது எனது நம்பிக்கை, திடமனதுடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ளுங்கள் , உணவு விஷயத்திலும் மருத்துவர் ஆலோசனைப்படி கடைபிடியுங்கள்.

G.M Balasubramaniam said...

அச்சம் தவிர்க்கவும் எல்லாம் நலமாக இருக்கும்

Subramanyam Lakshmanan said...

It was indeed a turbulent period Sir. All our prayers for you to become normal and to continue your blogging.I have accepted you as my Guru in blogging.

Subramanyam Lakshmanan said...

I have also started blogging and would welcome your comments
https://reva-tea.blogspot.com/

பாலகுமார் said...

நலம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி சார். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

alwin said...

//அட போங்கப்பா... என்ன போஸ்ட் போட்டாலும் லைக் போட குறைச்சலே இல்லை. அது யாருக்கு வேணும். வாசிச்சா அதப் பத்தி கருத்து இருந்தா சொல்லணும்... என்னமோ .. வர்ரீங்க.. ஒரு லைக் போட்டுட்டு போறீங்க. வாசிச்சேன்... இது தப்பு .. இது சரின்னு சொன்னால் கேட்டுக்கலாம். சும்மா லைக் ...//
நானும் லைக் போட்டு நான் என்ன மிகுந்து சொல்லிவிடமுடியும் என்று கடந்து போவேன்... சில காலங்கள் உங்கள் பதிவுகளை காணமுடியவில்லை, சில நேரம் சிந்திப்பதுண்டு நீங்கள் முகநூலை விட்டு வேறு வேலைகளில் இருக்கிறீர்களோ என்று...
மாரடைப்பில் இருந்து மீண்டு வந்தபோது நீங்கள் என்னிடம் கூறியது "கடவுளின் கிருபை என்று கூறிவிடாதே என்பதே"... இப்பொழுதும் உங்கள் மனவலிமையை இழந்துவிடாதீர்கள்.
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பது என்மனதிற்கு ஆறுதல், மீண்டும் உங்கள் இயல்பு வாழ்க்கையும், பணியும் சிறக்க என் ஆவலும் வாழ்த்துக்களும்...

திண்டுக்கல் தனபாலன் said...

எதையும் தாங்கும் சக்தி உங்களின் மனதிற்கு உண்டு...

உணவு எவ்வளவு முக்கியமோ, அது போல கண்களும், அதனால் ஏற்படும் சிந்தனைகளும்... அவசியமிருந்தால் மட்டும் பகிர்வுகள் வரட்டும்...

சந்தோசமாக இருங்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்கள் எழுத்தில் இடைவெளி ஏற்பட்டதற்கான காரணத்தை இப்போதுதான் அறிகிறேன் ஐயா. மீண்டு வந்ததறிந்து மகிழ்கின்றோம். உங்களைச் சுற்றிலும் நல்லோர் இருக்க, அனைத்தும் நல்லபடியாக நடந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. உங்களின் மன வலிமையை நாங்கள் அறிவோம். உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.

கோமதி அரசு said...

நலம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.
இறைவனுக்கு நன்றி.
உற்றம், சுற்றம், நட்புகள் உதவியது மனதுக்கு நிறைவு.
ஓய்வு எடுங்கள். குழந்தைகள் பார்த்து கொள்வார்கள்.

சார்லஸ் said...

சார்....இந்தச் செய்தி அதிர்ச்சியை கொடுக்கிறது. ஆனாலும் சீரிய சிகிச்சையால் நீங்கள் நலம் பெற்று எழுந்தது கண்டு மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் வழக்கமான நடையில் புதுப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி. மிகவும் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்.

மனைவியும் பிள்ளைகளும் நீங்கள் பெறாத மாணவப் பிள்ளைகளும் சேர்ந்து உங்களை கரை சேர்த்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியாத நீங்கள் காணாத கடவுள் அவர்களின் அன்பில் இருந்திருக்கிறார்.

உங்களை தொடர்ந்து அன்பு செய்ய அவர்கள் மட்டும் அல்ல வலைதள ரசிகர்களாகிய நாங்களும் இருக்கிறோம். எங்களது பிரார்த்தனைகளும் இருக்கின்றன. இன்னும் பூரண குணம் பெற வாழ்த்துகள்.

சார்லஸ் said...

சார்....இந்தச் செய்தி அதிர்ச்சியை கொடுக்கிறது. ஆனாலும் சீரிய சிகிச்சையால் நீங்கள் நலம் பெற்று எழுந்தது கண்டு மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் வழக்கமான நடையில் புதுப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி. மிகவும் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்.

மனைவியும் பிள்ளைகளும் நீங்கள் பெறாத மாணவப் பிள்ளைகளும் சேர்ந்து உங்களை கரை சேர்த்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியாத நீங்கள் காணாத கடவுள் அவர்களின் அன்பில் இருந்திருக்கிறார்.

உங்களை தொடர்ந்து அன்பு செய்ய அவர்கள் மட்டும் அல்ல வலைதள ரசிகர்களாகிய நாங்களும் இருக்கிறோம். எங்களது பிரார்த்தனைகளும் இருக்கின்றன. இன்னும் பூரண குணம் பெற வாழ்த்துகள்.

தருமி said...

Avargal Unmaigal, //கொரோனாவிற்கு பின் உடம்பு மிகவும் சோர்ந்து போய்விடுகிறது.// உடம்புடன் மனமும் சோர்ந்திருக்கும் நேரமிது. அதனால் தான் மகள் கல்லூரிப்படிப்பு .. அது இதுவென்று கதைத்திருக்கிறீர்கள். ஆனால் என் மனதில் அதை வாசிக்கும் போது ஒரு ”பட்சி” இப்படி சொன்னது: “அவர் கிடக்கிறார்... பாருங்களேன்... பேத்தி கல்லூரிக்குச் செல்வதையெல்லாம் இருவரும் பார்க்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் இப்படிப் பினாத்துகிறார்”

தருமி said...

தைரியம் கொடுத்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும் .....

Post a Comment