Wednesday, September 09, 2020

1109. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 8
ஏனைய பதிவுகள்:


பைபிள் கருத்துகள்

ஓர் அலசல்

 

பெண்ணடித்தனம்:

கலாத்தியர் 3:28 -’ஆண் பெண் வேறுபாடு இல்லை” என்று கூறியிருந்தாலும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்றே பைபிள் போதிக்கின்றது. (105)

கலாத்தியர் 4:30 - அடிமைப் பெண் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக் கூடாது.

1 திமொத்தேயு 2:11-14 - முதலில் உண்டாக்கப்பட்டது ஆதாம்; பிறகுதான் ஏவாள்.

இயேசுவுக்கு நெருக்கமாக இருந்த பணியாற்றியது பெண்களே. அவர் சிலுவையில் இறந்ததும் ஆண் சீடர்கள் தத்தம் தொழிலுக்குத் திரும்பி விட்டனர்.(யோவான் 2:2,3)சிலுவையில் அடியில் தொடர்ந்து இருந்தவர்களும், மூன்றாம் நாள் கல்லறைக்குச் சென்று முதலில் பார்த்தவர்களும் பெண்களே. ஆனால் ஒரு பெண்ணைக் கூட தன் அப்போஸ்தலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. பரலோக ராஜ்ஜியத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போது பெண்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. (மத்தேயு 19:28)

சாத்தானும் பரிசுத்த ஆவியும்:

கி.மு. 586க்கு முன்னால் “பரிசுத்த ஆவி” என்ற சொல் பழைய ஏற்பாட்டில் இல்லை.

புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “the Spirit of God” என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.(107)

கி.மு.586க்குப் பிந்தைய நூலாசிரியர்கள் தான் சாத்தானை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். … சாத்தான் பற்றிய கொள்கை பாரசீக ஜொராஸ்ட்ரிய மதத்திலிருந்து பெறப்பட்டதாகும். (108)

பழைய ஏற்பாட்டில் சாத்தானுக்கும் கடவுளுக்கும் பகைமை இருந்ததாக எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. கடவுள் நடத்தும் அரசாங்கத்துக்குரிய படைவீர்ர்களாக வானதூதர்கள் (Commander of the army of the Lord) இருந்ததை அறிகிறோம்.(யோசுவா 5:14)

கிருபையும் செயல்களின்படி அமைகின்ற வினைப்பயனும்:

பைபிளில் கிருபை - mercy - என்ற சொல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆதியாகமக் 17:7 - ஆபிரகாம் சந்ததியினருடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி எல்லாக் காலத்திலும் அவருடைய சந்ததியினாருக்கு மட்டுமே அவர் கடவுளாக இருப்பார்.

புதிய ஏற்பாட்டு பவுலுக்கு   இயேசுவை புறஜாதியாரிடம் எடுத்துச் செல்ல முடியாத நிலையில், … பவுலுக்குக் கிடைத்த ஒரு புதிய வழிமுறைதான் “கிருபை” என்னும் பேரிரக்கம்.

புறஜாதியாரைப் பழி வாங்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அக்கடவுள். (எரோமியா 51:24;  செப்பானியா 3:19) இந்நிலையில், புறஜாதியினரை எப்படியாவது அவருடைய் பக்தர்கள் ஆக்கிவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் புனையப்பட்டதே இந்த ‘இரக்கம்’. (111) இச்சொல் மதம் மாற்றுவதற்குத் தேவைப்பட்ட சொல்லே தவிர வேறல்ல.

இயேசுவின் இரத்தமும் பாவ மன்னிப்பும்:

காயின் ஆபேலைக்கொன்ற பிறகு நோது நாட்டுக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டான். அவர்களுக்கு ஏனொக்கு என்ற பிள்ளை பிறந்தது. அப்படியானால், ஆதாம் ஏவாள் தவிர்த்து பூமியில் பிற நாடுகள் இருந்தன. அங்கு எண்ணற்ற மக்களும் இருந்துள்ளனர். இவர்கள் யாரும் பைபிளின் கடவுளல் படைக்கப்பட்டிருக்க முடியாது. ஆதாம் ஏவாளின் சந்ததியின் இருபதாவது தலைமுறையில் இஸ்ரவேலர் தோன்றினார். இஸ்ரவேலின் சந்ததியர்களே இஸ்ரேயலியர்களாக, யூதர்களாக, 12 ஜாதியினராக ஆனார்கள். ஏனையோர் புறஜாதியினர்.  …தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்னினார். (அப். நட். 13:23) (113)

பரலோக ராஜ்ஜியமும் புறஜாதியாரும்:

கி.மு. 586-ல் யூதேயா நாடு பாபிலோன் மன்னனாகிய நெபுகாத் நெசாருக்கு அடிமையாகிப் போனது. அதனால் அவர்களுடைய கடவுளால் எருசலேமில் குடியிருக்க முடியாமல் போயிற்று. (!!!!)  (எசேக்கியல் 19:4,19,19) (115)

இதன்பின் கி.மு. 538-ல் பாரசீகர்களுக்கும், கி.மு. 332-ல் கிரேக்கர்களுக்கும், கி.மு. 142-ல் ஹாஸ்மோனியர்களுக்கும், கி.மு. 63-ல் ரோமானியர்களுக்கும் என மாறிமாறி யூதநாடு புறஜாதியினருக்கு அடிமையானது.

இதன் பின்னால் நடக்கப் போகும் நிகழ்வுகள் பற்றி யோவானுக்கு ஒரு தரிசனம் மூலமாகக் கடவுள் முன்னறிவித்ததாக எழுதப்பட்டுள்ளது. அதில் அரியாசனத்தில் இருக்கும் கடவுள் வீற்றிருந்தார். … பரலோக ராஜ்ஜியத்துக்கும்ப் போவதற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கடவுளிடம் இருந்தது. 1,14,000 பேர்களின் பெயர்கள் மட்டுமே அதில் எழுதப்பட்டிருந்தன. அனைவரும் இஸ்ரேயலர்களின் 12 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஜாதிக்கும் 12,000 பேர்கள்.(திருவெளிப்பாடு 7:4-8) அப்போ புறஜாதியினரான நமக்கெல்லாம் அங்கே இடமே இல்லையா? அவர்கள் … புதுப்பாட்டைப் பாடினார்கள். அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும்கற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது. (திருவெளிப்பாடு 14:3)

திருவிளையாடல் படத்தில் தருமி “அய்யோ.. ஆயிரம் பொன்.. எனக்குக் கிடைக்காதா என்று அங்கலாய்த்து அரற்றுவார். அதைப் போல் தான் புறஜாதி மக்கள் அனைவரும் அரற்ற வெண்டும் போலும். ஏனெனில் 

1.பரலோக ராஜ்யம் 1,44,000 யூதர்களுக்கு மட்டும் தான் என்று திருவெளிப்பாட்டில்(பைபிளில்) கூறப்பட்டுள்ளதே. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

தேவ வாக்கியம் பொய்யாகுமா?

2. இயேசு இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாகப் பல இடங்களில் வேதாகமத்தில் சொல்லியுள்ளது. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

3. வரலாற்று பூர்வமாக கிறித்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் நடந்த மாற்றங்கள் , திரிபுகள் பற்றி விளக்கமான ஆய்வறிக்கை கொடுத்தாலும்  ... அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

சிறு வயதில் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைக் கை  விடாமல் பயணிக்கும் வழியைப் பற்றி ஆயிரம் ஆய்வுகள் கொட்த்தாலும்  ...அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

*******

இந்த நூலின் கருத்துரைகள் இப்பதிவோடு முடிவடைகிறது.


.

No comments:

Post a Comment