Monday, March 29, 2021

1161. இயக்குநர் ஒருவரோடு ஓர் உரையாடல்


விடுமுறைநாளில் ஒரு களியாட்டம் - ஒழிவு திவசத்தே களி - என்ற மலையாளப் படத்தை நண்பர் ஒருவர் அளித்த முகவுரை மூலம் பார்த்தேன். மலையாளப் படங்கள் பார்த்த பின் நான் வழக்கமாகச் சொல்வது: “இந்த ஆளுக ரொம்ப வித்தியாசமாக படம் பண்றாங்க; அதற்கேற்றது போல் படம் பார்ப்பவர்களின் தரமும் தெரிகிறது.  நம்ம தரமும் உயரணும்.” இந்தப் படமும் அது மாதிரியான ஒரு படம் தான்.

 


படத்தைப் பார்த்து ஒரு திரைவிமர்சன காணொளி  ஒன்றும் போட்டேன். 5 நண்பர்கள் ஒரு விடுமுறை நாளில் தனிமையான இடத்தில் போடும் களியாட்டம் தான் கதையின் மய்யப்புள்ளி. இந்த ஐவரை நான் சனாதன வர்ணாசிரமக் கோட்பாட்டில் நிறுத்தி விமர்சனம் செய்திருந்தேன். இன்னொரு துணைக் கதாப்பாத்திரம் நாராயணன் என்ற பெயரில் வரும். அக்கதாப் பாத்திரத்தை ‘கடவுள் நாராயணனாக’ வைத்து விமர்சனம் செய்திருந்தேன்.

 

இந்த எனது interpretations கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக முகவுரை அளித்த நண்பர் சொன்னார். இதனால் உந்தப் பட்டு படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் என்பவருக்கு  மெயில் ஒன்றை அனுப்பி வைத்தேன். பெரும் ஆச்சரியம் .. ஒரே ஒரு மணி நேரத்தில் அவரிடமிருந்து மிகுந்த தன்மையான பதிலஞ்சல் வந்தது.

 

என் அஞ்சலும் அவரது பதிலஞ்சலும் கீழே:

 

sir 

 I made a review of your movie - ozhivu divasathae kali - in youtube. I feel the five friends represent the caste hierarchy - brahmin, vaisha, shatria, shudra & dalit.. It is a tamil video.

Just wanted to inform you my interpretation of the 5 friends and also the other  character Narayanan.

 ****

Hello Sir,

Thank you for watching the film and sending this genuine review about the movie.

I really loved your interpretation of Narayanan as God. This is a very interesting read on the movie.

 

Glad to know that you are a retired Zoology professor :) Yes I studied Zoology in my graduation. I genuinely love the subject a lot :)

Once again thanks for sending this. 

Warmest regards

Sanal 

Regards,

Sanal Kumar Sasidharan

www.sanalsasidharan.com 

Loka samastha sukhino bhavanthu

 ******

 



Loka samastha sukhino bhavanthu means
“may everyone, in the whole world, be happy.”


*

No comments:

Post a Comment