Sunday, December 31, 2023
1268. ஒரு பொன்மாலைப் பொழுது ...
Friday, December 22, 2023
1267. ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?
நான் இப்போது மொழிபெயர்க்கும் நூல் நம்
பண்டைய இந்தியாவின் வரலாறு பற்றியது. இதை எழுதும் போது நினைவில் கீழடி தொடர்ந்து நின்று
கொண்டிருந்தது. இந்திய வரலாற்றின் ஆரம்பத்தை கீழடியிலிருந்து ஆரம்பித்துத் தொடர வேண்டுமென்று
சொல்கிறார்கள். இதுவரை மொழிபெயர்த்த வரலாற்று நூல்களில் தென்னிந்தியப் பகுதிக்கான
இடம் இல்லை; அல்லது அதிகமில்லை. மாற்றாந்தாய்
மனப்பான்மை வேரூன்றியிருப்பது போலவே தெரிகிறது.
இப்போது எழுதும் நூலில் கங்கைச் சமவெளியில்
நடந்த ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளில் அப்பகுதியில் பல மண் மேடுகளில் ஆய்வு செய்துள்ளனர்.
பின்னாளில் நடந்த ஆய்வுகளினால் //19-ம் நூற்றாண்டின் புவியியல் - பண்டைய வரலாற்று வல்லுநருமான
ராபர்ட் புருஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவரே
முதல் முதலாக இந்த மேடுகளை ஆய்வு செய்து, அதன்
கலாச்சாரங்களை வெளிக்கொணர்ந்தார்.’’//
இவரது ஆய்வோடும்,
மற்ற ஆய்வாளர்களின் முயற்சிகளுக்குப் பிறகும் இந்த மண்மேடுகள் ‘சாம்பல் மேடுகள்” என்று அழைக்கப்படுகின்றன. பண்டைய மனிதர்கள் கால்நடை மேய்ப்பர்களாக
இருந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த கால்நடைகளை ‘தொழுவத்தில்’
வைத்திருந்தனர் என்றும், அவைகளின் சாணியை அவ்வப்போது
எரித்து வந்திருக்கின்றனர். அத்தகைய மேடுகளே இந்த சாம்பல் மேடுகளின் பழைய வரலாறு
என்று அந்த நூல் மேலும் விவரிக்கின்றது.
இதை வாசிக்கும் போதும் கீழடி நினைவிற்கு
வந்தது. அதோடு நான் இருமுறை அங்கு ‘மதுரை
இயற்கை நடை’யோடு சேர்ந்து அங்கு சென்று வந்தது நினைவிற்கு வந்தது.
அது ஆரம்ப நிலை. கட்டிடங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளங்களைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
அப்போது அங்கிருந்த சிறிது உயரமான ஒரு மேட்டின் மீது ஏறியமர்ந்து இளைப்பாறினேன். நண்பர்கள்
அதை ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்த மேடையில் இந்த வரலாற்று நூல் சொல்வது
போல் அப்பகுதிகளில் கருப்பு, சிகப்பு மண்பானை ஓடுகள் குவியலாகக்
கிடப்பதையும் பார்த்தேன். அதன் வண்ணம், வழுவழுப்பு, கோட்டோவிய்ங்கள் போன்றவற்றை வைத்து, காலத்தையும்,
கலாச்சாரத்தையும் கணக்கிடுவது பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது
நான் உட்கார்ந்த மேடும் ஒரு சாம்பல் மேடாக இருக்குமோ?
ஒரு பெரும் பண்டைய கலாச்சார வரலாற்று மேடையாக அது இருக்குமோ?
என் கீழே ஒரு பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் பொதிந்து கிடக்கிறதோ என்ற
கேள்வி மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
ஆய்வாளர்களிடம் சொல்லி அந்த மேட்டையும்
“ஒரு கை” பார்க்க யாராவது சொல்லுங்களேன், ப்ளீஸ்
!!!!
Thursday, December 21, 2023
1266. அன்றும் .. இன்றும் .. பெரும் மழை
Carbon emission, global warming, nano effect … இப்படி அடுக்கடுக்காய் மனிதன் இயற்கையை எதிர்த்து செய்த பல செய்கைகளால் இப்படிப் பெரு மழை வந்தது. அதனால் பொங்கி வந்த வெள்ளம் ஆங்காங்கே குளம், குட்டை, கண்மாய் அப்டின்னு அங்கங்கே இருந்தவைகளில் கடலுக்குப் போகும் முன் கொஞ்சம் தஞ்சமடையும். ஆனால் அந்த நீர் நிலைகளை நிறப்பி மாற்றி விட்டோம் கான்க்ரீட் காடுகளாக. தங்குமிடம் காணாமல் போனதால் கண்போன பக்கம் வெள்ளம் ஊருக்குள் பெருக்கெடுத்து நிறப்பி விட்டது.
இப்படிதான் நம்மை நாமே குற்றஞ்சாட்டிக்
கொண்டிருக்கிறோம். உப்பைத் தின்னா தண்ணி குடிக்கணுமாமே ... அதான் வீட்டுக்குள்ளேயே
தண்ணீர் பெருக்கெடுத்து வந்து விட்டதே ...அதைக் குடிக்கணுமோ”?!
தெரியவில்லை.
அது சரி ... எனக்கு திடீர்னு ஓர் ஐயம்.
20.12. 1923
, அதாவது
(3 நாள் மட்டும் முன்னப் பின்ன ...), சரியாக
100 ஆண்டுகளுக்கு முன் தென்கடைசித் தமிழ்நாட்டில் பெரு வெள்ளம். ரயில் நிலையங்கள் வெள்ளத்தில்
மூழ்கின. இன்று நடந்த அதே நிகழ்வுகள் பெருமழையால் நூறு ஆண்டுகளுக்கும் முன்பும் நடந்ததாம். இந்து தினசரி
100 ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெள்ள நிகழ்வை மீண்டும் இப்போது பதிப்பித்திருக்கிறார்கள்.
ஐயம்
என்னன்னா...? 100 வருஷத்திற்கு முன் Carbon
emission, global warming, nano effect போன்ற எதுவுமில்லை. குளம்,
குட்டை, கண்மாயெல்லாம் வெள்ளத்தை வாங்க ஆங்காங்கே
இருந்தனவே. பின் ஏன் அப்போதும், இப்போதும் பெரும் மழை;
பார்த்தறியாத அளவு வானம் பிளந்த பெரும் மழை. அதனால் யாரும் காணாத அளவு
வெள்ளம். அன்றும், இன்றும் ஒரே நடப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
(இது போன்ற இன்னொரு பெருமழை வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமா?)
இன்றைய பிரச்சனைகளுக்குக் கொடுத்த காரணங்கள்
இல்லாத அந்தக் காலத்திலும் இதே இயற்கையின் கோபம் அன்றும் இருந்ததே.... எப்படி?
ஏன்?
Friday, December 08, 2023
1265. இழுபடும் ஜீன்ஸ் ..........
Thursday, December 07, 2023
1264. பழைய நினைப்புடா, பேராண்டி
கார்த்திக் அன்பாக நம்மளப் பத்தி நாலு நல்ல வரி எழுதிட்டானா ... அது ஒரு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திருச்சி, பேராண்டி.