Sunday, July 28, 2024

MY ROAD TO ATHEISM FROM CHRISTIANITY



                             


இந்த ஆண்டில் வெளிவந்த எனது நான்காவது நூல் இது.  (பாலஸ்தீன் & இஸ்ரேல் போராட்டம், சூத்திரர்; 80 நாட்களில் உலகம் சுற்றிய பயணம்; அடுத்த நூலாக இது.) அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட என் முதல் நூலாக வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி. 

இதனை உண்மையாக்கிய எதிர் வெளியீடு அனுஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 

மதங்கள் பற்றி முதலில் எழுதிய மதங்களும் சில விவாதங்களும் என்ற நூலைப் பொறுத்தவரையில் பெரிய விசுவாசிகள்யாரும் வாசிக்க மிகவும் தயங்கினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் கிறித்துவத்தைப் பற்றி நானறிந்த அளவே போதும். நீ தரும் அதிகத் தகவல்களோ, கேள்விகளோ, விளக்கங்களோ எனக்குத் தேவையில்லை. நானறிந்தவைகளை வைத்து நான் முழு விசுவாசத்தோடு இருக்கிறேன். அது எனக்குப் போதும். அதிகமாகத் தெரிந்து, அதனால் குழம்பி விடுவேன் என்று சொன்ன கிறித்துவ விசுவாசிகளைத் தான் அதிகம் சந்தித்தேன். (அதனால் தான் இந்த நூலில் ஆரம்பத்திலேயே நீட் சேயின் மேற்கோளைக் கொடுத்துள்ளேன்.) நம்பிக்கை என்று சொல்லி விட்டாலே அதற்கு மேலே உண்மைகளைத் தெரிந்து கொள்ள நம்பிக்கையாளர்கள் மறுக்கிறார்கள் என்றது அந்த மேற்கோள். இதுவும் ஒரு வகை அச்சமே. தாலாட்டிலிருந்து ஆரம்பித்து, இறுகிப் போயுள்ள தங்கள் நம்பிக்கைகள் மீதே அவர்களுக்கு அதிக நம்பிக்கையில்லை என்றே தெரிகிறது! அச்சமே மீதூறுகிறது.

அனைத்திற்கும் எங்கள் வேத நூலில் பதிலிருக்கிறது என்று ஆபிரகாமிய 
மதக்காரர்கள் வழக்கமாகக் கூறுவதுண்டு. இது மதராசாவில் சொல்லிக் கொடுக்கப் பட்டது. அனைவரும் அதனைச் சொல்வதே இப்போது ஒரு
fashion- ஆகிவிட்டது.

சற்று ஆழமாக மதத்தின் வரலாறு, ஆரம்பித்த காலத்திலிருந்த குழப்பங்கள், குழப்பங்கள் விலகிய வரலாறு, அதற்குக் காரணமானவர்கள், அதற்கான காரணங்கள் என்றுள்ள ஆயிரத்தெட்டு விஷயங்களும் எங்களுத் தெரிய வேண்டாம் என்ற முனைப்போடு விசுவாசிகள் இருப்பதையே கண்டேன். ஆரம்ப காலத்தில் எனக்கு சமயங்களின் மீது கேள்விகள் எழும்போதும் ஏறத்தாழ இதே போன்ற குழப்பங்கள் எனக்குள் இருந்தன. கேள்விகளுக்குப் பதில்கள் இல்லாத போது theist -> agnostic என்ற நிலைக்கு “முன்னேறினேன்!”  அதன்பின்னும் என் தேடலைத் தீவிரமாக்கிய பின், இறுதியாக theist -> agnostic -> atheist -> anti-theist என்ற “enlightenment” எனக்குள் விளைந்தது. இதெல்லாம் எதற்கு என்று இன்றைய விசுவாசிகள் நினைக்கிறார்கள்.

இன்னொரு வகை விசுவாசிகளும் உண்டு. எங்கள் வேத நூல் அனைத்திற்கும் விளக்கமளிக்கும் என்பார்கள் அவர்கள். அவர்களுக்கு இந்த நூல் நல்ல உணவளிக்கும் என்று நம்புகிறேன்.

நம்புங்கள். அதோடு நம்புவதை ஏன் உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடாது? நூல்களை வாசியுங்கள். யார் கண்டது? என் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து என் தவறுகளைத் திருத்தி என்னையும் கூட உங்கள் பக்கம் இழுங்களேன்.

முதலிரு பக்கங்களிலேயே வாசகர்களுக்கு ஒரு test வச்சிருக்கேன். நல்ல பதிலா சொல்லுங்க ...

Try your chance.  



               

                                               




OLYMPICS '24




ஒலிம்பிக் 24... நடால் & அல்காரஸ் இணைந்து விளையாடி முதல் ரவுண்டில் வென்றுள்ளார்கள். அவர்கள் விளையாடும்போது அப்பாவும் பிள்ளையும் இணைந்து விளையாடியதாக எனக்குத் தோன்றியது.


OLYMPIC FLAME கை மாறி மாறிச் சென்றது நன்கிருந்தது.. பிரான்ஸ் அதிபரிடமிருந்து நடாலின் கைகளுக்குச் சென்றதைப் பார்க்கும்போது அத்தனை மகிழ்ச்சி. great recognition...
முதல் ஹாக்கி போட்டி பார்த்தேன் - நியுசிலாந்துடன். வெற்றி நமதே. 3:2
இந்தப் போட்டி பார்க்கும் போது வழக்கமாக வரும் ஒரு நினைவு மீண்டும் வந்தது. இந்த பிரிட்டிஷார்களின் reproductive potential மிக அதிகம் போலும். அமெரிக்கா சென்று பலுகிப் பெருகினார்கள்; நியுசிலாந்து போனார்கள்; பலுகிப் பெருகினார்கள்; ஆஸ்த்ரேலியா போனார்கள்; பலுகிப் பெருகினார்கள்; தென்னாப்ரிக்கா போனார்கள்; பலுகிப் பெருகினார்கள்; இன்னும் பல நாடுகளுக்குப் போய் பலுகிப் பெருகினார்கள்; (நல்ல வேளை. நாம் பிழைத்துக் கொண்டோம்!)
இது எப்படி?












Thursday, July 25, 2024

இறைநம்பிக்கையற்ற இறையாளர்கள்



*

காஞ்சிபுரம் தேவநாதன் பற்றி அனைவரும் அறிவோம். கோவிலுக்குள், அதுவும் கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்து பாலியல் தவறுகள் செய்துள்ளார் என்பதும் அனைவரும் அறிவோம். கர்ப்பக் கிரகத்திற்குள் இருந்த நாட்காட்டியும் அவர் எடுத்த வீடியோவில் பதிவாகி, எங்கு நடந்து என்பதையும் உறுதி செய்துள்ளது.

கடவுளுக்கு அருகில் இருந்து சேவகம் செய்வதே அவரது தொழில். சாதி அவருக்கு அந்த வசதியை அளித்துள்ளது. பொதுவாக இவர்கள் வேதம் அறிந்து, பக்தியோடு தொழில் செய்ப்வர்கள் தான். அதனாலேயே அந்த சாதியினருக்கும், அவர்களது தொழிலுக்கும் மக்கள் பெரும் மரியாதை தருகிறார்கள். இந்தப் புரோகிதர்கள் அனைவரும் இறை நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு இறைவன் மீது அச்சமும் இருக்கும். தப்பு செய்தால் தண்டனை தருவான் என்றே நம்புக்கையுள்ளவர்கள் ஆழமாக அஞ்சுகிறார்கள்.

ஆனால் இவரோ அந்த அச்சமேதுமின்றி, ஆண்டவன் உறையும் இடமான கரப்பக் கிருகத்தின் உள்ளேயே – வேறு சாதியினர் யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லும் புண்ணிய அறைக்குள்ளேயே – பாலியல் தவறு செய்கிறார். காமம் கண்ணை மறைத்தது என்று நினைக்கின்றனர், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு இறை நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது; அதனால் இறை மீது எந்த பயமோ அச்சமோ சுத்தமாக இல்லை. சிறிதேனும் அச்சமிருந்தால், ஆண்டவன் கண்டிப்பான் என்ற அச்சமிருந்தால் தன் தவறுகளை அந்த இடத்திலாவது செய்யாதிருந்திருப்பார். அந்த அச்சமில்லை; ஏனெனில் இறை நம்பிக்கை இல்லை.

கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் தனது வேலையாக இறைப் பணி செய்கிறார். காசு சம்பாதிப்பதற்கான வழியே அவரது கடவுள் சேவை. அது நம்பிக்கையால் எழுவதல்ல.

என் கருத்தின்படி தேவநாதன் ஒரு இறை நம்பிக்கையற்றவர்; அதனால் தான் அவர் கோவில், புனிதம், புனித இடம் என்று எதற்கும் அஞ்சாமல் அந்தத் தவறை கோவிலின் உள்ளேயே செய்ய முடிந்தது.

****

அடுத்து கிறித்துவ மதத்திலிருந்து ஒரு சான்று:

தினகரன் குடும்பம் பற்றி அறியாதவர் யார்? சமீபத்தில் கூட இரண்டாம் தினகரனின் மனைவி அழுது பிரார்த்தித்து கார், வீடு வாங்கியதைப் பார்த்து அதிசயித்தோம். நாம் சொன்னதை நம்ப ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் பல சொந்தக் கதை .. சோகக் கதையை எடுத்து விட்டார்.  உண்மையில் கடவுள் நம்பிக்கையும், இறையச்சமும் இருந்தால் ஒருவரால் இப்படி ஒரு கதையை எடுத்து விட முடியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்திருந்தால் இப்படிப் பச்சையாக ஒரு பொய்யை வெளியில் சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை, இறைத்தண்டனை என்ற அச்சமிருப்பவர், மக்கள் நம்பி காணிக்கை போடுவார்கள் என்றாலும், கடவுள் தண்டிப்பாரே என்று அச்சப்பட்டால் இப்படி பொய் சொல்ல முடியுமா? தேவநாதன் போலவே இவரும் இவர் குடும்பத்தினரும் பணத்திற்காக, தாங்களே  நம்பாத இறையைப் பற்றிப் பேசி காசு பார்க்கிறார்கள்.

இவர் மட்டுமல்ல; சீனியர் தினகரன் தன்னை எப்படி ஏசு தன் கரத்தில் ஏந்தி அவரை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றாரெனவும், அதன்பிறகு அடிக்கடி தான் மோட்சம் சென்று ஏசுவோடு பேசிவிட்டு வருவதாகவும் காணொளி வெளியிட்டுள்ளார். (பராசக்தி வசனம் தான் நினைவுக்கு வருகிறது; கடவுள் எங்கேடா பேசினார்....) பைபிளில் பல இடங்களில் கடவுள் மனிதர்களோடு direct contact-ல் இருந்திருக்கிறார். பின்பு இப்போதும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் மாதா தன் முன் தோன்றிப் பேசியதாகக் கூறி வருகிறார்கள். ஆனாலும் இதுபோன்ற பல காட்சிகளை போப், திருச்சபை மறுத்து வருகின்றன. ஆனால் இங்கே நம்மோடு வாழ்ந்த ஒரு மனிதர் அடிக்கடி நேர்முகமாக கடவுளைத் தரிசித்து, பேசி வருகிறேன் என்று கூசாமல் கூறி வருகிறார். பக்த கோடிகளும் நம்புகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுவும் காசு சம்பாதிக்க போடும் ஒரு வேஷம்.

தினகரனுக்கு “The fear of the Lord is the beginning of knowledge…என்பது தெரியாதா; தெரியும். ஆனாலும் இன்னொன்றும் தெரியும். கடவுள் என்ற கருத்தே தவறு என்பதும் தெரியும். கடவுள் பெயரைச் சொல்லி காசு சம்பாதிக்கலாம்; ஆனால் கடவுள் என்று ஒன்றில்லை என்பதும் அவருக்கும் தெரியும். அதனால் தான் இத்தனை தைரியமாக மோட்சம் போனேன் .. வந்தேன்.. என்று கதை சொல்கிறார். அவர் மகனோ Build the Prayer Tower, God will build your house என்று அவர் வீடு வாங்க மக்களிடம் காசு கேட்கிறார். உண்மையான இறை நம்பிக்கையிருந்தால் இப்படியெல்லாம் பொய் சொல்ல மனம் வராது.கடவுள் தண்டிப்பார் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்சம் சிறிதுகூட இல்லாவிட்டால் ... அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் லாஜிக் – அவர்களுக்கெல்லாம் இறைநம்பிக்கை துச்சமாகக் கூட இருக்காது என்பதே. அதனால் இறையச்சமும் இல்லை. மக்களைக் கவர்ந்திழுத்து காணிக்கை வாங்க வேண்டும்; அவ்வளவே.



                                இங்கேயும் டவர் கட்டியாச்சா ...!?

மதப் பற்றாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரைப் பற்றியும் எனது கருத்தாகவே இது பல்லாண்டுகளாக உருவாகியுள்ளது. பலருக்குக் கோபம் வரலாம். அதிலும் உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் கோபம் வரலாம். 

அவர்களுக்கு ஒரு வார்த்தை: 

நீங்கள் வார்த்தெடுத்தபடி உங்கள் நம்பிக்கைகளோடு உள்ளீர்கள். ஆனால் பிரசங்கிகளும், பிரச்சாரர்களும் உங்களைப் போல் உண்மையான இறை நம்பிக்கையோடும், இறையச்சத்தோடும் இருக்கிறார்களா என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன்.

 

 


Tuesday, July 16, 2024

1284. EURO,’24 & WIMBLEDON ‘24




*

ஒரு வழியாக இரு போட்டிகளும் ஒரே நாளில் நேற்று முடிந்தன. இரண்டும் நினைத்தது போல் நடந்து முடிந்தன.

 

EURO,’24 

ஏறத்தாழ எப்போதும் அனைத்திலும் நான் இங்கிலாந்திற்கு எதிரானவன். சாகா - Saka - விளையாட்டு பிடித்தது. இருந்தாலும் முதலிலிருந்தே ஸ்பெயின் நாட்டின் வில்லியம் பிடித்தது. பின்னால் அவரோடு யமால் என்பவரும் பிடித்துப் போனது. இந்தக் கடைசிப் போட்டியில் யமால் நான்கைந்து  தடவை பந்தை கோல் நோக்கி அடித்த பந்துகள் கோலாகாமல் தப்பித்து விட்டன.  ஆயினும் இருவரின் ஆட்டமும் நன்றாக இருந்தது.










சோகமென்னவென்றால் அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைய பெனல்டி கோல் வரை சில ஆட்டங்கள் சென்றன. அந்த ஆட்டங்கள் எனக்குப் பொதுவாகவே பிடிக்காது. அதைவிட sudden death இருப்பது நன்றாக இருந்தது. அதைவிட பெனல்ட்டியில் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது காசை சுண்டிப்போட்டு பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. One shooter / one goal keeper என்ற இருவர் மேல் பாரம் விழுகிறது. அட போங்க ... இது அழுவாச்சி ஆட்டம் அப்டின்னு தோணுது.

ஸ்பெயின் வென்றது; மகிழ்ச்சி

 

 

WIMBLEDON ‘24

 

அல்காரஸ் – சின்னர் இருவரும் அநேகமாக மோதுவார்கள்;  இல்லையேல் அல்காரஸ் – ஜோக்கோவிச் என்று எதிர்பார்த்தேன்.

வேறொன்றுமில்லை. The period of the triumvirate – Fedd-rafa-nova – is almost over. ஜோக்கோ இன்னும் சிறிது முயல்வார்.



இப்போடியில் ஜோக்கோ முயன்றார். 2:0 என்ற நிலையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். அப்படியேதும் நடக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த போது மூன்றாவது செட்டில் 0:2 என்ற நிலை வந்த போது சரி கதை முடிந்தது என்றே நினைக்கத் தோன்றியது.  ஒரு காலத்தில் ஜோக்கோவின் athletic actions ஆட்டத்தையும், உடம்பு அதற்கு ஒத்துழைத்ததும் பார்த்து மகிழ்ந்தேன். என்ன செய்வது? காலம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அல்காரஸ் ஆட்டம் ஜோக்கோவின் பழைய ஆட்டம் போல் ஆடினார்; வென்றார்; மகிழ்ச்சி.

ஜோக்கோ வென்றிருந்தால் பல புதிய records  உருவாகியிருக்கும். 










Thursday, July 11, 2024

1283. மதங்களும் சில விவாதங்களும் ...ஒரு நண்பரின் கருத்து




*

மதங்களும் சில விவாதங்களும் நூல் மிக அற்புதமான உண்மைகளை விளக்கும் நூல்,ஒரு கடவுள் கொள்கை உடைய இஸ்லாம் கிறிஸ்துவம மதத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள்,உள்ளது.  சில இடங்களில் நகைச்சுவையாஎவும் உள்ளது,நம் இந்து மததத்திலோ பெரு தெய்வங்கள் சிறு தெய்வ வழிபாடு என்று பல வகைகள் உள்ளது   

எதை நம்புவது எதை தவிர்ப்பது எனத் தெரியாமல் நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று சுயமாக சிந்திக்காமல் அதே வழியிலேயே நடந்து பழகி விட்டோம் ஆனால் உங்கள் நூல், நம்மை யோசிக்க வைத்து முடிவை நம்மையே எடுக்கச் செய்கிறது 

மதம் சம்பந்தமான ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் அவசியம்  இந்த நூலை படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நல்ல நூலை படிக்க உதவியதற்கு நன்றி ஐயா 

வேலுமணி 
கோவை




Friday, July 05, 2024

1282. MAHARAJA & GARUDAN

Tuesday, July 02, 2024

1281. "டிண்கு" தான் நன்றாக ஆடியது ...!



*

ப்ரான்ஸ்  -  பெல்ஜியம்  -- 1 : 0

ப்ரான்ஸ் பெருசு...பெல்ஜியம் சிறுசுன்னு நினச்சேன். ஆனால் அப்படியெல்லாம் விளையாட்டில் வித்தியாசம் தெரியவில்லை. சமமாக விளையாடின .. கோல் எந்தப் பக்கமும் விழவில்லை. 


 Lukaku of Belgium showed his presence. அதே மாதிரி பிரான்சின் எம்பாப்பே கோல் பக்கத்தில் வந்ததும் நன்றாக - நம் ஊரில் சொல்லுவோமே, அதே மாதிரி - பந்தைக் கடைந்து கொண்டு போனார்... சப்ளை செய்தார். இரு பெரும் வீரர்களின் விளையாட்டை உன்னிப்பாகப் பார்த்த எனக்கு பிரான்சின் வலது விங்கராக விளையாடிய ஒரு குட்டை வீரரை மிகவும் பிடித்துப் போனது. அவரது எண் 5. அதை வைத்து பாலோ பண்ணும் போது அவர் பெயரை வர்ணனையாளர் சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக அவரது பெயரைச் சொன்னது போலிருந்தது. டிண்கு ... புரியுதா, அதே மாதிரி சவுண்டு வந்தது. என்னடான்னு போய் பெயரைப் பார்த்தேன்.  Kounde ... குண்டேன்னு சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் உச்சரிப்பில் அது டிண்கு என்று தான் என் காதில் பட்டது. 






சரி ... உடுங்க ... பெயர் என்ன ஆனால் என்ன? நன்றாக ஆடினார்.

முடிவதற்கு 5 நிமிடம் இருக்கும்போது பிரான்ஸ் ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.







Monday, July 01, 2024

1280. EURO, '24 ENGLAND SURVIVED



*

ENGLAND  -  SLOVAKIA



நல்ல ஆட்டம். 25வது நிமிடத்திலேயே ஸ்லோவாக்கியா இங்கிலாந்திற்கு ஒரு கோல் போட்டது. மீதி நேரம் முழுவதும் பந்து அங்குமிங்கும் இரு பக்கமும் சென்றது. ஆட்ட காலம் முடிந்து, injury time-ல் முதல் இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேன் ஒரு கோலடிக்க சமமாயிற்று.

எக்ஸ்ட்ரா டைம் ஆரம்பித்ததும் இரண்டாம் நிமிடத்தில் இங்கிலாந்து இன்னொரு கோல் போட்டது.  ஸ்கோர் நீடித்து, ஸ்லோவாக்கியா கவலையுடன் வெளியேறியது.

எப்படியோ உலக மகா வில்லன் இங்கிலாந்து தப்பிப் பிழைத்து காலிறுதிக்கு முன்னேறியது.