Sunday, March 08, 2026

1370. நல்ல வேளை ... அதன் பின் எதுவும் நடக்கவில்லை.



நல்ல வேளை ...

அதன் பின் எதுவும் நடக்கவில்லை.

 

இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமா? ரெண்டு பழசு; ஒண்ணு புதுசுன்னு வச்சுகுவோம்.

முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
, மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன் பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அப்போது அங்கு தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.

முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் அனைவரையும் அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு வரவேற்று, அதன்பின் வரும் நாட்களில் Hindu ethics, Christian ethics and Islamic ethics  என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.

பேசாமல் இருந்திருக்கலாம்.

நானெழுந்து ethics என்பது அனைத்து மனிதருக்க்கும் பொதுவானது; அதை மதங்களை வைத்துத் தனித்தனியாகப் பிரிப்பது சரியா? என்றேன்.

அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.

அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ரேலிலிருந்து வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன். நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டே, எதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால் காண்பித்து What’s it?” என்றார்.

நமக்குத்தான் விடை தெரியுமே. It is just a building, என்றேன்.

‘No.. the building is not there. It is here..” என்று சொல்லி, தன் சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not there”, என்றார்.

சட்டென்று ஒரு பதில் சொன்னேன்:go and hit it with your head; you will find whether it is there or inside your brain”.

உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று விட்டார்.

சோமு என்னை முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும், அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில் பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால் அந்த ஏவுகணைகள் சவுதியையும், இஸ்ரேலையும் நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில்  நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன் குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை. பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.

அந்த ஆண்டில், அநேகமாக அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக இருக்குமில்லையா? அன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. குடும்பம் முன்னால் உட்கார்ந்திருக்க நான் கூட்டத்திற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். கோழிகள் குஞ்சுகளைத் தன் செட்டையின் கீழ் வைத்துக் காத்தது போல் கடவுள் தன் பிள்ளைகளைக் காத்துவிட்டார் என்று உணர்ச்சி பொங்கப் பிரசங்கித்துக் கொண்டார்.  dramatize  செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறி, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று கூறிக்கொண்டிருந்தார்.

நண்பர் என் பக்கம் திரும்பி, ஆச்சரியமாக இருக்குல்ல ..?

ஆமாம்.

அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியிருக்கிறாரே! என்று வியந்து சொன்னார்.

விழித்திருந்து காத்திருக்கிறார். அல்லேலூயாஎன்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம்.

ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார் போலும்! என்றேன்.

நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

மூன்றாம் கதை:

அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறி, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும், விமானம் விழுந்த இடத்திலிருந்த 17 பேரும், மொத்தத்தில் 260 பேரும் செத்து மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 A சீட்டில் இருந்தவர் மட்டும் தப்பிப் பிழைத்தார்.

அமெரிக்காவில் இருந்து நம் நாட்டின் கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர் ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும், அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர் விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர் பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி, தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.

உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் திருத்தி, நேர்வழிப் படுத்தும்முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.

குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர் உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட் எடுத்தும் விமானத்தில் அவர் ஏற முடியாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல் தடுத்து, அவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றிவிட்டார். ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்து, விமானத்தில் ஏறி, அதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 A சீட்காரரை மட்டும் கடவுள் மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால் அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!

இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம். விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesus. இல்லியா? என்றேன்.

இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

 

 

 

 

 

 

 

 


Thursday, March 05, 2026

1369. நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.


நல்ல வேளை ...

அதன் பின் எதுவும் நடக்கவில்லை.



 

 

 

 *

 *

*
 

**

நல்ல வேளை ...

அதன் பின் எதுவும் நடக்கவில்லை.

 

இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமாரெண்டு பழசு ஒண்ணு புதுசுன்னு வச்சுகுவோம்.

முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன் பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.

முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் வரவேற்புரை அளித்துஅனைவரையும் அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு வரவேற்றுஅதன்பின் வரும் நாட்களில் Hindu ethicsChristian Ethics and Islamic ethics  என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.

பேசாமல் இருந்திருக்கலாம்.

நானெழுந்து ethics என்பது அனைத்து மனிதருக்க்கும் பொதுவானதுஅதை மதங்களை வைத்துத் தனித்தனியாகப் பிரிப்பது சரியாஎன்றேன்.

அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.

அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ராலிலிருந்து வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன். நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டேஎதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால் காண்பித்து அது என்ன? என்றார்.

நமக்குத்தான் விடை தெரியுமே. It is just a buildingஎன்றேன்.

‘No.. the building is not there. It is here.. என்று சொல்லிதன் சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not thereஎன்றார்.

சட்டென்று ஒரு பதில் சொன்னேன்: go and hit it with your head; you will find whether it is there or inside your brain.

உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று விட்டார்.

சோமு என்னை முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும்அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில் பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால் அந்த ஏவுகணைகள் சவுதியையும்இஸ்ரேலையும் நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில்  நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன் குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை. பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.

அந்த ஆண்டில்அநேகமாக அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக இருக்குமில்லையாஅன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். நன்கு dramatize  செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறிஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று கூறிக்கொண்டிருந்தார்.

நண்பர் என் பக்கம் திரும்பிஆச்சரியமாக இருக்குல்ல ..?

ஆமாம்.

அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியிருக்கிறாரே! என்று வியந்து சொன்னார்.

விழித்திருந்து காத்திருக்கிறார் அல்லேலூயாஎன்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம்.

ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார் போலும்! என்றேன்.

நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

மூன்றாம் கதை:

அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறிஅதிலிருந்த அனைத்துப் பயணிகளும்விமானம் விழுந்த இடத்திலிருந்த17 பேரும்மொத்தத்தில் 260 பேரும் செத்து மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 மட்டும் தப்பிப் பிழைத்தார்.

அமெரிக்காவில் இருந்து கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர் ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும்அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர் விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர் பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி, தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.

உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் திருத்திநேர்வழிப் படுத்தும்’ முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.

குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர் உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட் எடுத்தும் விமானத்தில் அவர் ஏறாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல் தடுத்துஅவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றி விட்டார். ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்துவிமானத்தில் ஏறிஅதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 சீட்காரரை மட்டும் கடவுள் அவரை மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால் அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!

இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம்விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesusஇல்லியா? என்றேன்.

இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.


 

 

 *

 

 

 


 

 



Sunday, February 22, 2026

1368. JUDGMENT IN NUREMBERG

JUDGMENT IN NUREMBERG

https://dharumi.blogspot.com/2026/02/1367-judgment-in-nuremberg-review.html

இந்த ஜெர்மனிய நகரில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் நேச நாடுகளும் அமெரிக்காவும் பல வழக்குகளை ஜெர்மானிய நாசி அதிகாரிகள் மீது தொடுத்தன. 1946லிருந்து பல திரைப்படங்கள் இதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் இரு படங்களை அண்மையில் பார்த்தேன். அதில் 1961 ஆண்டு எடுக்கப்பட்ட படம் - JUDGMENT IN NUREMBERG. Stanley Krammer  என்ற பெரிய இயக்குநர்; Spencer Tracy, Burt Lancaster போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படம்.  3 ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். ஓரிரு காட்சிகளில் வரும் இரு சாட்சிகளின் நடிப்பும்கூட அத்தனை அழகாக இருக்கும்.

ஆனால் இப்படம் பார்க்கும்போது என்னால் அந்தப் படத்தோடு முழுமையாக ஒன்றிப் போக முடியாமல் இன்னொரு தடங்கல் மனதில் இருந்தது. ஹிட்லரின் நாசிக் கும்பல் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை நாசி மக்கள் செய்ததாக உலகம் பின்னாளில் தெரிந்து கொண்டது. இப்படத்தில் வரும் வழக்கில் பலவேறு மக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவர்களில் நான்கு நீதிபதிகள் மட்டும் காண்பிக்கப்படுகின்றனர். அனைவரின் மன உளைச்சல்களை அழகாகப் படம் எடுத்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற ஒரு வழக்கை நடத்தும் கொடுமை நம் நாட்டிலும் நடக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றியது. இன்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சூத்திரக் கயிற்றில் ஆடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கரசேவகர்களானமோடியும், அமித் ஷாவும், அவர்களின் தாளத்திற்கு நடனமாடும் பெரும் நீதியரசர்களும்’, அவர்கள் தரும் வேதனையான தீர்ப்புகளும் என் கண் முன்னே வரிசை கட்டி நின்றன.

ஒரு நீதிபதி, கடவுள் ராமரே வந்து என்னை வழி நடத்தி, பாபர் மசூதித் தீர்ப்பை எழுத வைத்தார் என்றார். இன்னொருவர் தமிழ்நாட்டில் சனாதனத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, இல்லாத நியாயத்தை மிகச் சத்தமாகச் சொல்லிக்கொண்டு நீதியளித்தார். இன்னொரு நியாயஸ்தர் பல வழக்குகளை அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து, ஓய்வு பெற்றதும் மனித உரிமைக்கழகத்தின் தலைவரானார். இன்னொரு நீதியரசன் பாப்ரி மசூதி வழக்கில் கொடுத்த நல்லதீர்ப்பிற்காக, ஓய்வு பெற்றதும் எம்.பி. பதவி பெற்றார். வளர்ந்து வரும் இப்பட்டியல் மிக நீளமானது.

நீதியரசர்கள் அரசிற்குச் சாதகமாக இருந்தால்  தங்கள் ஓய்வு காலத்தில் அவர்களின் சேவைக்கு” ஏற்றது போல் “பரிசுகள்” அரசரிடமிருந்து பெருவார்கள். ஒரு வேளை அவருக்குப் பிடிக்காத முறையில் தீர்ப்பளித்தால், லோயா என்ற நீதிபதி 100 கோடி பணம் தருவதாகக் கூறியும், அதை மறுத்து, பெரிய அரசியல்வாதியின் வழக்கில் அவர் கொடுத்த நியாயமான தீர்ப்பிற்காக மர்மமாக திடீரென மரணமடைந்தார் என்கிறது அவர்கள் குடும்பம்.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இன்னும் நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளாவது தொடரும் ஆபத்து உள்ளது. இன்னும் எத்தனை குற்றச்சாட்டுகள் ஒன்றிய அரசின் மீது வந்தாலும், நமது மக்களுக்கு மோடியின் மேலிருக்கும் charisma ஈர்ப்பு குறையவே குறையாது. பணமதிப்பிழப்பு, நாட்டின் சொத்துகள் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி அவரது ஆப்த நண்பர்களுக்குச் சல்லிசுவிலையில் கொடுத்தாலும் இந்த ஆபத்து தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும். 2029 வரை அவர் ஆட்சி. அதன் பிறகு ஒன்று அல்லது இரண்டு முறை ஆட்சிகள் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் கீழ்தான் இருக்குமென நினைக்கின்றேன்.

2040 – அதாவது இன்னும் 14 ஆண்டுகள் கழித்த பிறகே விடியல் வரும் என்று நம்புகிறேன். நிச்சயமாக அப்படி ஒரு காலம் வந்தால் அப்போது JUDGMENT IN NUREMBERG போன்ற ஒரு படம் வரும்,

இந்தப் படம் பார்க்கும்போது அப்படி ஒரு படம் பின்னாளில் எடுத்தால் எந்தெந்த நீதிபதிகள் குற்றவாளிகளாகச் சாட்டப்பட்டு அமர்ந்திருப்பார்கள் என்ற நினைவே எனக்கு வந்தது. முன்பு அந்த ஜெர்மன் நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை அத்தனை பெரிதில்லை.1948ம் ஆண்டில் ஆயுள் தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தும், இந்தப்படம் எடுத்த 1961ம் ஆண்டில் அனைவரும் அந்தத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றிருந்தனர், ஆனால் அவர்கள் பெயர்கள் வரலாற்றில் அழிக்கமுடியாதபடி இடம் பெற்று விட்டன. அப்படி ஒரு வழக்கு பின்னாளில் நடந்தால் நமது நீதியரசர்கள் பலரும் நிச்சயமாக வரலாற்றில் இடம் பெருவார்கள்; பெற வேண்டும்.

2040ல் அப்படி ஒரு வழக்கு நடந்தால் எனக்குச் சொல்லியனுப்புங்கள்!!!


Monday, February 16, 2026

1367. JUDGMENT IN NUREMBERG REVIEW


Wednesday, February 11, 2026

1366. சூத்திரன்களே, காதுகளைக் கொஞ்சம் திறவுங்களேன் ...

*
*

 

 

அம்பேத்கர் போன்ற சிலர் கொடுத்த அழுத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு அரசியல் சட்டமைப்புகளில் இடம் பெற்றது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் இணைக்கப்பட்டனர். எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தும் எந்தவித அதிகார நிலைகளைத் தொடவும் முடியாதவர்களாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு ஓர் ஆதாரமாக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்தே தங்களைச் சமூகத்தின் உச்ச நிலையில் இருத்திக்கொண்ட  மேன்மக்களுக்கு இது எரிச்சலையே அளித்தது. அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே வைத்திருந்தனர்.

இக்குறை தீர்க்கும்  மருந்தாக பல தாமதங்கள், தடங்கல்கள்,போராட்டங்கள் நடந்த பின் மண்டல் அறிக்கை 1990 ஆகஸ்ட் 13ம் தேதி புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரதமர் வி.பி. சிங் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மண்டல் அறிக்கைக்கு எதிராக உயர்சாதியினரின் கமண்டல அமைப்புகள் தங்கள் புரட்சியை ஆரம்பித்தன, சுத்திகரிப்புத் தொழிலைச் செய்பவன் அதைத் தொடரட்டும்; செருப்பு தைப்பவன் அவன் குலத்தொழிலைச் செய்யட்டும்; அவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்காகப் புதிய வழிகள் திறப்பதை அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த மக்களைச் சிறிதாவது திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் பி. நரசிம்ம ராவ் 1991 ஆண்டிலேயே பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு (EWS -Economically Weaker Section) என்பவர்களுக்கு 10% கொடுக்க முன்வந்தது. உச்சநீதி மன்றம் இந்தச் சட்டத்தை நிராகரித்து நீதி வழங்கியது. விடுவார்களா 3% மக்கள்!? 2013ம் ஆண்டு அரசியல் சட்டமைப்பின் 103வது மாற்றமாக இப்புதிய சட்டம் RSS அமைப்பின் நீட்சியான மோடியின் பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது (Articles 15(6) and 16(6) are inserted  into the Constitution).

பல உயர் கல்வி நிலையங்களிலுள்ள கீழ்த்தட்டு நிலையிலிருந்து வரும் பல மாணவர்களின் தற்கொலைகள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே வருகின்றன. 2019-2024 என்ற ஆண்டுகளில் மட்டுமே தற்கொலைகளின் எண்ணிக்கை 118% அதிகரித்துள்ளது. இந்தக் கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணிகளில் முறையாக சாதிவாரி மூலம் பணியமர்த்துவது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவைகளைத் திருத்த உச்ச நீதிமன்றமே ஏற்கெனவேயுள்ள யுஜிசி வழிகாட்டுதலை (2012) மறுபரிசீலனை செய்து, மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று உத்தரவிட்டது. இதனால் யுஜிசி 2025ல் அந்த மாற்றங்களை வெளிக்கொண்டு வந்தது. நமது மேல்தட்டு மக்களுக்குப் பிடிக்காத ஒன்று நடந்தால், நம்மை மாதிரி - ஒண்ணும் புரியாமல் - அவர்கள் மெளனமாக இருப்பார்களா என்ன? அவர்களின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதற்காக இன்னொரு திருத்தப்பட்ட சட்டம் இந்த ஜனவரி மாதம் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல், 2026 - Promotion of Equity in Higher Education Institutions, 2026 - கொண்டுவரப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைவதே இதன் முதன்மையான குறிக்கோள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம வாய்ப்பு மையங்கள் (Equity Opportunity Centers) 24 மணி நேர உதவி எண், தகைமை நெறிக்குழுக்கள் (Equity Committee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. புகார்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார்கள் உண்மையாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இச்சட்டங்கள் பொதுப்பிரிவு மாணவர்களால் - அதாவது உயர்சாதி மாணவர்களால் - கடுமையாக எதிர்க்கப்பட்டது. Offence is the best way of defense என்ற உண்மை அவர்களுக்கும், அவர்களை இயக்கிய R.S.S. அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன? இந்த வழிகாட்டுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது எங்கள் சாம்ராஜ்ஜியத்திற்குள் இவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள்!

இதை எதிர்த்து  மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜெயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த வழக்கில் கூறியவை சூத்திரன்களுக்குப் புரிந்தால் நல்லது. அவர் சொல்கிறார்: பிராமணர்களால்தான் சாதியப் படிநிலைகள் வந்தனவா? என்று கேட்கிறார். ஆமாம்; மனுஸ்ம்ருதிதானே அதை அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பிராமணசாதிதான் காரணமானால் இன்றே நீங்கள் உங்கள் சாதியிலிருந்து வெளியேறி விடுங்கள் என்கிறார். உங்களை யார் தடுக்கிறார்கள் என்கிறார். என்ன பதிலோ இது! பிராமண சாதி காரணமாயின், அந்த சாதிக்காரர்கள் தங்கள் நூலை அவிழ்த்தெறிந்து விட்டு, சூத்திரன்கள் நம்மோடு சமமாக உட்கார்ந்தாலே போதுமே!

அவர் தொடர்கிறார்: பலரும் I.A.S., I.P.S., உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி, பிரதம அமைச்சர் என்றெல்லாம் ஆகிறார்களே.. அப்படியிருந்தும் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால் அது அவர்களது மன நிலை; அதற்கு எப்படி பிராமணர்கள் பொறுப்பாவார்கள்? என்று கேட்கிறார். சின்ன பதில் போதும். பிரதமர்களும், ஜனாதிபதிகளும், அரசால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் அதிகாரிகளும் R.S.S. அமைப்பின் கரசேவகர்கள் தானே. கற்பகக் கிரகத்திற்குள் நீங்கள்; வெளியே மசூதிகளை இடிக்கும் கரசேவகர்கள் நாங்கள். இதுதான் உங்கள் நீதி. (ஐயா இப்படிப் பேசுகிறாரே என்றதும் அவரும் ஒரு பிராமணரோ என்று நினைத்து கூகுள் சாமிட்ட கேட்டேன். ஆமாம் என்றது சாமி! நம்ம ஊரு திருப்பரங்குன்ற நீதிபதி நாமிசாதன் மாதிரிதான் இவரும்)

98 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மனுஸ்மிருதியை தீவைத்துக் கொளுத்தினார். (இந்துத்துவம், சனாதனத்தை ஆதரிப்போருக்கு இது தெரிந்திருக்குமா?) அப்போது அவர் சொன்னது இன்றைய நீதியரசர்களின் காதுகளில் விழுந்தால் நல்லது. இவ்வாறு எரிப்பது கடுமையான செயல்தான். ஆனால் உயர்சாதியினரின் காதுகளில் விழுந்தாக வேண்டும் என்பதற்காகவே அதனைச் செய்ய வேண்டியதிருந்தது. இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது செய்யப்பட வேண்டும். கதவுகளை ஓங்கித் தட்டாவிட்டால் அவை திறக்கப்படாமலே போய்விடும். (ஆனால் நம்ம மேல்சாதி மக்கள் என்ன சொல்லுவாங்க தெரியுமா?... நீங்கள் கதவை உடைத்தாலும் கூட உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்பார்கள்.)

இதெல்லாம் நம்ம சூத்திரசாதி மக்களுக்கு என்றைக்குத்தான் புரிந்து தொலைக்குமோ?