Thursday, February 23, 2006

134. சங்கிலித்தொடர்…




'அவ எடுத்த வாந்தியில கருகப்பிலை இருந்திச்சாம்’ அப்டின்னு கோடி வீட்ல ஒருத்தி சொல்ல, அதே தெருவின் அடுத்த கோடிக்கு இதே நியூஸ் கொஞ்சம் கொஞ்சம் மாறி மாறி, கடைசியில் ‘ அவ காக்காவா வாந்தி எடுத்தாளாம்’ அப்டின்னு மாறிடுச்சாம் அப்டின்னு ஒரு கதை சொல்லுவாங்க.

இந்த சங்கிலிக் கதையும் அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உருமாறுதுன்னு நினைக்கிறேன். முதல்ல ஆரம்பிச்ச புண்ணியவான் / ..வதி யாருன்னு தெரியலை. தாணுதான் trace பண்ண ஆரம்பிச்சிருக்காங்க…நதிமூலம் கண்டுபிடிச்சு சொன்னாங்கன்னா நல்லது. ஆரம்பிச்சவங்க கொடுத்த அந்த ‘நாலு’ என்னன்னு தெரியாது. நானும் ‘பின்னாடியே’ போய் ஒரு நாலைந்து ஆட்களைப் பிடிச்சு, (ராசபார்வை கொங்கு ராசா, டி. ராஜ்,ஞான்ஸ், டோண்டு, ஜோசஃப், ஜோ ) அவங்க சொன்னதையெல்லாம் ஒரு 'லுக்’ உட்டுட்டு வந்தால் கூடக் கொஞ்சம் தான் தலைசுற்றல். ஜோ ஒரு பின்னூட்டத்தில தான் செய்ததை ரகசியமா சொன்னாரா..’டக்’குன்னு அத பிடிச்சிக்கிட்டேன்.

முதலில் ஆரம்பிச்சவங்க எந்த நாலு சொன்னாங்களோ, மற்றவங்க அதை மாற்றி, கூட்டி, குறைத்து நிறைய ஆயிருச்சி. அதனால நான் என் பங்குக்கு கொஞ்சம் மாற்றி இருக்கேன். இந்த 4 கேள்விகள் நிறைய பேருடையதில் இருந்தது. ஆனால் அவைகளை நான் விட்டு விடப் போகிறேன். ஏனெனில், Four Jobs I have had: - இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? ஆரம்பிச்சது கல்லூரி ஆசிரியர் வேலை…அதுவே கடைசி வரை. ஆகவே எனக்குத் தேவையில்லாத கேள்வி. அடுத்து: Four Places I have lived - எங்கங்க…பிறந்து அஞ்சு வயசு வரை சொந்த ஊர்ல இருந்திட்டு, பிறகு எல்லாமே - எல்லாமேன்னா எல்லாமே ! - மதுரதான். நாலு இடஞ்சொல்லுன்னா நான் எங்க போறது? அதுக்கு அடுத்து: Four Places I have been on vacation - நாங்க என்ன software ஆளுகளா? இன்னைக்கி அந்த நாடு, அதுக்கு அடுத்து இன்னொரு நாடுன்னு சுத்துறதுக்கு. நாம உண்டு நம்ம மதுர உண்டுன்னு இருக்கிறவைய்ங்க. Four places I’d rather be now: - அப்டின்னு ஒரு கேள்வி. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு தருமியா இருக்க! இதுல அங்க போகணும் இங்க போணும்னு நாம ஆசப்பட்டா மட்டும் போதுமா…விடுங்க..அதெல்லாம் பகற்கனவுகள்தானே. இன்னொரு கேள்வி - Four sites I visit Daily - சொல்லி வச்ச மாதிரி ஜி-மெயில், தமிழ்மணம், தேன்கூடு, கூகுள் அப்டின்னு டிட்டோ போட்டு எல்லாரும் இதுக்குப் பதில் சொல்றாங்க. நம்ம ஆளுக எல்லாரும் அனேகமா addicts தான; அதனால இப்படித்தான் பதில் வரும். அதனால அந்த கேள்வியையும் தவிர்த்திட்டேன். அப்போ மீதியிருந்த அந்த 4 கேள்விகளுக்கு பதில் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். கேள்விகளுக்குப் போவோமா?

Four movies I would watch over and over again:
அடுத்த வீட்டுப் பெண்; காதலிக்க நேரமில்லை; மைக்கிள் மதன காம ராஜன்; சலங்கை ஒலி

Four TV shows I love to watch:
கால்பந்து; டென்னிஸ்; Bio-graphy; மற்ற தமிழ்க் குப்பைகள(தெரிஞ்சே தப்பு செய்றதில்லையா - அது மாதிரி; அட, சிகரெட் பிடிக்கிறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்.

Four of my favourite books
Exodus - 3 தடவை; பொன்னியின் செல்வன் - 3 தடவை; Root: - 2தடவை; ‘பழைய’ ஜெயகாந்தன்.

Four of my favourite foods:
அம்மாவின் குருமாக் குழம்பு; வீட்டுக்கார அம்மாவின் பருப்பு-ரசம்; பெரிய மகளின் காஃபி; சின்ன மகளின் டீ.

ஆச்சா, இப்போ அடுத்த கட்டம்: நம்ம மாட்டினது மாதிரி நாம நாலு பேத்த மாட்டணுமாமே. ஒரு ஆளு தப்பிச்சிக்கிட்டாங்க. துளசி, ஊர் - இல்ல - உலகம் சுத்திக்கிட்டு இருக்கிறதால அவங்கள மாட்ட முடியாது. மற்றபடி …

Four People I would like to tag:

1. பெனாத்தல் சுரேஷ்: - முதல் முதல் தருமிக்குப் பின்னூட்டம் இட்டவரில்லையா? அந்த செய்நன்றிக்கடன்

2. இளவஞ்சி: - நல்ல எழுத்துக்கார(ர)னல்லவா? அதற்கு என் மரியாதை.

3. தாணு: - இந்த ‘விளையாட்டு’ என்னென்னு தெரிஞ்சிக்கிறதுக்காக எடுத்த முயற்சிக்கு ஒரு appreciation!

4. பத்மா அர்விந்த்: - உழைப்பால் உயர்ந்தவருக்கு என் மரியாதை.

Tagged மக்களே…இனி உங்க பாடு; மத்தவங்க பாடு. நான் வர்ட்டா..?




Feb 23 2006 10:54 pm | Uncategorized | | edit this
9 Responses
சிங். செயகுமார் Says:
February 23rd, 2006 at 11:22 pm e
தருமி அய்யா ஆட்டத்துல எறங்கியாச்சா?அதுக்குள்ளகெளம்பிடீங்க!

சோம்பேறி பையன் Says:
February 24th, 2006 at 8:06 pm e
என்ன தருமி, நீங்களும் களத்துல இறங்கீட்டீங்களா !!! நான் எனது சங்கிலித்தொடர் பதிவில் உங்களை பற்றி எழுதியிருக்கிறேன்.. பார்க்கவும்..

உங்களுக்கு பிடித்ததில் எனக்கு பிடித்தது : சலங்கை ஒலி..

pot"tea"kadai Says:
February 24th, 2006 at 10:08 pm e
தருமி,
என்னவோ நடக்குது, மர்மமா இருக்குது…ஒன்னுமே புரியல ஒலகத்துல…சங்கிலி…tag…

மைக்கேல் மதன காமராஜன் - உங்களுக்கு பிடித்ததில் எனக்கு பிடித்தது…

ஜோ Says:
February 24th, 2006 at 10:21 pm e
தருமி,
சங்கிலியில உங்கள இழுத்து விட்டேண்ணு கோபத்துல ,சில இடங்கள்ல என்னை வாருன மாதிரி இருக்கு..ம்ம்..கோபம் தணிஞ்சதா?

இளவஞ்சி Says:
February 24th, 2006 at 10:33 pm e
//அம்மாவின் குருமாக் குழம்பு; வீட்டுக்கார அம்மாவின் பருப்பு-ரசம்; பெரிய மகளின் காஃபி; சின்ன மகளின் டீ.// ஆஹா! What a Balanced LIFE!!!

TAG க்கு நன்றி தருமி சார்! 3 நாளைக்கு வெளியூருக்ரு போறேன்! வந்தவுடன் செய்யறேன்…

தாணு Says:
February 24th, 2006 at 10:37 pm e
just saw ur mail. I will write 2morrow

கோ.இராகவன் Says:
February 24th, 2006 at 10:57 pm e
நல்ல பட்டியலுதான்…நீங்களம் இளவஞ்சியைக் கூப்பிட்டிருக்கீங்களா…நானும் கூப்பிட்டிருக்கேன்.

தருமி Says:
February 25th, 2006 at 2:30 pm e
என்ன ஜோ,
இப்படி சொல்லியிருக்கீங்க நானாவது உங்கள வார்ரதாவது. எப்படி எதை வச்சி அப்படி நினைச்சீங்க, ஜோ
ஒருவேளை இதச் சொல்றீங்களோ? - “நாங்க என்ன software ஆளுகளா? இன்னைக்கி அந்த நாடு, அதுக்கு அடுத்து இன்னொரு நாடுன்னு சுத்துறதுக்கு..”// - ஆனா இது வார்ரது இல்லையே…

Snegethy Says:
March 9th, 2006 at 10:38 pm e
Vanakam Tharumi aiya,
nalama?
intha sangili thodar endal enna? ennaum oral kalathila iraki vididaru……anal enna naalu poda endu theriyeleye….yaru thodanginanga….ethavathu rules iruka endu kandu pidichengela?

Ammanta tea akkanta coffee mitcha 2 peruku nan enga poga

No comments:

Post a Comment