Saturday, February 18, 2006

131. ஒரு திடீர் அவசரப் பதிவு

இது ஓர் அவசரமான, rather an unplanned, emotional and spurting பதிவு. ஊர் சுத்திட்டு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்து டி.வி.யை ஆன் பண்ணிய பிறகுதான் இன்று ‘அன்பே சிவம்’ படம் என்று நினைவுக்கு வந்தது. ஏற்கெனவே இரண்டு முறை பார்த்திருந்தாலும், இன்று என்னவோ அந்த கடைசி 25 நிமிடங்கள் பார்க்கும்போது கண்ணீருக்குள் நடுவேதான் படம் பார்க்க முடிந்தது.

What I wanted to say was this: We, the Tamilians have a great character of not recognizing great talents when the talents are quite amongst us. We are good in erecting statues posthumously.
This guy KAMAL is really great and he has not got the recognition that he deserves, not even 10% of his worth. Need to say more…? வேண்டாம் வேறு ஏதாவது சொல்லிடப் போறேன். இங்கே தகுதிகளுக்கு மரியாதை இல்லை..குப்பைகள் கோபுரம் ஏறுகின்றன. ஏன் இப்படி…?

1 comment:

தருமி said...

மக்கள் கோவிச்சுக்கூடாது. இது எப்பவோ (2006 பிப்ரவரியில் போட்ட ஒரு பதிவு. எப்படியோ காணாமல் போன அது திடீரென கண்ணில் பட்டது - பழைய பதிவில்!
சும்மா இங்க மறுபடி போட்டேன்; அம்புடுதான்.........
Feb 18 2006 10:21 pm | சமூகம் and சினிமா |
41 Responses
மூக்கு சுந்தர் Says:
February 18th, 2006 at 11:11 pm
//This guy KAMAL is really great and he has not got the recognition that he deserves, not even 10% of his worth //

ஆம். உண்மைதான். அவ்வையார் குதிரையேற ஆசைப்பட்டிருந்தால் நமக்கு இத்த்னை கவிதைகள் கிடைத்திருக்குமா..??

சிவாஜி ஃபர்ஸ்ட் ஷோவுக்கு புக் பண்ணி வையுங்க சார்.இல்லாட்டி “கில்லி” இன்னோரு முறை பாருங்க. அதுவரைக்கும் நாம உக்காந்து ஆதங்கப்படலாம்.

//rather an unplanned, emotional and spurting //
இதுக்குத்தான் வலைப்பதிவு. இந்தப் பதிவு ரொம்ப இயல்பா இருக்கு.

தருமி Says:
February 18th, 2006 at 11:17 pm
நன்றி மூக்கு சுந்தர்.
இப்போ போய் அந்த வெற்றிச் சித்திரம் ‘கில்லி’ படத்தை ஞாபகப் படுத்தணுமா?

mayavarathaan Says:
February 18th, 2006 at 11:20 pm
தருமி சார்…நாம குப்பை தானேன்னு அலட்சியமா ஒதுக்குற ‘குப்பை’ ஒரு சிலருக்கு வாழ்க்கை. தெரியுமா? குப்பை என்பது அலட்சியமல்ல. குப்பையை அலட்சியப்படுத்தும் மனசை குப்பையாக்காமல் வைக்க முயலுங்கள்.வேண்டாம்..நானும் வேற எதாவது சொல்லிடப் போறேன்.

Jsri Says:
February 18th, 2006 at 11:44 pm
///
What I wanted to say was this: We, the Tamilians have a great character of not recognizing great talents when the talents are quite amongst us.
///

அதெல்லாம் சும்மா. அப்ப நான் தமிழன் இல்லைன்னு வேணா சொல்லிக்கலாம். பின்ன, கிடைச்ச இடத்துல எல்லாம் கமல் புராணம்தான் பாடிகிட்டிருக்கேனாக்கும். நாங்க ஏகத்துக்கு இதயத்துல இடம் கொடுத்திருக்கோம்.

வீட்டுல டிவிடி இருந்தும் ஒரு தவம் மாதிரி இன்னிக்கி உட்கார்ந்து பார்த்தேன். கமலா காமேஷ் பொண்ணு(பேரென்ன உமாவா?), கமல் தன்னைக் காதலிக்கலைங்கற ஆதங்கத்தை எல்லாம் சேர்த்துவைச்சு சும்மா பிலுபிலுன்னு ஒரு 5 நிமிஷம் பிடிக்கும். கமலோட சேர்ந்தா மட்டும்தான் அப்படிப்பட்ட நடிப்பெல்லாம் வரமுடியும். அந்தக் காட்சிக்காகவே வெளிய எங்கயும்போகாம வீட்டுக்காரரையும் செம வெயிட்டீஸ்ல விட்டுக் காத்திருந்தேன். ஆனா கட் பண்ணிட்டாங்க. ஒரே ஃபீலிங்தான் போங்க.

[சிவாஜி கில்லிகளும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே. நாம நம்பவீட்டு அரைடிக்கெட்களுக்கு ஜாலியா கம்பெனி கொடுக்கவேண்டியிருக்கில்ல. குழந்தைகள் ரசனையையும் நான் மதிக்கறேன். 3 வயசா என் பொண்ணு இருந்தப்போதே, இந்தியாவுல இல்லை; தமிழ்நாடோ, தமிழோ, ரஜினி பத்தின இமேஜோ எதுவும் தெரியாது. ஆனாலும் சிடிக்கள்லேருந்து ‘படையப்பா’ங்கற எழுத்தோட டிசைனை மனசுல வெச்சு அந்த சிடியைத் தேடித் தேடிப் போட்டுப் பார்ப்பா. இது சாதாரண விஷயமில்லை. ஏதாவது விஷயம் இல்லாம குழந்தைகள்கிட்ட ஒரு விஷயம் அவ்வளவு சுலபமா அங்கீகாரம் பெற முடியாது.]

pot"tea"kadai Says:
February 19th, 2006 at 12:02 am
நல்ல வேளை தள்ளிப் போடாமல் உடனடியாக எழுதிவிட்டீர்கள். இல்லையென்றால் இந்த விதயத்தையே மறந்துவிட்டிருப்பீர்கள்.

அது என்னங்க எங்கப்பா மாதிரியே, உங்களுக்கும் உணர்ச்சிவசப்படும் போது மட்டும் மாற்றான் மொழி தன்னால வருது!

“அன்பே சிவம்” ஒரு மறையைப் போன்றது! சாமானியனுக்கு பல செய்திகளைச் சொன்ன மனித நேய திரைப்படம். அது பொருளாதார ரீதியாக சரிவைச் சந்தித்ததில் எனக்கும் வருத்தமே!

சிறந்த கலைஞனுக்கு அங்கீகாரம் ஒரு பொருட்டே அல்ல.குளத்து நீராய் அல்லாமல் காட்டாறு போல் எதிர் வருவனவற்றை அடித்துச் செல்ல வேண்டியது தான். அந்த வகையில் கமல் தளராத மனம் கொண்டவர்.

சமீபத்தில் கேல்விப்பட்டது: மருதநாயகத்தை தூசி தட்ட ஆரம்பிச்சிட்டாராமே!

தருமி Says:
February 19th, 2006 at 12:02 am
மாயவரத்தான்,
குப்பை பலருக்கு வாழ்க்கையையே தருது; இல்லைன்னு சொல்லலை. ஆனா, குப்பையை குப்பைன்னு தெரிஞ்சிக்கிறது பத்திதான் நான் சொல்றேன். குப்பை வாழ்க்கை தந்தாலும் குப்பை குப்பைதான்; கோபுரமாகாதுன்னு தெரிஞ்சா சரி…இல்லியா?

தருமி Says:
February 19th, 2006 at 12:09 am
jsri,
“குழந்தைகள்கிட்ட ஒரு விஷயம் அவ்வளவு சுலபமா அங்கீகாரம் பெற முடியாது..”//
- குழந்தைகள் தர்ர அங்கீகாரமும், அவங்க அம்மா தர்ர அங்கீகாரமும் ஒண்ணா இருக்கணுமா’ங்கிறதுதானே கேள்வியே.

“சிவாஜி கில்லிகளும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே..”//
- ஓரமா இருந்திட்டுப் போகட்டுமே; அப்படி ஓரமா இருந்திட்டு போனாதான் பரவாயில்லையே; பிரசசனை என்னன்னா, ஓரமா இருக்கவேண்டியதுகள் கோபுரத்தில இருக்கிறது / தூக்கி வைக்கப் படுகிறதுதானே பிரச்சனை.

தருமி Says:
February 19th, 2006 at 12:24 am
பொட்டீ,
“கமல் தளராத மனம் கொண்டவர்.”///
- இப்படி சொல்லிச் சொல்லியே அந்த மனுஷனுக்கு ‘மட்டையைக் கட்டி’விட்டாச்சு…

“அன்பே சிவம்” …பொருளாதார ரீதியாக சரிவைச் சந்தித்ததில் எனக்கும் வருத்தமே”//
இந்தப் படம் மட்டுமா? ஹே!ராம், குணா..வாவ்..என்ன படங்களய்யா இவைகள்…அதைப் பத்தி தனியா எழுதணும்னு ரொம்ப ஆசை…எழுதணும்.
(அப்பாவும் architectதானே - உங்கள மாதிரி?)

pot"tea"kadai Says:
February 19th, 2006 at 12:33 am
ஆமாம்! என்னை “கட்டிடக்கலை வல்லுனன்” ஆக செதுக்கிய சிற்பி அவர். அவரைப் பற்றி ஒரு பதிவே போடுவேன். ஏனென்றால் என்னையும் என் சகோதரனையும் இந்நிலைக்குக் கொண்டு வர அவர் படாத பாடுகள் இல்லை, செய்யாத தொழில்கள் இல்லை.

தருமி Says:
February 19th, 2006 at 12:50 am
பொட்டீ,
இது ஒரு ‘அப்பாக்கள் காலம்’ போலும். அந்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்.

ஆமா, அந்த கல்லூரி நண்பர்கள் பற்றிய பதிவுகள் என்னாச்சு?கண்ணு பூத்துப் போச்சு போங்க…

மதி கந்தசாமி Says:
February 19th, 2006 at 3:57 am
ஆஹா! இன்னிக்கு காலைலதான் இதையொட்டிப் பேசிட்டிருந்தேன்.இடுகையொன்று இடலாம் என்ற எண்ணம் உங்களுடைய உணர்வுபூர்வமான எழுத்தைப்படித்தபிறகு வந்திருக்கிறது.. எழுதிவிட்டு சுட்டி தருகிறேன்.

-மதி

mayavarathaan Says:
February 19th, 2006 at 5:18 am
//ஓராமா இருக்கிறது கோபுரமா தூக்கி வைக்கப் படுவது தானே பிரச்னை..// இதிலே உங்களுக்கு என்ன பிரச்னை தருமி?

உங்களுக்கு பிடிச்சது பெரும்பான்மையானோருக்கு பிடிக்கலைங்கிறதுக்கான ஆற்றாமையை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவது சரியா? பக்குவப்படுங்க சார். உங்களுடைய சாய்ஸ் கோபுரமாவே இருந்திட்டு போகட்டும். அதை கோபுரம்னு சொன்னா உங்கள மாதிரியான நூத்திலே ரெண்டு மூணு பேருகிட்ட அறிவுஜீவி அந்தஸ்து ஒரு சிலருக்கு வரும்னா அதே மாதிரி உங்களுக்குள்ள பேசிட்டு போங்க. ஆனா அதுக்காக அடுத்தவங்களை குப்பைன்னு சொல்ற அளவுக்கு உங்க மனசை குப்பையாக்கிக்காதீங்க அப்படீன்னு தாண் சொல்றேன்.

Jsri சொன்ன மாதிரி சிறுசுங்களிலிருந்து பெரிசு வரைக்கும் அங்கீகாரம் கிடைச்சிருக்கு…கிடைச்சிட்டிருக்கு…அது போதும்… ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை… சுமார் முப்பது வருஷமா நீங்க சொல்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கலைன்ற போது ஒட்டு மொத்த சமுதாயத்தையே நீங்க எத்தனை காலத்துக்கு தான் குற்றம் சொல்லிட்டே இருப்பீங்க? இவ்வளவு வருஷமாவும் சமூகம் திருந்தலைன்னு சொல்றது மாபெரும் ஜோக்கா தெரியலையா உங்களுக்கு? அது என்னப்பா மத்ததுல எல்லாம் ‘பெரும்பான்மை’ கருத்தை தான் பேசுறீங்க…இந்த மேட்டரிலே மட்டும் வசதியா ஒரு சின்ன கூட்டமா சேர்ந்து ஜல்லியடிக்கிறீங்க?! பாராட்டுதல்கள் அறிவு ஜீவி போலி முகத்திரைவாசிகளிடமிருந்து தேவையில்லை. ஆனால் பொருமல்களும் தேவையில்லை என்று தான் குறுகிறேன்.

வசந்தன் Says:
February 19th, 2006 at 5:22 am
நீங்கள் பார்த்தவுடன் பதிவு.
டோண்டு நள்ளிரவில் எழும்பி ஒரு பதிவு.
நான் வலைப்பதிவு தொடங்கினதே “அன்பே சிவ“த்தோடும் “முக”த்தோடும் தான்.

விளம்பரத்துக்கு மன்னிக்கவும்.

குமரன் Says:
February 19th, 2006 at 7:20 am
தருமி சார். அமெரிக்காவுல இருக்கிறதுல ஒரு சௌகர்யம். எங்களுக்கு இப்பத் தான் சனிக்கிழமை மாலை. அன்பே சிவம் படம் சன் டிவியில் ஓடிக்கிட்டு இருக்கு. உங்க பதிவை இன்னைக்கு மத்தியானம் பாத்துட்டு இப்ப படத்தைக் குடும்பத்தோட பாத்துகிட்டு இருக்கோம்.

மூனு வயசு மகளுக்குத் தான் கமல் மாமா படம் கொஞ்சம் போரடிக்குது. ரஜினி மாமா படமோ விஜய் மாமா படமோ வந்தா அசையாம உக்காந்து பாப்பா எங்க வீட்டுப் பாப்பா.

Dondu Says:
February 19th, 2006 at 8:04 am
கை கொடுங்க தருமி சார். நானும் பதிவு போட்டேன், விடியற்காலை 3 மணிவாக்கில். படம் முடிந்ததும் கனத்த மனத்துடன் சீக்கிரமே படுக்கச் சென்றேன். பாதியில் விழிப்பு வந்து பதிவு போட்டுவிட்டு மறுபடியும் தூங்கச் சென்றேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய மேற்படி பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். அது அங்கு வருகிறதா என்பதைப் பார்த்துவிட்டே மட்டுறுத்தல் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Joe Says:
February 19th, 2006 at 9:13 am
Dharumi,
What to say? I wanted to write a lot.But I am unable to type in tamil now .When I came to know ‘Anbe sivam’ is a flop ,I could’t beleive .What else will satisfy this idiotic tamil audience ? Aren’t these guys have no brains to understand enjoy this movie?Ok.I have no problem them encouraging non-sense mssala .Sometimes that is also needed .But I can’t digest that Anbe sivam is a flop .But I am sure it won’t stop the legend kamal.God bless him!

suresh - penathal Says:
February 19th, 2006 at 10:15 am
ம்ஹூம்; இந்த பெரியவங்க தொல்லை தாங்க முடியலை!

for further info, see penathal!

THIS IS AN ADVERTISEMENT!

pot Says:
February 19th, 2006 at 11:13 am
மாயவரத்தான்,

உங்களுக்கு என்ன பிரச்னை? எதைச் சொல்ல வருகிறீர்கள்!!!

///இவ்வளவு வருஷமாவும் சமூகம் திருந்தலைன்னு சொல்றது மாபெரும் ஜோக்கா தெரியலையா உங்களுக்கு? அது என்னப்பா மத்ததுல எல்லாம் ‘பெரும்பான்மை’ கருத்தை தான் பேசுறீங்க…இந்த மேட்டரிலே மட்டும் வசதியா ஒரு சின்ன கூட்டமா சேர்ந்து ஜல்லியடிக்கிறீங்க?! பாராட்டுதல்கள் அறிவு ஜீவி போலி முகத்திரைவாசிகளிடமிருந்து தேவையில்லை. ஆனால் பொருமல்களும் தேவையில்லை என்று தான் குறுகிறேன்.///

இங்கே பெரும்பான்மை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? இங்கே ஒரு சிறந்த கலைஞனை/நடிகனைப் பற்றியும் பேசும் பொழுது போன்று மற்ற “பெரும்பான்மை” செய்திகளை இழுப்பதற்கு காரணம் உங்களுடைய அடையாளத்தை நிலை நிறுத்தவா?

பிறரை இந்த விடயத்தில் பொரும வேண்டும் (அ) பொருமக் கூடாது என்று கூறுவது எந்தப் பெரும்பான்மையில் வருகிறது.
இங்கே பொருமுவது நீங்களாகத் தான் இருக்கிறீர்கள்!

பல இடங்களில் குப்பைகள் கோபுரம் போலவே காட்சியளிக்கும். ஆனால் கண் உள்ளவர்களுக்கு அது வெறும் குப்பை தான்!

muthu(tamizhini) Says:
February 19th, 2006 at 12:00 pm
ஏற்கனவே நாம் அல்ப படங்களை புகழ்வதும் நல்ல படங்களை இகழ்வதுமான விசயத்தை பற்றி நான் ஒரு பதிவு போட்டுள்ளேன். http://muthuvintamil.blogspot.com/2005/11/blog-post_12.html.என் ஞாபகசக்தி சரியானால் நீங்கள் அதிலும் என் கருத்தை ஆதரித்து எழுதினீர்கள். என்ன சார் பண்றது? அது விதி.

நானும் மதி பாணியில் தனிபதிவு போடலாம் என்று உள்ளேன்.சற்றே ஆழமாக(?) எழுத எண்ணியுள்ளேன்.

kannan Says:
February 19th, 2006 at 12:03 pm
மகாநதியும்,அன்பே சிவமும் அடிப்படை கருத்துக்களில் வேறுபட்டாலும் இரண்டும் மிக நல்ல படங்கள் என்பதில் எந்த வேறுபாடும் இல்லை.

madhumitha Says:
February 19th, 2006 at 3:05 pm
ஆனாலும் தருமி
அநியாயத்துக்கு நல்லாவே இருக்கு படம்
‘அன்பே சிவம்’படம் 2004 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து திருச்சி போற பஸ்சில் பாதி படத்துக்கு மேலிருந்து முடிவு வரை பார்த்தது.
தியேட்டரில் பார்க்கணும்-னு விருப்பம்.

மூன்றாம்பிறை,குணா,மகாநதி தவிர எனக்கு பிடிச்ச படம்.
பேர்சொல்லும் பிள்ளைன்னு நினைக்கிறேன்.
கே.ஆர்.விஜயாவின் மகனாக கமல் வரும் படம்.
என்னன்னே தெரியாது அந்தப் படம் பிடிச்சது.
ஒரு வேளை தியேட்டரில் சென்று பார்த்தது காரணமாயிருக்கலாம்

mayavarathaan Says:
February 19th, 2006 at 3:10 pm
//இங்கே ஒரு சிறந்த கலைஞனை/நடிகனைப் பற்றியும் பேசும் பொழுது போன்று மற்ற “பெரும்பான்மை” செய்திகளை இழுப்பதற்கு காரணம் //

பொட்டீக்கடை. பொருமுவது நானா? நல்ல ஜோக். நன்றாக படியுங்கள். பிறகு கருத்து சொல்ல வாருங்கள். நல்ல கலைஞனைப்(?!) பற்றி பேசும் போது அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்கிறேன். உங்கள் ரசனை பெரியது என்று கூறி ஒட்டு மொத்த தமிழகட்தையே கேவலப் படுத்தி கமெண்ட் அடிக்க வேண்டாம் என்று தான் குறூகிறேன்.

mayavarathaan Says:
February 19th, 2006 at 3:10 pm
கூறுகிறேன்

muthu(tamizhini) Says:
February 19th, 2006 at 3:35 pm
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_19.html

M. Sundaramoorthy Says:
February 19th, 2006 at 5:53 pm
தருமி சார்,
நேற்றுதான் முதல்முறையாகப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மூன்றுமணி நேரம் நல்லமுறையில் கழிந்தது குறித்து மகிழ்ச்சி (நான் சொல்லக்கூடியதை ஏற்கனவே பலபேர் இங்கு சொல்லிவிட்டதால் வந்ததற்காக வாத்தியாரிடம் ஆஜர் சொல்லவே இந்த பின்னூட்டம்).

தருமி Says:
February 20th, 2006 at 9:59 pm
மதி,
சீக்கிரம் பதிவை எதிர்பார்க்கிறேன்.

குமரன்,
“ரஜினி மாமா படமோ விஜய் மாமா படமோ வந்தா அசையாம உக்காந்து பாப்பா எங்க வீட்டுப் பாப்பா. “//-
- உங்க வீட்டு பாப்பா மட்டுமா, குமரன். நம்ம ஆளுக நிறைய பேரு உங்க பாப்பா மாதிரிதான்

தருமி Says:
February 20th, 2006 at 10:05 pm
வசந்தன், டோண்டு, பெனாத்தல்,
உங்க பதிவுகளுக்கு வந்து ஆஜர் குடுத்திட்டேன்.
டோண்டு, உங்க சேத்தாளி வந்துட்டு போயாச்சு

தமிழினி முத்து,
“சற்றே ஆழமாக(?) எழுத எண்ணியுள்ளேன். “/- நானும்தான்.

கண்ணன்,
அன்பே சிவம் ரொம்பவே பாஸிட்டிவான படம்; மகாநதி நெகட்டிவான படம் என்பது என் கருத்து.

தருமி Says:
February 20th, 2006 at 10:12 pm
மதுமிதா,
மூன்றாம்பிறையில் அந்தக் கடைசி சீனுக்கு நிறைய பேர் கைதட்டினார்கள்..எனக்கு பாலு மகேந்திரா மேல் கோபம்தான் வந்தது. அதுதான் அந்தப் பெண் சரியாகி விட்டாளே..நேரில் நடந்ததைச் சொல்ல வேண்டியதுதானே..melodrama அந்த சீன். அதனால் படமே பிடிக்காது போச்சு

சுந்தர மூர்த்தி,
attendance போட்டாச்சு; ஆனலும் நீங்க இதுவரை ரொம்ப irregular-தான். இனிமேயாவது ‘ஒழுங்கா’ வந்து போய் இருங்க..

தருமி Says:
February 20th, 2006 at 10:27 pm
ஐயா மாயவரத்தான்,
பொட்டீ கேட்டது மாதிரி - உங்கள் பிரச்சனை என்ன? என் ‘திருமாவுக்கு ஒரு வார்த்தை’ என்ற பதிவையடுத்து, ‘குருமாவுக்கு ஒரு வார்த்தை’ என்று ஒரு பதிவு போட்டீர்கள் - நகைச்சுவைக்காக என்று எடுத்துக் கொண்டேன். இப்பின்னூட்டங்களையும் அது மாதிரிதான் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

இப்போதைக்கு தமிழ்மணத்தில் வந்த பதிவுகளும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களும் உங்களுக்குக் கொஞ்சமாவது தெளிவைக் கொடுத்திருக்குமென்று நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஏனெனில், இன்னும் ஒரு பதிவு இதே விஷயத்தை ஒட்டி போட உத்தேசம். அப்போது மீண்டும் உங்கள் விவாதங்களைத் தொடருங்கள். காத்திருப்பேன் அப்பதிவில்.

இப்போதைக்கு உங்களின் இந்த வாக்கியத்தில் ஒன்று புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக்குங்களேன். please: “பாராட்டுதல்கள் அறிவு ஜீவி போலி முகத்திரைவாசிகளிடமிருந்து தேவையில்லை”. அறிவுஜீவியில் நான் வரவில்லை; போலி முகத்திரைவாசிகளிலும் வரவில்லை…பின்னே …?

daya Says:
February 21st, 2006 at 1:17 am
அன்பே சிவம் சரியாக போகாததில் எனக்கும் வருத்தமே. பார்த்தவர்கள் அனைவருமே பிடித்திருக்கிறது என்றே சொல்கிறார்கள்.

ஆனால் ஏன் ஓடவில்லை? படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் தான் பார்கக வேண்டும் எனப் போய் பார்த்தேன். அழுக்குத் திரையில் குறைந்த ஒலி ஒளியுடன் தான் பார்க்க முடிந்தது. வெறுத்துப் போனேன். அதே படம் அடுத்த வாரமே திருட்டு வி.சி.டியில் துல்லியமாக இருந்தது. எங்கே போய் இந்த கொடுமையை சொல்ல.

வெளிநாடு சென்ற திரும்பியவர்களுக்கோ, அல்லது தங்கி விட்டவர்களுக்கோ அவர்களை மாதவனுன் அடையாள படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் சாதாரண பொதுஜனத்திற்கோ கம்யூனிஸ்ட்டான கமலையோ ஒரு நாகரீக மாதவனையோ தங்களுடன் பொருத்திக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். அதனால் கூட இந்த படம் லாப ரீதியாக தோற்றிருக்கலாம்.

தமிழ் வலைப்பதிவு » அன்பே சிவம் guy Says:
February 21st, 2006 at 1:30 am
[…] வார இறுதியில் உணர்வு பூர்வமான இடுகைமூலம் இதை எழுதத் தூண்டிய தருமிக்கு நன்றி. « தமிழியல் மாநாடு - மே 2006 […]

கால்கரி சிவா Says:
February 21st, 2006 at 1:56 am
தருமி,

இந்த மாதிரி பாஸிடிவ் படங்கள் தமிழ் நாட்டில் ஓடேவே இல்லை. உன்னால் முடியும் தம்பி மற்றொரு உதாரணம்.

அன்பேசிவம் சன் டீவியில் ஓடும் பொழுது அதன் மூலமாகிய “ப்ளேன்ஸ், ட்ரைன்ஸ் ஆட்டோமோபைல்ஸ்” என்ற படம் என்னுடைய கனேடிய டீவியில் ஒடிக் கொண்ட்டிருந்தது.இது ஒரு நகைச்சுவை படம். அதை நானும் என் மனைவியும் முழுவதுமாகப் பார்த்தோம். அப்படத்தப் பார்த்க்துவிட்டு என் மனைவி அடித்த கமென்ட் “இந்தப் பசங்க மெட்ராஸ்க்கு போயி கமல் கிட்டே ட்யுஷன் படிக்கணும்”

இதுதான் கமலுக்கு கிடைத்த வெற்றி

பி.கு. கனாடவில் சன் டீவி இல்லை

ரீகல் தியேட்டேர்ல்லே நல்ல படம் போடுவதில்லையா?

கால்கரி சிவா

தாணு Says:
February 21st, 2006 at 12:43 pm
//ஆனால் ஏன் ஓடவில்லை? படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் தான் பார்கக வேண்டும் எனப் போய் பார்த்தேன். அழுக்குத் திரையில் குறைந்த ஒலி ஒளியுடன் தான் பார்க்க முடிந்தது. வெறுத்துப் போனேன். அதே படம் அடுத்த வாரமே திருட்டு வி.சி.டியில் துல்லியமாக இருந்தது. எங்கே போய் இந்த கொடுமையை சொல்ல//
நானும் முதல் தரம் தியேட்டரில் பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆகாமல் ராம்கியிடம் படம் பற்றி மோசமான கமெண்ட் கொடுத்துவிட்டு வந்தேன். மறுபடி விசிடியில் பார்த்தபோது அவ்வளவு அருமையாக இருந்தது. படம் எதனால் தோல்வி அடைகிறது என்பதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். `கல்கி’ பார்க்கச் சொல்லி நான் மெசேஜ் கொடுத்தேனல்லவா, அதுமாதிரி `அன்பே சிவம்’ பார்க்கச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கலாமில்லையா?.

தருமி Says:
February 21st, 2006 at 4:56 pm

daya,
நீங்கள் செய்திருக்கும் திறனாய்வு எவ்வளவு பொருந்துமோ தெரியவில்லை. ஒரு வேளை இன்னும் சில மசாலாக்கள் (கீழ்க்கண்டவை மாதிரி) சேர்த்திருந்தால் படம் ஓடியிருக்குமோ?
- மாதவனுக்கும் அந்த ‘அம்மா’ பேரென்ன..ஆங்..கிரண் - அவங்களுக்கும் ஒரு கனவுப் பாட்டு(foreign location..Canada? );
- மாதவனுக்கு ஒரு ஃபைட் சீன்..அந்த சின்னத் திருடன்+திருடனின் நண்பர்கள் ஒரு பத்து பேர்; கட்டாயம் அதில் மூன்று நான்கு முறை சுற்றிச் சுற்றி மக்கள் பல்டி அடிக்கணும்;
- கடைசியில் ‘உங்கள் வாய் கோணியிருக்கலாம்; ஆனா உங்க மனசு எப்பவுமே நேர்தான். உங்க கால் ஊனமாயிருக்கலாம்; ஆனா மனசில ஊனம் இல்ல…’ இப்படி ஒரு நாலு பக்கம் வசனம் கிரண் பேச, அதுக்குப் பிறகும் நல்லா தன்வழி போக..பூ வாசம்..அப்டின்னு அந்த அம்மா ஒரு பாட்டு பாடவும் நல்லா திரும்பி வந்து அவங்களைக் கட்டிப்ப்ப்ப்ப்பிடிச்சி….அர்ஸ் கண்ணீரோடு வாழ்த்துச் சொல்லிட்டு, சங்குவோட அப்படியே போறார்…

,
mrs. doubtfire - அவ்வை ஷண்முகிக்கு mrs. siva என்ன சொல்வாங்கன்னு தெரிஞ்சிக்கணும்.
பொதுவாவே ஒரு concept-ஐ எடுத்துக்கிட்டு / காப்பி அடிச்சி / லவட்டிக்கிட்டு அந்த original-ஐவிடவும் நல்லா பண்றதுல அதுவும் நம்ம nativity-யோடு பண்றதுல கமல் கெட்டிதான்.

தருமி Says:
February 21st, 2006 at 5:03 pm
கால்கரி சிவா
ரீகல் தியேட்டரெல்லாம் தங்க ரீகலாக ஆகி எத்தனை காலம் ஆயிப்போச்சு.. கொடுத்துள்ள லின்க் அந்தக் கால ரீகல் தியேட்டரை நினைத்து நான் விட்ட பெருமூச்சுதான்..

வசந்தன் Says:
February 21st, 2006 at 5:16 pm
தருமி,
இதைப் படிச்சுப் பாருங்கோ.

TULSI GOPAL Says:
February 21st, 2006 at 7:43 pm
Dear Dharumi,

What happened to Kamal? ONNum puriyalai(-:

anbudan,
Tulsi

தருமி Says:
February 22nd, 2006 at 9:07 am
தாணு,
நீங்க ‘தான் பெற்ற சோகம் மற்றவரும் அனுபவிக்கட்டுமே’ என்ற தத்துவத்தில் கல்கி படம் பற்றிச் சொன்னீர்களா?
நான் அ.சி. கடைசி 25 நிமிடங்கள்தான் பார்த்தேன். அடுத்த நல்ல படத்துக்கு sms கொடுங்கள். சரியா..?

ஜோ Says:
February 22nd, 2006 at 9:12 am
தருமி,
நீங்க ‘குட்டி’ படம் பாத்தீங்களா? இல்லீண்ணா ,கண்டிப்பா பாருங்க.

தருமி Says:
February 22nd, 2006 at 1:37 pm
துளசி,
அடடா, கமலுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை துளசி. என்ன புரியலைன்னு புரியலையே

ஜோ,
ஒரு சின்ன வேலைக்காரப் பெண்ணின் கதைதானே, பாத்துட்டேன்.

கில்லி - Gilli » Anbe Sivam, second release Says:
April 8th, 2006 at 5:15 am
[…] அருணா | தருமி | டோண்டு ராகவன் | ‘பெனாத்தல்‘ சுரேஷ் | முத்து ( தமிழினி) | பிரகாஷ் […]

Post a Comment