Monday, June 05, 2006

162. ரவி சிரினிவாஸுக்கு ஒரு பதில்.

Image and video hosting by TinyPic

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

168: சாதிகள் இருக்குதடி பாப்பா: முழுக் கட்டுரை

பதிவு 161:நான் கண்ட மண்டல் கமிஷன்.Saturday, June 03, 2006


கடைசியாக வந்து இன்னாபாது ஒண்ணுமே பிரியலையே என்று கேட்பவர்களுக்கு இந்த லிங்க். மத்தவங்க அப்படியே அலாக்கா சாப்பிடலாம்.BSRB-யை இழுத்து மூடியாச்சி என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள். அதற்குப் பதிலாக ஒவ்வொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும் தனித்தனியே ஆட்களை வேலைக்கு அமர்த்த தேர்வுகள் நடத்துகிறார்கள் என்கிறீர்கள். உண்மைதான். (’உலக மகா புளுகு’விற்கு மன்னிக்க) நல்லது. BSRB இருக்கும்போது ஒரே தேர்வின் வழியாக எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் …

1. இப்போது ஒவ்வொரு வங்கியும் தனித்தனியே நடத்தும் தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றனவா?

2. ஜாதிவாரியான, BSRB-ஆல் கடைப்பிடிக்கப்பட்ட, roster system இப்போதும் கடைப்பிடிக்கப் படுகிறதா?

3. எல்லா வங்கித் தேர்வுகளுமே ஒரே model-யைப் பின்பற்றுகின்றனவா? இல்லை, எந்தவித coaching classes மூலம் பயிற்றுவிக்க முடியாதபடி ஒவ்வொரு வங்கியும் ‘கொண்டதே கோலம்’ என்ற முறையில் முற்படுத்திக் கொண்டோருக்கு வசதியாகத் தேர்வு முறைகள் நடக்கின்றனவா?

4. இந்த தேர்வுகள் எல்லாமே ஒரே மாதிரியான, பொருத்தமான difficulty level கொண்டனவைதானா?

5. ஏதாவது ஒரு பொது அமைப்பினால் இந்தத் தேர்வுகள் monitor செய்யப்படுகின்றனவா?

வரைமுறையற்று நடத்தும் இந்தத் தேர்வுகளைக் காண்பித்து BSRB போனாலும், வங்கிகள் தேர்வுகள் வைத்தே காலியிடங்களை நிரப்புகின்றன என்ற உங்கள் வாதம் - நான் இதுவரை என் பதிவுகளில் பயன்படுத்தாத சொல் - வெறும் ஜல்லியடிப்பின்றி வேறென்ன? பெரும்பான்மை மக்கள் திறமை வாய்ந்தவர்களால், திறமையாக ஏமாற்றப் படுகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் “சாணக்கியத் தனம்” என்றேன்.

அடுத்து SSC-க்கு வருவோமா, ரவி? SSC still exists. அது இப்போது இல்லை; எடுக்கப்பட்டுவிட்டது என்ற என் ‘உலக மகா புளுகு’விற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்; தவறுதான்..ஆனால், இங்கும் அந்த ‘நீக்கமற நிறைந்திருக்கும் சாணக்கியத்தனம்’ SSCயை எப்படி வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்:

மண்டல் கமிஷன் வந்ததும் - நிறுத்த முயன்றும் முடியாமல் வந்துவிட்ட பின் - மத்திய அரசு ஊழியர்களின் வேலை ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக ஆக்கி விட்டீர்கள்..மன்னிக்கணும்..ஆக்கிவிட்டார்கள். This is just the first aid - இருப்பவர்களின் இருப்பை கொஞ்சம் நீட்டியாகி விட்டது.

ரவி, சின்ன வயதில் என்னைப் போன்ற மக்குப் பசங்களிடம் ஆசிரியர் கேள்வி எதுவும் கேட்டால் - எட்டும் எட்டும் எத்தனை என்று கேட்டார் என்று வைத்துக் கொள்வோம் - மனசுக்குள்ளேயே அல்லது முதுகுக்குப் பின்னால் கை விரல்களை வைத்து எண்ணிக்கொண்டே, சார், நானா சார்,…என்னையா கேட்டீர்கள் சார், என்று கேட்டு காலம் கடத்திக் கொண்டே ஒரு வழியாக விரல்களை எண்ணி கடைசியில ஒரு பதிலை - சரியாகவோ, தவறாகவோ சொல்வோம். இந்த ஓய்வு வயதை நீட்டித்தது இது போன்ற ஒரு ஓட்டைத் தந்திரம்தான். ஓய்வு பெறும் வயதை நீட்டித்து, இருப்பவர்களைக் கொஞ்சம் தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நன்றாக காய் நகர்த்தப் பட்டது. எப்படி என்கிறீர்களா…இப்படித்தான்…

1. LDC என்கிற lower division clerk என்ற வேலைக்கு +2 முடித்த தகுதி போதும். SSC இருந்தபோது ஒரே தேர்வு; அதுவும் objective type questions / multiple choice questions மட்டும். இதில் ‘விளையாட்டு’ எதுவும் விளையாடமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? இப்போது SSC தேர்வுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு UPSC (IAS, IPS…)தேர்வுகள் போல இரண்டு பேப்பர்கள்; முதல் Prelim பேப்பரில் மட்டும் objective type questions; இரண்டாவது பேப்பரில் ஏதோ மக்கள் IAS IPS தேர்வுகள் எழுதுவது போல subject paper. எந்த +12 மாணவன் ஐயா இந்த பேப்பரை எழுதித் தேர்வடைவது? இந்த இரண்டாவது பேப்பர் descriptive answers.
2. அது மட்டுமல்ல. IAS, IPSதேர்வுகள் கூட அவனவன் தன் தாய்மொழியில் எழுத முடியும்; இந்த SSC தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் எழுத முடியும். (இதைத்தான் ‘ஆப்பு வைப்பது’ என்று கூறுகிறார்களோ??)

3. இந்தத் தேர்வுகளை என்னைப் போன்ற ‘மொடாக்குகள்’ கனவிலும் நினைத்துப் பார்க்காத உயரத்தில் வைத்துவிட்டு, எவனும் இதற்கென்றே கோச்சிங் வகுப்புகள் எதற்கும் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பது (There is no standard type of questions; level of toughness of the tests varies year after year.) ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் சிலரை அணுகிக் கேட்டுப் பாருங்களேன்.

ஏன் சார், தெரியாமல்தான் கேட்கிறேன்; IAS, IPS தேர்வுகளைவிடவும் ஒரு lower division clerk post-க்குக் கடினமான தேர்வுகள் வைத்து filter பண்ணணுமா என்ன? (எதற்காக இந்த filtering என்பதையும் பிறகு பார்ப்போமா?)

மேற்கூறியவற்றில் 3,4,7 & 9 பாயிண்டுகள் தேர்வுகளின் நிலையற்ற தன்மை, கடினத்தன்மை இவைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தேர்வு எழுதும் எல்லோருக்கும் பொதுவானதுதானே; இதில் என்ன ஏற்றத் தாழ்வு என்று ‘பொட்டில் அடிச்சது மாதிரி’ கேட்கலாம். ஜாதிகளைக் கூட விட்டு விடுவோம். நகர்ப்புற மேட்டுகுடி மக்களையும், நாட்டுப்புறத்து ஏழை மக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டாம் என்பதுதானே இட ஒதுக்கீட்டின் ‘தாத்பர்யமே’! அப்படியாயின், இது போன்ற tough exams யாருக்கு advantageous ஆக இருக்கும்?

இப்போது filtering and the problem of creamy layer-க்கு வருவோம். இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றிய என் பதிவுகளில் இந்த இரண்டாம் பிரச்சனையான creamy layer-க்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை நானே எழுப்பி உள்ளேன். ஆனால் ‘வேறு வழி’ என்ன என்ற கேள்விக்கு முழுமையான, சரியான, நடைமுறைப் படுத்தக்கூடிய முறை இப்போதைக்குத் தெரியவில்லை. சரியான முறை காணும் வரை - மாறனும், அன்புமணி பிள்ளைகளும் பயன்பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் - அது தொடரவேண்டியது ‘காலத்தின் கட்டாயம்’! ஏனெனில் மாறனோடும், அன்புமணி பிள்ளைகளோடும் அரசாங்கப் பணியில் இருக்கும் என் போன்ற மக்களும், SSC- மூலமாய் LDCஆன மக்களும் அல்லவா மாட்டிக் கொள்வார்கள் / கொள்வோம்.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் அறிவு ஜீவிகளும், மேற்சொன்ன filtering நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும் மிகப் பெரிய அறிவி ஜீவிகளும் நன்கு திட்டமிட்டே காரியமாற்றுகின்றனர். மண்டல் கமிஷன் வந்த பிறகே SC. ST இடங்கள் பலவும் அரசுப் பணியில் ‘ஆட்கள் கிடைக்கவில்லை’ என்ற நொண்டிச் சாக்குடன் நிரப்பப்படாமல் இருந்ததைக் கண்டு பிடித்து, அதன் பின் ஒரு drive என்ற பெயரில் அந்த இடங்கள் ஓரளவாவது - முழுமையாக இல்லை - நிரப்பப் பட்டன. ‘ஆளே வரலைன்னா நாங்க என்ன செய்றது’ என்ற பதில் தயாராக இருப்பதால், இந்த filtering நடைமுறைப் படுத்தப் படுகிறது. இதை ஒட்டியே இந்த creamy layer விவாதமும். creamy layer-யை ‘வெட்டி’ விட்டு விட்டால் பிற்படுத்தப் பட்டோருக்குரிய இடங்கள் நிரப்பப் படாமல் போக வாய்ப்புகள் அதிகம். பல இடங்களை நிரப்பாமல் வைத்திருந்து அந்த இடங்களில் ‘பிறரை’ ஆள் கிடைக்காத காரணத்தால் வேலையில் சேர்க்க அல்லது அந்த இடங்கள் நிறையாமலே இருந்தாலும் சரிதான் என்ற பரந்த மனப்பான்மையே இதற்குக் காரணம். இந்தக் கடைசி பத்தியில் சொல்லப்பட்டவைகளுக்கு ஆதாரம் கொடுக்க முடியாதென எனக்கு நன்கு தெரியும். நடப்புகளை வைத்துக் கணிக்கும் ஒரு கணக்கு….அவ்வளவே!

posted by திராவிட தமிழர்கள்“ரவி சிரினிவாஸுக்கு ஒரு பதில்.”
5 Comments -Show Original Post
Collapse comments


வழிப்போக்கன் said…
நல்ல பதிவு !

3:39 PM
குழலி / Kuzhali said…
அய்யய்யோ தருமி அய்யா இதில் இத்தனை உள்குத்து இருக்கின்றதா? தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் 10இலட்சம் ஆசிரியர்கள் பயிற்சி முடித்து காத்துள்ளனர், 10ல் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றாலும் குறைந்தது ஒரு இலட்சம் தாழ்த்தப்படவர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்க வேண்டும் ஆனால் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஆள் கிடைக்கவில்லையென்று சில ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரியவில்லை, இது தொடர்பாக தகவல் சேகரித்து வருகின்றேன், விரைவில் இது தொடர்பாக கூறுகின்றேன்

நன்றி

3:56 PM

Anonymous said…
‘நிறப்பப்படாமல் ‘

‘நிறப்பப் பட்டன’

‘நிறப்பாமல் ‘

4:49 PM

திராவிட தமிழர்கள் said…
எழுத்துபிழைகளை சுட்டி காட்டிய அனானி நண்பருக்கு நன்றி…
பிழைகள் திருத்தப்பட்டிருக்கின்றன.

6:17 PMPRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.

சிலருக்கு நினைவிருக்கலாம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஏதோ ஒரு வேலைக்கான அல்லது மேற்படிப்பு தேர்வுக்கான விளம்பரத்தில் oc என்பதற்கு ‘other castes’ என்று முழு விளக்கம் அளித்திருந்தார்கள். உடனடியாக இதனை கவனித்த திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி போராட்டம் நடத்தினாரோ அல்லது வழக்கு தொடர்ந்தாரோ தெரியவில்லை…எம்ஜிஆர் அதனை உடனடியாக open competition என்று மாற்ற உத்தரவிட்டார். அப்போது அதனை தற்செயல் என நினைத்தேன்…

6:32 PMPathivu Toolbar ©2005thamizmanam.com


Jun 05 2006 08:27 pm Uncategorized
10 Responses
தருமி Says:
June 5th, 2006 at 9:25 pm
குழலி,
எனக்குக் கிடைத்த தகவல்களின் பேரில் இதை எழுதினேன். இன்னும் கொஞ்சம் ‘ஆழ்மாக’ முயற்சித்தால் இன்னும் பல முத்து எடுக்கலாமோ என்னவோ!

நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

தருமி Says:
June 5th, 2006 at 9:26 pm
PRABHU RAJADURAI said…
உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.

சிலருக்கு நினைவிருக்கலாம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஏதோ ஒரு வேலைக்கான அல்லது மேற்படிப்பு தேர்வுக்கான விளம்பரத்தில் oc என்பதற்கு ‘other castes’ என்று முழு விளக்கம் அளித்திருந்தார்கள். உடனடியாக இதனை கவனித்த திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி போராட்டம் நடத்தினாரோ அல்லது வழக்கு தொடர்ந்தாரோ தெரியவில்லை…எம்ஜிஆர் அதனை உடனடியாக open competition என்று மாற்ற உத்தரவிட்டார். அப்போது அதனை தற்செயல் என நினைத்தேன்…

6:32 PM

தருமி Says:
June 5th, 2006 at 9:31 pm
பிரபு ராஜதுரை,
“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்”//

கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் கொஞ்சம் அனுபவம் இருப்பதால் நீங்கள் மேலே சொல்லியுள்ளதனை என்னால் முழுமையாக ப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘சாணக்கியத்தனம்’ என்று நான் கூறியது மிகையானதல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.

“மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். “//

முழு விவரம் தெரிந்தால் நல்லாயிருக்குமென தோன்றுகிறது. கொஞ்சம் கொடுங்களேன்.

தருமி Says:
June 5th, 2006 at 9:44 pm
சில கல்லூரிகளில் நடக்கும் ஒரு சாணக்கியத்தனம்: இத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடம்தர வேண்டும் என்றும் அந்த எண்ணிக்கையை மாணவர் சேர்க்கை முடிந்ததும் பல்கலைக் கழகத்திற்கு அறிவிக்க வேண்டுமென்பது சட்டம்.

ஆனால் சில கல்லூரிகளில் மிகவும் விரும்பப்படும் -வேலை வாய்ப்புகளுக்கு ஏதுவாக இருக்கும் பாடத்திட்டங்களில் (Physics, chemisty…) வேண்டப்பட்டவர்களுக்கும், மாணவர் சேரத்தயங்கும், வேறு வழியில்லாமல் சேரும் பாடத்திட்டங்களில் (economics - tamil medium, history, tamil…) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிறப்பி விடுவார்கள். பல்கலைக் கழகத்திற்கு மொத்த மாணவ விகிதாச்சாரத்தை அனுப்புவார்கள். பல்கலைக் கழகத்திலிருந்தும் மெல்ல கல்வியாண்டின் கடைசியில் பாடத்திட்ட வாரியாக மாணவர் விழுக்காடு பற்றிய விவரங்கள் வேண்டுமெனக் கேட்பார்கள். அதற்குள் கல்வியாண்டே முடியும் தருவாயிலிருக்கும். அதனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

அடுத்த ஆண்டு இதே கதை தொடரும்.
ஆனால் இது கதையல்ல; நிஜம்.

தருமி Says:
June 9th, 2006 at 9:27 am
muse,
உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தியுள்ளேன்.
தனி மயில் ஒன்று அனுப்பினேன். திரும்பி விட்டது.

muthu(tamizhini) Says:
June 9th, 2006 at 9:41 am
இப்படித்தான் வங்கிகளிலும் அறிவிக்கப்பட்ட இடங்களில் தாழத்தப்பட்ட மட்டும் பிற்படுத்தப்பட்ட இடங்களை நிரப்புவதில்லை.அதாவது எழுத்து தேர்வில் பாஸ் செய்து வருபவர்களும் நேர்முக தேர்வில் கழித்து கட்டப்படுகிறார்கள் என்று நான் எழுதினேன்.(அனுபவம்)

ஒரு அறிவாளி அனானியாக வந்து தானும் வங்கியில் வேலை செய்வதாகவும் நான் சொன்னதை நிரூபிக்கமுடியுமா என்றும் பீலா விட்டார்.முடியும் என்று சொல்லிவிட்டேன்.ஆனால் அனானிநாதரை காணோம்.என்னன்னு நினைப்பது?

சாணக்கியத்தனம் இல்லை அது.சில்லறைத்தனம் என்பேன் நான்.

கமல் Says:
June 22nd, 2006 at 8:24 pm
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது (1989ல்), எங்கள் பள்ளித் தலைமையாசிரியர், முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனது மகனுக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை, பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற மண்டல் கமிஷன் ஒரு அரிய வாய்ப்பு என்று மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, குடியரசுத்தலைவருக்கு எங்கள் கைப்படக் கடிதம் எழுத வைத்தார்.

ஒன்பதாம் வகுப்பில் நுழைந்தவுடனே பொறியியல்/மருத்துவக் கனவை விதைத்துப் படிக்க வைக்கப்படும் மாணவனையும், அடுத்த ஆண்டு தன் கல்வி தொடருமா என்றே தெரியாத மாணவனையும் எப்படி ஒரேவகையான சேர்க்கைமுறையில் சேர்க்க முடியும் என யாரும் யோசிக்கவே மாட்டார்களா?

நன்றி
கமல்

தருமி Says:
June 22nd, 2006 at 8:58 pm
கமல்,
உங்கள் ஆசிரியர் போன்றவர்கள் நமது நன்றிக்கு எப்போதும் உரியவர்கள்.

karumi Says:
June 22nd, 2006 at 10:20 pm
உங்கள் ஆசிரியர் போன்றவர்கள் நமது நன்றிக்கு எப்போதும் உரியவர்கள்

முற்பட்ட வகுப்பினர் என்பதால் வசவிற்கு எப்போதும், இது போன்ற செயல்களுக்காக சில சமயங்களில் நன்றிக்கும் உரியவர்(கள்) என்று எழுதியிருந்தால் அது உங்கள் உள்ளக் கிடக்கையை சரியாக வெளிப்படுத்துவதாகும்

ஒன்பதாம் வகுப்பில் நுழைந்தவுடனே பொறியியல்/மருத்துவக் கனவை விதைத்துப் படிக்க வைக்கப்படும் மாணவனையும், அடுத்த ஆண்டு தன் கல்வி தொடருமா என்றே தெரியாத மாணவனையும் எப்படி ஒரேவகையான சேர்க்கைமுறையில் சேர்க்க முடியும் என யாரும் யோசிக்கவே மாட்டார்களா?

ஒன்பதாம் வகுப்பில் நுழைந்தவுடனே பொறியியல்/மருத்துவக் கனவை விதைத்துப் படிக்க வைக்கப்படும் OBC மாணவனையும், அடுத்த ஆண்டு தன் கல்வி தொடருமா என்றே தெரியாத FC மாணவனையும் எப்படி ஒரேவகையான சேர்க்கைமுறையில் சேர்க்க முடியும் என யாரும் யோசிக்கவே மாட்டார்களா?

தருமி Says:
June 23rd, 2006 at 1:22 am
கருமி,
தூங்கிறவனைத்தான் எழுப்ப முடியும்.

கருமின்னு பேரு போட்டு எழுதியதும் மன அரிப்பு தீர்ந்து போச்சா? சந்தோஷம். what an intellectual exercise and noble achievement! it just proves.

No comments:

Post a Comment