Monday, June 05, 2006

161. நான் கண்ட மண்டல் கமிஷன்.

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

168: சாதிகள் இருக்குதடி பாப்பா: முழுக் கட்டுரை

பதிவு: 162: ரவி சிரினிவாசுக்கு ஒரு பதில்.Image and video hosting by TinyPic
ஏற்கெனவே திராவிட தமிழர்களின் தளத்தில் பதிக்கப்பட்ட இப்பதிவை என் தளத்தில் மீண்டும் ஒரு முறை பதிவிடுகிறேன். மீள்பதிவிற்கு அனுமதியளித்த தலைவர் முத்துவிற்கு நன்றிகள். அப்பின்னூட்டத்திற்கு வந்த பின்னூட்டங்களையும் சேர்த்தே பதிவேற்றியுள்ளேன்.Monday, May 29, 2006
தருமி பார்த்த மண்டல் கமிஷன்
என் பிள்ளை 90 மார்க். அடுத்த வீட்டுப் பையன் 92; அவனுக்கு உயர்கல்விச் சாலையில் சீட் கிடைத்துவிட்டது. என் பையனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த தெருக்காரரின் பையன் 87தான். அவர் பையனுக்குச் சீட் கிடைத்துவிட்டதே. இது என்ன நியாயம்?

நல்ல கேள்விதான். காலங் காலமாக யார் யாரெல்லாமோ - என் தாத்தாக்களாகவே அவர்கள் இருந்துவிட்டுப் போகட்டும் -செய்த தவறுக்குரிய தண்டனை என் தலையில், என் பிள்ளை தலையில் விழுவது என்ன நியாயம்?

நாம் எல்லோரும் எந்த விஷயத்தையுமே என்னை இது எப்படி பாதிக்கிறது என்ற சுய நிலைக் கண்ணோட்டத்தில்தான் பார்ப்போம். அது இயற்கையும் கூட. இப்படித்தான் பலராலும் பார்க்க முடியும். அதைத் தவிர்த்து சமூகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு எல்லோராலும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

இதையெல்லாம் தாண்டி, மண்டல் கமிஷன் வந்ததென்றால் அதற்குரிய மரியாதையை வி.பி. சிங் அவர்களுக்குக் கொடுத்தேயாக வேண்டும். ஆனால், அவர் செய்த நல்ல காரியத்தை ‘அழகாக’ neutralise செய்து, அதனால் பெரிய லாபம் ஏதும் பிற்படுத்தப்பட்டோர் பெற முடியாத அளவு திறம்பட செயல் பட்டவர்களை என்னென்று சொல்வது. மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான S.S.C. (Short Service Commison), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசு வேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது. வீட்டுக்கு நுழைவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தது மண்டல் கமிஷன்; ஆனால், வாசல் கதவுகளைச் சுத்தமாக அடைத்துவிட்டார்கள். அடைத்தவர்கள் புத்திசாலிகள். ஆனால், மண்டல் நமக்கு வழி போட்டுவிட்டது என்ற நினைப்பில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். அது ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதைக் குள்ள நரித்தனம் என்பதா, சாணக்கியத்தனம் என்பதா?

இப்போது நடப்பதற்கு இரண்டாம் மண்டல் கமிஷன் என்று பெயராம். (அன்று - பெயர் என்ன பாலாஜியா? - ஓர் உயிர்ப்பலி கொடுத்து மண்டலை நிறுத்த முயற்சி நடந்தது. அந்த உயிர்ப்பலி பற்றி பின்பு வந்த ‘வேடிக்கையான’ செய்திகளைப் புறந்தள்ளி விடுவோம்.) இன்றைக்கு ஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் ‘அறப் போராட்டங்களையும்’ மீறி இத்திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. காத்திருந்து பார்க்க வேண்டும்.

வேடிக்கை என்னவெனில், இதற்காக போராட்டம் நடத்தவேண்டிய ‘பிற்படுத்தப் பட்டோர்’ இதைப் பற்றிய கருத்தாக்கங்கள்கூட இல்லாமல் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அதன் பிறகு ‘வாசல்களையடைக்கும்’ சாணக்கியத் தனத்தையும் நாம் எதிர் கொள்ள வேண்டியதிருக்கலாம்.அதைவிடவும் இன்னொன்றை இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அந்த விஷயம் பத்ரி அவர்களால் ஒருதனிப் பதிவாகப் போடப்பட்டுள்ளது. மேலும் பலரை அதை அடையவேண்டியது அவசியமென நினைப்பதால் அவர் கூற்றை இங்கு மேற்கோளிடுகிறேன்:

//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது - பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.ஆனால் நிலைமை என்ன?அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் “கல்வி ஓர் அடிப்படை உரிமை” என்ற பெயரில் ஒரு மசோதாவை உருவாக்கி வருகிறது.

தி ஹிந்துவிலிருந்து:

The Union Human Resource Development Ministry has dropped its move to impose 25 per cent reservation for children from the weaker sections in unaided schools at the elementary level.Though such reservation had been included in all the draft legislation drawn up by the Ministry to operationalise the Fundamental Right to Education, it finds no mention in the current draft under consideration.தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத்தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த “சிறப்புப் பள்ளிகள்” கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளது? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?இப்பொழுது மனித வள அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெகுவாக பாதிக்கப்படுவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவசரமாகப் போராடவேண்டிய மசோதா இதுதான். உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது.//

இந்த நேரத்தில், நான் ஏற்கெனவே சொல்லியபடி நம்மில் ஏறக்குறைய எல்லோருமே சுயநலக் கண்ணோட்டத்தோடுதான் (subjectivity) எதையும் பார்ப்போமென்றாலும், நம் பதிவர்களில் வெகு சிலர் இந்த நிலையைத்தாண்டி ஒரு பொதுநலப் பார்வையோடு இந்த விஷயத்தை மனதாரக் காணும் நாகரீகத்திற்கும், பறந்த மனதுக்கும் என் சிறந்தாழ்ந்த வணக்கங்கள்.அவர்களில் பத்ரியும் ஒருவர்.

posted by திராவிட தமிழர்கள் at 12:47 PM

Post a Comment On: திராவிட தமிழர்கள் வலைத்தளம் “தருமி பார்த்த மண்டல் கமிஷன்”
15 Comments


Anonymous said…
S.S.C.- Staff Selection Commission
BSRB had been abolished.Banks have
the freedom to advertise, administer exams and choose from
those applied and qualified in the
exam conducted by bank.Earlier BSRB
would conduct tests and recurit from candidates and would allocate
them to various banks (e.g IOB,PNB,
BOB,Indian Bank etc).SBI has its
own cell for recuriting staff at
various levels.Thus only the process has changed and the no.
of vacancies has come down for
many reasons.

1:02 PM
Vaa.Manikandan said…
//இன்றைக்கு ஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் ‘அறப் போராட்டங்களையும்’ மீறி இத்திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. காத்திருந்து பார்க்க வேண்டும்.//

நிறைவேற வேண்டும். நிறைவேறும்.

1:14 PM
சந்திப்பு said…
ஐயா தருமி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு சத்தியமா புரியலை! உங்களுடைய கருத்து இதுதான் என தெளிவாக சொன்னால்தான் சாதாரண திராவிடர்களுக்கு புரியும். சுற்றி வளைக்காதீர்…

3:22 PM
முத்து ( தமிழினி) said…
சந்திப்பு அவர்களே,

நிஜமாகவே புரியவில்லையா அல்லது அந்த சாதாரண திராவிடர் என்ற எள்ளலான வார்த்தைகளுக்கும் உங்களுக்கும் புரியாததற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?:))

4:14 PM
ravi srinivas said…
மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான S.S.C. (Short Service Commison), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசுவேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது. வீட்டுக்கு நுழைவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தது மண்டல் கமிஷன்; ஆனால், வாசல் கதவுகளைச் சுத்தமாக அடைத்துவிட்டார்கள். அடைத்தவர்கள் புத்திசாலிகள். ஆனால், மண்டல் நமக்கு வழி போட்டுவிட்டது என்ற நினைப்பில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். அது ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதைக் குள்ள நரித்தனம் என்பதா, சாணக்கியத்தனம் என்பதா?

———————————-
இது உலக மகா புளுகு. இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதுவதா?.

4:50 PM
Anonymous said…
ravi,

do you mean SSC and BSRB are not yet dismantled?

7:03 PM
Sivabalan said…
// Vaa.Manikandan said… நிறைவேற வேண்டும். நிறைவேறும். //

இதை நான் வழிமொழிகிறேன்..

8:44 PM
ravi srinivas said…
Pls read what he has written.BSRB has been dismantled.But that does not mean that there has no been
no recuritment in banks.In general
in the 1990s due to various factors
employment in govt. depts and public sector banks did not increase as much as it was in
the previous decade. That affected the employment opportunities of everybody, not just OBCs. But as OBCs had 27% quota, the probability
of getting a central govt. job was high for them.Bear this also in mind.In late 70s and 80s public sector banks expanded rapidly
and hence expansion in recuirtment also followed.Technology enabled banks to do more business with less staff.Although public sector banks were late to use the information technologies they soon
discovered the benefits.They figured that they needed less staff
and hence there was little addition
in terms of employment.So BSRB was
not needed. What was done by BSRB was left to the banks.
Even otherwise SBI had its own
recuirment board.Railways and
public sector units etc still
continued to recurit in the 1990s
Dharmi gives a misleading picture.

9:05 PM
ravi srinivas said…
UPSC still there.Thus the doors are
not closed as he claims.The number of persons entering through the doors has been reduced.But this applies to all not just OBCs.

9:07 PM
வவ்வால் said…
//மண்டல் கமிஷன் வந்த பிறகு, பொதுவாக மத்திய அரசு வேலை பெற ஏதுவான ssc (Staff Selection Commission), BSRB (Banking Service Recruitment Board) இரண்டையும் சுத்தமாகக் காலி செய்தாகி விட்டது. எந்த அமைப்புகளால் அரசுவேலைக்குள் செல்ல முடியுமோ அந்த வாசல்களை முழுவதுமாக அடைத்தாகி விட்டது//

பி.எஸ்.ஆர்.பி. வேண்டுமானல் முடக்கப்பட்டிருக்கலாம் ஆனலும் இன்னும் BSRB அவ்வபோது வேலை வாஇப்பு விளம்பரம் தருகிறது ,SSC செயல்பட்டே வருகிறது!ssc வலைமனையில் புதிய அறிவிப்புகள்,மற்றும், முந்தைய தேர்வுக்கான ,முடிவுகள் வந்துள்ளது! ஏன் தமிழகத்தில் அம்மையார் காலத்தில் புதிய பணி நியமனம் கூடாது எனக்கூறி TNPSC கு உலைவைத்தாரே அது மறந்து விட்டது!

SSC வலைமனை!http://ssc.nic.in/

//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது - பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்//

இதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவது .. எத்தனை தொடக்க பள்ளிகள் உள்ளது அவை அனைத்திலும் தரமான கல்வி வழங்க அரசுக்கு எத்தனை காலம், பிடிக்கும் ,எத்தனை நிதி வேண்டும், முறையாக செய்தால் கூட தரம் வருமா உடனே.தொடக்க கல்வியில் தரமான கல்வி வழங்கிய பிறகு அனைவரும் சமம் ஆகி படிக்கலாமே என்றால் அது வரைக்கும் இந்த IIT,IIM,AIIMS எல்லாம் மூடி வையுங்கள்.அரசால் இயலாத ஒன்றை வாதத்துக்கு கூறி மீண்டும் வெளியே தள்ளிவிட்டு உயர் கல்வியை அனுபவிக்க சொல்லும் நாசகாரத்திட்டம் இது!

//அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளது? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?//

தனியார் தொடக்க பள்ளிகளில் இட ஒதுகீடே இது வரை இல்லை ,இட ஒதுகீடு கொண்டுவரலாம் என ஒரு முடிவு எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது!எனவே எப்படி அதனை சத்தமின்றி நீக்கினார்கள் எனக்கூற முடியும்.உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கோருவது அரசு கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளில் அல்ல. இட ஒதுக்கீடு எனில் முதலில் அரசு கல்லூரிகளில் முழுதாக வரட்டும்,அதை வர விடுங்கள்,இருக்கிற உரிமையை கேட்டால் எதிர்கால உரிமையை கேளு முதலில் என சாமர்த்தியமாக திசை திருப்பவே கட்டுரை ஆசிரியர் முயற்சிக்கிறார்.ஏற்கனவே தனியார் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தர அரசு நிர்பந்திக்கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது, எனவே அது கருத்தியே தனியார் தொடக்க கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கோரும் மசோதா பின் வாங்கப் பட்டிருக்கும்!

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு பற்று பேசுபவர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மசோதா ஒன்று கைவிடப்பட்டது பற்றியும் கூறி இருக்கலாம்.உதவாத இட ஒதுக்கீடு எனில் தராமல் விட்டது ஏன் என்று மிகவும் பரிவாக!!?? கேட்பார் போல் உள்ளது.

இந்த கட்டுரையாசிரியர் சுற்றி வளைத்து இட ஒதுக்கீடு கோராதீர்கள் என்பதையே மறைமுகமா சொல்ல வருகிறார் போல் உள்ளது.சரியான உள்குத்து கட்டுரை:-))

9:15 PM
இரா.சுகுமாரன் said…
//இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது - பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.//

இப்படி சொல்லி திசை திருப்புவதும் ஒரு முயற்சிதான்.

//தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத் தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த “சிறப்புப் பள்ளிகள்” கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.

அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளனர்? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?//
தொடக்க கல்விக்கும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த கோருவதே சரி. உயர் கல்விக்கு வேண்டாம் சொல்வது சரியல்ல.

2:22 PM
முத்து ( தமிழினி) said…
பி.எஸ்.ஆர்.பி கலைக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் வங்கிகள் ஆட்களை தேர்வு செய்யும்போது மண்டல் கமிஷனை ஏற்றுத்தான் காலியிடம் அறிவிக்கப்படுகிறது.

(ஆட்களை நிரப்புவதில் தான் பிரச்சினை)

9:52 AM
Dharumi said…
வவ்வால், சுகுமாறன்,

ஒரு சிறு குழப்பம் இப்பதிவில். நான் என் கருத்துக்களை முதல் 3 பத்தியிலும், கடைசிப் பத்தியிலும் சொல்லிவிட்டு, இடையே பத்ரி அவர்களின் பதிவில் வந்த ஒரு சேதியை மேற்கோளிட்டேன்.

எனது கருத்தாக இட ஒதுக்கீட்டிற்கான என் ஆதரவையும், ஆதங்கத்தையும் சொல்லியுள்ளேன். அதன் பின் பத்ரியை மேற்கோள் காட்ட இரண்டு காரணம்:

1. பொதுவாகவே நம் எல்லோராலும் எந்த ஒரு விஷயத்தையும் subective ஆகவே - சுய கண்ணோட்டத்தோடுமே - பார்க்க முடியும். ஆனாலும் சிலர் தன் சொந்த நிலை தாண்டி பொதுச் சிந்தனையோடும், தார்மீகக் கண்ணோட்டத்துடனும், சமூகச் சிந்தையோடும் இருப்பது கண்டு, சந்தோஷமுற்று அவர்களுக்கு நன்றி சொல்ல அதனைப் பதிந்தேன்.

2. பத்ரி குறிப்பிட்டது போல தொடக்கப் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு மிக அவசியம். அவரோ, நானோ தொடக்கப் பள்ளிகளில் மட்டுமே இட ஒதுக்கீடு தேவை; உயர்நிலைகளில் அது தேவையில்லை என்ற பொருளில் ஏதும் கூறிவிடவில்லை. உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது - என்ற இந்த கருத்து மிக முக்கியமானதாகப் பட்டதால் இதனை மேற்கோளிட்டேன்.
நுனிக் கிளையில் இருந்து அடிக் கிளையை வெட்டிவிடக் கூடாதே என்ற கரிசனமே.

சுகுமாறன் நீங்கள் தடி எழுத்துக்களில் போட்டிருக்கும் பகுதிக்கு முன்பு (இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது..) என்ற இந்த வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். பலரும் சொல்வது இது…(என்பதி)இதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம். சரியா?

வவ்வால்,
“தனியார் தொடக்க பள்ளிகளில் இட ஒதுகீடே இது வரை இல்லை ,இட ஒதுகீடு கொண்டுவரலாம் என ஒரு முடிவு எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது!” - தகவலுக்கு நன்றி.

இங்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதையே பத்ரி கூறியுள்ளார். நானும் வழி மொழிந்தேன்.
எப்படி உங்களல் - “இந்த கட்டுரையாசிரியர் சுற்றி வளைத்து இட ஒதுக்கீடு கோராதீர்கள் என்பதையே மறைமுகமா சொல்ல வருகிறார் போல் உள்ளது.சரியான உள்குத்து கட்டுரை:-))”// இந்த முடிவுக்கு வரமுடிந்தது? ஒருவேளை சொல்ல வந்த கருத்தை முறையாகச் சொல்லாமல் விட்டு விட்டேனா…அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களா? முதல் காரணமாயிருப்பின், மன்னிக்க.{சரக்கு அவ்ளோதான் }

1:36 AM
Dharumi said…
சந்திப்பு,
புரியக் கூடிய விஷயத்தை புரிய முடியாதபடி எழுதி சா.தி. களுக்குக் கொடுத்த கஷ்டத்திற்காக ரொம்ப கோவிச்சுக்காதீங்க…

1:36 AM
Dharumi said…
ravi srinivas,
i have responded to your comments in a separate post. have a look at that.

10:59 PMPathivu Toolbar ©2005thamizmanam.com


Jun 05 2006 04:25 pm Uncategorized
One Response
Srininvasan Says:
June 7th, 2006 at 5:12 pm

hai for tamil blogs

No comments:

Post a Comment