Monday, May 07, 2007

215. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ...

எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய. அதிலும் உங்கள் எல்லோருக்கும் ரொம்பவே தெரிந்த கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஊடகங்களால் வளர்த்து விடப்பட்ட இந்த விளையாட்டைத் தினசரி செய்திகளில் வாசிக்காமல் புறக்கணிப்பதும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளைப் பார்க்காது இருத்தலுமே என் நிலையில் என்னால் செய்யக் கூடியது. அதனால் நான் கேட்கப் போகும் கேள்வியில் மிகச் சரியாக பெயர்களையோ, புள்ளி விவரங்களையோ தரமுடியாது. ஆனால் அதெல்லாம்தான் உங்களில் பலருக்கும் தண்ணி பட்ட பாடாச்சே .. அதனால் கேள்விக்கு வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,1976-77-லிருந்து நெல்சன் மண்டேலா வரும்வரை, apartheid அது இதுன்னு தென்னாப்ரிக்காவை ஒதுக்கி வைத்திருந்தோம். மண்டேலா வந்தார்; நிலைமை மாறியது என்று சொல்லப் படுகிறது.

ஆனாலும் இந்த "உலக"(!)க் கிட்டிப் புள்ளு (கிரிக்கெட்)கிண்ணப் போட்டியிலும், அதற்கு முந்திய போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்காவின் குழுவில் பெரும்பான்மையான கருப்பர்களை விடவும் வெள்ளையர்களே இருப்பதாகத் தெரிகிறதே. எப்படி? இந்த முறையும் மாக்கியாவோ என்னவோ ஒரு பெயரை பக்கத்து வீட்டு பன்னிரண்டு வயது டெண்டுல்கர் சொன்னான். அந்த ஒருவர் மட்டுமே கருப்பராமே.

10 விழுக்காடு மட்டுமே வெள்ளையர்கள் மக்கள் தொகையில் இருக்க, அந்த நாட்டின் விளையாட்டு அணியில் மட்டும் 95 விழுக்காடு அவர்கள் எப்படி இருக்க முடிகிறது? இன்னும் இனவாத அரசியல் - apartheid - இருக்கிறதா? நெல்சன் மண்டேலாவினால் நடந்த மாற்றங்கள் எல்லாமே வெறும் மேம்போக்கான விஷயங்கள்தானா? நாட்டின் செல்வமும், பொருளாதார மேம்பாடும் இன்னும் வெள்ளையர் கையில்தான் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பொருளாதாரம் மட்டுமல்ல 'எல்லாமே' இன்னும் வெள்ளையர்கள் கைகளில்தான் இருக்கிறதாகத்தானே இந்த விளையாட்டு அணியைப் பார்த்தால் தெரிகிறது.

அப்போ, அங்கே நிலைமை எப்படித் தான் இருக்கிறது? நம் நாட்டிலும் சில விஷயங்களில் இருக்கும் நிலைதான் அங்குமோ? ஒருவேளை, இங்கு சில இடங்களில் நடப்பது அங்கு பல இடங்களில் நடக்கின்றதோ? இதெல்லாம் எப்படி?

புரியாமல்தான் கேட்கிறேன்; தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !


பி.கு. இந்தப் பதிவை எதில் வகைப் படுத்துவது என்று ஒரு குழப்பம். இருக்கட்டுமே என்று "இடப் பங்கீடு" என்றே வகைப்படுத்துகிறேன். அதுவே சரியென்று தோன்றுகிறது.

12 comments:

Ponniyinselvan/karthikeyan said...

எனக்கும் இது போல் புரியாத கேள்விகள் நிறைய உள்ளன. [தருமி, அடிக்க வராதீர்கள் ] உங்களை வைத்து காமெடி,, கீமெடி எதுவும் செய்யவில்லை.உண்மையிலேயே,நிறைய விஷயங்களில் ஓரலை பண்பாடுதான்.

delphine said...

எல்லா நாட்டிலும், எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான பிரச்னைகள் உண்டு.. probably they dont expose it out like how we do..

MSV Muthu said...

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது, முதன் முதலாக RSA விளையாடியதைப் பார்க்கும் போது. ஆப்ரிக்கான்னா கருப்பாத்தான இருப்பாய்ங்க இவிங்க எப்படி அம்புட்டுபேரும் செக்கசெவேல்னு இருக்காய்ங்கன்னு. ஆனா இந்திய அணியைப் பார்த்தீங்கன்னா பெரும்பாலும் northindians தான். southindians சொற்பம் தான். அதனால் northindians தான் southindians-ஐ அடக்கியாள்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியுமா? திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. Like AjithAgarkar. :)

வடுவூர் குமார் said...

உங்க சந்தேகத்துக்கு விடை தெரியாவிட்டாலும்..
நாங்கள் விளையாடும் காலத்தில்,சின்ன பசங்களை பந்து பொருக்கிப்போட மட்டும் உபயோகப்படுத்திப்போம்,ஒரு வேளை அங்கு இன்னும் அவர்களை அப்படி உபயோகப்படுத்துகிறார்களோ என்னவோ??
காலம் ஒரு நாள் மாறும்.

சாலிசம்பர் said...

கிரிக்கெட் என்பதே புத்திசாலிகள் விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும்.வெள்ளையர்கள் புத்திசாலிகள்,அதனால் அந்த நாட்டு அணியில் அவர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.நம் நாட்டைப் பொறுத்தவரை பிராமணர்கள் புத்திசாலிகள்,அதனால் நம் நாட்டு அணியில் பிராமணர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.இதில் இனவெறிக்கோ,ஆதிக்கத்திற்கோ இடம் இல்லை.

சாலிசம்பர் said...

கிரிக்கெட் ஒரு புத்திசாலி விளையாட்டு என்பதை கண்டுபிடித்தவர் ஆனந்தவிகடன் மதன் அவர்கள்.

தருமி said...

Ponniyin selvan,

அப்பாடா ... !


delphine,

அப்போ எது சரி'ங்றீங்க?

தருமி said...

முத்து,
வ. குமார்,
ஜாலி ஜம்பர்,

மூணு பேத்துக்கும் ஒரே பதில்:
அப்டீங்கிறீங்க ??!!

Ponniyinselvan/karthikeyan said...

அது என்ன அப்பாடா?என் மரமண்டைக்கு இதுவும் புரியவில்லை....அது போகட்டும்...சிலதெல்லாம் சொல்லாமலே தெரியும் என்று மறுபடியும் வாராதீர்கள்.

தருமி said...

Ponniyin Selvan,
// இது போல் புரியாத கேள்விகள் நிறைய உள்ளன..//

தருமிக்கு வரும் கேள்விகள் மற்றவர்களுக்கும் வருகிறதே; அதனால் என் குரல் 'வனாந்திரத்தின் ஒற்றைக் குரல்' இல்லை என்பதால் வந்த 'அப்பாடா' அது; அவ்வளவுதான்!

வினையூக்கி said...

:) :) :) டெஸ்ட் கமெண்ட் பதிப்பிக்கவும்... பின்னூட்ட செக்.

ச.மனோகர் said...

பொதுவாக சமூக,பொருளாதார பின்னடைவு அடைந்துள்ள மக்களால் விளையாட்டு, கலைத்துறைகளில் அவ்வளவாக முன்னேற முடியாது என்பது யதார்த்தமான ஒன்று.நிச்சயம் ஒருநாள் கருப்பர்களும் இந்த மாதிரி விசயங்களில் முன்னேறுவார்கள். கலையும் விளையாட்டும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கானது அல்ல.

ஆமாம்... தருமி சாருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

பதிவின் 'வரிகளுகிடையில்'படித்துப் பார்ப்போம்...!

Post a Comment