Thursday, August 09, 2007

232. எங்க ஊருக்காரங்க சந்திப்பு



ஏற்கெனவே எங்க ஊரு ஜாலிஜம்பர் ஒரு பதிவு போட்டு, எங்க ஊருக்காரங்க சந்திப்பில நடந்தது எல்லாத்தையும் ஆணி வேறு அக்கு வேறுன்னு (அய்யாக்களே! ஆணின்னா என்னன்னு தெரியும்; அதென்ன 'அக்கு' ? யாராவது விளக்குங்களேன்.) பிரிச்சி மேஞ்சிட்டார். நான் சொல்றதுக்கு ஒண்ணே ஒண்ணு இருக்கு. அத மட்டும் சொல்லிக்கலாம்னு இருக்கேன். On second thoughts ... ரெண்டு இருக்கு ..

1. சென்னையில் நடக்கப் போற பட்டறை பற்றிப் பேசினோம். நாமளும் நம்ம ஊர்ல ஒரு பட்டறை நடத்திர வேண்டியதுதான் அப்டின்னு பேசினோம். அதற்கான முதல் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

2. எங்க ஊர்ல ஒரு பட்டறை கல்லூரி மாணவர்களை மய்யமாக வைத்து ஆரம்பிக்கத் திட்டமிட்ட உடனேயே அப்படி ஒரு பட்டறை நடத்துவதற்கு முன்பே நாம் மதுரைக்கார பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுக்களம் உருவாக்க வேண்டும். விரைவில் ஒரு குழுப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று ஏறத்தாழ 7 மணியளவில் பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போனால், 9 மணிக்கே 'இதோ, புதுப் பதிவு' அப்டின்னு இராம் ஒரு பொதுப்பதிவை ஆரம்பித்தே விட்டார். வாழ்க அவர்தம் சுறுசுறுப்பு.

அவரது இந்த சுறுசுறுப்பைப் பாராட்டும் முகத்தான் அவரது மற்றொரு திருவுருவப் படமொன்றை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

Image and video hosting by TinyPic

இந்தப் படம் போட்டது ஒண்ணும் அந்த படம் போட்டதுக்கான பழிவாங்குதல் எல்லாம் இல்லை. ஒரு நன்றிக்கடன்தான் .. !

அப்படி ஆரம்பித்துள்ள எங்கள் ஊரின் பொதுப்பதிவின் முகவரி: http://marudhai.blogspot.com/

மதுரைக்கார பதிவர்கள் அனைவரும் திரு. ராம் அவர்களை raam.tamil@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழுப்பதிவில் இணைந்து கொள்ள இதனையே அழைப்பாகக் கருதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவின் நுட்ப வேலைகளை இப்போதைக்கு திரு. ராம் மட்டுமே செய்துவந்தால் குழப்பமேதுமின்றி வலைப்பதிவை தொடரமுடியும். மாற்றங்கள் வேண்டுவோர் திரு, ராம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.......

14 comments:

நாமக்கல் சிபி said...

சூப்பரப்பூ!

- இராயல் இராம் கொலை வெறிப் படை,
சென்னை.

தருமி said...

இது ஒண்ணும் ரா.க.ச. ஆரம்பிக்கிறதுக்காக போட்ட படம் இல்லை ..இல்லை .. இல்லை ..

இராம்/Raam said...

ஐயா,

முற்பகல் செய்யின்.... பழமொழிக்கு இப்போதான் தெளிவா புரிஞ்சது.... :(((

நாமக்கல் சிபி said...

ரா.க.ச என்றால் என்ன?

ராயலைக் கலாய்ப்போர் சங்கமா?

கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் தருமி சார்!

- கொ.ப.செ.
ரா.க.ச, சென்னை.

குமரன் (Kumaran) said...

http://marudhai.blogspot.com/

அப்படியே குழுப்பதிவுக்குச் சுட்டியும் குடுத்திருக்கலாமே தருமி ஐயா?!! :-)

G.Ragavan said...

இப்ப பாராட்டனுமா? கிண்டல் பண்ணனுமா? :)

தருமி said...

ஜிரா,
//இப்ப பாராட்டனுமா? கிண்டல் பண்ணனுமா? :) //
எதுக்கும் ரா.க.ச.வின் கொ.ப.ச.விடம் கேட்டுக்கங்க :)

தருமி said...

ராம்,
//முற்பகல் செய்யின்.... //
என்ன சொல்றீங்க? புரியலையே!


முற்பகல்ல செயின் அப்டின்னா பிற்பகல்லயும் செயினா தான் இருக்கும், கயிறாவா மாறிப்போகும்?

வரவனையான் said...

//
முற்பகல்ல செயின் அப்டின்னா பிற்பகல்லயும் செயினா தான் இருக்கும், கயிறாவா மாறிப்போகும்?//


enna kodumai sir ithu

:)))))))))))))))))

Unknown said...

வரவனை,

ஹி .. ஹி..
மன்னிச்சுக்கங்க ..

Suvek said...

maudurai kaaa anny kelaam edam unda vaathiyare

தருமி said...

//maudurai kaaa anny kelaam edam unda //

illai

உண்மைத்தமிழன் said...

//முற்பகல்ல செயின் அப்டின்னா பிற்பகல்லயும் செயினா தான் இருக்கும், கயிறாவா மாறிப்போகும்?//

வயசுக்கேத்தாப்புல பேசு நைனா.. இதெல்லாம் மதுரைக்கு ஆவாது சொல்லிட்டேன்..

சாலிசம்பர் said...

தருமி அய்யா,
வரவனைக்கு முறைப்படி அழைப்பு அனுப்பி வச்சுருங்க.அவரெல்லாம் இல்லாமப்போனா மதுரைக்கே அடுக்காது.

Post a Comment