Thursday, November 20, 2008

279. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 3

விளையாட்டுத் துறையில் சில சில ஆச்சரியங்களும், சில கேள்விகளும்.

1986-டிசம்பரில்தான் வீட்டில் தொலைக்காட்சி பொட்டி வந்தது. அந்த ஆண்டு மே-ஜூனில் நடந்த அகில உலகக் கால்பந்து போட்டிதான் - FIFA - முதன் முதல் பார்த்த ஒரு பெரிய நிகழ்ச்சி. மூன்றாவது வீட்டில் இருந்த நண்பரும் ஒரு கால்பந்து விசிறி. அவருக்கு தனியாக உட்கார்ந்து பார்க்க வேண்டுமே என்ற கவலை. எனக்கோ வீட்டில் தொலைக் காட்சிப் பொட்டி இல்லையே என்று கவலை. இருவரும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அந்த வருடம் இரவு 11 மணிக்குப் போட்டிகள் ஆரம்பிக்கும். நான் பத்தரை மணிக்கெல்லாம் அங்கே ஆஜராகி விடுவேன். நான் வரத் தாமதமானால் நண்பருக்கு இருப்புக் கொள்ளாது வெளியே வந்து நின்று வரவேற்க நிற்பதுபோல் காத்திருப்பார்.

அடேயப்பா! உலகக்கோப்பை போட்டியை முதல் முறை பார்த்த அப்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது rewinding-தான். அதெப்படி ஒரு கோல் விழுந்ததும் எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலிருந்தும் உடனுக்குடனே காண்பிக்கிறார்கள் என்று ஆச்சரியமான ஆச்சரியம்! அதுவும் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அப்படியே ஒரு சுற்று சுற்றி திரைக்கு நடுவே புள்ளியாய் மறைய அதே வினாடி அப்புள்ளியிலிருந்து rewinding-ல் பழைய காட்சி திரும்பி வர ஆவென வாய்பிளந்து ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.


அப்படி வாய்பிளந்து ரசித்தது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் விளையாட்டு போட்டிகளில்தான் எத்தனை எத்தனை தொழில்நுட்பங்கள். அவை எல்லாம் எப்படித்தான் செய்கிறார்களோ என்ற ஆச்சரியம் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகிறது.


கால்பந்து போட்டிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். கிரிக்கெட்டில்தான் பயங்கர புள்ளிவிவரங்கள் அடுக்குவார்கள் என்று பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் கால்பந்து விளையாட்டில் வரும் புள்ளிவிவரங்கள் ஆச்சரியமானவைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு ஆட்டக்காரரும் எவ்வளவு தொலைவு ஓடியிருக்கிறார் என்ற கணக்கெடுத்து அந்த புள்ளிவிவரம் வருகிறது. அதோடு அவர்கள் ஒவ்வொருவரும் அந்த போட்டியில் (precentage of passes) எத்தனை விழுக்காடு பந்தை சரியான ஆளுக்கு அனுப்பியுள்ளார் என்ற புள்ளிவிவரமும் வருகிறது.

எல்லாம் எப்படி?


ஓட்டப் பந்தயத்தில்தான் எத்தனை எத்தனை நுணுக்கங்கள் ...


காத்தடிச்சா பறந்துருவான் போல இருக்கு என்று ஒல்லிப்பசங்களைப் பார்த்து சொல்வதுண்டு. 100 மீட்டர் பந்தயத்தில் காற்று எந்தப் பக்கம் எவ்வளவு விரைவாக வீசியது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. ஒரு பந்தயத்தில் காற்று வேகமாக அடித்ததால் 9.78 வினாடியில் ஓடியதை ரிகார்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வளவு துல்லியமாக கணக்குப் போடுகிறார்கள் அல்லவா, ஆனால் Formula 1 பந்தயத்தில் காலக் கணக்கை 3 டெசிமல் வரை துல்லியமாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அதே மாதிரி ஏன் 100 மீட்டர் பந்தயத்தில் சொல்வதில்லை - இரண்டு டெசிமல்களோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஏன்?

டென்னிஸ் விளையாட்டில் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் முதலில் வந்தது let balls- களுக்கு ஒரு சத்தம் வந்து காட்டிக் கொடுக்கும். அடுத்து ஒவ்வொரு service-ம் எவ்வளவு வேகத்தில் அடிக்கப்பட்டன என்று உடனுக்குடன் தெரிய ஆரம்பித்தது. இப்போது challenges .. umpire, line umpire-களின் தீர்ப்புக்கு எதிர்த்து விளையாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பும்போது பந்து விழுந்த இடத்தை உடனே படமாகக் காண்பிக்கிறார்கள். எப்படி ஒவ்வொரு பந்து விழுந்த இடம் உடனே graphics-ல் தெரிகிறது என்று ஆச்சரியம். அப்படியானால் lines முழுதும் sensor இருக்குமா?
என்னமோ போங்க ... மற்ற விளையாட்டு எப்படியோ .. போற போக்கைப் பார்த்தால் டென்னிஸுக்கு நடுவர்களே யாரும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்போதே கூட நடுவர் இல்லாமலே டென்னிஸ் போட்டிகளை நடத்திட முடியும் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது என்றே நினைக்கிறேன்.
அப்படி நடுவரில்லாமலேயே ஒரு பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும்?

ஆனால் ஒன்று எந்த விளையாட்டு எப்படியோ, கால்பந்து போட்டிகளில் வீரர்களோடு வீரர்களாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் இல்லாமல் போக முடியாது; போனாலும் நன்றாக இருக்கவே இருக்காது. இல்லீங்களா ...?




15 comments:

வால்பையன் said...

me the first

வால்பையன் said...

இது பழைய கள்ளு தானே!

கபீஷ் said...

வாலு! எங்கெங்கு காணினும் போதையா?

கபீஷ் said...

எனக்கு விளையாடறத பாக்கறதவிட, விளையாடறது தான் பிடிக்கும். அதனால என்கிட்ட வேற சின்ன சின்ன கேள்வியா கேளுங்க

தருமி said...

வால்ஸ்,
//இது பழைய கள்ளு தானே!//

இல்லையே! பழைய போத்தலில் புதிய கள்ளாச்சே!

என்ன சொல்றேன்னா இதே தலைப்பில் இது மூன்றாவது பதிவு.

தருமி said...

கபீஷ்,
சின்னக் கேள்விதான கேட்கணும். இந்தாங்க :ஒரு செண்டிமீட்டரில் எத்தனை மில்லி மீட்டர்?

ஆயில்யன் said...

//ஆனால் ஒன்று எந்த விளையாட்டு எப்படியோ, கால்பந்து போட்டிகளில் வீரர்களோடு வீரர்களாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் இல்லாமல் போக முடியாது; போனாலும் நன்றாக இருக்கவே இருக்காது. இல்லீங்களா ...?///


பரிசுக்காக அவுங்க ரெண்டு டீமும் ஓடிக்கிட்டிருக்காங்க நீர் ஏனய்யா ஓடுற? கம்முன்னு ஒரமா குந்திக்கினு டிவி பொட்டியில் பாக்கலாம்ல ? - இப்படித்தான் தோணுது! :)

ஏன் அப்படி செய்ய முடியாதா? வித விதமான கோணங்களில் டிவியிலயே வாட்ச் பண்ற நடுவராகவே இருக்கலாம்ல?

(அட நானும் கூட ரெண்டு கேள்வி கேட்டுப்புட்டேனே!)

இலவசக்கொத்தனார் said...

கேளுங்க கேளுங்க. இந்த மாதிரி சந்தேகம் வந்தா தயக்கப்படாம கேட்கணும். அப்போதான் அறிவு வளரும்.

(பதிலா?!! வேற யாராவது சொல்லுவாங்க!)

வல்லிசிம்ஹன் said...

நானே கேள்விதான் கேட்பேன். அதுவும் அந்தப் போட்டியில் தானெ மாரடோனா வெற்றி பெற்றார்?

நாம கால்பந்து பற்றித்தானே பேசுகிறோம்:)
எதுவோ நானும் மகனும் இரவு பூரா உட்கார்ந்து பார்த்த காட்சிகள் அவை.

SurveySan said...

third umpire can never become the 1st :)

துளசி கோபால் said...

டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச்!

தருமி said...

ஆயில்யன்,

கேள்வி கேளுங்க .. கேளுங்க .. கேட்டுக்கிட்டே இருங்க …

தருமி said...

கொத்ஸ்,
//கேளுங்க கேளுங்க. இந்த மாதிரி சந்தேகம் வந்தா தயக்கப்படாம கேட்கணும்.//


கொஞ்ச நாளைக்கு முந்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச விக்கிப் பசங்க ன்னு ஒரு க்ரூப் இருந்திச்சி. தெரியாததெல்லாம் கேட்பேன். நல்லா பதில் சொல்லுவாய்ங்க.. இப்போ என்னடான்னா, அட்ரெஸே காணோம். எங்கனவாவது பார்த்தீங்கன்னா பிடிச்சிக் கொடுங்க .. சரியா?

தருமி said...

வல்லியம்மா,
// அந்தப் போட்டியில் தானெ மாரடோனா வெற்றி பெற்றார்?// அதே. அநந்த hand of god கோல் கூட போட்டாரே. அந்தக் கடைசி பந்தயத்தில் தோற்ற ப்ரேசில் காரங்க அழுததைப் பார்த்தப்போ ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆமா, சிங்கம் கூட உட்காரலையா?

தருமி said...

துளசி ,
சர்வேசனுக்கு சொல்லுங்க … நாளை நடப்பதை யாரறிவார்?!

Post a Comment