Saturday, November 22, 2008

282. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 4

*

*
ஒரு சின்ன சந்தேகம். சந்தேகத்தைப் பார்த்து எனக்கு அமெரிக்கா மேல என்ன கடுப்பு என்று யாரும், அதிலும் நம் அமெரிக்கப் பதிவர்கள் கேட்க வேண்டாம்.

விஷயம் என்னன்னா, 9/11 நமக்கு எல்லாம் தெரியும். அமெரிக்காவிற்கு பேரிடி; பேரிழப்பு; பெருத்த அவமானம். எல்லாம் சரிதான். உலகத்துக்கே ஒரு பெரிய ஷாக் என்பதும் சரியே. இதற்குப் பின்னே இருந்த ஒசாமா இன்னும் உயிருடன்தான் இருக்கிறான். இன்னும் மிரட்டல்கள் எல்லாம் வந்துகொண்டுதான் உள்ளன. அதுவும் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவுக்கும் தொடர் மிரட்டல்கள் உள்ளன என்றும் சொல்லக் கேள்வி. ஆனாலும் 9//11-க்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் எந்தவித பெரிய அசம்பாவிதமும் அமெரிக்காவில் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ...

நமது நாட்டில் 'மாதம் மும்மாரி மழை பொழிகிறதா' என்று கேட்பது போல் ஏனிப்படி அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்? நமது அரசு, காவல்துறை, intelligence bureau, RAW எல்லாம் இன்னும் விழிப்போடு இருந்தால் இந்த குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியும் என்பதில்லையா? அந்த நாட்டுக்காரர்கள் எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் தற்காத்துக் கொண்டிருக்க, நமது அரசு, அரசியல் தலைவர்கள், மற்றைய அரசின் அங்கங்கள் முழு மனதோடு உழைத்தால் இந்த விபத்துக்களிலிருந்து நம்மை காக்க முடியாதா? ஒரு வேளை அந்த நாட்டு intelligence அமைப்புகள் மிகுந்த திறமைசாலிகளா? நம்ம ஆட்களுக்கு அந்தத் திறமையெல்லாம் கிடையாதா? ஒரு விபத்துக்குப் பின் விசாரணைகள் என்ன? கமிஷன்கள் என்ன? எல்லாம் நடக்குது; குண்டுவெடிப்புகளும் தொடருது! ஏனிப்படி?



அமெரிக்காவில ஒண்ணும் நடக்கலை. ஆனா அத கண்ணு வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.அப்படியே வைத்தாலும் .............என்று சொல்லணுமாம்! எதுக்கு வம்பு.
சொல்லிர்ரேன்: TOUCH WOOD !

*************************************

என்ன இது தினசரி செய்தித்தாள்களில் அடிக்கடி சோமாலியா பக்கத்தில் கப்பல் கடத்தல் அப்டின்னு செய்திகள் வருகின்றன. அதுவும் கடந்த 20ம் தேதியன்று மூன்று கால்பந்தாட்ட மைதானத்தின் அளவை ஒட்டிய அவ்வளவு பெரிய கப்பல் கடத்தல் அப்டின்னு செய்தி. கடத்துவது சோமாலியர்களாம்; அவர்கள் விசைப்படகுகளும், நவீன ஆயுதங்களும் வைத்திருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களில் நடந்த கொள்ளைக்குக் கொடுக்கப்பட்ட பணயப் பணம் என்று சொல்வது பெரிய அளவாக இருக்கிறது. இதில் கடைசியாக வந்த ஒரு தகவலில் நமது கடற்படையினர் ஒரு கடத்தலைத் தடுத்தது மட்டுமல்லாமல் கடத்தல்காரர்களின் படகையும் மூழ்கடித்ததாக அறிந்து பெருமையாக இருந்தது.

ஆனாலும் செய்திப் போக்குவரத்து, நவீன போர்க்கருவிகள் என்றெல்லாம் வந்த பிறகும் இந்த கடத்தல் தொழில் எப்படி சாத்தியமாகிறது? போர்க்கருவிகள் என்றால் துப்பாக்கி வகையறாக்களைச் சொல்லவில்லை. ராடார் போன்ற தளவாடங்கள் மற்றும் அதுபோன்ற நவீன தொழில் நுட்பங்கள் வந்த பிறகும் எப்படி ஒரு விசைப்படகில் வந்து பெரிய பெரிய கப்பல்களைக் 'கவுத்து' விடுகிறார்கள்?

இதை எழுதி மேலேற்றும் நேரத்தில் நேற்று (21.11.'08) இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு பக்கம் முழுமைக்கும் இரு நீள கட்டுரைகள் வாசித்தேன். இருந்தாலும் எழுதினது எழுதினதுதான்; மேலேற்றுவது மேலேற்றுவதுதான். உங்க தலைவிதி அப்படி இருந்தால் நானென்ன செய்ய முடியும். விதி வலியது; கொடியதும்கூட பல சமயங்களில்!


********************************



*

*

20 comments:

தருமி said...

ஒரு பி.க.

இன்னும் இப்பதிவை தமிழ்மணம் வரவு வைக்க மறுக்கிறது. அதற்காக இப்பின்னூட்ட கயமைத்தனம்.

வடுவூர் குமார் said...

தருமி ஐயா,அந்த கப்பல் கேள்விக்கு நம்ம கடல் கணேசன் தன் பதிவில் ஒரு பாதி விடை கொடுத்திருந்தார்,ஆதாவது கப்பல் இந்த மாதிரி கடத்தப்படும் போது அதில் உள்ளவர்கள் ஆயுத போராட்டம் செய்யக்கூடாது என்று.கப்பல் இன்சூரன்ஸ் செய்யப்படிருப்பதால் அதில் உள்ளவர்கள் உயிரிழப்புக்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியம் வரக்கூடாது என்பதாலாம்.ரேடார் விஷயம் பற்றி அவ்வளவு தெரியாது.

Sridhar V said...

pirates of the carribean sea, water world போன்ற படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

கப்பல் கொள்ளைக்காரர் பெரிய போர்க் கப்பலே வைத்திருப்பார்கள். அவர்களுக்கிடையே பெரிய அமைப்பே இருக்கிறது. செய்தி பரிமாற்றம், நீர்பரப்பை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுதல், தங்கள் வெற்றிகளை ஆவணபடுத்துதல் என்று methodical-ஆக இருக்கிறார்கள். இந்தியாவின் போர்க்கப்பல் வீழ்த்தியது Mother Ship என்று சொல்லப்படும் கப்பல் கொள்ளையரின் தாய் கப்பல் என்று நம்பப் படுகிறது.

எப்படி தப்பிக்கிறார்கள்? நிலப்பரப்பில் நாட்டின் எல்லைகள் தீர்மானமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சட்டங்களை தீவிரமாக அமலாக்க முடிகிறது. நீர்பரப்பில் அப்படியில்லையே. கொஞ்சம்தான் நாடுகளுக்கு சொந்தம். சர்வதேச நீர்பரப்பு எல்லாருக்கும் சொந்தம்தான். கடல் கொள்ளையருக்கும்தான்.

என்னதான் ரோந்து கப்பல்கள் சுற்றி வந்தாலும் முழு சமுத்திரபரப்பையும் கண்காணிப்பது இயலாத காரியம். மிகவும் செலவு வைக்கும் பணி.

சீனு said...

//ஆனாலும் 9//11-க்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் எந்தவித பெரிய அசம்பாவிதமும் அமெரிக்காவில் நடந்ததாகத் தெரியவில்லை.//

காரணம், அங்கெல்லாம் அரசியல் மக்களுக்காக. இங்க அரசியல் அரசியல்வாதிகளுக்காக...

நாகை சிவா said...

தருமி ஐயா வீட்டுக்கு ஒரு ஆட்டோ... இல்ல சின்ன கேள்வி னு சொல்லிட்டு ரொம்ப பெரிய கேள்வி எல்லாம் கேட்குறார்... அதுனால ஒரு சுமோவ அனுப்பங்கப்பா...

Anonymous said...

நானும் இந்த நிலைப்பற்றி தான் சிந்தித்தேன். காரணம் அதிக மக்கள்தொகையா! இல்லை அலட்சிய அரசா?? தெரியவில்லை..

தருமி said...

வடுவூராரே,
//ஆயுத போராட்டம் செய்யக்கூடாது //

ஓஹோ அப்படி ஒண்ணு இருக்கோ...

நன்றி தகவலுக்கு. அப்படியே கணேசன் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே.

தருமி said...

Sridhar Narayanan,
//water world// அம்மாடியோவ்.. சகிக்க முடியாத படமொன்று என்று வகைப் படுத்தி வைத்த படமிது. ஆனாலும் அந்தப் படத்துக்கும் இந்த கடத்தல் விவகாரங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ன?

மற்ற விவரங்களுக்கு நன்றி

தருமி said...

சீனு,
அரசியல்வாதிகளையே குறை சொல்லியும் பயனில்லை - அவர்களைப் பற்றித் தெரிந்தபின். இன்னும் ஏதோ நிச்சய்மாக வேறு விஷயம் இருக்கணும். we are missing it

தருமி said...

நாகை சிவா,
ப்ளீஸ் .. சுமோ வேணாம். போரடிச்சி போச்சி... i prefer black scorpio, please!!

தருமி said...

பதுமை,
மக்கள் தொகை ...ம்.. ம்.. அதுவா காரணமா இருக்கணும். தெரியலை..!

சீனு said...

அரசாங்கமும், அரசியலும் தான் ஆரம்பப் புள்ளி என்கிறேன்.

//அரசியல்வாதிகளையே குறை சொல்லியும் பயனில்லை - அவர்களைப் பற்றித் தெரிந்தபின். இன்னும் ஏதோ நிச்சய்மாக வேறு விஷயம் இருக்கணும். we are missing it//

அப்படின்னா, இப்படி இருக்கனும். இந்த எறும்புங்க கூட்டம் கூட்டமா போகும். அப்போ வழியில ஏதாவது அசம்பவிதம் நடந்து ஒன்னு ரெண்டு செத்திடுச்சுன்னா அதுக கண்டுக்காது (அல்லது அதுங்க கண்டுக்கிறது நமக்கு தெரியது). ஏன்னா அதுகள்ள ஜனத்தொகை அதிகம். அது போல, 100+ கோடில சிலது தானே அப்படீங்கிற மனப்பாண்மை கூட இருக்கலாம், இல்லையா?

குமரன் (Kumaran) said...

பதுமை சொன்ன காரணங்களை நானும் நினைப்பதுண்டு ஐயா. அது போக நம் நாட்டில் மொழி, மதம், சாதி என்று எத்தனை எத்தனை பிரிவினைகள்; எத்தனை எத்தனை ஏற்றத்தாழ்வுகள்; எத்தனை எத்தனை திசை திருப்பல்கள். புதிதாக ஒன்றைக் கிளப்பினால் பழசை மறந்துவிடும் மக்கள். அதற்காகவே புதிது புதிதாகக் கிளப்பும் குழப்பவாதிகள் (அரசியல்வாதிகள் அதில் ஒரு வகை மட்டுமே).

நிறைய சொல்லலாம். மக்கள் தொகை இவ்வளவு இருப்பதால் யார் எங்கே செத்தாலும் எந்த வகையிலோ நமக்குத் தொடர்பில்லையா? மறந்துவிட்டு வேலையைப் பார்! என்ற மனநிலை நமக்கு இருக்கிறது.

இங்கே அமெரிக்காவில் எவனோ ஒருவன் செத்தாலும் 'அமெரிக்கன் செத்தான்' என்ற உணர்வும் அதைத் தொடர்ந்து வரும் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அதற்கேற்ப அரசியல்வாதிகளும் கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர். இப்படி நிறைய காரணங்களை இங்கேயும் சொல்லலாம். இவர்களுக்கு 'தாங்களே உலகில் சிறந்தவர்கள்' என்ற எண்ணம் இருந்தாலும் இவர்கள் அளவிற்கு நாட்டுப் பற்று உள்ளவர்களைக் காண்பது அரிதோ என்று தோன்றும்.

வடுவூர் குமார் said...

ஐயா
அந்த சுட்டி இங்கே

கபீஷ் said...

பின்னூட்டத்தில் பதில் சொல்றா மாதிரியா சின்ன கேள்வி கேட்டுருக்கீங்க!
ஆளாளுக்கு ஒரு பதிவு போட்டு விளக்க வேண்டிய கேள்வி, முதல் கேள்வி

கபீஷ் said...

//அமெரிக்காவில ஒண்ணும் நடக்கலை. ஆனா அத கண்ணு வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.அப்படியே வைத்தாலும் .............என்று சொல்லணுமாம்! எதுக்கு வம்பு.
சொல்லிர்ரேன்: TOUCH WOOD !
//
you too ......?

தருமி said...

கபீஷ்,
//ஆளாளுக்கு ஒரு பதிவு போட்டு விளக்க வேண்டிய கேள்வி,..//

அப்ப ஆரம்பீங்க மொத ஆளா ..

//you too ......?//

நினச்சேன் மாட்டிக்குவேன்னு. :-(

தருமி said...

சீனு, வடுவூரார்
நன்றி

தருமி said...

குமரன்
எங்க ஊர்ல life is very cheap அப்டின்றீங்க .. அதான் நடைபாதையில் படுத்து தூங்குறவங்க பேர்ல கார் ஏற்றி மரணம் அப்டின்னு அடிக்கடி செய்தி வருது போலும்!

குமரன் (Kumaran) said...

அமெரிக்காவிலும் சிலருடைய உயிரின் விலை குறைவு தான். ஆனால் அந்த சிலர் வெகு சிலரே. பிரிவினையும் நிறம், இனம் என்ற வகையில் மட்டுமே. நம் ஊர் போல் ஆயிரக்கணக்கில் குறுக்கும் நெடுக்குமாக பிரிவுகள் இல்லை.

Post a Comment