Sunday, July 19, 2009

324. மதங்கள் எல்லாம் மனிதர்கள் படைத்ததுதானே ...

*
*

மீனாட்சி அம்மன் கோவில் - அதுக்கு எதிர்த்தாற் போல் இருப்பது மதுரையின் பழமையான கடைகளில் ஒன்றான துணிக் கடையின் பெயர் ஹாஜி மூஸா. அந்தக் கடையின் நுழை வாயிலில் கண்ணாடி போட்டு அழகு படுத்தியுள்ளார்கள். அந்தக் கண்ணாடி முகப்பில் தெரிவது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் நிழல். படத்தை எடுத்தது - Sam.

39 comments:

Thekkikattan|தெகா said...

தருமி உங்க ஆசை புரியுது... !மதங்கள் "கண்ணாடி பிரதிபலிப்பிலயாவது" இணகிறதே....

நீங்க மனசுக்குள்ளர ஆசைப்படுறதை இப்போ படம் பிடிச்சு காமிச்சிட்டீங்க :-).

ப்ரியமுடன் வசந்த் said...

நானும் நிறைய தடவ அந்த வீதியில் சென்றிருக்கிறேன் ஆனா இப்படி பாக்கலை தருமி ஐயா...

நல்ல கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்........

Unknown said...

மிகவும் அருமை!
ஹாஜி மூசா என்ற பெயர் பலகையைப் பார்த்ததும்.......பழைய நினைவுகள். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு...இந்த கடையும் ஒரு மலரும் நினைவுகள் தான்....தற்பொழுது நிறைய மாற்றங்கள் தெரிகிறதே!

கோவி.கண்ணன் said...

:)

மதங்கள் ஒன்றை ஒன்று பிரதிப(ழி)லிக்கின்றன !

//மதங்கள் எல்லாம் மனிதர்கள் படைத்ததுதானே ..."//

படைத்து, காத்து பின்பு (பிற மதத்தை) அழிக்கவும் செய்கின்றனர்

கார்த்திகைப் பாண்டியன் said...

சொல்ல வந்ததை பளிச்சுன்னு சொல்லி இருக்கீங்க.. அருமையா இருக்கு..மக்களுக்கு புரிஞ்சா சரி..

துளசி கோபால் said...

பட்டுக்குப் பேர் போனதாச்சே இந்த ஹாஜி மூசா.

படம் அருமை. கலர்ஃபுல்!!!

நாகை சிவா said...

:))

தருமி said...

தெக்ஸ்,
நடப்பில நடக்கிறதைப் பார்க்கும்போது இந்த மாதிரி ஒரு "காட்சி" வியப்பளிக்கிறது.

தருமி said...

பிரியமுடன், நன்றி .. பிரியமுடன் .. வசந்த்.

தருமி said...

நன்றி நளினி.

//பழைய நினைவுகள். //

அப்டின்னா எத்தனை வருஷம்?

தருமி said...

கோவி,
படைத்தல், காத்தல் என்றால் அடுத்து அழித்தல்தானே!

தருமி said...

கார்த்திகை,

ரொம்ப நன்றி.


நாகை சிவா,
:)) --- அப்டின்னா...?

தருமி said...

துளசி,
//பட்டுக்குப் பேர் போனதாச்சே // --- அதானே ..!

பீர் | Peer said...

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் - அது மாதிரியா?

அருமையான காட்சி.

பீர் | Peer said...

//கோவி.கண்ணன் said...

:)

மதங்கள் ஒன்றை ஒன்று பிரதிப(ழி)லிக்கின்றன !//

மதங்கள் ஒன்றை ஒன்று பழிப்பதில்லை. அறியா மக்களே அதைச்செய்கின்றனர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா இதை எடுக்கனும்ன்னு தோணி இருக்கே.. :)

வால்பையன் said...

சூப்பர் படம்!

வோட்டாண்டி said...

nallaike oru muslim padhivar..adhu eppadi muslim peru keela irukalaam?? nee kannadiku mela kadai pera ezhudhu appa dhaan gopurathukku mela namba peru varumnu andha kadaikaarankita poi soluvaar...

neengale ippadi madha kalavaram thoondi vida karanama irundhuteengale...

eppudi?

தருமி said...

பீர்,
முத்து லட்சுமி,
வால்ஸ்

----------அனைவருக்கும் நன்றி.

தருமி said...

என்ன வோட்ஸ்,
வரப் போற படம் ஒண்ணைப் பத்தி எழுதின பதிவைப் படிச்சிட்டீங்களோ?

செல்வநாயகி said...

:))

பதி said...

:)

அருமையான படம்... !!!!!

குமரன் (Kumaran) said...

படத்தைப் பார்த்தவுடனேயே புன்சிரிப்பு வந்தது. புரிந்ததால். விளக்கமே தேவையில்லை. :)

தருமி said...

செல்வநாயகி,

long time .. no see!!

தருமி said...

பதி,
குமரன்

--------நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சூப்பர், கடையெல்லாம் படம் எடுக்குறீங்க ,என்னதான் எடுக்க மாட்டேன்ங்குறீங்க.

தருமி said...

ஸ்ரீதர்,

கடைய எப்படி படம் எடுத்தாலும் அது என்னைத் திட்டாது ... !

ஜோ/Joe said...

கவிதை..கவிதை!

தருமி said...

என்ன ஜோ .. எப்பவாவது வந்துட்டு, இப்படித் திட்டிட்டுப் போனா என்ன பண்றது?

Unknown said...

அது ஆகி விட்டது 20 வருடங்கள்.இன்னும் ஒரு மாதத்தில் அங்கு வர இருக்கிறேன். மீண்டும் அந்த இடங்களைப் பார்த்து பழைய நினைவுகளை அசை போடணும். அபி அப்பா உங்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.உங்கள் பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி

தருமி said...

நளினி,

அபி அப்பாவுக்கு உங்கள் மேல் என்ன கோபம்!!??

வரவேண்டும் மதுரைக்கு.. சொல்லுங்கள்; முடிந்தால் சந்திப்போம்.

தருமி said...

நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......

Unknown said...

நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......//

Nalina vai Nalini aakki vitteerkaL. But no problem.
Thank you.I will be there at Madurai
from 23 rd Aug to 25 Aug. If you don't mind , May i ask you your contact no?
Again Thank you

தருமி said...

NALINI,
it is 99521 16112

Radhakrishnan said...

இந்துமதத்தை எவர் படைத்தார் என்று சொல்வதற்கு சரித்திரமே இல்லை என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வந்து இருக்கிறது. இந்துமதத் தத்துவங்கள் மறையும்போதெல்லாம் அதை எடுத்து நிறுத்தியவர்கள் என மதக் குருமார்கள் இருக்கிறார்கள்.

ஹாஜிமூஸா கடைக்குள் செல்பவர்கள் அனைவரும் பிற மதத்தினரைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அதே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்வதற்கு சில விதிவிலக்குகளும், தடைகளும் உண்டு.

இப்பொழுது ஹாஜிமூஸா கடைக்குள் செல்லும்போது அந்த கண்ணாடியில் தெரியும் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் சராசரி மனிதர்களை 'அட மனித நேயம்' என எண்ண வைக்கும். கடையில் வாங்கும்போது நாம் வேறு மதத்துக் கடையில் வாங்கவில்லை என 'தீவிர மதத்துக்காரர்களையும்' எண்ண வைக்கும். இது ஒரு வியாபார உக்திதான்.

வியாபாரம் என வரும்போது அங்கே மதமோ, கடவுளோ தடையாய் இருப்பதில்லை. மதங்களை மனிதர்கள் படைத்தார்களோ இல்லையோ 'மத வியாபாரம்' மனிதத்தைத் தொலைத்துவிட்டதுதான் கொடுமை.

பல கதைகள் சொல்லும் அழகிய படம். மிக்க நன்றி ஐயா.

தருமி said...

//'மத வியாபாரம்' மனிதத்தைத் தொலைத்துவிட்டதுதான் கொடுமை.//

ஆமாம்.

//இது ஒரு வியாபார உக்திதான். //

இல்லையென நினைக்கிறேன். இது வெறும் அழகியல் உக்தியாக வேண்டுமானால் இருக்கலாம். அம்மன் கோவில் தெரிகிறதே என்று யாரும் இங்கே பொருள் வாங்கவா போகிறார்கள்?!

கண்மணி/kanmani said...

இயற்கையான சில நிகழ்வுகள் மனிதனுக்கு பாடமாகிறது.மனிதர்கள்தான் படிப்பதில்லை.

Radhakrishnan said...

நீங்கள் சொல்வதும் உண்மைதான், ஆனால் இந்த விசயத்தின் மூலம் பலருக்கு ஹாஜிமூஸா தெரிந்திருக்க வாய்ப்பு உண்டுதான்.

நையாண்டி நைனா said...

நலமா ஐயா...
இங்கே நமக்கு தலைக்கு மேல கும்மி. அதனாலே வர முடியாமே போயிட்டு.

Post a Comment