Friday, February 05, 2010

372.ஆயிரத்தில் ஒருவன்

*

கதாநாயகன் கப்பலில் ஏற வரும் கட்டத்தில்தான் உள்ளே நுழைந்து படம் பார்க்க ஆரம்பித்தேன். உள்ளதே கதை கொஞ்சம் சிக்கலான கதை. ஆகவே நிறைய விஷயங்கள் புரியவில்லை.புரியாதவைகள்:
*

வெளியே தங்கப் பாத்திரங்களும் சிலைகளும் குவிந்து கிடக்க மக்கள் குகைகளில் சாப்பாட்டு்க்கு அல்லல்பட்டு ஏன் குவிந்து கிடக்கிறார்கள்?

*
கம்பியால் கட்டி வைத்த போதும் எப்படி ரீமாவின் பார்வையிலேயே சங்கிலிகள் அறுந்து நொறுங்குகின்றன.

*
குண்டு இல்லாத துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டடி பட்டு கதாநாயகனும், வாய் மூக்கு இவைகளிலிருந்து ரத்தம் வடிய, மூவரும் சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் .. எங்கே .. எப்படி .. ஏன்?

*
அந்த மக்கள் ஏனிப்படி கருப்பாக இருக்கிறார்கள்?

*
அவர்கள் எல்லோரும் என்ன cannibalicஆட்களா?

*** இப்படிப் பல கேள்விகள். மறுபடி அட்லீஸ்ட் திருட்டு டிவிடியிலாவது ஆரம்பத்திலிருந்து பார்த்து படததைப் புரிந்து கொள்ள முயலணும். இல்லாவி்ட்டால்  மறுபடி கொட்டகை சென்று பார்க்கணும்.

ஆனாலும் சமீபத்தில் பார்த்த அவதாரில்  florescent முடியைப் போட்டுக்கிட்டு அவங்க எல்லோரும் ஆடுவாங்க. அதையெல்லாம் சத்தமில்லாமல் பார்த்து கைதட்டி விட்டு இங்கே தமிழ்ப்படத்திலும் அத்தகைய fantacies வந்தால் நிறைய பேர் தத்துவம் பேச ஆரம்பிச்சிர்ராங்க !!

மேற்சொன்ன குறைபாடுகள்  இருப்பினும் படம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பைக் கொடுத்தது. முதல் பாதியில் கப்பல் ஒன்றினை மேலிருந்து இரவில் எடுத்த காட்சி - சில வினாடிகளே வந்தாலும் -எவ்வளவு அழகு?aerial shot ஆக காடு மலைகளைக் காண்பிப்பதுவும், நீரலைகளை இவ்வளவு அழகாகக் காண்பிப்பதுவும் மிகவும் அழகாகவும், அதிசயமாகவும் இருந்தது. நம் முதுகை நாமே தட்டிக் கொள்ள ஆசை ...

ஒரு fantasy movie என்று பார்த்தால் மிக அழகான ஒரு படமாக இருக்கிறது.

படப்பிடிப்பு,
இசை,
ரீமா ... என்று வரிசைப்படுத்த நிறைய உண்டு.


//நம்ம தமிழ்ப்படங்கள் ஏனிப்படி இருக்கின்றன என்ற அங்கலாய்ப்பு நிறைய பேருக்கு இருக்கோ என்னவொ, எனக்குண்டு. நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள்.// --- இப்படி என் பழைய பதிவொன்றில் எழுதினேன்.
நிச்சயமாக இப்படம் முதல் வகையைச் சேர்ந்த படம். குறைகள் உண்டு; ஆனால் மிக நல்ல முயற்சி.


*

14 comments:

Prabhu said...

நீங்களாவது இப்படி சொன்னீங்களே! அமெரிக்கன் காலேஜ் கய்ஸ் திங்க் அலைக் :)

தருமி said...

பப்பு
அட போப்பா! உன் பெயரை பயிலரங்கத்தில் எல்லாம் சொன்னோம்; உன்னைத்தான் ஆளே காணோம்
:(

Samuel | சாமுவேல் said...

//ஆனாலும் சமீபத்தில் பார்த்த அவதாரில் florescent முடியைப் போட்டுக்கிட்டு அவங்க எல்லோரும் ஆடுவாங்க. அதையெல்லாம் சத்தமில்லாமல் பார்த்து கைதட்டி விட்டு இங்கே தமிழ்ப்படத்திலும் அத்தகைய fantacies வந்தால் நிறைய பேர் தத்துவம் பேச ஆரம்பிச்சிர்ராங்க !!//

அதுல கூடு விட்டு கூடு வேற உயிர்லாம் பாயும்...(ஒரு வேல கமேரூன் ... தமிழ் படத்தை பார்த்து கோப்பி அடிசிட்டாரோ )

இந்த மாதிரி தான் சார் ...வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்'....இந்த மாதிரி ஒரு பத்து படம் சொல்றாய்ங்க....

எனக்கு மிகவும் பிடித்த படம், ரெண்டாம் பத்தியில் ஒரு சில பகுதியை தவிர, அதையும் இப்ப கம்மி பண்ணிட்டாங்க போல இருக்கு.

ஜோ/Joe said...

வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)

Prabhu said...

அய்யோ, அப்போதுநேர்முகத் தேர்வு விஷயமாக பெங்களூர் போயிருந்தேன் சாரே.... இப்ப பொன்னியின் செல்வன் பதிவில் தான் அதைப் பற்றி பார்த்தேன். என்னைப் பற்றியா? என்ன? அடடா, மிஸ் ஆகிவிட்டதே..

பயிலரங்கத்தில் நம் கல்லூரி மாண்வர்கள் வந்திருந்தார்களா? மாணவிகள்? ஹி.. ஹி... டீடெய்ல்ஸ் ப்ளீஸ்!

உண்மைத்தமிழன் said...

இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்களா ஐயா..?

[[[படப்பிடிப்பு,
இசை,
ரீமா ... என்று வரிசைப்படுத்த நிறைய உண்டு.]]]

வயசுக்கேத்தாப்புல பேசுங்க பெரிசு..!

தென்றல் said...

ப்ப்பா.. 'நம்ம லெவலுக்கு' புரியும்படியா விமர்சனம் எழுதின ரெண்டு மூணு பேருல நீங்களும் ஒருத்தர்..

PS: டெம்ளேட் நல்லா இருக்கே.

தருமி said...

//இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமா..? தேவைங்களா ஐயா..?//
ஆமாங்க உ.த. கட்டாயம் பார்க்கணும்.

ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே.. நம்ப "பெரீஈஈஈஈஈஈஈய" இயக்குனர் ஷங்கர் படத்தில் ஈஈஈஈன்னு இளிக்குமே CG.. அதுமாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் நல்லா இருந்த CG-க்காக, cinematography இவைகளுக்காக மறுபடி ஒருதடவை பார்க்கணும் ..

தருமி said...

ஆனாலும் சாமுவேல் .. //வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்'.// இது டூ மச்!

இப்ப எதுக்கு அந்தமாதிரி தலைகளின் படங்கள் பற்றிய பேச்சு??

தருமி said...

ஜோ,
//வாத்தியாரே,
நம்ம கருத்துவும் இதுவே:)//

நம்ம ஒரு தடவையாவது 'பேசி வச்சிக்கிட்டு' வேற வேற மாதிரி கருத்து யோசிக்கணும். (கண்ணு பட்டுறும்!)

தருமி said...

தென்றல்,
.//PS: டெம்ளேட் நல்லா இருக்கே.//]
]
செஞ்சு கொடுத்தவங்களுக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

///தருமி

//நம்ப "பெரீஈஈஈஈஈஈஈய" இயக்குனர் ஷங்கர் படத்தில் ஈஈஈஈன்னு இளிக்குமே CG.. அது மாதிரி இல்லாமல் இந்தப் படத்தில் நல்லா இருந்த CG-க்காக, cinematography இவைகளுக்காக மறுபடி ஒரு தடவை பார்க்கணும் .///

இந்தப் படத்தோட சி.ஜி. நல்லாயிருந்ததா..? மை காட்.. ஐயா.. நீங்க நிறைய சினிமா பார்க்காதவர்னு நல்லாத் தெரியுது.

Samuel | சாமுவேல் said...

//வில்லு காட்சி வந்தா 'ஆஹ இது அந்த ஆங்கில படம்' , மைதானத்துல சண்டை போட்ட 'இதுவும் ஒரு ஆங்கில படம்//
//இப்ப எதுக்கு அந்தமாதிரி தலைகளின் படங்கள் பற்றிய பேச்சு??//

வழக்கம் போல புரியாத மாதிரி எழுதிட்டேன், மற்ற தலைகள் படத்தை பத்தி சொல்லலைங்க...
ஆ.ஒ ..படத்தில் வில்லு (அம்பு) பாய்ஞ்சு வரும் பாருங்க..அது 300 என்ற படத்தில் இருந்து சுட்டதாக படித்தேன்...அதே மாதிரி 'மைதான சண்டையும்' ஆ.ஒ படத்தில் வருவதை தான் சொன்னேன்...
அது சரி ...'தலைகளின் படமா' அது இன்னாதுங்க ?

தருமி said...

//மை காட்.. முருகா இல்லியா?! ஐயா.. நீங்க நிறைய சினிமா பார்க்காதவர்னு நல்லாத் தெரியுது.//

ஆமாங்க .. ஆமா .. நானென்ன உண்மைத் தமிழனா .. நான் ஒரு சாதாரணத் தமிழன்தானே

Post a Comment