*
பழந்தின்னு கொட்டை போடுற வயசில இருக்கிற ஆளப்பார்த்து உன் பதின்ம வயசப்பத்தி சொல்லுன்னு கேக்கிறதுக்கு; ஒரு தைரியம் வேணும். உள்ளதே வயசானதுக அனேகமா அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்குங்க. ஆனா அதுகள போய் இன்னும் உன் பழச எடுத்து உடுன்னு கேட்டா ஒரே குழப்பாமா போய்டுது .. எதச் சொல்றது .. எத உட்டுர்ரது அப்டின்னு ஒரு கலாட்டா; குழப்பம். இந்த கலாட்டாவில் / குழப்பத்தில் இன்னைக்கி எழுதிட வேண்டியதுதான் நினச்சாலும் எப்படியோ இழுத்துக்கிட்டே போகுது.
தெக்ஸ் கேட்டு ஒரு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன்; இன்னைக்கி நாளைக்கின்னு இதுவரை தள்ளிப் போட்டாச்சு. ஆனா இன்னைக்கி (மார்ச் 12) களத்தில இறங்கியாச்சி .. ஆனா எப்போ முடியும்னுதான் தெரியலை!
பதிவர் proposes ..பதிவு disposes!!
ஏதாவது நல்லது ஒண்ணு ரெண்டை எடுத்து உடலாம்னு நினைச்சி ரீவைண்ட் பண்ணினால் நல்லது ஒண்ணுமே கண்ணுல காணோம். எதிலயும் முன்னால் நிக்கலை. நல்லது ஏதும் செஞ்சதாக நினைவில்லை. வீட்டுக்கு அடங்குன பிள்ளையாய், உலகம் அதிகம் தெரியாது, தேடிச்சோறு நிதந்தின்று ...