Saturday, September 04, 2010

431. ஜெய மோகனும், ஞாநியும் ...

*

ஐந்தாம் புத்தகக் கண்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்திற்கும் எங்கள் கல்லூரிக்கும் நடுவிலே ஒரே ஒரு ரோடு. நல்ல வசதியாகப் போய்விட்டது. கண்காட்சிக்கு வரும் படைப்புலகத்தாரை எங்கள் கல்லூரிக்குப் பேச அழைப்பது எளிதாகிவிடுகிறது. இரு தினங்களுக்கு முன் - வியாழனன்று ஜெய மோகன், வெள்ளியன்று ஞாநி ... இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஜெயமோகன்:

காட்சிப் பிழை என்ற புதிய திரைப்படம் தொடர்பான திரு. சுப குணராஜன பதிப்பிக்கும் இந்த நூலை அறிமுகப்படுத்தும் விழாவிற்கு கல்லூரியின் குளு குளு அறையில் கூட்டம்.  பேரா. பிரபாகர் வரவேற்புரைக்குப் பின் பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் முதல் பதிவின் கட்டுரைகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையை அளித்தார்.குணம், குற்றம் எல்லாம் பகிரப்பட்டன. முனைவர் ராஜன் குறை திரைப்படங்களைப் பற்றிய தன் ஆய்வுபற்றி கூறினார். ஜெயமோகன் தன் திரைப்பட அனுபவங்களை வைத்தே தன் கருத்துக்களைக் கூறினார்; அதனால்தானோ என்னவோ அவை ஒரு பக்க வாதமாக எனக்குத் தோன்றியது.

இரவு பனிரெண்டு மணிக்குக் கூட சர்வாலங்காரத்தோடும், பள பளக்கும் பட்டு சேலையுடனும் ஒரு கூடைப்பூவைத் தலையில் வைத்துக்கொண்டிருக்கும் பண்க்கார நாயகிகளைக் காண்பிப்பதும் படம் பார்க்க வருபவனின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யவே என்று சொன்னது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது. 30 பைசா செலவில் எண்பதுகளில் அவன் புக முடியாத பணக்கார வீடுகளை சினிமா அவனுக்குக் காட்சிப்படுத்தியது என்றார். அது ஏன் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு மட்டும் அப்படி ஒரு அபிலாஷை! பார்வையாளனின் எதிர்பார்ப்பில்தான் படம் எடுக்கப்படுகிறது என்றார். அதைவிடவும் மிக முக்கியமான செய்தி: இந்தியாவிலேயே 200 கோடி முதலீட்டில் எடுக்கப்படும் ஒரு படத்திலும்,
உலகத்தரத்தில் எடுக்கப்படும் மாற்றுப்படமொன்றிலும் தான் இப்போது ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். அது எப்படி .. நம்ம சூப்பர் இஸ்டார் இல்லாமல் 200 கோடியில் ஒரு படம் என்ற வியப்பு எனக்கு!

பேரா.முனைவர் சுந்தர் காளி ஏற்புரை அளித்தார்.ஞாநி:

வெள்ளி மாலை ஒரு மரத்தடியில் வழக்கமாகத் தாங்கள் கூடுவது போல் சங்கம் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. மரத்தடியில் வட்டமாக பாய் விரித்து மாலை நேர வெயிலின் தாக்கம் இன்னும் இருந்த அந்த மாலை வேளைக் கூட்டத்தை பேரா. ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுகத்தின் பின் ஞாநியின் கூட்டம் ஆரம்பித்தது.கொடுக்கப்பட்ட தலைப்பு:   கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகமும்.

வட்டம் /சைபர் என்ற உருவ அமைப்பிலிருந்து ஆரம்பித்து, மீடியாக்களின் தோற்றம், வரலாறு, கட்டமைப்பு, அக்கட்டமைப்பால் வரும் இறுக்கம் பற்றிக் கூறினார். சொல்லிவரும் கருத்துக்களுக்கு வரும் எதிர்வினைகளால் மக்கள் ஒரு வித பயத்தில் இருப்பதாகவும், ஆனாலும் நேர்முகமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மக்கள் தங்கள் சமூக ஆர்வத்தை வெளிக்கொணர்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணமாக தெகல்கா பத்திரிகை ஆரம்பமான முறை பற்றிக் கூறினார். ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வைத்து இன்று 5 கோடி சேர்த்து அப்பத்திரிகை இப்போது ஒரு strong base  வைத்திருப்பதாகக் கூறினார். இது  நல்லது நடந்து விடாதா என்ற மக்களின் ஏக்கத்தின் வெளிப்பாடே என்று கூறினார்.

திறந்த வெளிக் கூட்டம் என்பதால் மாணவர்களின் பங்களிப்பு நன்கிருந்தது. சமூக வன்முறைகளுக்கு எதிர் வன்முறையல்ல கல்வியே என்ற ஞாநியின் கூற்று நன்கு சென்றடைந்தது என்றே நினைக்கிறேன்.

எதுவும் பேசலாம் என்ற கூறியும் ஞாநி கொஞ்சம் 'அடக்கியே' பேசினார் என்றே நான் நினைக்கிறேன். அவரது வெளிப்படையான எழுத்து போலன்றி சிறிது 'காரம்'  குறைத்தே பேசினார். கல்லூரி என்பதால் வந்த தயக்கமோ என்னவோ ....


=============

கூட்டம் முடிந்தது பல மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சிக்குச் சென்றோம். அங்கே கா.பா.வையும் ஸ்ரீயையும் பார்த்தேன். ஞாநியின் கடை முன் நின்று சிறிது பேசிக்கொண்டிருந்தோம். வரும் வியாழனன்று மாலை 6 மணியளவில் மதுரைப் பதிவர்களைச் சந்திக்கலாமே என்று ஞாநி கூறினார். சந்திக்க வேண்டும்.9 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing

மதுரை சரவணன் said...

thanks for sharing.

ashok said...

Sir, landed on ur blog by chance...very interesting to read...will keep visiting.

பீர் | Peer said...

எந்த வியாழன்? எங்களுக்கு அனுமதி உண்டா?

Thekkikattan|தெகா said...

ஹ்ம்ம்ம்... செய்யுங்க, செய்யுங்க.

தமிழ்ப் பையன் said...

அன்பார்ந்த வலைபதிவரே,

தங்களின் தளம் தமிழி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. உமது பதிவுகள் அனைத்தும் நேரடியாகவே தமிழியில் ஊட்டப்படும். தமிழ் வலைபதிவுகளை திரட்டி தமிழ் வாசகர்களுக்கு தரும் ஒரு ஆரம்ப முயற்சி. எமது தளம் இன்னும் ஆல்பா நிலையிலே இருக்கின்றது. தமது தளத்தின் பதிவுகள் தமிழியில் இடம்பெறுவதை விரும்பாவிடின் எமக்கு அறியத்தரவும். மேலும் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு எம்மை அணுகவும்....

நன்றிகள்,

தமிழி மக்கள் தொடர்பு அலகு

தருமி said...

// பீர் | Peer said...
எந்த வியாழன்? எங்களுக்கு அனுமதி உண்டா?//

வரும் 9 தேதிதான்.
அனுமதியா .. நல்ல ஜோக்.. வந்து சேருங்க பீர்!

தருமி said...

ராம்ஜி
சரவணன்
அஷோக்
தெக்ஸ்
...........நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அண்ணே தருமி

சந்திச்சிடுவோம்- 9 வியாழன் தானே

அப்புறம் ........

நட்புடன் சீனா

Post a Comment