Monday, September 06, 2010

433. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்

*
இதன் முந்திய பதிவு இங்கே ...

*

2010ஏப்ரல் மாதம் கூட தேர்தல் கமிசன் தலைவர் தொழில் நுட்ப மேம்பாடு தேவை இல்லை. எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று சாதிக்கிறார். விவாதிக்கத் தயாரில்லாத மன நிலையில் தான் அவருடைய பேச்சு உள்ளது. .
மூன்று கட்டங்களில் யந்திரத்தில் வாக்குகளையும் தேர்தல் முடிவுகளையும் மாற்றி அமைக்க முடியும். ஒன்று தயாரிப்பின் போது மென்பொருள் மொழியிலேயே ஒரு தர்க்க கணக்கை மாற்றி எழுதி விட முடியும். இரண்டு போலியான மென் மற்றும் பரு உதிரிப் பாகங்களை நுழைத்துவிடுவது. மூன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன் ரேடியோ மற்றும் மொபைல் போன்களின் சமிஞ்ஞைகளை கொண்டு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பது. அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசை என் கொண்ட சின்னத்துக்கு ஒரு வாக்கு விழுந்தால் நான்கு வாக்குகள் விழுந்ததாக மாற்றி எழுதி விடுவது. இது கண்டறிய முடியாத உள்ளடி வேலை. இந்த உள்ளடி வேலைகள் பற்றி யந்திரங்களை பரிசோதிக்கும் குழுக்களுக்கே தெரியாமல் கூட செய்து விடலாம்.


தேர்தல் கமிசன் பயன் படுத்தியுள்ள 1,378,352 யந்திரங்களில் 930,352 இரண்டாம் தலை முறை யந்திரங்களை பயன் படுத்தியுள்ளது. இது பாதுகாப்பு குறைபாட்டின் முக்கிய அம்சம். ஏனென்றால் 2003 தொழில் நுட்பம் இன்று செல்லுபடியாகாது. இதை விட கொடுமை முதல் தலைமுறை, அதாவது , 1989 வாக்கில் தயாரிக்கப்பட்ட முதல் தலை முறை யந்திரங்கள் மாநில தேர்தல்களிலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அவற்றில் பாதுகாப்பு என்பதற்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. இந்த லட்சணத்தில் இதனுடைய தயாரிப்பு ஒப்பந்தத்தின் விலை ஒரு இயந்திரத்திற்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இது பல மேலை நாட்டு நவீன யந்திரங்களை விட அதிக விலை. இப்படிச் செய்யப்படும் யந்திரங்களை இரண்டு தேர்தல்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது. அதாவது அதே தொழில் நுட்பம்,ஆனால் யந்திர உற்பத்தி பெருகியபடியே இருக்கும். ஊழல் தனிக் கதை.


மின்னணு வாக்கு எந்திரத்தை பொறுத்த அளவில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று மையப் பிரிவு. தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் பயன்படுத்துவது. இந்த மையப் பிரிவில் எல்லா வாக்குகளையும் சேகரித்து பாதுகாத்து வைக்கும் பிரிவு. அடுத்தாக வாக்களிக்கும் பிரிவு. வாக்களர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் பிரிவும் உள்ளது.


ஒரு வாக்கு யந்திரம் என்பது பதினாறு வேட்பாளர்களை கொண்டதாக உள்ளது. மேலும் பதினாறு பதினாறாக அறுபத்திநான்கு வேட்பாளர்கள் வரை நான்கு யந்திரங்களை ஒரு மைய பிரிவுக்கு தொடர்பு கொடுக்க முடியும். அறுபத்தி நாலுக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கண்டிப்பாக மின்னணு வாக்கு யந்திரத்தை பயன் படுத்த முடியாது. மையப் பிரிவை ஒரு பிளாஸ்டிக் சீலை திறந்து விட்டு வாக்குப் பதிவை தொடங்கும். பின்பு, வாக்குப் பதிவு முடிந்தவுடன் மையப் பிரிவில் CLOSE பொத்தனை அழுத்தி தேர்தல் முடிந்ததாக அறிவிப்பார். பின்பு இந்த மையப் பிரிவு மட்டும் வாக்கு எண்ணிக்கையின் போது வழங்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மையப் பிரிவின் திரையில் ஒவ்வொரு வேட்பாளரும் வாங்கிய வாக்குகளைக் காட்டும். பின்பு தேர்தல் பணியாளர்கள் அவர்கள் கைப்பட கூட்டல் செய்து முடிவை அறிவிப்பார்கள்.அடுத்ததாக, ஒரு தொகுதியில் ஒரு யந்திரத்தினை கைப்பற்றி விட்டாலே ( நமது அரசாங்க ஊழியர்களில் அல்லது காவல் துறையில், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒருவர் கூட கருப்பு ஆடு இல்லை என்று நம்பினால் இப்படி நடக்காது என்று கொள்ளலாம்). வாக்குகள் பதிவாகி எண்ணிக்கைக்கு காத்திருக்கும் ஒரு யந்திரத்தை கையில் எடுத்துச் செல்லகூடிய ஒரே ஒரு மின் உதிரி பாகத்தின் உதவியுடன் மாற்றி அமைக்க முடியும். இது தேர்தல் அதிகாரிக்குக் கூட தெரிய வாய்ப்பில்லாத திருட்டு. கிட்டத்தட்ட 14 லட்சம் வாக்கு யந்திரங்களில் ஒன்றை கைப்பற்றி விட்டாலே போதுமானது, மற்றவற்றின் வடிவத்தை அறிந்து விட முடியும். ஆனால் தேர்தல் கமிசனே கிட்டத்தட்ட முன்னூறு வாக்கு எந்திரங்களை பறி கொடுத்துள்ளது. இந்த குறிப்பிட்ட நெட் இந்தியா நிறுவனமும் ஒரு வாக்கு எந்திரத்தை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவரிடமிருந்து பெற்றுள்ளது.


முழு மாவட்டத்தின் வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரங்களில் மாற்ற முடியும் . ஏனென்றால், ஒரு களவாடப் பட்ட வாக்கு யந்திரம் மாற்று சங்கேத மொழியில் எழுதப்பட்டு நுழைக்கப்பட்டால் கூட ஒரு வாக்குப் பெற்ற ஒருவருக்கு நான்கு வாக்குகள் விழுந்ததாக எழுதி முடிவில் மாற்றம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல், மறு வாக்கு எண்ணிக்கை செய்ய இயலாத அளவில் தான் இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வாக்குச் சாவடி கைப்பற்றபட்டால் ஒரு வாக்குச் சாவடி வாக்குகளை மட்டுமே மாற்றி அமைக்க முடியும். ஆனால் மின்னணு வாக்கு யந்திரத்தில் மைய செயலி இருப்பதால் தொகுதியின் அனைத்து வாக்குகளையும் மாற்றி அமைக்க முடியும்.


1. ஒரு போலியான முடிவு காட்டும் திரையை மைய பிரிவின் உள்ளே பொருத்திவிட்டால் யாருக்கும் சந்தேகம் வராது. அப்படிச் செய்தால் மொத்த வாக்குகளையும் மாற்றி அமைக்க முடியும். இதை வடிவமைக்க ஒரு வாரம் போதுமானது. ஒரே யந்திரத்தில் நுழைத்து விட்டால் அப்புறம் புளு டூத் மற்றும் ரேடியோ சிக்னல்களை கொண்டு எல்லா யந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவையும் மாற்ற முடியும். அப்படி சமிக்ஞைகளை அனுப்பிவிட்டால் எந்த வேட்பாளர் எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று ஆருடம் கூட சொல்லிப் பிழைக்கலாம். ( என்ன ஏதாவது தலைவர்களின் கணக்குகள் மனதில் வந்து போகிறதா?)2. அதே போல இன்னொரு பருப்பொருள் தாக்குதலையும் செய்யலாம். பதிவைச் சேமிக்கும் சிப்புகளில் ஒரு மாற்றத்தை செய்ய முடியும். சட்டைப் பைக்குள் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். இது இரண்டு வேலைகளைச் செய்யும். ஒன்று வாக்குகளை திருட முடியும், மற்றொன்று, யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற ரகசியத்தை கண்டு பிடித்துவிட முடியும். அதையெல்லாம் முறியடித்து நீங்கள் வேண்டிய வேட்பாளருக்கு பதிவான வாக்குகளின் விகிதாச்சாரத்தை பொறுத்து வாக்களித்துக் கொள்ள முடியும்.3. Renesas, என்ற ஜப்பானிய கம்பெனி தான் இதன் மூலச் சங்கேத மொழியை எழுதிக் கொடுக்கின்றது.ஒரு மின்னணு பொறியாளர் இதன் சங்கேத மொழியின் மற்றும் வரைபடத்தின் பிரதியை எடுத்து வெளியே யாருக்கும் விற்றாலும் தெரியாது. இதை கண்டு பிடிக்க பின்னோக்கி போக வேண்டும். யந்திரங்களை சேமித்து வைக்கும் இடத்தில் கூட நுழைந்து மாற்று சங்கேத மொழியை நுழைத்துவிட முடியும்4. இதே மாதிரி மின் சுற்று பலகை , வாக்கு பதிவு யந்திரப் பிரிவு போன்றவற்றை அப்படியே அச்சுப் போல செய்து நுழைத்து விட முடியும்.5. ஒரு முறை சங்கேத மொழியை எழுதிவிட்டால் அதை மாற்றி எழுத முடியாத வண்ணத்தில் உள்ளதாக தேர்தல் கமிசன் சொல்கிறது. ஆனால் தயாரிப்பாளர்களான ECIL மற்றும் BEL ஆகியவற்றின் அதிகாரிகள் சரி பார்க்கக் கூட முடியாது. Auguste Kerckhoffs என்ற ராணுவ ரகசிய எழுத்தாளர் சொல்லுவது போல, It must not be required to be secret, and it must be able to fall into the hands of the enemy without inconvenience ". ஆனால் இவர்கள் சொல்லுவது போல அப்படி உடைக்க முடியாத ஒன்றும் இல்லை. Reverse இன்ஜினியரிங் மூலம் நுண்ணோக்கி மூலம் மென் பொருள் சங்கேத மொழியை படித்துவிட முடியும். நினைவில் கொள்க 2009 இல் காணாமல் போன யந்திரங்களின் எண்ணிக்கை 71 .6. வாக்குகளை கைப்பற்ற நினைப்பவர், வேட்பாளார் வரிசை கொடுக்கப் பட்ட பின்பு அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு, தான் சமிக்ஞைகள் மூலம் கைப்பற்றுவார். அது வரை அவர் கையில் இருப்பது யந்திரத்தின் வடிவம் மற்றும் சங்கேத மொழி மற்றும் அதற்கு தேவையாக அவர் தயாரித்து வைத்திருக்கும் கிளிப் ஆன் மற்றும் Secret Knocks போன்ற சமிக்ஞைகளுடன் விளையாடும் ஒரு மின்னணுக் கருவி மட்டுமே. இது ஒன்றும் சிரமமான தொழில் நுட்பமே அல்ல. இது பல கட்டங்களில் பயன் படுத்தப் பட்டு நடைமுறையில் உள்ளது தான்.ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த மாதிரியான மின்னணு வாக்கு யந்திர மோசடியால் நெதர்லாந்து முதலில் மின்னணு வாக்கு யந்திரத்தை தடை செய்தது. Nedap ES3B என்ற தொழில் நுட்பத்தின் சிக்கல்களை விளக்கமாக வெளியிட்டது நெதர்லாந்து அரசாங்கம். ஜெர்மனியின் உச்ச நீதி மன்றம் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று மின்னணு வாக்கு யந்திரத்தை தடை செய்தது. இதைத் தொடர்ந்து இத்தாலி பிரிட்டன் போன்ற நாடுகளும் தடை செய்தன. குறிப்பாக நெதர்லாந்தில் தடை செய்யக் காரணமாக இருந்தது தொழில் நுட்ப சித்து விளையாட்டுக்கள் தான். எப்படியெல்லாம் மின்னணு வாக்கு எந்திரத்தை களவாடி முடிவுகளை மற்ற முடியும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. " On May 16, 2008 the Dutch government decided that elections in the Netherlands will be held using paper ballots and red pencil only. A proposal to develop a new generation of voting computers was rejected." இது தான் அந்தக் கோர்ட்டின் தீர்ப்பு. ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே போய் நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டு மின்னணு வாக்கு யந்திரத்தைத் தடை செய்தது. இவ்வளவு தீர்க்கமாக தீர்ப்பளித்ததன் காரணம் மிகவும் எளிமையானது. பாதுகாப்பற்ற மென்பொருள் தொழில் நுட்பக் குளறுபடிகள். ஆனால் இங்குள்ள இந்திரேசன் கமிட்டி ஐரோப்ப தொழில் நுட்பத்தை விட நமது தொழில் நுட்பம் பாதுகாப்பானது என்கிறார்.


நீங்கள் தேர்தலுக்கு ஐநூறு கொடுத்து மக்களை பலவீனப் படுத்தினால் சீனா போன்ற நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்து மாவோயிஸ்ட்டுகளை பலப் படுத்தும். அப்பாவி மக்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இந்தியா குடியரசு நாடாக இருக்க வேண்டுமா இல்லையா என்று தரகர்கள் முடிவு செய்யக் கூடாது. நம்பிக்கையோடு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றங்களும், இந்த அமைப்புகளையும் அசைத்துப் பார்த்துள்ள இன்றைய புதிய பொருளாதாரத்தில் நாம் எல்லோரும் தோற்றவர்களாகிவிடுவோம். "இப்போதைக்கு, பாப்பாத்தியம்மா ! மாடு கட்டுத்தரைக்கு வந்திருச்சு! கட்டுனா கட்டு " என்று சொல்லி வைப்போம்.

=====================


இக்கட்டுரை போலவே சுப்ரமணியம் சாமி இந்துவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் தொடுப்பு:

http://www.hindu.com/2010/09/02/stories/2010090251281100.htm9 comments:

மதுரை சரவணன் said...

அற்புதமான கட்டுரை. உங்களிடம் இருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள்.

என்ன ஏதாவது தலைவர்களின் கணக்குகள் மனதில் வந்து போகிறதா?)வருது ஆனா வரல... இது அர்த்தம் உங்களுக்குதான் புரியும் ... உங்க்ளுக்கு வந்துச்சா... வரலையா... ஜனநாயகம் பண நாயகத்தில் சிப் மட்டும் அல்ல எல்லாம் விலைப் பேசப்படும்.

Elango said...

நமக்கு அரசியல் ஆர்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் மக்களின் வரிப் பணத்தை வேடிக்கை காட்டுவது உறுத்தலாக உள்ளது. மதுரைக்காரர்கள் உண்மையிலேயே கொஞ்சம் உசாராகத் தான் இருக்க வேண்டும். கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட்டால் இழந்த மதுரையின் நற்பெயரை மீட்டு விடலாம். கணக்குதான் இடிக்குது??

தருமி said...
This comment has been removed by the author.
மணிவண்ணன் said...

//மின்னணு வாக்கு யந்திரத்தில் மைய செயலி இருப்பதால் தொகுதியின் அனைத்து வாக்குகளையும் மாற்றி அமைக்க முடியும்//

"இந்த மாதிரி நடக்க வாய்ப்பிருப்பதாலேயே மின்னணு வாக்கு யந்திரத்த்தில் மைய செயலி வைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது" என்று சுஜாதா ஒரு முறை எழுதி இருந்தார்!

Elango said...

மணிவண்ணன்
மையச் செயலி மட்டுமல்ல, வடிவத்தை பார்த்து படித்தீர்களேயானால் பல உண்மைகள் அதிர்ச்சிகரமானவை. அதன் மையச் செயலி என்பது பொதுவான வடிவமாக இருப்பது தான் பிரச்சனை. இன்னும் சொல்லப் போனால் சுஜாதா போன்றோர்களை நாம் அதிகப் படியாகத் தெரிந்திருப்பது இதற்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. அவர் ECL இல் ஒரு அதிகாரி அவ்வளவே. அவருடைய endorsment இதில் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை? இது இலக்கிய வழிபாட்டின் தொடர்ச்சியாகவே எனக்கு படுகிறது. நம்முடைய மக்களின் பிரச்சனை என்பதை நாம் தீவிரமாகப் பேச வேண்டும்.

மணிவண்ணன் said...

//Elango said... சுஜாதா போன்றோர்களை நாம் அதிகப் படியாகத் தெரிந்திருப்பது இதற்கு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. அவர் ECL இல் ஒரு அதிகாரி அவ்வளவே. அவருடைய endorsment இதில் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை? இது இலக்கிய வழிபாட்டின் தொடர்ச்சியாகவே எனக்கு படுகிறது. //

எனக்குத் தெரிந்தவரை EVM வடிவமைத்த குழுவின் தலைவராக இருந்தவர் சுஜாதா. எனவே அவரின் கருத்து மிக முக்கியமானதாகும். மைய செயலி இல்லை என்று அவர் கூறியது பொய்யா? அல்லது இந்த வசதி பிற்பாடு சேர்க்கப்பட்டதா?

Elango said...

மணிவண்ணன்,
தவறாக நினைக்க வேண்டாம். 1985 இல் இருந்து ஆயத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் இந்த மாதிரியான தொழில் நுட்பத்தில் ஒரு அதிகாரியின் பங்கு எவ்வளவு இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? ECL ஒரு பொதுத் துறை நிறுவனம். தேர்தல் கமிசன் EVMகளை விலைக்கு வாங்குகிறது. சுஜாதா இங்கு அதைப் பற்றி கருத்துக்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். ஒய்வு பெற்ற பிறகும். உங்களுக்குத் தெரிந்து EVM களை எந்த ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்? அப்பொழுதெல்லாம் சுஜாதா சீன்லயே இல்லை. இந்தத் தகவல் பிழைகளைக் களையத் தான் நேரடியாக தேர்தல் கமிசனிடமே தகவல் பெற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. படங்களுடன் மையச் செயலி எப்படி செயல் படுகிறது என்பது கூட வெளியிடப்பட்டுள்ளது. (மன்னிக்கவும் இந்தப் பதிவில் அது இடம் பெற வில்லை.

Anonymous said...

உபயோகமான பதிவு
தலைவர் தருமி வாழ்க..

தருமி said...

//தலைவர் தருமி வாழ்க..//

இல்லை .. இல்லை
நண்பர் இளங்கோ வாழ்க

Post a Comment