Sunday, February 13, 2011

475. நந்தலாலா

*

நந்தலாலா படம் பார்த்தேன். இன்னும் ஒரிஜினல் பார்க்கவில்லை.

இதுவரை வந்த தமிழ்ப்படங்களில் இந்த genre வகைப்படங்கள் ஏதும் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. என்னதான் காப்பியடித்திருந்தாலும் ஒரு மிகப் புதுவகைப் படத்தைத் தந்தமைக்கு மிஷ்கினுக்கு மிக மிக நன்றி. நோ காதல், நோ டூயட், நோ காமெடி (பீர் பாட்டிலால் இரண்டாவது தடவை மண்டையில் போடுறதை விட என்ன காமெடி வேணும்?), எக்கச்சக்க செண்டி, இப்படியெல்லாம் இல்லாத ஒரு நல்ல தமிழ்ப்படம் முதல் தடவையாகப் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

என்னதான் காப்பியென்று பதிவர்கள் சொல்லியிருந்தாலும் இந்தப் படத்திற்குத் தரவேண்டிய “மரியாதையை” பதிவர்கள் தரத் தவறி விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. நிச்சயமாக பரத்தைப் பெண் தான் அழுக்கானவள் என்றதும் அவளை மழைக் குட்டையில் நிறுத்தி அவளுக்கு ஒரு ‘அக்கினிப் பிரவேசம்’ நடத்துகிறானே அதெல்லாம் ஒரிஜினலில் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பதிலுக்கு அவள் அவனது ட்ரவுசரும், மானமும் இடுப்பை விட்டுப் போகாமலிருக்க கச்சை கட்டுவதும் அதுபோலவே நன்குள்ளது.

இளநீர்க்காரத் தாத்தா, பைக்கில் வரும் இருவரோடு கதாநாய்கன் சேர்ந்து கொண்டு அடிக்க வந்த மூன்று பேரையும் பார்த்து ஆடும் ஆட்டம், நம்ம ரோடுதானா என்று ஆச்சரியப்பட வைக்கும் படப்பிடிப்பு, இசை .. எல்லாமே நன்றாக இருந்தன. ஒண்ணுக்கு ஒண்ணானது துணை .. நம் பூமியில் அனாதை யார்? என்ற பாடல் - யார் ஜேசுதாஸ் குரல்தானே? ஜேசுதாஸ் + இளைய ராஜா = இனிமைதான் .. வேறென்ன?

சாலையிலும் ஊரிலும் தேவையான கதாபாத்திரங்களைத் தவிர யாருமே கண்ணில் படவேயில்லையே என்பதுவும், கடைசிக் காட்சியில் கதாநாயகன் ரொம்ப ஸ்டைலாக கையசைப்பதுவும் தவிர வேறு குறை எனக்குத் தோன்றவில்லை.

ஏனிந்த படம் வெற்றி பெறவில்லை? நம் பதிவர்கள் இந்த படத்தின் தகுதிக்கேற்ப விமர்சித்திருந்தார்களா? இந்த மாதிரி படங்களைத்தானே எதிர்பார்க்கிறோம் (உலகப் பட தரம் அப்டின்னு ஒண்ணு இருக்கே.) ஆனால் ஏன் ஓடலை? ஒண்ணுமே புரியலை ...


8 comments:

rajasundararajan said...

'யுத்தம் செய்' படத்தை அடுத்த வருசம் முடியுறதுக்குள்ளயாவது பார்த்திடுவீங்களா?

காலதாமதமான பாராட்டுகளே காரணம்.

உண்மைத்தமிழன் said...

அதிகப்படியான மக்களின் ரசனையையும் தாண்டியது இப்படம்..! பி அண்ட் சி மக்களால் இத்திரைப்படத்தின் கதையையும், நேர்த்தியையும், தரத்தையும் உணர முடியவில்லை. அது அவர்களது தப்பில்லை. அவர்களுக்குத் தெரியாது. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

இத்திரைப்படத்தைப் பற்றிய உங்களது பாஸிட்டிவ் விமர்சனத்திற்கு எனது நன்றி..!

யுத்தம் செய் படத்தையும் அவசியம் பாருங்கள்..!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்படித்தான் சில படங்கள் ஹிட் ஆவது இல்லை.

suvanappiriyan said...

//நம் பதிவர்கள் இந்த படத்தின் தகுதிக்கேற்ப விமர்சித்திருந்தார்களா? இந்த மாதிரி படங்களைத்தானே எதிர்பார்க்கிறோம் (உலகப் பட தரம் அப்டின்னு ஒண்ணு இருக்கே.) ஆனால் ஏன் ஓடலை? ஒண்ணுமே புரியலை ...//

மலையாளிகளைப் போல் தமிழனுக்கும் தெளிவு ஏற்பட்டால் இது போன்ற படங்களெல்லாம் இங்கும் ஓடும்.

ரெண்டு குத்து டான்ஸ், ரெண்டு ஃபைட், இரட்டை அர்த்த வசனங்கள் சில இடங்களில் இந்த படத்திலும் இடம் பெற்றிருந்தால் நந்தலாலாவும் நூறு நாளை தாண்டியிருக்கும்.

Unknown said...

நீங்கள் சொல்வது சரியே! அருமையான படம்! என்ன செய்வது?

Anonymous said...

@சுவனப்பிரியன்: Agree with you

R. Gopi said...

சார்

பதிவர்கள் இந்தப் படத்தை இதன் தகுதிக்கு மேலே தூக்கி வைத்து விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பது என் கருத்து.

படம் ஓடாததற்கு முக்கியக் காரணம் கதைதான். தாயைப் பிரிந்து செல்லும் மகன் திரும்ப வந்து தாயோடு ஓட்டுவதுதான் நமக்குப் பழக்கப்பட்ட விஷயம். தாய் மகனை ஒதுக்கி வைத்திருப்பதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் உண்டு.

சமயமிருந்தால் என் பதிவைப் படியுங்கள். நன்றி.

http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_5101.html

Post a Comment