Friday, October 14, 2011

531. விளம்பரங்கள்

*

சமீபத்தில் பார்த்த பாட்டு & நடனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது -- விஜய் தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படம் தான் --

“காலு கிலோ கறுப்புப் புளி
மஞ்சத் தூளு’டா ...

பையனுடைய entry, பாடுகின்ற பாட்டு, ஆடுகிற ஆட்டம், படப்பிடிப்பு எல்லாமே  மிக அழகு.  அந்தப் படம் எடுத்தவங்களுக்கு hats off !

பய புள்ள டான்சும் ரொம்பவே நல்லா இருக்கு ... கட்டாயம் பாருங்க.





*

ST கைப்பேசி விளம்பரத்தில் வருகிற நால்வருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நால்வரில் யார் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்? வேலைக்கார அம்மா நன்கு பேசுகிறார். ஆனாலும் பேசாமலே நடித்த குண்டு பையன் கைப்புள்ளைக்குத் தான் முதலிடம்.


*
புரு காபி விளம்பரத்தில் வரும் அழகான பையன், ‘அம்மா சொன்னாங்க .. காபியில் ஸ்வீட்  இல்லாட்டா என்னடா; பொண்ணுதான் ஸ்வீட்டா இருக்கிறாளே’ என்று சொன்னதும் அந்தப் பெண் சிரிக்குமே பார்த்திருக்கிறீர்களா ...? என்ன ‘அழகு’!!



அடடா .. அந்த சீன் வரும்போது நான் வேறு பக்கம் பார்த்துக் கொள்வேன். தங்க்ஸ் ரொம்ப ஆசையா அந்த பொண்ணை, அதன் “சிரிப்பை” (!) பார்த்து ரசிப்பார்கள்.ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம்: ஏன் இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு ‘அழகான’ பெண் கிடைக்க வேண்டும்?

*

Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.


*

7 comments:

SURYAJEEVA said...

நல்ல collection

naren said...

முதல் விஜய் டி.வி. விளம்பரத்தில் innocence தெரிகிறது. மற்றவைகளில் commercialism தெரிகிறது.
விஜய் டி.வி. விளம்பரமே, எதையும் வாங்க வைத்துவிடவார்களோ என்ற பயமில்லாமல், ரசிக்க முடிகிறது.

சித்திரவீதிக்காரன் said...

சமீபகாலமாக நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் என்றால் முன்னால் வருமே உட்வர்ட்ஸ் கிரேப் வாட்டர் விளம்பரம்(நீ குழந்தையா இருக்கறச்சே அதான் கொடுத்தேன்), கபில்தேவ் வரும் பூஸ்ட், சங்கர் சிமெண்ட் விளம்பரம், நெஸ்கஃபே சன்ரைஸ் விளம்பரம்(பை-த-பை உங்க பேரு, சுந்தர்), தங்கச்சி மேல் சேறு பட்டதும் சகதியில் உருண்டு சண்டையிடும் அந்த சகோதரனின் அன்பை காட்டும் 'கறைநல்லது' ஷர்ப்எக்ஸெல் விளம்பரம் எல்லாம் எனக்கு பிடித்தவை. மற்றபடி வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கும் சேனல் விஜய் டிவிதான். பகிர்வுக்கு நன்றி ஐயா.

naren said...

Raymonds விளம்பரத்தில் வரும் இசை பிரதானமாக, Robert schumann compostition ஆன traumerei இருந்து எடுத்தது.
http://en.wikipedia.org/wiki/Tr%C3%A4umerei

தருமி said...

traumerei - dreaming .. நன்றாக இருந்தது.

நன்றி

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

நரேன்,
எனக்கு மிகவும் பிடித்த schubert-ன் symphony.

Post a Comment