Thursday, January 19, 2012

546. "மெளனகுரு"






*
எல்லோரும் 'ஒகோ'ன்னு புகழ்ந்த படத்தைப் பற்றி நானென்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன். படம் வந்ததும் பார்க்க எண்ணி, முடியாது போக, பல இடங்களில் படம் எடுக்கப்பட்டு விட்டன. படத்தின் தரம் உணரப்பட்டு இரண்டாம் முறையாக திரையிடப்பட்ட பிறகே பார்த்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக கதாநாயகன் இருந்தார். சண்டையில்லை; கத்தலில்லை; வித்தியாசமான தமிழ்ப்படக் கதாநாயகன். படம் முழுவதுமே நம் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக கதாநாயகனின் செய்கைகள் இருந்தன. ஓரிரு வார்த்தையில் சொல்வதானால் இயக்குனர் திட்டமிட்டு கதாநாயகப் பாத்திரத்தை deglamorise செய்துள்ளார். இது படத்திற்கு மிக வலுவூட்டும் ஒன்றாக இருந்துள்ளது. உயரமான கதாநாயகன் கல்லூரி மாணவர்களின் பின்னே தானும் வழக்கமான ஒரு மாணவனாக, ரெளடிகளின் அடிதடிக்கு உடனே 'கம்பு தூக்காமல்' ஓரத்தில் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் தானா என்ற சந்தேகம் வந்தது.

க்ரைம் சீனில் கார் மோதுவது, பின் தலையில் அடித்துக் கொலை செய்ததை தடவியல் - போஸ்ட்மார்ட்டத்தில் மறைப்பது போன்ற நுண்ணிய விஷயங்களில் கொடுத்துள்ள கவனம் நன்கிருந்தது.


நெடுநாள் அடைகாத்து இயக்குனர் எடுத்த படம். மிக அழகாக ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்ப்படங்களில் வழக்கமாக வரும் illogical நிகழ்வுகள் ஏதுமின்றி பொருத்தமாக அமைந்துள்ளன. It is well sculpted and polished movie.

கதாநாயகனும் உமா ரியாஸும் இயக்குனரின் நடிகர்களாக உழைத்திருக்கிறார்கள். சினிமாத்தனம் இல்லாத இயல்பு அவர்களிடம் பார்க்க முடிந்தது.

கடைசி சீனில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு சைக்கிளில் செல்வது போல் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; பொருத்தமாயுமிருந்திருக்கும் என்று தோன்றியது.




(இயக்குனர் என் மாணவர் என்று பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ளலாமா?)





*

10 comments:

சுரேகா.. said...

அட...உங்கள் மாணவராய் இருந்ததால்தான இப்படிச் சாதிக்கிறர்.!!

வவ்வால் said...

தருமிய்யா,

//க்ரைம் சீனில் கார் மோதுவது, பின் தலையில் அடித்துக் கொலை செய்ததை தடவியல் - போஸ்ட்மார்ட்டத்தில் மறைப்பது போன்ற நுண்ணிய விஷயங்களில் கொடுத்துள்ள கவனம் நன்கிருந்தது.


நெடுநாள் அடைகாத்து இயக்குனர் எடுத்த படம். மிக அழகாக ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்ப்படங்களில் வழக்கமாக வரும் illogical நிகழ்வுகள் ஏதுமின்றி பொருத்தமாக அமைந்துள்ளன. It is well sculpted and polished movie.//

உங்க மாணவர் படத்துக்கு வாழ்த்துகள். எதுவும் சொல்லாமல் இருக்கலாம் என்றால் நீங்க நுண்ணியமா , லாஜிக் மீறாம எடுத்த படம்னு எல்லாம் இல்லாததை பாராட்டுறிங்க , சும்மா விட முடியுமா?

1) மதுரையில் ஹீரோ கேஸ் கவனிப்பவர் உமாரியாஸ் தான்,அப்போது சில நாட்கள் தள்ளிப்போய் இருக்குனு போனில் பேசுவார். சென்னைக்கு ஹீரோ வந்து சில நாட்களில் பிரச்சினையில் மாட்டுவார் விசாரிக்கும் போது முழுக்கர்ப்பிணியாக இருப்பார் , எப்படி?

2)வீடியோ எடுத்த பெண் , கேமரா காணமல் போனது குறித்து புகார் கொடுக்கவில்லை ஆனால் உங்க ரெஸ்டாரண்டில் வந்து கேமராக்காணாமல் போனது என்று சொன்னாங்க, பின்னர் ஏன் வரலைனு போய் அதே ரெஸ்ட்ராண்டுக்கு எப்படி கேட்டார் உமா ரியாஸ்?

3)மேலும் வீடியோ எடுத்த பெண்ணை கழுத்தறுத்து கொல்வார் வில்லன் ,போலீஸ், பின்னர் தூக்கில் தொங்க விடுவார்கள், கழுத்து அறுத்தது தெரியாமல் போய்விடுமா?எப்படி?

4)போலீஸ் திட்ட மிட்டப்படி ஹீரோவை மெண்டல் ஆஸ்பிட்டலில் சேர்த்து விடுகிறார்கள். எப்படியோ தகவல் தெரிந்து வரும் உறவினர்கள் அங்கேயே விட்டு செல்ல என்ன அவசியம். அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் வைத்தியம் கொடுக்கலாம். வசதி இல்லாதவர்கல் என்றால் வேண்டுமானால் அரசு கவனிப்பே போதும் என விட்டு செல்லலாம்.

விபத்தில் அடிப்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தால் அங்கேவே சிகிச்சை எடுக்கனும் என்று அவசியம் இல்லையே அதே போல தான் இதுவும்.

5) மேலும் கோர்ட்டில் ரிமான்ட் செய்து , விசாரணை செய்வது எதுவும் இல்லாமல் அப்படியே கொண்டு போய் போலீஸ் எப்படி சேர்க்க முடியும்.

6) உண்மையில் புத்தி சுவாதினம் பாதிக்காத ஹீரோவை எந்த நம்பிக்கையில் வில்லன் போலிஸ் நடு ரோட்டில் விட்டு செல்கிறார்.அதுக்கு பேசாமல் கண் காணாத இடத்தில் வைத்து கதையை முடித்து, ஆழ குழித்தோண்டி மூடி இருக்கலாமே , தப்பி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் தலை மறைவுனு வழக்கை மூட முடியுமே?

படத்தை ஒரு தடவைப்பார்த்தேன் அதுக்கே முடியல. அப்புறம் இதே போல அப்பாவியிடம் ஆதாரம் மாட்டுவது, போலீஸ் தொறத்தல் என அப்போ மீரா, இப்போ வாமனன், முத்திரைனு சில பல படங்கள் இருக்கு இதே போல கதைக்கருவுடன், அப்புறம் எதுக்கு ரொம்ப நாள் கதையப்பொத்தி வச்சார் இயக்குநர் :-))

சார்வாகன் said...

நல்ல படம்.இருப்பினும் முடிவில் கொஞ்சம் சொதப்பியது போல் இருந்தது.
வாழ்த்துகள்

கோமதி அரசு said...

இயக்குனர் என் மாணவர் என்று பெருமையாக இங்கே சொல்லிக் கொள்ளலாமா?)

கண்டிப்பாய் சொல்லிக் கொள்ளலாம்.

மாணவர் எல்லோராலும் புகழப்படும் போது ஆசிரியருக்கு அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்!

மருத புல்லட் பாண்டி said...

vathiayarun nalla irrukaaru, maanavanum nalla irrukaaru aanna antha kaluri mattum eppa nalla aakum ............

சித்திரவீதிக்காரன் said...

இயக்குனர் தங்கள் மாணவர் என்பதில் நாங்களும் பெருமை கொள்கிறோம். அவர் மதுரைக்காரர் என்பது நமக்கு கூடுதல் பெருமை. பகிர்விற்கு நன்றி.

வோட்டாண்டி said...

power star dr.srinivasan,sam anderson ungaloda maanavargala?

கார்த்திகைப் பாண்டியன் said...

@வவ்வால்

மௌனகுரு ரொம்பத் தரமான படம் கிடையாதுதான். அதுக்காக நீங்க சொல்ற மாதிரி ரொம்ப மட்டமும் கிடையாதுங்க. ஒரு சில தவறுகள் இருக்கலாம். மொத்தப் படமா ஒரு நல்ல அனுபவமாத்தான் இருந்தது. இப்போ நீங்க சொன்ன பாயிண்ட்ஸ் பத்தி..

1. 55 நாள் தள்ளிப்போனதா உமா ரியாஸ் சொல்வாங்க. அடுத்த நாலு மாசத்துல வயிறு கொஞ்சம் பெரிசா ஆகுறது அவங்கவங்க உடல்வாகு. இது ஒரு குத்தமா?

2. கொரியர்ல வர்ற கஃபே பில் பார்திட்டு அங்க போய் விசாரிக்கிறார்ங்க. அந்தப் பொண்ணுகிட்ட சிசிடி கேமிரா டேட்டா கிடைச்சவுடனே உங்களுக்குத் தகவல் தர்றோம்னு ஊழியர்கள் சொல்ற மாதிரி ஒரு காட்சி படத்துல இருக்குங்க. அப்போ உமா விசாரிக்கிறது சரிதான?

3.படத்தை ஒழுங்காப் பாருங்க. அடிக்கிற அடில மாயா செத்துடுறா. தூக்குல தொங்க விடுறாங்க. உண்மையில அந்த சீன்ல வேற ஒரு பிரச்சினை இருக்கு. அது அவங்கள தூக்குல தொங்க விட்டிருக்க உயரம்தான். மத்தபடி கழுத்து அறுக்க எல்லாம் இல்லைங்க.

4. அரசு அதிகாரைய அடிச்சு இருக்கான். அதுவும் போதையில. அதனால தனியார்கிட்ட போகக்கூடாது அரசாங்க ஆஸ்பத்திரிதான்னு எடுத்துக்கலாமே?

5, 6 உண்மையில சிக்கல்தான். அரசு அதிகாரம்னு அழுத்தமா சொல்ல ஆசைப்பட்டு வந்த பிரச்சினைகள்.

எல்லா நல்ல படங்கள்லயும் ப்ளூப்பர்ஸ் இருக்கும் சார். அதுக்காக மொத்த படமும் சரியில்லைன்னு சொல்ல முடியுமா? உங்களை எல்லாம் ஒரு ரூமுக்குள்ள அடைச்சு பத்துத் தரம் வேட்டை பாக்க வைக்கணும். அப்பத் தெரியும் மௌனகுரு எம்புட்டுத் தங்கம்னு..:-)))

சார்லஸ் said...

உங்களுடன் சேர்ந்து குணா படம் பார்த்து விட்டு வந்து நீங்கள் செய்த விமர்சனம் அப்போது புரியவில்லை . இப்போதுதான் புரிகிறது . காலம் நிறைய கற்றுக் கொடுக்கிறது .மௌன குரு படத்துக்கு நீங்கள் செய்த விமர்சனம் சரியே!

தருமி said...

charles

இப்போதும் குணா படத்தைப் பற்றியெழுத வேண்டுமென்ற ஆவலுண்டு.

Post a Comment