*
டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப்பகுக்திகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன. 13 ஓலைப் பிரதிகள் தோல்களால் ஒருங்கே கட்டப்பட்டு, ஒரு மண் பாத்திரத்திற்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்
............... இது அடுத்த என் பதிவிற்கு ஒரு trailer.
திடீரென்று கண்டெடுக்கப்பட்ட அந்த கையெழுத்து ஓலைப் பிரதிகளில் கிடைத்த தகவல்கள் கிறித்துவத்தின் வரலாற்றைப் புரட்டிப் போட்டு விட்டன. அதைப் பற்றிய விளக்கத்தை ELAIN PAGELS என்பவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நூலின் சுருக்கத்தை அடுத்த பதிவிலிருந்து ஆரம்பிப்பதாக நினைத்துள்ளேன்.
ஆனால் அதற்கு முன் ... 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த ஹமாதி தொகுப்புகளில் மனித இனத்தின் ஆரம்பம் ஆதியாகமத்தில் சொன்னதுபோலின்றி வேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. Testimony of Truth-ல் ஈடன் தோட்டம் பாம்பின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி கூறும் ஆசிரியர் அந்நூலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதையைக் கொடுக்கிறார்.
For I am the first and last
I was the honored one and the scorned one
I am the whore and the holy one
I am the wife and the virgin ...
I am the barren one,
and many ate her sons ...
I am the silence that is incomprehensible
i am the utterance of my name.
இந்தக் கவிதையை வாசித்ததும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் ..’ படத்தில் வரும் ஒரு பாடலின் சில வரிகள் நினைவுக்கு வந்தன. வைரமுத்துவின் வரிகள். பாடலாக வரும்போது என்னை வசீகரித்த அந்த வரிகள் இந்தக் கவிதையின் வரிகளோடு மிகவும் ஒட்டிப் போயிருக்கின்றன. எப்படி இந்த ஒற்றுமை என்றே தெரியவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்தக் கவிதை வரிகளிலும், வைரமுத்துவின் வரிகளிலும் பொருந்தாத இரு எதிர்மறை விசயங்கள் இணைந்து வருவதைப் பார்த்தேன். உங்கள் பார்வைக்குக்கும் வைக்கிறேன்.
ஒரு தெய்வம் தந்த பூவே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

இந்தத் தொடர்பும் ஒற்றுமையும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. எப்படி இது நடந்திருக்கும்? காலத்தையும் தாண்டி நிற்கும் கவிஞர்களின் பார்வையின் ஒற்றுமை இதுதானா? அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு கவிதையின் கருத்தை ஒட்டி, இன்று ஒரு கவிஞர் அதே கற்பனையை தன் வரிகளில் கொண்டு வரும் ஆச்சரியம். நிச்சயமாக வைரமுத்துவிற்கு இந்த ஆங்கில வரிகள் புதிதாகவே இருக்கும் ஏனெனில் இது மதம் சம்பந்த்தப்பட்ட ஒரு கவிதை. வேறு எவ்வித பிரபல்யமும் இல்லாத ஒரு கவிதை. ஆனால் அதே கவிதை மறு பிறப்பாக வைரமுத்துவின் வழியாக நமக்குக் கிடைத்துள்ளது. ஆச்சரியம் ...!.

7 comments:
இதுக்கு எதுக்கு வைரமுத்து, பழைய ஏபி. நாகராஜன் படத்திலேயே வருமே. ஆதியும் நீயே அந்தமும் நீயே , வானமும் நீயே வையகம் நீயே, காற்றும் நீயே கடலும் நீயே, ஊணும் நீயே உயிரும் நீயே
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
அன்புள்ள தருமி,
உங்கள் வைரமுத்துவின் வரிகளுக்கு 1500 ஆண்டுகளா..? வாசித்தேன். இந்த ஒப்பீடு உங்கள் எண்ணத்தில் தோன்றியது ஓர் அபூர்வம். கவிஞர் வைரமுத்துவும் நல்ல படிப்பாளி. அவர் எண்ணத்தில் தோன்றியும் இருக்கலாம். எங்காவது படித்தோ, யாராவது சொல்லியோ கேட்டிருக்கலாம்.
கருத்தின் தேடுதல்களிலும் வார்த்தையின் பயன்பாட்டிலும் சில சமயம் இம்மாதிரியான விஷயங்கள் வாய்ப்பது சகஜம். அதானல் தான் புலவர்கள் தமிழகத்தில் போற்றப் பட்டார்கள்
சந்துரு, கன்னியப்பன், சத்தீஷ், குட்டி பிசாசு
....... அனைவருக்கும் நன்றி
தமிழ்மண முகப்புப் பக்கத்தில் ‘சூடான இடுகைகள்’ என்று ஒரு பகுதி இருக்கும். அதில் வருவது எப்படி என்பது போன்ற செப்படி வித்தைகள் ஏதும் தெரியாது. இதுவரை என் பதிவுகள் அப்பகுதியில் வந்திருக்குமோ என்னவோ .. அதையெல்லாம் பார்த்ததே இல்லை. இன்று இப்போது திடீரென கண்ணில் பட்டது - இந்தப் பதிவு அதில் இருக்கிறது. அதிக ஹிட் வந்தால் இடுகை சூடாகி விடுமோ??!!
நன்றி. ஆனாலும் ...
வைரமுத்து பெயர் இருந்ததால் தமிழார்வலர்கள் இந்த இடுகையை எட்டிப்பார்த்திருப்பார்கள். ஆகவே எட்டிப் பார்த்தவர்களை விட எட்டிப் பார்க்க வைத்து இடுகையை சூடாக்கியதற்கு வைரமுத்துவிற்கு மிக்க நன்றி.
நம்ம வைரமுத்து சார் காப்பி கீப்பி அடித்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புவோமாக.
அந்த ஆங்கில வரிகளை படித்தால், ஏதோ சுவாமி தயானந்தா சரஸ்வதியின் பிரசங்கத்தை கேட்டதை போல உள்ளது. LOL
Post a Comment