Friday, August 24, 2012

587. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு என் பாராட்டு

*

அந்தக் காலத்தில்  ....  ஓரிரண்டு தமிழ்ப்பக்கங்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். சரி.. தமிழில் கூட இனி கணினியில் எழுதலாம் போலும் என்று மட்டும் அறிந்திருந்தேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆவலோடு இருந்த காலம் அது. முடிந்தால் நாமும் இதைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்செயலாக் சென்னை சென்றிருக்கும் போது சென்னை மரீனாவில் பதிவர் கூட்டம் என்ற செய்தியறிந்து துணிந்து நானும் சென்றேன். நான் ஒரு பதிவனாக இல்லையே; நம்மை அனுமதிப்பார்களா என்று பயந்து போய் அந்தக் கூட்டத்தில் அனுமதி வாங்கி ‘நல்ல பிள்ளையாய்’ வகுப்பில் எப்போதும் உட்கார்வது போல் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டேன். போனா போகுதுன்னு என்னையும் அந்த மக்கள் ஆட்டையில் சேர்த்துக் கொண்டார்கள். நானூத்திச் சில்லறை பதிவர்கள் இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஆஹா .. முதல் ஐந்நூறு தமிழ்ப் பதிவர்களில் ஒருவனாக ஆகிவிட வேண்டுமென்று முடிவெடுத்தேன். 24.4.2005-ல் பதிவனாகவும் ஆனேன். இரண்டாண்டுகள் எழுதி, எப்படியோ ‘நாலு பேருக்கும் தெரிந்த ஒரு பதிவனாக’ ஆனேன்.  ஆகஸ்ட் 5ம் தேதி, 2007ல் சென்னை பதிவர் பட்டறை ஒன்று நடந்தது. மிக ஆவலாகக் கலந்து கொண்டேன். மிக நன்கிருந்தது. எத்தனை அன்பான முகங்கள். ஆவலாகப் பேசிய பதிவர்கள். மிக இனிமையான நாளாக அன்று இருந்தது. நாள் முழுமையும் பல நிகழ்ச்சிகள் மூலம் எல்லோரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள். மாலை வந்த போது பிரியும் கவலையும் வந்தது.

26.8.2012. ஐந்து ஆண்டுகள் கழித்து அடுத்து சென்னையில் ஒரு கூட்டம். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலிருப்பினும் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆயினும் நடக்கப்போகும் நல்ல  நிகழ்வுகளுக்குக் காத்திருக்கிறேன். ஆண்டுக்கொரு முறை இப்படி எல்லோரும் கலந்துரையாடினால் மிக நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.

இம்முறை பலரும் முனைந்து, முன்கூடி தேரிழுத்து, குழுமத்தைக் கூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி. அதுவும் புலவரய்யா ராமானுஜம் போன்றோரின் ஆக்கப்பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ் வலைப்பதிவர் குழுமம் இனிதே கூடி, நல்லன பலவும் பேசி, வெற்றிகரமாக, இனிமையாக நடந்தேற எனது வாழ்த்து.*


 

14 comments:

CS. Mohan Kumar said...

மிக மகிழ்ச்சி ஐயா . தங்களின் நினைவு கூறலை ரசித்தேன்

இதே குழுமம் மீண்டும் விழா நடத்த வேண்டும் என்பதும் நீங்கள் அப்போது கலந்து கொள்ள வேண்டும் என்கிற அவாவையும் தெரிவிக்கிறேன்

SurveySan said...

Whereabouts?

I may try and attend this time.

வவ்வால் said...

தருமிய்யா,,

வணக்கம்,

ஆஹா என்ன ஒரு ஒற்றுமை, இப்போ தான் ஒரு வழியா 2007,ஆகஸ்ட்-5 இல் நடைப்பெற்ற பதிவர் பட்டறையைப்பற்றி ஒரு டோட்டல் ரீகால் பதிவுப்போட்டு வரேன் உங்கப்பதிவு, :-))

ஹி...ஹி உங்கப்படமும் போட்டு இருக்கேன் ஒன்னும் சொல்லிடாதிங்க.

2007 பதிவர் பட்டறை:

total recall-2007

G.Ragavan said...

உண்மைதான். 2005ல் இருந்த நிலையிலிருந்து நிறைய முன்னேறி வந்திருக்கின்றன தமிழ் வலைப்பூக்கள்.

உண்மைதான். ஆண்டுக்கொரு முறை ஏதேனும் சந்திப்புகள் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

தருமி said...

SurveySan,
where are you?
that's right in chennai.see invitation: http://vovalpaarvai.blogspot.in/2012/08/total-recall2007-5.html

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...

அடுத்து மதுரையில் தானே...?

'பசி'பரமசிவம் said...

தங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.

ராஜ நடராஜன் said...

நீங்க,வவ்வால் போன்றவர்கள் பழைய நெனப்பை அசை போட தகுதியானவர்களே!

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

Unknown said...

மூத்த பதிவருக்குக் கரம் கூப்பி சிரம் தாழ வணக்கம்!நன்றி!

பழூர் கார்த்தி said...

நன்றி தருமி ஐயா, உங்களைப் போன்ற பெரியவர்கள் இருக்கும் வலைப்பதிவுகளில் நானும் சக எழுத்தாளராக இருப்பது எனக்கு பெருமை!! தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!

***

உங்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு நான் வலைப் பதிவுகளில் இணைந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி!! நீங்கள் மதுரையில் ஒரு தியேட்டரை பற்றி (தங்கம்?) சிலாகித்து எழுதியிருந்ததை அந்த நாட்களில் படித்ததாக ஞாபகம், சரிதானா? தவறெனில் மன்னிக்கவும்!

****

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!!

தருமி said...

புலவர் சா இராமாநுசம்,

//மூத்த பதிவருக்குக் கரம் கூப்பி சிரம் தாழ வணக்கம்!நன்றி!//

என்னண்ணா .. இப்படி சொல்லிட்டீங்க!

உங்கள் உழைப்புக்கு என் பாராட்டுகள் - மீண்டும்.

Anonymous said...

2005-யில் முதல் பதிவு எழுதும் போது, எனக்கு ஒன்றும் தெரியாது !!! இதை வைத்து என்ன செய்ய முடியும் என்றெல்லாம் யோசித்து இருந்தேன் !!! வெறும் கவிதைகள் மட்டுமே 2008 வரை எழுதினேன். அப்புறம் வெளிநாடு வந்த பின் தான் பதிவுலகின் அருமையை உணர்ந்தேன் ..

இன்று தமிழ் பதிவுலகம் பல வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது . இன்னும் பல படிகள் தாண்டி செல்லும் என்பதில் ஐயமில்லை !!!

சார்வாகன் said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!!நன்றி தருமி ஐயா

hariharan said...

நல்ல விசயங்களை எழுதிவருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி...

Post a Comment