Sunday, January 13, 2013

630. தோரணம்*

 நாயும் பேயும் கூட எங்கள் ஊர் மதுரைக்கு வரலாம். ஆனால் இந்த ராமதாஸுன்ற ஆளு உள்ள வரக்கூடாதாம். Thank you, Mr. Collector.
தீண்டப்படக் கூடாத ஆளு தான்.

இந்த மாதிரி கேவலங்களையெல்லாம் நம்மூர் அரசியல் வியாதிகள் எளிதாகத் துடைத்து விட்டுப் போய் விடுவார்கள். இருந்தாலும் இந்த ஆளுக்கு இது மிகச் சரியான பொங்கல் ‘விருது’!


*                                      *                                                 *

 இதென்னங்க ... புதுசா ஒரு தொலைக்காட்சி பார்த்தேன். தந்தி தொலைக் காட்சி. நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டிருந்தது. தற்செயலாக நேற்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.

பாகிஸ்தானியப் படையினரின் அராஜகத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடல். இரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் - சுந்தர் & இன்னொருவரின் பெயர் கார்த்திகேயன் என்று நினைக்கிறேன். இன்னொரு இளைஞர் சேவியர், லொயோலா கல்லாரிப் பேராசிரியர். நல்ல விவாதம்.

அரசியல்வாதிகளுக்கு அயல்நாட்டு விவகாரங்கள் ஏதும் தெரிவதில்லை; ஆனால் படையின்ரைக் கலந்தாலோசிக்காமல் பல முடிவுகளை அரசு எடுக்கிறது. ஓய்வு பெற்ற படையதிகாரிகளை வைத்து முடிவெடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற படையதிகாரிகளும் அரசிய்லில் இறங்க வேண்டும். நம் அயல் நாட்டுக் கொள்கைகளில் உள்ள தவறுகளை மேடைகளில் .. ஏன் .. வீதிகளில் இறங்கி நின்று பேச வேண்டும் என்றார் சுந்தர். மூவரின் பங்களிப்பும் மிக அழகாக இருந்தது.

அதைவிட இன்னொரு வியப்பு. இந்த நிகழ்வை நடத்தியவர் பார்ப்பதற்கு ஒரு தமிழர் மாதிரி கூட தெரியவில்லை. ஆனால் மனுஷன் கோட் சூட் போட்டுகிட்டு நல்ல தமிழில் அழகாக கருத்தரங்கை நடத்தினார். இதுவரை வட நாட்டு சேனல்களில் மட்டும் பார்த்தது போன்ற நிகழ்வை இங்கு தமிழில் அழகாக நடத்தியதைப் பார்த்த போது பெருமையாக இருந்தது.

 *                                              *                                               *

புதிய தலைமுறை செய்தித் தொகுப்பு - யானைகள் ஊர்ப்பக்கம் வந்து நாசம் விளைவிக்கின்றன. இதற்குக் காரணம் சரியான ஒப்புதல் இன்றி பல கட்டிடங்கள் அந்த மலைப்பகுதிகளில் கட்டுப்படுவதுதான். கட்டுவது எல்லாம் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஈஷா, அமிர்தானந்தம் போன்ற ‘கடவுள் புள்ளிகள்’, அதோடு இண்டஸ் என்ற ஒரு கல்லூரி. இதை ஈஷா தங்களிடத்தைச் சுற்றி, மலையடிவாரத்திலிருந்து 150 மீட்டருக்கு உள்ளேயே, மின்சாரத் தடுப்புக் கம்பிகள் வைத்திருக்கின்றனராம்.

என்னே அவர்களது மற்ற உயிர்கள் மீதான பாசம் !

உபதேசங்கள் ஊருக்குத் தான் ...!


*                                                                  *                                  *

இப்படி சில தொலைக்காட்சிகளைப் பார்த்ததும் இன்னொரு நிகழ்ச்சி - வசந்த் டி.வி. ஐயப்பன மகர ஜோதியைக் காட்டப் போவதாக ஒரு நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மகர ஜோதி மக்கள் ஏற்றும் தீபம் என்றெல்லாம் நிரூபித்தார்கள். ஆனால் இன்னும் ம்கர ஜோதி தானாக வரும் ஒளி என்று மக்களும் நம்புகிறார்கள்; அதை ஒளிபரப்பவும் ஒரு தொலைக்காட்சி இருக்கிறது.

அட போங்க’ப்பா, ஒரே வேடிக்கை தான்!

*                                                           *                                                 *

சூர்யா ரொம்ப பிடிக்கும் தான். ஆனாலும் இவர் இம்புட்டு விளம்பரங்களுக்கு வரக்கூடாதுங்க. பயங்கர போர். Just an overkill. அதுவும் Aircel-க்கு ஒரு விளம்பரத்தில் வர்ராறு பாருங்க ... சாமியே! சகிக்கலை’ப்பா! தாங்க முடியலை. காசுன்னா என்ன விளம்பரத்திலேயும் தலை காட்ற அளவுக்கா சூர்யா காசுக்கு அலைய்றார்?

இந்த விளம்பரங்கள் பார்த்ததும் அஜீத் மேலே எல்லாம் ரொம்ப மரியாதை வந்தது.

*                                                                          *                                           *

 நமக்கு இசை ஞானம் சுத்தமா கிடையாது. ஆனாலும் என்னாலேயே Fiama சோப்புக்கு வர்ர ஒரு விளம்பரத்தில் ஒரு ஞான சூன்யம் ஒரு பாட்டு பாடுது. தாங்க முடியலை. கடவுளே .. கர்ண கடூரம் அப்டின்னு என்னான்னு தெரியணும்னா அந்தப் பாட்டை ஒரு தடவை கேட்டுப் பாருங்க. அந்த ஜிங்கிளுக்கு இசையமைத்த புண்ணியவான் யாருன்னு தெரியணும்னு ஆசையாக இருக்கிறது.

கடவுளே .. என்னைக் காப்பாத்தப்பா ...!*                                                                      *                                                         *

*

6 comments:

ராஜ நடராஜன் said...

இப்ப மெகா சீரியலை விட்டுட்டு மெகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களாக்கும்:)

ராமதாஸ் புதுசா ஏதாவது அறிக்கை விட்டாரா இல்ல இன்னும் முக்காடு போட்டுகிட்டு சுத்திகிட்டு இருக்காரான்னு அருளைக் கொஞ்சம் கேளுங்களேன்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

ராஜ நடராஞன்

நான் தீண்டக் கூடாதவர்களைப் பற்றி யாரிடமும் விசாரிப்பதில்லை!

வவ்வால் said...

தருமிய்யா,

கனிவான தை-1 தமிழ்ப்புத்தாண்டு இனிய பொங்கல் ,மற்றும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள்!

//புதிய தலைமுறை செய்தித் தொகுப்பு - யானைகள் ஊர்ப்பக்கம் வந்து நாசம் விளைவிக்கின்றன. இதற்குக் காரணம் சரியான ஒப்புதல் இன்றி பல கட்டிடங்கள் அந்த மலைப்பகுதிகளில் கட்டுப்படுவதுதான். //

அவங்களுக்கு ஒரு செய்திச்சேனல் இருந்தால், ஏரி மற்றும் பாசனக்கால்வாய் ,பொறம்போக்கு நிலத்தினை ஆக்ரமித்தவர்கள்னு செய்தி போடுவாங்களாக்கும் :-))

சென்னை அருகே பொத்தேரி எனும் இடத்தில் உள்ள நிகர்நிலை பல்கலையின் கீழ் நிலையில்லாமல் போய்விட்டது பொதுமக்களின் ஏரி:-))

அப்படின்னு விரிவா செய்திப்போடுவாங்கள்!!!

----------

ராச நட,

முக்காடு???

"காடு"வெட்டி சாக்கிரதை :-))

மதுரைக்கு வரக்கூடாதுன்னு சொல்ல எவனுக்கும் உரிமையில்லைனு சண்டு விட்டுட்டு ,பின்னாடியே வக்கில் அனுப்பி விளக்கம் குடுத்திருக்கார்,பொழைக்க தெரிஞ்ச அரசியல்வாதி :-))

ஊருக்கே பசுமைனு சொல்லிட்டு பொது வாய்க்காலை கோனேரிக்குப்பத்தில் உள்ள பொறியியல் கல்வி நிலையத்தில் அமுக்கிட்டாங்க, எல்லாருக்குமே பொது இடம்னா கண்ணா லட்டு திங்க ஆசையான்னு தான் இருக்கு.

ஆனால் அஞ்சாநெஞ்சருக்கு மட்டும் தாக்கீது அனுப்பிட்டாங்க!

தருமி said...

//அவங்களுக்கு ஒரு செய்திச்சேனல் இருந்தால், .. செய்தி போடுவாங்களாக்கும் :-))//

இங்கே செய்தி என்ன என்பதை விட கடவுள் புத்திரர்கள் ஏனிப்படி சட்டத்தை மீறுகிறார்கள் என்பது தான்!

Ganesan said...

>என்னே அவர்களது மற்ற உயிர்கள் மீதான பாசம் !உபதேசங்கள் ஊருக்குத் தான் ...!

உபதேசமா? இந்த ஆன்மிக வியாபாரமே, பணம், பேர் இதற்காகத்தானே சார்.. அதுவும் இப்போவெல்லாம் ஒவ்வொரு ஆன்மிக தலைவருக்கு ஒரு மெகா corporation என்ற அளவில் இந்த வியாபாரம் நடக்குது .இவங்கல்லாம் இன்னும் ஷேர் மார்க்கெட்ல் பங்குகள் விற்க வரலை. அவ்ளவு தான். மற்றபடி பெரிய சாம்ராஜ்யத்த நிறுவி... இந்த ஆன்மிக வியாதிகள், அரசியல் வியாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. ஜெயிலிலே களி திங்க வேண்டிய பிராடுகள் இப்படி நாட்டை நாலா பக்கமும் நாசம் பண்ணுதுங்க.

Post a Comment