Wednesday, January 16, 2013

632. இலங்கைப் பயணம் - 15 - கொழும்பு - புத்தர் கோவில்


*

கொழும்புவில் இருந்த ஒரு புத்தர் கோவிலுக்குச் சென்றோம். பல விதங்களில் இந்து சமய பழக்க வழக்கங்களை இங்கேயும் பார்க்க முடிந்தது. 


 
எங்கும் புத்தர் மயம்  
புத்தரின் தவக் கோலம். மரக்கட்டளையில் செய்த உருவம். 

இவர் ஒரு காவலரோ இல்லை வேறு எதுவும் தெய்வமோ தெரியவில்லை. ஆனால் இது போன்ற சிலைகளை புத்தர் கோவில்களில் பார்த்தேன். புத்தருக்கு பிரம்மாவின் உருவமா?

இதைத்தான் இந்து சமயக் கருத்துக்களும் புத்த மதத்தில் இணைந்திருப்பது என்று நான் சொன்னதின் பொருள். 


பயங்கர முரட்டு உருவம் கொண்ட, அரக்கன் போன்றவர்.  யாரிவர் ....?

மேலேயுள்ள முரட்டு உருவத்தின் காலடியில் ஓர் அறிவிப்பு இருந்தது.

சிலையும் அறிவிப்பும் .... it is like an irony!இது போன்ற சில பித்தளைச் சிலைகள்.

இந்த சிலைகளில் நான் பார்த்த ஒன்று - சில பகுதிகள் மிக அழகாக வழு வழுவென்று வைக்கப்பட்டுள்ளன. மீதிப் பகுதிகள் பாசி படிந்துள்ளன.  ஏன்?


இந்து வழக்கத்தில் தூபம் காட்டுவது, பத்தி பொருத்தி வைப்பது, விளக்கேற்றுவது ... இது போன்ற பழக்கங்கள் நிறைய இருந்தன.

படத்தில் முன்னால் இருப்பது இப்படி விளக்கு வைக்கும் பகுதியாக இருந்தது. 
புத்தருக்குப் பின்னால் உள்ள உருவங்கள் பல இந்துக் கடவுள்கள் போலத் தெரிந்தது. அட ... நம்ம பிள்ளையார் இங்கேயும் இருக்கிறார்.


                                                                                பிள்ளையாருக்குப் பக்கத்தில் மானில் அமர்ந்திருக்கும் பெண்மணி பற்றி ஏதும் தெரியவில்லை.                                                                                             
              கணக்கை ஒழுங்கா பார்த்து எழுதுங்க ....  புத்தர் உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறார். :)

4 comments:

Unknown said...

அருமையான படங்கள் ,

இலங்கையில் தங்களால் எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த தொகுப்பு இது ஆகும் ....அனைத்துமே சிறப்பான ஒளி அமைப்பில் காணபடுகிறது ...

இது கங்காராமய விகாரை என நினைக்கிறன்...இங்கு ஒரு குட்டி யானையும் உண்டு...இது சீன சாயல் கொண்ட விகாரைகளில் இதுவும் உண்டு ..இத்தனை வருடங்கள் கொழும்பில் இருந்தும் ஏனோ தெரியவில்லை இங்கு போக தோன்றவில்லை

//புத்தருக்குப் பின்னால் உள்ள உருவங்கள் பல இந்துக் கடவுள்கள் போலத் தெரிந்தது. //

மகாயான போதத்தின் படி புத்தருக்கு ஞானம் கிடைத்த போது தேவர்கள் அவரை துதித்தனர் என கூற படுகிறது..காரணம் பௌத்த மத படி புத்தர் திருமாலின் ஒரு அவதாரமே ...இன்னும் சில புத்த பிரான்கள்/அவதாரங்கள் பூமியில் அவதரிப்பார் எனவும் மகாயானம் கூறுகிறது..அவர் வருவதற்கு சரியான காலம் ,சரியான நேரம்,சரியான இடம்,உத்தமமான தாய் என பஞ்ச நிபந்தனைகளும் உண்டு ..இவ் நிபந்தனைகள் ஒரு சேரும் போது புத்த பிரான் மறு படியும் அவதரித்து வருவார்...

பிள்ளையார் சிலைகள் கொழும்பில் குறைவு ஆயினும் அனேக சிங்கள பிரதேசங்களில் தமிழ் நாட்டை விட அதிகமாக காணப்படும் ..அதுவும் பாதைகளில்....ஒரு முறை வேலை விஷயமாக அனுராதபுரம் போனேன் ..முதல் முறை...அப்படியே அதிர்ச்சி.....எங்கு திரும்பினாலும் பிள்ளையார்...ஆனால் கலை நயம் குறைவு ...மற்றும் பால் குடிக்க மாட்டார் ...பௌத்த விகாரைகளில் பிள்ளையார்,திருமால்,முருகன் சிலைகள் கட்டாயம் காணப்படும்..அதை விட சில சிங்களவர் காலி தெய்வத்துக்கு தனி கோவிலும் அமைத்து உள்ளனர்..சிங்கள முறைப்படியான வழிபாடு...

ஆயினும் தேரவாத பௌத்தம் இவற்றை அடியோடு வெறுக்கிறது (வஹாபி?????)..அண்மையில் தம்புள்ளவில் பள்ளிவாசலை உடைத்தது இப்பிரிவினரே ..அதே நேரத்தில் காலி கோவில் ஒன்றும் அழிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வரவில்லை ....புத்தரின் நெறிமுறைகளை மட்டுமே பின்பற்ற சொல்லும் மார்க்கமே இது ...

தருமி said...

அடடா .. விஜய்,
வஹாபியிசம் உங்கள் வரை வந்து விட்டதா :-)

தருமி said...

கந்தசாமி
எதை ரசித்தீர்களோ .. அதற்கு நன்றி

Unknown said...

அய்யா

பதிவுலகத்துக்கு வந்த பின் வஹாபி,சூபி, சொர்க்கபிரியன் பத்தி எல்லாம் தெரிஞ்சு கொள்ளாம இருக்க முடியுமா???

:-)

Post a Comment