Monday, April 01, 2013

649. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ....










*



http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/8198603525/in/set-72157632823757135/




மேலே உள்ள தொடுப்பில் உள்ள மயில் படத்தைப் பார்த்தீர்களா??

இப்படியெல்லாம் சிலர் படம் எடுக்கிறாங்களேன்னு எனக்கும் ஒரு ஆசை வந்தது. நாமும் இது மாதிரி மயிலைப் படம் எடுத்துரணும்ன்னு ஒரு ஆசை.அதற்காகவே நானும் ஒரு நாள் படம் எடுக்கப் போனேன். போனது ஒரு வான்கோழிப் பண்ணை. ஆனால் என்னைக் கூப்பிட்டுப் போனவர் அங்கே வான்கோழியும், மயில்களும் இருக்கும் என்றார். ஆனால் விஷயம் என்னன்னா ... அங்கே வான்கோழி வளர்க்கிறார்கள். சரியான காட்டுப் பகுதி. அங்கு மயில்களும் சுதந்திரமாக அலைகின்றன.

ஆனால் அவை ஒன்றும் பக்கத்தில் வந்து தொலைப்பதில்லை. அதுல எடுத்தா படம் இப்படித்தான் வந்தது. நம்ம ஆடும் ஆட்டத்திற்கு வரும் மயில் இம்புட்டு தான்.  :(  அடவந்ததே வந்ததே ஒரு ஆண்மயில் தோகையோடு வரக்கூடாதா? ஒரு பெண் மயில். அதுவும் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அலச்சல் காமிக்குது. நம்ம ஆக்கத்திற்கு கிடைத்த படம் இது தான். எல்லாம் தலவிதி !!


ஆனாலும் வந்ததே வந்தோம். எடுக்கிறவங்க மயிலை எடுத்தா எடுக்கட்டும். நம்ம வசதிக்கு வான் கோழி தான் அமையுதுன்னு நினச்சிக்கிட்டு அவைகளைச் சில படம எடுத்தேன். ஒரே வான்கோழிக் கூட்டம். கும்மலா நிக்குது. எதைப் படம் எடுக்கிறது ... எப்படி எடுக்கிறதுன்னு குழப்பம். அங்க இருக்க ஆளுக கிட்ட கேட்டிருந்தா ஒரே ஒரு கோழியைத் தனியா விட்டுருந்திருப்பாங்களாம். நான் அவங்க கிட்ட கேக்கலை. கண்ணுக்குக் கிடச்சதை ... சுட்டேன். ஒண்ணு ரெண்டு தோகையெல்லாம் விரிச்சிக்கிட்டு நின்னுதுக... எதோ போனா இவன் போறான் என்ற நினைப்பில் அப்படி கொஞ்சம் போஸ் கொடுத்ததுக.  நானும் அதுகளைத் தனியா எடுக்க முடியாவிட்டாலும் கொத்தோடு கூட்டத்தோடு எடுத்தேன்.







ஒரு சந்தேகம். அத்தனை மயில் நின்னப்போ அந்தப் படம் எடுத்தவங்களுக்கு முன்னால் ஏன் ஒரே ஒரு மயில் மட்டும் அம்புட்டு தோகையையும் விரிச்சிக்கிட்டு அழகா தனியா நின்னு, ஆடி போஸ் கொடுக்குது?  ஏதும் மந்திரம் போட்டுருவாங்களோ? என்னமோ ஒரு “சூச்சுமம்” இருக்குது! நமக்குத்தான் அது தெரிய மாட்டேங்குது. :(

எப்படியோ ...! கான மயிலாட கண்டிருந்த வான்கோழி மாதிரி நானும் வான்கோழிப் படங்களை இப்படி எடுத்தேன். அம்புட்டு தான் நம்மளால முடிஞ்சது ..... அததுக்கு கொடுத்து வைக்கணுமா இல்லியா ...???!!








*



5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா... நல்லது சார்... வான் கோழி படங்கள் நல்லாத்தான் இருக்கு... ஆனா பாவமா இருக்கிற மாதிரி இருக்கு...!

ராமலக்ஷ்மி said...

படங்கள் எல்லாம் அருமை. 4.5-ம் மிக அருமை.

மந்திரமெல்லாம் போடாமலே ஆடியது அன்று சுழன்று சுழன்று http://tamilamudam.blogspot.com/2013/01/3.html என் கேமராவுக்கு மட்டும்! என்ன மாயமோ எனக்கும் தெரியவில்லை:)!
P&S-ல் எடுத்த வெள்ளை வான்கோழியும் குஞ்சும்: http://tamilamudam.blogspot.com/2010/03/pit.html!

மயில்களைப் படமெடுக்கச் சிறந்த இடம் மைசூர் aviary. ஒருமுறை போய் வாருங்களேன்:)!

ஜோதிஜி said...

தெகா மிகச் சிறந்த புகைப்பட கலைஞன். உங்களுக்குத் தெரியுமா? சமீப காலமாக இந்த கலை மேல் அதிக ஆர்வம் வந்து கொண்டே இருக்கிறது.

வவ்வால் said...

தருமிய்யா,

மதுரைக்காரவுகளா இருந்துக்கிட்டு மயிலு எங்கன இருக்குனு தெரியாமலா இருக்கீக, ஒத்தக்கடை பக்கம் போய் வயக்காடு இல்லைனா அங்க இருக்க அக்ரி காலேஜ் உள்ல காலங்கார்த்தால போன சுலுவா மயிலார் போஸ் கொடுக்கார், நான் கூட மொபைலில் படம் எடுத்தேன்,ஆனால் டான்ஸ் ஆடனும்னா ஒரு பெண்மயிலும் கண்னுக்கு எட்டின தூரத்தில நிக்கோணும் , மயிலார் டான்ஸ் ஆடுறதே பொண் மயில கவுக்கத்தேன் :-))

திருப்பதி மலையடிவாரத்துல இருக்க மயிலுக எல்லாம் காராசேவு தின்னுட்டு நல்லா போஸ் கொடுக்கிறாங்க, அடுத்த தபா, காரா சேவு, கடலைனு ஒரு பாக்கெட் வாங்கிட்டு போயிப்பாருங்க காரியம் சித்தி/சித்தப்பாவாகும் :-))

தருமி said...

அட போங்க வவ்வால், மயில் எதுத்தாப்ல வந்து நின்னாலும் நல்லா படம் எடுக்கத் தெரியணும்ல .. அந்தப் பாய்ண்ட் தான ஒதைக்குது!!

:-(

Post a Comment