Friday, January 31, 2014

708. யூதாஸின் நற்செய்தி ...1





*

***



*


THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
GREGOR WURST

1600 ஆண்டுகளாக மறைந்து கிடந்த ரகசியம். தொலைந்து போன இந்த புதிய ஏற்பாடு மீண்டும் அறிஞர்களின் கைகளுக்குப் மறைந்து கிடந்த புதையலாக்க் கிடைத்த போதும், அறிஞர்கள் அவைகளைப் படித்துப் புரிந்த போதும் பல அவர்களை ஆச்சரியப்பட வைத்தன. கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்து யார் கண்ணிலும் படாத இந்த நூல், இப்படி ஒரு நூல் இருக்கும் என்பதை யாரும் தெரிந்து கொள்ளாத ஒரு நூல், யூதாஸ் இஸ்காரியோத் என்ற வரலாற்றின் பெரும் நம்பிக்கைத் துரோகி தன் நிலையில் இருந்து எழுதிய இந்த நூல் அறிஞர்களின் கையில் கிடைத்த போது, அந்த நூல் யூதாஸ் ஒரு வில்லன் அல்ல; அவர் ஒரு மகா மனிதன் என்பது தெரிய வந்தது.

இந்த நூலில் ஏசு தன்னைக் காட்டிக் கொடுக்கும் படி யூதாஸைக் கேட்டுக் கொள்கிறார். நமக்குத் தெரிந்த புதிய நற்செய்திகளில் சொன்னது போலின்றி, யூதாஸ் ஏசுவின் சீடர்களிலிலேயே சிறந்த ஒரு மனிதனாகத் தோன்றுகிறார். ஏசுவை முழுமையாகக் கண்டறிந்த ஒரே சீடராக யூதாஸ் இருக்கிறார்.

இந்த நூல் இந்த அரும்பெரும் நற்செய்தியை முதன் முதல் தரும் நூலாகும். இதுவரை திருச்சபையினரால் அதிலும் முக்கியமாக புனிதர் ஐரீனியஸ் (St. Irenaeus) என்பவரால் பொய்த் தகவலாகக் கருதப்பட்டது இந்த நூல். 1970ம் ஆண்டு மத்திய எகிப்திய நாட்டுப் பகுதியில் மறைந்துகிடந்த இந்த நூல் சில விவசாயிகளால் கண்டு பிடிக்கப்பட்டு வெளி வந்தது. அதன் பின் பலரின் கைகள் மாறி மாறி, பல வர்த்தகர்களின் கைகளின் வழியாகவும் வந்த இந்த நூல் பல இடர்ப்பாடுகளையும் கடந்து மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்தது. இறுதியில் 2001ம் ஆண்டு இந்த நூல் சரியான ஆய்வாளர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. புதிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. சிதைந்த பாகங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

யூதாஸின் இந்தப் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருந்த காப்டிக் (Coptic) மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனோடு கிறித்துவ மதத்தின் ஆரம்ப நிலை பற்றியும், ஏசுவின் கொள்கைகளை விளக்கும் ஆதாரமாகவும் இந்நூல் உள்ளது.

நூலின் ஆசிரியர்கள் பற்றி சில குறிப்புகள்:

RODOLPHE KASSER, Ph.D.
காப்டிக் மொழியின் வல்லுனராக உலகத்திலேயே மிகவும் பெயர் பெற்றவர். இப்போது ஜெனிவா பல்கலையில் பணி புரிகிறார். இவர் யூதாஸின் நற்செய்தி, மேலும் மூன்று புது காப்டிக் மொழியில் உள்ள நற்செய்திகள் (Coptic Gnostic texts) மேல் பணியாற்றியவர். (Gnostic) பற்றிய மேலதிக விவரங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.)

MARVIN MEYER, Ph.D.
Griset Professor of Bibloe and Christian Studies at Chapman University and Director of the Chapman University Albert Schweitzer Institute.
A foremost scholar on Gnosticism, the Nag Hammadi Library and texts about Jesus outside the New Testament.

GREGOR WURST, Ph.D.
Professor of Ecclesiastical History and Patristics at the University of Augsburg, Germany

BART D. EHRMAN, Ph.D.
James A. Gray Distinguished Professor and Chair of the Department of Religious Studies, University of North Carolina at Chapel Hill.
கிறித்துவத்தின் ஆரம்ப கால வரலாற்றாய்வாளர்.

இந்நூல் உலகப் புகழ் பெற்ற NATIONAL GEOGRAPHIC SOCIETY மூலமாக முழு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, 2006ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதே இந்த நூலின் முழு உண்மைக்கு பெரும் சான்றாக இருக்கும்.


நூலின் பின்னட்டையில் உள்ள குறிப்பு

1600 கண்ணில் படாத, மிகவும் விவாத்த்திற்குரிய இந்த யூதாஸின் நற்செய்தி எகிப்திலுள்ள குகை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட்து. நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி (National Geographic Society) கண்டெடுக்கப்பட்ட பழம் ஏடுகளின் காலத்தையும், உண்மைத் தனத்தையும் மிகச் சரியாகக் கணிக்க முனைந்த ஏற்பாடுகளைச் செய்த்து. ரேடியோ கார்பன் முறையைப் பின்பற்றி அதன் சரியான கால அளவு கணக்கிடப்பட்டது. மிகச் சிறந்த ஆய்வாளர்களின் மூலம் ஏடுகளின் சரியான மொழி பெயர்ப்பும், அவைகள் தோன்றிய காலமும், ஏடுகளின் சமய, வரலாற்று உண்மைகளும் கண்டுபிடிக்கப் பட்டன.







முன்னுரை

’யூதாஸின் முத்தம்’ என்பது கிறித்துவத்தில் ஒரு முக்கிய, அவமதிப்புக்குரிய சொல்லாக அமைந்து விட்டது.

யூதாஸ் ஏசுவின் சீடர்களுள் மிக முக்கியமானவர்.  ஜான் நற்செய்தியில் சொன்னபடி யூதாஸ் ஏசுவின் பொருளாளராகவும் இருந்திருக்கிறார்.(2)

யூதாஸின் நற்செய்தியில், மற்ற நற்செய்திகளில் போலன்றி, ஏசு மிக்க மகிழ்ச்சியுடையவராக, சிரித்து மகிழ்ந்தவராகக் காட்டப்பட்டுள்ளார்.(4)

மரணத்திற்கு பின் ஏசுவிற்குக் கிடைக்கும் விடுதலையினால் அவர் தன் வீடான மோட்சத்திற்குச் செல்கிறார். இந்த நிறைவான நிகழ்ச்சி யூதாஸின் துரோகத்தின் மூலமே நடந்தேறுகிறது.

கிறித்துவத்தின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இப்போது நமக்குத் தெரியும் நான்கு நற்செய்திகளோடு மேலும் பல நற்செய்திகள் எழுதப்பட்டன. அவ்வாறு முழுமையாகவோ. அரை குறையாகவோ கிடைக்கப்பட்ட நற்செய்திகளில் சில  – உண்மையான நற்செய்தி(Gospel of Truth) , தாமஸ், பீட்டர், பிலிப், மேரி, எபியோனைட்டுகள் (Ebionites),  நஸரேனியர்கள்(Nazoreans),  ஹீப்ரு, எகிப்திய நற்செய்திகள். இதைப் போலவே யூதாஸின் நற்செய்தியில் ஏசு யார் என்பதும், அவரை எப்படிப் பின்பற்றுவது என்றும் எழுதப்பட்டுள்ளன.

யூதாஸின் நற்செய்தி Gnostic Gospels  என்றழைக்கப்படுகிறது. (Gnostic Gospels  - இரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுபாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நற்செய்திகளைத் தவிர இருந்து வந்த ஏனைய நற்செய்திகளை அழிக்க முயற்சியெடுத்தனர். அப்போது பல நூல்கள் பதுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. இது போன்ற நூல்கள் Gnostic Gospels  என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.  Gnostic என்றால் அறிவு / knowledge என்று பொருள் தரும்.) இங்கு கூறப்படும் அறிவு கடவுளைப் பற்றிய அறிவு – mystical knowledge, knowledge of God and essential oneness of the self with God – என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. (5)

Gnostics  வைத்திருந்த ஆன்மீகம் ஏனைய சாதாரண கிறித்துவர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தது. கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பில் இடைத் தரகர் ஏதும் தேவையில்லை. கடவுள் நம்முள் ஆன்மாகவும், ஒளியாகவும் உள்ளார் என்பது அவர்களது கருத்து. இது அப்போதிருந்த கிறித்துவத் தலைவர்களுக்குப் பிடிக்காது போயிற்று. இதனால் இந்த இரு கிறித்துவக் குழுகளுக்கு நடுவே போட்டியும், பகையும் வளர்ந்து வந்துள்ளன.

யூதாஸின் நற்செய்தியின் படி எதிரணியினர் கடவுளின் ‘கையாட்களாக’ வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணுலகை ஆட்சி செய்து அலங்கோல வாழ்க்கை நடத்தவே விரும்புகின்றனர் என்று சொல்கிறது. (6)

Gnostics ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனான சேத் என்பவரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள். இதனாலேயே Gnostic கருத்துக்கள் ’சேத்தியன் கருத்துக்கள்’ என்று கருதப்பட்டன. காயின், ஏபேல் பிரச்சனைக்குப் பின் வந்த சேத் மனித இனத்தின் புதிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். இவர்கள் ‘விழித்தெழுந்த மனித குலம்’ என்று கருதப்படுகிறார்கள்.

Gnostics-களுக்கு மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பது பாவமல்ல; அறியாமையே. இதனை நம்பிக்கையால் அல்ல, அறிவால் தான் வெல்ல வேண்டும்.  யூதாஸின் நற்செய்தியில் ஏசு அறிவால் எப்படி அறியாமையை வெல்லலாம் என்றும், அதன் மூலம் கடவுளை அறியவும், அடையவும் வேண்டும் என்று சொல்லப் படுகிறது.

இவைகளெல்லாம் இப்போதைய நம்பிக்கையாளர்களுக்குப் புதிய சவால்களாகத் தோன்றும்.

ஆனால் கிறித்துவத்திற்குள் எழுந்த இப்போட்டியில் ரோம, அடிப்படைக் கிறித்துவர்களுமே வெற்றி கண்டனர். (7)

Borges என்ற அறிஞரின் கருத்துப் படி ‘அலெக்சாண்டிரியாவிற்கும் ரோமிற்கும் நடந்த போட்டியில் ரோம் வென்றது.  இதனாலேயே யூதாஸின் நற்செய்தியும் தோற்றது’ என்கிறார்.  இந்த ‘போர்கள்’ எல்லாம் இரண்டாம், மூன்றாம், நான்காம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுகள்.

யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டவை எல்லாம் மிகவும் உன்னதமான, பிரபஞ்சத் தத்துவமாக இருக்கிறது( ... illustrates a theology and cosmology that are still quite sophisticated.).(8)

யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் ஏசுவின் நல்ல ஒரு சீடராகக் காண்பிக்கப்படுகிறார். இந்த நற்செய்தி யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுப்பதோடு முடிகிறது. ஏசுவின் இறப்பு இதில் சொல்லப்படவில்லை.(9)

யூதாஸ் ஏசு சொல்லாத எதையும் செய்யவில்லை. ஏசுவை உன்னிப்பாகக் காது கொடுத்து கேட்கிறார். ஏசுவுக்கு மிகவும் உண்மையான சீடராக இருக்கிறார்.(10)

இந்த நூல் கிறித்துவத்தின் ஆரம்ப காலத்தில் வாசிக்கப்பட்டு, பின் எகிப்து தேசத்தில் முழுமையாக மறைக்கப்பட்டு விட்டது. 1970ல் மத்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏட்டுச் சுவடிகள் – Codex Tchacos – என்றழைக்கப்படுகின்றன. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின் இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காப்டிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் 180 வருடம் இளம் கிறித்துவத்தில் பெரும் தலைவராக இருந்த ஐரினேய்ஸ் (Irenaeus of Lyon) தனது நூலில் -  Against Heresies  - யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (11)

இன்னும் சில பக்கங்களில் எப்படி இந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு, பதிவிடப்பட்டது என்பது விளக்கப்படுகிறது.


************








******








*






Thursday, January 30, 2014

711. யூதாஸின் நற்செய்தி ... 3





*** 



***





*



THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
GREGOR WURST


 யூதாஸின் நற்செய்தி


*



 Passover-க்கு முந்திய 3 நாட்களில் ஏசு யூதாஸிடம் தனியாகப் பேசுகிறார். (19)

ஏசு உலகத்தின் அதிசய பக்கங்களைப் பற்றி தன் சீடர்களிடம் பேச ஆரம்பித்தார்.(20)

ஒரு நாள் சீடர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவர்களைப் பார்த்து ஏசு சிரிக்கிறார். ஏனென்று சீடர்கள் கேட்க, ஏசு, ‘நீங்கள் ஜெபிப்பது நீங்களாகவே செய்யவில்லை; ஆனால் இதன் மூலம் உங்கள் கடவுளைப் புகழ்வதாக நினைத்துச் செய்கிறீர்கள்’ என்றார். சீடர்களோ, ‘நீர் தானே கடவுளின் மகன்’ என்கிறார்கள். அதற்குப் பதிலாக ஏசு, ‘உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? உண்மையாகவே உங்களிடமிருந்து வரும் எவரும் என்னைத் தெரிந்து கொண்டவர்களில்லை’ என்றார். (21)

கோபமுற்ற தன் சீடர்களிடம் ஏசு, ‘உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுள்ளே உள்ள கடவுள் உங்கள் ஆன்மாவிற்குக் கோபத்தைக் கொடுக்கிறார். உங்களில் யாராவது ஒருவர் தன்னை முழு மனிதனாக நினைத்தால் அவன் என் முன் வரட்டும்’ என்றார்.
எல்லோரும் எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது என்றார்கள், இருந்தும் யாரும் அவருக்கு முன் வரவில்லை.
அப்போது யூதாஸ் அவருக்கு முன்னே வந்து நிற்கிறார். ஆனால் அவரும் ஏசுவை கண்ணோடு கண்ணாகப் பார்க்காமல், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு நின்றார்.

யூதாஸ் ஏசுவிடம், ’நீர் யாரென்பதும், எங்கிருந்து வந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். நீர் என்றும் அழியாத பார்பெலோவிலிருந்து (Barbelo) வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியவரின் பெயரைச் சொல்லவும் எனக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்றார்.(21,22) (Barbelo is the divine Mother of all, who often is said to be the Forethought (pronoia) of the Father, the Infinite One. )

இதன் பின் ஏசு யூதாஸ் இஸ்காரியோத்துடன் தனியே பேசுகிறார்.

‘மற்றவர்களிடமிருந்து நீ தனித்திரு; உன்னிடம் என் ராஜ்ஜியத்தின் மர்மங்களைச் சொல்லுவேன்’ என்கிறார். (22)

அடுத்த நாள் ஏசு தன் சீடர்களின் முன் தோன்றுகிறார். எங்களை விட்டு விட்டு எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்ட தன் சீடர்களிடம், ‘இன்னொரு புனிதமான குழுவினரிடம் சென்று வந்தேன்’ என்கிறார்.
சீடர்கள், ‘எங்களை விடப் புனிதமான, உயர்வான அந்தக் குழு எங்கேயுள்ளது? அதுவும் இந்த உலகத்தைச் சார்ந்ததுவா?’ என்று கேட்கிறார்கள்.
ஏசு அவர்களைப் பார்த்து உரத்துச் சிரிக்கிறார். அவர்களை நீங்கள் யாரும் பார்க்க முடியாதென்கிறார். இதைக் கேட்டு சீடர்கள் குழப்பமடைந்து, பேச ஏதுமின்றி நிற்கிறார்கள். (25)

சீடர்கள் ஒரு பெரிய கோவிலைக் காண்கிறார்கள்; அதனை விவரிக்கிறார்கள்: ஒரு பெரியகோவிலைத் தாங்கள் கண்டதாகவும் , அதன் பீடத்தின் முன் பன்னிரு குருக்கள் தங்கள் பலிப்பொருளோடு காத்திருப்பதாகவும் கூறினார்கள்.

ஏசு அந்த குருக்கள் எப்படியுள்ளனர் என்று கேட்கிறார்.

அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பலியிட தயாராக உள்ளனர்; மற்றவர்கள் தங்கள் மனைவியர்களைப் பலியிடத் தயாராக உள்ளனர். அவர்கள் தங்களை மிகவும் தாழ்த்திக் கொண்டுள்ளனர். சிலர் மற்ற ஆண்களோடு உறவு கொண்டுள்ளனர்; சிலர் கொடுஞ்செயல்களோடு தொடர்பு கொண்டுள்ளனர்; பலர் பெரும் பாவங்களைச் செய்து கொண்டிருந்தனர்; சட்டத்துக்குப் புறம்பானவர்களாக இருந்தார்கள். பீடத்தின் முன்னாலிருந்த அனைவரும் உம்முடைய பெயரை முன்னெடுத்து வைத்தார்கள். இதைச் சொல்லி விட்டு சீடர்கள் மன உளைச்சலோடு, அமைதியாக நின்றார்கள்.(26)

 யூதாஸ் ஏசுவிடம், ‘நானும் ஒரு காட்சி கண்டேன்’ என்று சொல்ல, அதைப் பற்றிச் சொல்ல யூதாஸை அழைக்கிறார். யூதாஸ் ஏசுவிடம், ‘என் காட்சியில் எல்லா சீடர்களும் என் மேல் கல்லெறிவது போல் கண்டேன். .. ஒரு பெரிய வீட்டின் முன் நான் நிற்கிறேன். அந்த வீட்டின் நடுவில் பெருங்கூட்டமாக மக்கள் நிற்கிறார்கள். என்னை அழைத்துச் செல்லும் என்று நான் உம்மை நோக்கி முறையிடுகிறேன்’ என்றார்.

ஏசு பதிலாக, ‘ நீ கண்ட வீட்டினுள் நுழைய சாதாரணமானவர்களுக்குத் தகுதியில்லை. அவ்வீடு மிகவும் புனிதமானவர்களுக்கானது’ கூறுகிறார்.

யூதாஸ் தன் விதியைப் பற்றி கேட்கிறார்: ... ‘நீ பதின்மூன்றாவது ஆளாக மாறி, ஏனையோரை ஆட்சி செய்வாய். இறுதி நாளில் நீ உயர்த்தப்படுவதால், மற்றவர்கள் உன்னைச் சபிப்பார்கள்.

அதன் பின் ஏசு யூதாஸிடம் பிரபஞ்சம், நரகம், ’புரட்சியாளன்’ என்ற பொருள் கொண்ட ‘நெப்ரோ’ என்ற சம்மனசு, சக்லாஸ் என்ற இன்னொரு விண் தூதர், மோட்சம் பற்றி விளக்குகிறார்.

மோட்சத்தினை ஆளும் பன்னிருவரில் ஐந்து பேரின் பெயர்களை ஏசு கூறுகிறார். முதல் தூதர் சேத்; இவர் கிறிஸ்து என்றழைக்கப்படுகிறார். மனிதனைப் படைத்தல்: சக்லாஸ் தன் கீழ் உள்ள வான தூதர்களிடம், ’மனிதர்களைப் படைப்போம்’ என்கிறது. பின் ஆதாமும், ஏவாளும் படைக்கப்படுகிறார்கள். ஏவாள் மேகங்களின் ஊடே ஸோ – Zoe – என்றழைக்கப்படுகிறாள்.

யூதாஸ் காட்டிக் கொடுத்தல்:
’ஆனால் நீ மற்றவர்கள் எல்லோரையும் தாண்டிச் சென்று, என்னை உடுத்துபவரை நீ பலியிடுவாய்’ என்று ஏசு சொல்கிறார்.

ஏசு ‘உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். உன் கண்களை வானை நோக்கி உயர்த்தி, மேகங்களையும், அதனூடே இருக்கும் ஒளியையும், விண் மீன்களையும் பார். உன்னை வழிநடத்தும் விண் மீனே உனது விண் மீனாகும்’ என்றார்.

யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்கிறார்:

அவர் ஜெபிப்பதற்காக ஒரு பெரிய அறைக்குள் நுழைந்ததும் பெரிய குருமார்கள் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் ஜெபிக்கும் போதே அவரைக் கைது செய்ய பலர் தயாராக இருந்தனர். ஏனெனில் அவரை எல்லோரும் பெரும் போதகர் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் நேரே யூதாஸிடம் வந்து, ‘நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ ஏசுவின் சீடன் தானே?’ என்று கேட்டார்கள்.

யூதாஸ் அவர்கள் கூறிய படியே தனது பதிலைச் சொன்னார்.

அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர் ஏசுவை அவர்களிடம் கையளித்தார்.


***

இந்த நற்செய்தி முழுமையும் இப்பக்கத்தில் உள்ளது.


 *****


*
********************** *

707. தருமியின் சின்னச் சின்னக் கேள்விகள் -- 22





*


 அது என்னமோங்க .. திரைப்படங்கள் பற்றி நான் எழுதுவது கம்மி தான். எப்போதோ ஒன்றிரண்டு. ஆனால் அவைகளை திரை மணத்தில் எப்படி சேர்ப்பது என்று இன்றுவரை தெரியாத ஒரு விஷயம். அது எப்படி சேர்க்கணும்?


*

 திரை மணத்தைத் திறந்தால் வரும் பதிவுகளில் செய்திகள் இருக்கிறதோ இல்லையோ.. எக்கச்சக்க விளம்பரங்கள். அவைகளைத் தாண்டி செய்திகளை வாசிப்பது மிகச் சிரமமாக இருக்கிறதே... வேலி தான் தெரிகிறது.உள்ளே இருப்பது படிக்க தலைகீழாக நிற்க வேண்டியதுள்ளது.

யாராவது தமிழ்மண் அட்மின்னுக்குச் சொல்லி ஏதாவது செய்யுங்களேன்.

 இந்த விளம்பரத் தொல்லை நினைவுக்கு வந்ததற்குக் காரணம் தொலைக் காட்சியில் வரும் சில விளம்பரங்கள் தான்.

*

தனுஷ் பெரிய நல்ல நடிகர்னு பெயர் வாங்கியாச்சி. நல்ல படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர். இருந்தாலும் COOL FRESH அப்டின்னு ஒரு வெகு மட்டடடமான விளம்பரத்தில் வர்ரார். எதுக்குன்னு தெரியலை. அதிலும் தன் வழக்கமான mental ரோல் மாதிரி வேறு நடிக்கிறார். எப்படியும் அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள இப்படி ஒரு மட்டமான விளம்ப்ரத்தில் நடிகணுமா?

 காசு கிடைச்சா எந்த விளம்பரத்திலும் நடிக்கணுமா ... அதுவும் நல்ல பெயர் நிறைய வாங்கிய பிறகும்?

 *

 இதே மாதிரி இன்னொரு ஆளு - பிரபு தேவா. BIG BOSS அப்டின்னு ஒரு ஆகப்பாடாவதி விளம்பரம். இதில் ஒரு பாலிவுட் ஆளு வர்ராரு. அந்த ஆளு மூஞ்சே நமக்கு ஆகாது. பெயரும் தெரியாது. அந்த ஆகப்பாடாவதி ஆளோடு சேர்ந்து, பிரபு தேவா ஒரு டான்ஸ் ஸ்டெப் வேற போட்டு ... ஆத்தாடி ...!

 காசு கொடுத்தா இப்படி ஒரு தேறாத விளம்பரத்திலேயும் மூஞ்சைக் காண்பிக்கணுமா, அதுவும் பட இயக்குனருக்கு வடக்கே பிரபு தேவாவுக்கு அம்புட்டு காசாமே!

 *

 நம்ம ஜட்டி விளம்பர சரத்குமார் இருக்காரே .... சாரி... பூமெக்ஸ் பனியனுக்கு வர்ர சரத்குமார் இருக்காரே... என்னமோ ஒரு சட்டை போட்டிருக்கிறார். அதை வைத்து ரோட்டுல போற பொண்ணை அப்படியே லபக்கிடுகிறார். ஆனால் விளம்பரம் பனியனுக்கு.

என்ன சனியனுக்கோ எதுக்கு இந்த மாதிரி மெண்டல் விளம்பரங்கள்?

 *

 பையன் எங்கே போனாலும் பின்னாலே ஒரு நாய் போகுமே ஒரு தொலைப்பேசி விளம்பரத்தில். அந்த விளம்ப்ரத்தையே ஒரு விளம்பரமாகப் பயன் படுத்துகிறார்கள். நன்றாக இருக்கிறது.

ஆனால் விளம்ப்ரம் எடுத்த கம்பெனி பெயரே ஏன் வருவதில்லை? ஏன் விளம்பரக் கம்பெனிகளின் பெயர்களை அவர்களே விளம்பரப் படித்துக் கொள்வதில்லை, ஏதும் கொள்கை முடிவா?  ஏனிந்த வழக்கம்?

 *

 lackeys - என்ற சொல்லுக்குப் பொருள் பார்த்தேன் - A person who tries to please someone in order to gain a personal advantage

 அப்படியானால் lackeys என்பது ’அல்லக்கை’ என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்குமோ? இருக்கும் .. இருக்கும் ..



 *



Saturday, January 25, 2014

706. நான் இந்துவல்ல. நீங்கள் .... ?




*


நான் இந்துவல்ல ... நீங்கள் ...?


தொ. பரமசிவன்



’இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

இந்து என்ற சொல் இந்தியாவிலேயே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ, பிராமண்யங்கள் என்று சொல்லக் கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை; இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த் திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படித்திய சொல். இந்தச் சொல்லுக்கான ’மரியாதை’ என்ன என்று கேட்டால் ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். 

இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லே கிடையாது.  

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே, ”வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்ற பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார்.

1799ல் உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் வந்த பொழுது கல்கத்தாவில் இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்கொண்டாடுவார்கள்.)  உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu Law என்று பெயரிட்டார். அப்பொழுது தான் Hindu  என்ற சொல் முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. (5)


இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும்?

இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப் புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல்.

 நம்முடைய நாட்டிலே என்ன வகையான பழைய இனப் பாகுபாடு எனக் கேட்டால், “ஆரிய” என்ற ஒரு சொல் இருக்கிறது. “திராவிட” என்று ஒரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை ஆகும்.
ஆரியம், திராவிடம் என்ற சொற்களுக்கு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படியொடு வரலாறு கிடையாது. (6)


ஒரு மதம் என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமைய வேண்டும். ஒரு முழு முதற் கடவுள், ஆகமங்கள், குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன அவை. இந்து மதத்திற்கு அல்லது அப்படி அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு இவை ஏதுமில்லை. (7)

ஆதி சங்கரருக்குப் பிறகு பெரும்பாலும் அத்வைத மரபு சார்ந்தவர்கள். இவர்களுக்கு பரமார்த்திகத்திலே அதாவது உயர்ந்த தத்துவ நிலையிலே கடவுள் என்று ஒருவர் கிடையாது. எனவே, இது ஒரு மறைமுக நாத்திகம். (8)

வேதத்தை ஓதுபவர்கள் ஸ்மார்த்தர்கள். வடமொழி வேதத்தை மட்டும் கடவுள் போலக் கொண்டாடுபவர்கள். (9)

’முன்னோர்கள் போல’ என்று சொல்லுவதற்கு ‘சனாதனம்’ என்று அர்த்தம். இந்த வார்த்தையை முன்பு அடிக்கடி சொல்வார்கள். இவர்கள் சொல்லுவது படி பார்த்தால் … இவர்களின் முன்னோர்கள் என்ன செய்தார்கள். பிறவி ரீதியாக மக்களை மேல் கீழாக அடுக்கி வைத்தார்கள். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பிரித்து வைத்தார்கள். (13)

பிறப்பினாலே சைவ சமயத்தைச் சார்ந்தவருக்குத் தான் தீட்சை கொடுக்கும். ஆனால் வைணவ மதம் தாழ்த்தப்பட்டோருக்கும் தீட்சை கொடுக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையிலிருக்கிறது. ஒரு தாழ்த்தப்பட்டவர் வைணவ தீட்சை பெற்று வைணவராகலாம். தீட்சை பெற்று வைணவரானவுடன் தீட்சை பெற்றவர்கள் யாரும் யாருடைய சாதியையும் கேட்கக் கூடாது. ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட வேண்டும். ஆனால் இன்று எல்லோருமே ‘இந்து’ என்ற போர்வையிலே தலித்துகளை வெறுப்போடு தள்ளிவைத்துப் பார்க்கும் பார்வைதான் உள்ளது. இராமானுசரின் சாதி எதிர்ப்புக் குரல் தோற்றுப் போய்விட்டது. (15)


வர்ணாசிர தர்மம் என்பது தமிழ் நாட்டிலே ஒரு போதும் நடை முறையிலே இருந்ததில்லை. … வேளாளர் என்று சொல்லக்கூடிய சைவ மடங்களை வைத்திருப்பவர்கள் வருணதரும கணக்கின்படி சூத்திரர்கள். ஆனால் நடைமுறையிலே பிராமணர்களுக்கு அடுத்த உயர் சாதி நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? வருணாசிரம தருமம் இங்கு நடைமுறையில் இல்லை. இங்கே சாதி தான் இருக்கிறது. எனவே கோவில் சாதி பேணுகிறதே தவிர வருணாசிரம தர்மத்தைப் பேணவில்லை.(16)


மதச் சிறுபான்மைச் சமூகங்கள் --  சாதியினால் தாழ்ந்தவர்கள் எந்தக் கோவில் அவர்களுக்குத் திறந்திருந்ததோ அந்தக் கோவிலுக்குள் போய் விட்டார்கள்; எனவே ’இங்கிருந்து துரத்தப்பட்டவர்கள்’ என்று சொல்வது தான் பொருத்தம்.  ... உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எல்லா மதங்களுமே ஒரு கட்டத்தில் ஆயுதத்தை ஏந்தி அடுத்த மதத்தை ஒடுக்கிய மதங்கள் தான்.   ... சாதி ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும், அரசியல் அதிகார ஆதிக்கமும், பலமும் உடையவர்களாலே கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் விரட்டப்பட்டார்கள் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்.இங்கு அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போன இடத்திலே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இவர்களுக்குப் பிடிக்கவில்லை.   (19)


இப்பொழுது அந்த ‘கிறிஸ்தவர், இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்வதை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’ என்னும் பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கி விட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும் மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். (20)




*




705. நான் ஏன் இந்து அல்ல ....7




*





*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*


இந்துக்களின் மரணமும் நம்முடைய மரணமும்
6

 ஒரு சாதியில் பிறந்து விட்ட பிறகு நம்மில் மிகச் சிலரே சாதிக் கலாச்சாரத்தை விட்டு உணர்வோடு வெளியேறுகிறோம்.

 ஒரு பார்ப்பனன் என்பவன் உயிர்வாழ்வது என்பது சாவதற்கே என்று எண்ணுகிறான். சாவே முக்தியைக் கொடுக்கும் என்று நம்புகிறான். (148)

தலித் பகுஜன்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அது இவ்வுலக வாழ்க்கை மட்டுமே. நாம் ஒரு முறை மட்டுமே பிறக்கிறோம்; ஒரு முறை மட்டுமே இறக்கிறோம். (154)

தலித் பகுஜன்கள் ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ அல்லது ஒரு கோழியையோ பலி கொடுத்து அதில் ஒரு பகுதியைக் கடவுளுக்குப் படைக்கிறார்கள். அதுவும் வளமான ஒரு வாழ்க்கை வேண்டியோ, சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற தேவையின் அடைப்படையிலோ நடப்பதல்ல. பயம் என்பது முற்றிலும் கிடையாது என்பதல்ல. ஆனால் பயம் குறித்து தத்துவ நியாயம் ஏதும் தலித் பகுஜன்களிடம் இல்லை. பயத்திலிருந்து விடுதலை அடைய  கடவுளின் ஆசி தேவையில்லை..(156)

இறந்தவர் உடல் முன் தண்ணீர் எடுத்துச் செல்வது ஒரு வழக்கம். அது முக்கியமான நிகழ்வாகும். அதைக்கூட (தலித் பகுஜன்) பெண்ணே செய்கிறாள். இங்கே மகன் என்பவன் வயதான பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டியவனாகக் கருதப்படுகிறான். சொர்க்கத்தில் இடம் தேடித் தருபவனாக இல்லை. சொர்க்கம் என்கிற கருத்துக்கே இங்கே இடம் இல்லை. (158)







7
நமது குறிக்கோள்: தலித் மயமாதல்
இந்து மயமாதல் அல்ல


சுதந்திரப் போராட்டத்தின் போது பார்ப்பனத் தலைவர்களும் அவர்கள் கருத்தியல்களும் சாதிக்கு எதிரான சமத்துவக் கருத்தினை உருவாக்க முயற்சிக்கவில்லை.
மொகலாயர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஆட்டங்கண்ட பார்ப்பன சாதிவெறி சக்திகளை மறுபடியும் நிர்மாணிக்கத் தேவையான அக்கருத்தியலையும் உதவிகளையும் செய்தார்கள். பார்ப்பனிய தேசியத்தைக் கட்டியெழுப்புவதின் ஊடாக ராசாராம் மோகன்ராய், காந்தி ஆகியோரும் வெவ்வேறு கால கட்டங்களில்  மேல்சாதி ஆதிக்கத்தை நிறுவுவதற்குத் தம்மால் இயன்ற பங்காற்றினார்கள். (162)

விடுதலைக்குப் பிறகு இந்த ஆதிக்கச்  சக்திகளே அனைத்து வகையான அதிகாரங்களையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

கல்வியில் இட ஒதுக்கீட்டின் விளைவாக தலித் பகுஜன அறிவு ஜீவிகள் எழுச்சியுற்று நவீனப் பார்ப்பனியத்தைப் பல்வேறு நிலைகளில் சிதறடிக்க முயன்றார்கள். பார்ப்பனிய  மேட்டிமைச் சக்திகள் இதனை உணர்ந்து கொண்டு தம்மை வெறி கொண்ட இந்துத்துவ அமைப்பாக வடிவமைத்துக் கொண்டு, மண்டல் எதிர்ப்புக் கருத்தியலை பரப்பின.

இந்துமயமாக்கக் கொள்கையை நாம் இரண்டு வழிகளில் முழுமையாக எதிர்க்கிறோம். ஒன்று: இந்துத்துவா ஒரு நாளும் மனிதத் தன்மையான தத்துவமாக இருந்ததில்லை. மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலித்பகுஜன்களின் வேதனை மிக்க  வாழ்வே இந்தக் கொடூரத்தன்மைக்கும் சான்றாக அமைகிறது. இரண்டு: எதிர்காலத்திலாவது இந்து மதம் மனிதத் தன்மை உடையதாக மாறப்போவதாக அறிவித்தாலும் அதற்கான சாத்தியமே இல்லை. ஏனென்றால் மதங்களின் வரலாறே இன்று முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. (163)

தலித் மயமாக்குதல் -  தலித் பகுஜன்கள் தான் கிராம சமுதாயத்தில் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு உழைக்கும் சக்தியே சொத்தாகும்.

இதற்கு மாறுபட்ட நிலையில் மேல்சாதியினர் உற்பத்தி சாராத சோம்பேறிகளாக உள்ளனர். என்றென்றைக்கும் சொகுசான வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தின் விளைவாக அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள் சிதைந்து போனவையாக உள்ளன. (167)

உற்பத்தி சார்ந்த வேலையிலிருந்து விலகியிருப்பதால் தான்  பார்ப்பனிய இந்து சமூகம் தனிவுடைமைக் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. (168)

தலித் பகுஜன்களுக்கு உழைப்பே வாழ்க்கை. வயிற்றுக்கு உணவு எப்படியோ அவ்வாறே உடலுக்கு உழைப்பு என்பது பழக்கமாகி விட்டது. (169)

தலித் பகுஜன்களுக்கு உழைப்பே வாழ்க்கையாக இருக்கிறது. இந்துக்கள் இதைத் தலைகீழாக்கி ஓய்வுக்குப் பிறகு தான் உழைப்பு என்றார்கள்.  ஓய்வே வாழ்க்கை என்கிற பழைய கோட்பாடு வாத்ஸ்யாயனின் காம சூத்திரம் என்ற நூலில் முன்மொழியப் பட்டுள்ளது. (172)

மண்டல் இயக்கமோ உழைப்பே வாழ்க்கை என்பதை உலகப் பொதுவாக்கியது. (173)

பார்ப்பனக் குடும்பங்களில் காணப்படும் சமூக அரசியல் ஆணாதிக்க அமைப்பே இந்திய சமுதாயம் முழுமைக்கான அமைப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது; இதற்கு நேரெதிரான தலித் பகுஜன் குடும்ப அமைப்பு இருப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் சமூக விஞ்ஞானிகளும் பார்ப்பனியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியப் பண்பாட்டையும், வரலாற்றையும் மதிப்பீடு செய்கிறார்கள்.

இந்தியாவில் தலித் பகுஜன் சனநாயகமும் பார்ப்பன சர்வாதிகாரமும் இரண்டு முரண்பட்ட அம்சங்களாகச் சிவில் சமூகத்தில் வெளிப்படுகின்றன. பார்ப்பன அமைப்புகள் சமுதாயத்தையும் அரசியல் அதிகார அமைப்பையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வராதிருந்தால் தலித்பகுஜன் சனநாயக அமைப்புகள் மேலோங்கி உற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கியிருக்கலாம்.(176)

தலித் பகுஜன்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் அழிக்க இந்துத்துவா எவ்வளவோ முறை முயன்றும் அதனால் வெற்றி காண இயலவில்லை. (177)

எதிர்காலம் – வருங்கால இந்தியா தலித்பகுஜன்களின் இந்தியாவாக இருக்கும்.
வரலாறு நெடுக தலித் பகுஜன்கள் துயரங்களையையே அனுபவித்து வந்துள்ளார்கள்.
தலித்துகள் விடிவடைவதன் மூலம் தான் மற்றவர்கள் அதாவது மேல்சாதியினரும் விடுதலையை அடைய முடியும். ஆனால் இந்தப் போராட்டம் துன்பமும் துரமும் நிரம்பியதாகவே இருக்கும். இரண்டு வரலாற்றுப் போராட்டங்களிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. முதல் நிகழ்வு: 1990ல் நடந்த மண்டல் போராட்டம். இரண்டாம் நிகழ்வு: 1993ல் உத்திரப் பிரதேசத் தேர்தல் 1990 நிர்வாகம் தலித் மயமாவதை ஆதிக்க சக்திகள் வன்முறையால் எதிர்த்தார்கள். மண்டல் முழுவின் ஒரு சில பரிந்துரைகளை நடைமுறைப் படுத்திய காரணத்திற்காக ஜனதா தள அரசைப் பார்ப்பன சக்திகள் கவிழ்த்தன. 1993ல் மாநில அளவில் தலித் பகுஜன் அரசு பதவியேற்றதும் உத்திரப் பிரதேச சட்டசபையைப் பார்ப்பன சக்திகள் ரத்தக் களறி ஆக்கின. 1993 டிசம்பர் 16ல் சட்டசபை கூடியதும் பார்ப்பன ஆதிக்க வெறியர்கள் தலித்பகுஜன்  உறுப்பினர்கள் மீது செருப்புகளை வீச ஆரம்பித்தார்கள். இதுவரை ராட்சதர்கள், மிலேச்சர்கள், திராவிடர்கள், சண்டாளர்கள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்து  விட்டார்களே என்ற ஆத்திரம் அவர்களை வெறி பிடித்தவர்களாக ஆக்கியது. ஆனால் தலித் பகுஜன் சக்திகள் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமது நிலையில் உறுதியாக நின்று அதை எதிர்கொண்டார்கள். பார்ப்பனர்கள் தலித் பகுஜன் சக்தி என்றால் என்னவென்று சுவைத்தார்கள். செய்தித் தாள்களில் இவற்றை நாம் வாசித்தோம். இதுவே வருங்கால வரலாற்றுக்கு முன் மாதிரியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (179)

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாதிகள் கீழானவர்கள் என்கிற கருத்து அவர்கள் சிந்தனையை நஞ்சாக்கி விட்டது. உலகில் உள்ள எந்த ஆளும் வர்க்கமும் இந்திய பார்ப்பனியச் சாதிகளைப் போல மனிதத் தன்மையற்றதாக இல்லை. அவர்களை உற்பத்தி சார்ந்த தொழில்களில் தள்ளி அவர்களுடைய கவனத்தை ஆலயம், அதிகாரம்,அலுவலகம் போன்றவற்றிலிருந்து திசை திருப்புவதன் மூலம் அவர்களிடம் மனிதத் தன்மையை மீளுருவாக்கம் செய்ய்ய வேண்டும். (180)

அதிகாரத்தைக் கைப்பற்றுவது கூட எளிது. ஆனால் தலித் மயமாக்குவதைத் தீவிரப் படுத்தாவிட்டால் கைப்பற்றப்பட்ட அரசியலதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது முடியாததாகி விடும். சம்புக ராஜ்ஜியத்தின் தோல்வியும், இராவண ராஜ்ஜியத்தின் தோல்வியும் புராதன கால நிகழ்ச்சி என்றால், தமிழகத்தில் திராவிடக் கட்சியின் அரசியலதிகாரம் ஒரு பார்ப்பனப் பெண்ணின் கைக்கு மாறியது சமீப காலச் சான்றாகும். தமிழகத்தின் ஆட்சியைப் பார்ப்பன ஆண்கள் கைப்பற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


                                                      


*




Friday, January 24, 2014

704. நான் ஏன் இந்து அல்ல .... 6




*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*                                        4 ......      5 ......


*








 அத்தியாயம்  5

 இந்துக் கடவுள்களும் நாமும் :
நமது பெண் தெய்வங்களும்  இந்துக்களும்



5
உண்மையில் வன்முறை என்பது இந்துத்துவத்தின் முக்கியச் சாதனம். இந்துக் கடவுள்கள் ஆயுத பாணிகளாக இருப்பதற்கு இதுவே காரணம்.


பார்ப்பனக்கோட்பாளர்கள் தெய்வீக ஊக்கம் அல்லது தெய்வீகக் கட்டளை எனும் பேரால் அடிமைத் தனத்தைத் திணித்து, அதை மீறுவது பாவம் என்றும் போதித்து வந்துள்ளனர். … ஆனால் எந்த மதமும் அடிமைகளைத் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதில் வெற்றியடையவில்லை.(114)

இந்துத்வா, தலித் பகுஜன்களையும் இந்துக்கள் என்றே கூறி வந்துள்ளது.ஆனால் அதே நேரத்தில் அந்தக் கடவுள்கள் எல்லாம் வெளிப்படையாகவே தலித் பகுஜன்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன.

தலித் பகுஜன்கள் எதிர்க்கும் போதெல்லாம் இந்தியப் பார்ப்பன சக்திகள் தங்கள் கடவுள் உணர்வுகளைக் கிளப்பி அதனை ஒடுக்குகின்றன. 1990ல் மண்டல் அறிக்கை நடைமுறைப்படுத்தப் பட்ட போது அகில இந்திய அளவில் இந்துக்கள் நடத்திய கலகம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக் காட்டாகும்.

இந்தியாவின் ஆதிக்குடிகளான ஆதி திராவிடர்களை அழித்த அன்னிய ஆரிய நாடோடிகளின் தலைவனான இந்திரன் வேதங்களில் சிறப்பிக்கப் படுகிறான்.(115)
பிரம்மா .. என்ற இந்த அறிவுக் கடவுள், தலித் பகுஜன் மக்களைத் தாக்குவதற்குரிய ஆயுதம் உடையவனாக இருக்கிறான்.

இவனுடைய முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும், மார்பில் சத்திரியர்கள் என்றும், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில்  பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள்  சாதிய ஏற்றத் தாழ்வை உருவாக்கினார்கள்.(116)
வேதங்கள் பார்ப்பனியத்தின் பல்வேறு விதமான கொடூரமான உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ளன.

இலக்கியங்கள்  அனைத்தும் தலித் பகுஜன்களுக்கு எதிரானது தான்.
பார்ப்பனர்கள் பெண்களைப் படிக்க எழுத அனுமதிக்காதபடியால் கல்விக்கரசி என்று அழைக்கப்படுகிற சரஸ்வதி எந்த நூலும் எழுதவில்லை.

பிரம்மா எல்லா விதத்திலும் பார்ப்பனன் என்பதோடு எல்லா விதமான உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்தவன்.(117)

தலித்பகுஜன்கள் கல்வி கற்காதவாறு பார்த்துக் கொள்வது பார்ப்பனப் பெண்களின் வேலையாகவும் , சொத்து சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்வது சத்திரியப் பெண்களின் வேலையாகவும் நியமித்தது பார்ப்பனீயம். இத்தகைய செயல்கள் தலித் பகுஜன்களைப் பார்ப்பனீய அமைப்பிற்குள் உள்வாங்கி, அதே நேரத்தில் இழிவானவர்களாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.(120)

மலை சாதி மக்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் போதுமானதாக இல்லை. எனவே சிவனையும், பார்வதியையும் கடவுளாக உருவாக்கி விட்டார்கள்.(122)

சிவசேனாவுக்கும், பாரதீய ஜனதாவுக்குமிடையே உள்ள பிரிவு என்பது சைவ, வைணவப் பிரிவுகளின் வெளிப்பாடாக இருந்தாலும் இராமன் உருவத்தைக் காட்டி ஓட்டுப் பெறுவதில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராகப் பிற்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்து மதத்தின் உள்வாங்கல் தந்திரத்திற்கு இது ஒரு உதாரணம்.(123)

வாமன அவதாரம்: இந்து, பார்ப்பனீயத்தில் நம்பிக்கையற்று ஒரு சாதியற்ற சமுதாயத்தைப் படைக்க விரும்பிய தலித் பகுஜன் அரசனான பாலி சக்கரவர்த்தியைக் கொல்வதற்காகவே வாமன அவதாரம் எடுத்தததாகக் காட்டப்படுகிறது.

ஒரு தலித் பகுஜன் ராஜ்ஜியம் இந்துத் துரோகத்தால் வெல்லப்பட்டது.(124)

கிருஷ்ணன்: திடீரென்று கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சமரசம் செய்யப்பட்டது? சத்திரியனாகப் பிறந்திருந்தாலும் கூட கர்ணன் ஒரு தலித் பகுஜன் குடும்பத்தினரால் வளர்க்கப் பட்டது கண்டனத்திற்கு உள்ளான போது, இதே பின்னணியில் வளர்ந்த கிருஷ்ணன் ஏன் கண்டிப்படவில்லை.(124)  ... இதற்கெல்லாம் விரிவான விளக்கங்களும், விவாதங்களும் தேவை. (125)

உதாரணமாக 1999-93ல் நடந்த மண்டல் அறிக்கை அமுலாக்கப் போராட்டத்தையும், ராம ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டத்தையும் சொல்லலாம். இவற்றை மையமாக வைத்து பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் மையப்பகுதியில் தலித் பகுஜன்கள் பெருங் கலகங்களை நடத்தினார்கள்யாதவர்கள் முன்னின்று நடத்திய இந்தப் போராட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒரு கூட்டணி உருவானது. இந்தப் போராட்டத்தில் மண்டல் அறிக்கையைத் தயாரித்த மண்டல் (ஒரு யாதவர்) முலாயம்சிங் யாதவ், ராம்ராஜ்ஜியத்தை எதிர்த்து மண்டல் ராஜ்ஜியத்தை ஆதரித்த லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் இந்து பார்ப்பனியம் உருவாக்கிய மேலாண்மையை உடைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவரும் அறிந்ததே. இதற்கு எதிராக லோத்தா சாதியைச் சேர்ந்த கல்யாண்சிங், உமாபாரதி என்று இரு தலைவர்களைப் பார்ப்பனிய பாரதீய சனதா கட்சி தன் பக்கம் சேர்த்துக் கொண்டது. தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்யாண்சிங் முதல்வரானாலும், உண்மையான அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களிடமே இருந்தது.(126-7)

எப்படியாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடையே இருந்த உறவை உடைப்பதற்குப் பார்ப்பன இந்துத்துவ சக்திகள் சிந்தித்து ஒரு பயங்கரமான நிலை எடுத்தார்கள். அதன்படி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு ஆதரவளித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் கூட்டை உடைத்தார்கள்.
யாதவர்களின் தலைமையிலான பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் அட்டவணைச் சாதியினருக்கும் இடையிலான கூட்டைச் சிதைப்பதற்கும்  பாரதிய சனதா பெரு முயற்சிகளை மேற்கொண்டது.

மாயாவதி முதலமைச்சரானதும் மதுராவில் உள் ஆலயம் பற்றியும், பாபர் மசூதி பற்றியும் பார்ப்பனர்களின் திட்டத்திற்கு எதிரான நிலை எடுத்தார். பார்ப்பனர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பெரியார் ஈவேராவின் சிலையை லக்னோவில் நிறுவுவதில் வெற்றி கண்டார். தலித் பகுஜன்களுக்கு எதிரான இந்துக் கடவுள்களின் தன்மைகளை யாரைவும் விட பெரியார் அதிகமாகத் தோலுரித்துக் காட்டியவர். (127)


சத்திரியர்களைப் போல யாதவர்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள பார்ப்பனியம் தயாராக இருக்கவில்லை.

கிருஷ்ணனின் கதையாடல் தந்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இளைஞனான கிருஷ்ணன் யாதவ கலாச்சாரத்தில் வளர்ந்தவன். ஆனால் வளர்ந்து பெரியவனான ‘அரசியல் கிருஷ்ணன் தன்னை யாதவனாக அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அவனது செயற்பாடுகள் சத்திரியனுக்கு உரியதாக இருந்தது. பார்ப்பனத் தர்மத்தைக் காப்பதாகவே இருந்தது. ..  அவனுடைய மனைவிகள் அனைவரும் சத்திரியப் பெண்களாகவே இருந்தார்கள். கிருஷ்ணனுடைய எட்டு மனைவிகளும் சத்திரியர்களே.(128) 

கிருஷ்ண அவதாரம் என்பது பார்ப்பனிய அரசியலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
கிருஷ்ணனின் திட்டம் என்பது பலமான வருணாசிரம உடன்பாட்டு முறையை உருவாக்கவும், தலித் பகுஜன்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பாதுகாக்கவுமான திட்டமுமாகும்.

மகாபாரதக் கதை கெளடில்யக் கற்பனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பொதுச்சொத்து தனிச்சொத்தான காலம் அது.

சிறுபான்மையரான பாண்டவர்கள் (பார்ப்பனர், சத்திரியர், வைசியர் கூட்டு என்பது மொத்தத்தில் பதினைந்து சதவிகிதம் தான்) பெரும்பான்மையினரான கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். ஐந்து பாண்டவர்கள் நூறு கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். நூறு கெளரவர்களும் பார்ப்பனியத் தர்மத்துக்கு எதிராக பெரும்பான்மை தலித் பகுஜன்களுக்கு ஆதரவாகவும், அதே சமயத்தில் ஐந்து பாண்டவர்களும் சிறுபான்மையினரான பார்ப்பனர்களின் தர்மத்திற்கு ஆதரவாகவும் நின்று நடந்த போராட்டம். நிலத்திற்க்கவும் அரசாட்சிக்காகவும் நடத்திய போராட்டத்தில் கிருஷ்ணன் சிறுபான்மையினருக்கே ஆதரவாகப் போராடுகிறான்.  அது மட்டுமல்ல, பெரும்பான்மையினருக்கு எதிராகச் சூழ்ச்சியையும், நயவஞ்சகத்தையும் நெறியற்ற பார்ப்பன தர்மங்களையும் பயன்படுத்துகிறான். சிறுபான்மையினரைவெற்றியடையச் செய்கிறான். பெரும்பான்மையான கெளரவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். (129)

ஒரு நல்ல முடிவிற்காக எந்த விதமான வழிமுறைகளையும் கையாளலாம் என்பது கிருஷ்ணனின் கொள்கை. சிறுபான்மையினரின் தர்மத்தை ஆதரிப்பது மூலம் வன்முறை, காட்டுமிராண்டித்தனம், துரோகம் ஆகியவற்றை கிருஷ்ணன் நியாயப் படுத்துகிறான். துரோகத்தனத்தால் தான் கர்ணன் கொல்லப்படுகிறான்.

... கிருஷ்ணன் எதிர்த்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறான். ஏனெனில் அவர்கள் பார்ப்பனீயத் தர்மத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். பார்ப்பனக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக வன்முறையையும், வர்ண தர்மத்தையும், கர்மவினைக் கோட்பாட்டையும் கீதையில் போதித்தான்.
நிலத்திற்காகவும் அரசதிகாரத்திற்காகவும் நடந்த இந்தப் போராட்டத்தில் பெரும்பான்மையினரைத் தோற்கடித்த பிறகு கீதையின் மூலம் ஒரு பலமான பார்ப்பனிய அமைப்பை உருவாக்கி, தலித் பகுஜன் எழுச்சியும் எதிர்ப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. (130)

எப்படியோ விடுதலை பெற்ற இந்தியாவில், எழுச்சி கொண்ட தலித் பகுஜன் கருத்தியலுக்குப் பார்ப்பனிய காந்தியமும், நம்பூதிரிபாட்டின் கம்யூனிசமும் பிரச்சினையானது. செத்துக் கொண்டிருந்த இந்துத்துவத்தை நவீனப்படுத்தி உயிர்ப்பித்தவர் காந்தி. பார்ப்பன கம்யூனிஸ்டுகள் தம் பங்கிற்கு தலித்துகள் கிளர்ந்தெழுந்து விடாமல் அடக்கி வைத்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தை காந்தி இந்து மயமாக்கினார். இந்து மயமாக்கப்பட்ட தேசியத்தைப் பார்ப்பன கம்யூனிஸ்டுகள் பார்க்கத் தவறினர். (131)

கிருஷ்ணனையும் கீதையையும் உருவாக்கிய பிறகு சத்திரியர்களுடைய ஆதிக்கமும் கூடத் தொடர இயலவில்லை. பார்ப்பனர்களுக்கு எதிராக ஒருவர் கூட சுட்டு விரலை நீட்ட முடியாதபடிக்கு வருணாசிரமம் கோலோச்சியது. வட இந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கை இழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.  பார்ப்பனர்கள் தலித் பகுஜன்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள்.

ராமாயணக் கதையில் ... தலித் பகுஜன் ஆட்சியை வீழ்த்துவதற்கான சூழ்ச்சியை ரிஷிகள் வகுக்கவும் ராமன் அந்தப் பொறுப்பை நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. விஸ்வாமித்திரனும், வசிஷ்டனுமே இராமாயணக் கதையை இயக்கிய முக்கிய சக்திகளாவர். இவர்கள் இராமனின் குல குருக்கள். அவர்களது வார்த்தைகளை யாரும் மீறக் கூடாது. (132)

தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் பகுஜன் சமூகத்தைப் பார்ப்பன மயமாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் கதையே இராமாயணம். அதோடு பார்ப்பன ஆணாதிக்கத்தையும் உருவாக்க முனைந்த கதை. இந்த நோக்கத்தோடு தான் பார்ப்பன ரிஷிகள், ராமன், சீதை, செட்சுமணனோடு வந்து இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் பலராட்சியையும், சுதந்திர பகுஜன்களின் அரசுகளையும் அழித்துச் சிதைத்தார்கள். புகழ்பெற்ற தலித் பகுஜன் தலைவியாகிய தாடகையைக் கொன்று அவளது அரசைப் பார்ப்பன மயமாக ஆக்கினார்கள். புகழ் பெற்ற சம்புகனைக் கொன்று அவனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார்கள். கிஷ்கிந்தாவை ஆண்டு வந்த மலைவாழ் பழங்குடி இன அரசன் வாலி இராமனுடைய ஆதிக்க நடவடிக்கைகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இராமன் அதே மலைஜாதி தலித் பகுஜன்களை ஒன்று சேர்த்து எப்படியோ இலங்கையை அடைந்து இராவணனைத் தாக்கிக் கொன்றான்.  தலித் பகுஜன்களின் அரசு இராவணனோடு வீழ்ச்சியுற்று தென்னிந்தியா, பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இராவணன் இறந்த பிறகு பல பார்ப்பன ரிஷிகள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலைப் புகுத்தி தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தினார்கள்.

இவ்விதமாக தென்னிந்தியாவில் பார்ப்பனீயம் மேலிருந்து புகுத்தப்பட்டது. … தென்னிந்தியச் சிவில் சமூகத்தில் பார்ப்பனீயத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. … பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை (13-ம் நூற்றாண்டில்) பசவா நடத்தினார். பதினேழாம் நூற்றாண்டில் வேமனாவின் இயக்கமும், வீரப்பிரும்மாவின் இயக்கமும், பின்னர் பூலேயின் இயக்கமும், நாராயண குருவின் இயக்கமும் உருவாயின.  இருபதாம் நூற்றாண்டில் அம்பேத்கர், பெரியார் இயக்கங்களும் உருவாயின. பார்ப்பன எதிர்ப்புணர்வு தென்னிந்தியாவிலிருந்து பரவியது. வட இந்தியாவில் உருவான பகுஜன சமாஜ் கட்சி என்பது தென்னிந்தியாவில் இருந்து பரவிய பார்ப்பன எதிர்ப்பு அரசியல் கலாட்சாரத்தின் நீட்சியாகும். (134)

(பகுஜன) பொச்சம்மா ஆலயத்தின் காரணமாக ஒரு சிறு இனக்கலவரம் கூட தோன்றியதாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரி கலகங்கள் இராமன், கிருஷ்ணன், நரசிம்மன், ஆலயங்களில் இருந்து தான் ஆரம்பமாகின்றன. அதே போல் முஸ்லிம்களின் மசூதியிலிருந்தும் தோன்றியிருக்கின்றன.(138)

கட்டமைசம்மா அம்மனின் கிருபையால் பயிர்கள் செழித்து வளர்கின்றன . இப்போது இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக்க் குறைந்து வருகின்றது. இப்போது பயிர்களின் தரம் ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பொறுத்ததே  என்று மக்கள் (நம்பத்)புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். (139)

இந்து மதமே எல்லோருக்குமான மதம் என்று சொல்லும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்குப் பொதுவான அம்சம் இந்து மதத்தில் என்ன இருக்கிறது என்று கேட்க வேண்டும்.(147)


*