Thursday, February 27, 2014

720. விவாதத்தில் விழுந்த கேள்விகள் .. பதில் வருமா?விவாதங்கள் நடக்கும் போது சொல்லப்படும் எல்லா கருத்துக்களையும் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் வேண்டும். அதில் ஏதோ ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு பல கருத்துக்களைப் புறந்தள்வது சரியல்ல. உதாரணமாக, எனது முந்திய பதிவு அடிப்படையில் இறையச்சம் vs தனி மனித ஒழுக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டது. சான்றாகக் காண்பிக்கப்பட்ட இரு வேறுபட்ட மனிதர்களில் நல்ல மனிதர் யார் என்பது அடிப்படைக் கேள்வி. ’ஒரு வகை’ இறையச்சம் மட்டும் மனிதர்களை நல்ல மனிதர்களாக்குகிறது என்ற அடிப்படையில் வந்த பதிவை எதிர்த்தே அப்பதிவு. 

விவாதங்களில் எதிரணியினர் கேட்டவைகளுக்குத் தேவையான பதில்கள் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். விட்டுப் போயிருந்தால் அவர்கள் பட்டியல் தரட்டும். பதில்கள் தந்து விடலாம். அதே போல் அவர்கள் விட்டுப்போன loose ends இங்கே பட்டியலாக்கப்பட்டுள்ளன. ப்தில்கள் வருகின்றனவா என்றும் பார்ப்போம்.  

பி.கு. 

முகம்மது ஆஷிக், சு.பி. இருவர் மட்டுமல்ல ... ஓட்டுப்போட்ட சகோஸ்களும் பகிர்ந்து கொள்ளலாம். 
(ஆனாலும் சகோஸ்களின் “கட்டமைப்பு” எனக்கு இஸ்லாமைப் பற்றிப் பதிவிட ஆரம்பித்த காலத்திலிருந்து ஆச்சரியம் தருகிறது. நல்ல கட்டமைப்பு.. அவர்களுக்குள் யார் யார் பதில் சொல்வது என்பதிலிருந்து அனைத்துமே ‘remotely controlled' என்பதுபோல் தெரிகிறது. நல்ல system தான்!!  ’அங்கிருந்து’ ஆணை வந்தால் தான் மற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் போலும் !)  


****** 1.     சரியோ தவறோ எப்பதிவாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் 35 பேர் சட சடன்னு ஓட்டுப் போட்டு மகுடம் கொண்டு வரும் கோஷ்டித் தனம் சரியா?

2.     இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? 

3.     கடவுள் நம்பிக்கையால்தான் மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்ற போதனையைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்துங்களேன். நல்லவர் எண்ணிக்கை குறைகிறதா பார்ப்போம்
 .
4.    ஏழைகள்,எளியவர்களுக்கு இறையச்சம் என்பதை புகட்டி வைத்தால் தான் கீழ்படிதலுடன் இருப்பார்கள் என அதிகாரத்தில் உள்ளோர்கள் நடத்தும் நாடகங்களே 

5.    இந்த இறையச்சம் சூடான் அதிபரோ,சவுதி அதிபருக்கோ இருப்பதில்லை,

6.    துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சூடானில் வழக்கம், இறையச்சம் எல்லாம் ஏதும் செய்ய இயலாத அப்பாவிகளுக்கு தான் போலும் 
!
7.    சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?

8.    கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும் 
.
9.     தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் நல்ல மனிதர்களாகஇருந்துள்ளார்கள். 
இவர்களில் யார் நல்லவர்?

10.   மனித தன்மை அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அது வேறெங்கிருந்தும் வரத்தேவையில்லை

 .
11.   எந்த புத்தகத்தை படிக்காத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும் 
.
12.  அறிஞரை தெரியாத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும். 

13.  மனிதநேயம் என்ற சித்தாந்ததில் இருந்து 
!
14.  வாழ்க்கை எனும் பள்ளியில் படித்த பாடத்தின் மூலம் வந்திருக்கலாம் 
.
15.  தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் 
!
16.   77.94% இந்தியர்களுக்கும் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் தனி மனித ஒழுக்கமில்லாதவர்கள். அப்படிதானே ஆஷிக்?

17.  90 விழுக்காடு (அவங்க கணக்கில்) இறையச்சம் உள்ளவர்கள் வாழும் உலகம் ஒழுக்கமாக இருக்கனும், ஆனா அப்படி இல்லையே

18.  இது இஸ்லாமியருக்குள் நடக்கும் யுத்தம். . நல்ல ஒழுக்கத்தையும், இறையச்சத்தையும் இஸ்லாம் கொடுத்திருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா? 

19.  இஸ்லாம் ஏன் இவர்களை நல்லவர்களாக்கவில்லை, போரை நிறுத்தவில்லை,

20.  கிறித்துவத்திற்குள் வந்தால் கீனாக்கள் துள்ளுவதில்ல;
இஸ்லாத்திற்குள் வந்தால் மூனாக்கள் துள்ளுகிறீர்கள்.
ஏன் என்று கேட்டேன் 
.
21.  எங்க பொண்டு புள்ளைகள நினச்சாலும் பயமா இருக்கே...- இதை ஒட்டிய செய்திக் குறிப்பு பற்றியும் உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டாமா நீங்கள்? ஆண் பெண் என்றால் அடுத்து உங்கள் நினைவில் வருவது sex மட்டும் தானா? சிறுபிள்ளையைக் குணப்படுத்த வைத்தியர்களைக் கூட மத்த்தால் தடுப்பது நிஜமாகவே முட்டாள் தனமாக உங்களுக்குத் தெரியவில்லையா?

22.  இதற்கு காரணம் இஸ்லாம் அல்ல. கரெக்டுதான். ஆனால், ஆனால் இஸ்லாத்தை கடைபிறக்கிற சாதாரண மக்கள் இருக்கிறார்களே. அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? 

23.  .வெளிநாட்ல என்னென்னமோ நடக்குதாமே.. அங்கல்லாம் இந்த அசீமானந்தா, பிரக்யாசிங் ஆளுங்க போகலைங்களே 
.
24.  இது உங்கள் மதத்தினால் வந்த கேவலம். இதே போல் இன்னொரு நிகழ்வு  

25.  முந்தியே பல தடவை ஒரு கேள்வி கேட்டுட்டேன். திருப்பிக் கேட்கிறேன். உலகத்தில் எங்காவது ஏதாவது ஒரு மதத்தில் கொலை செய்யும் போது இப்படி அல்லாஹூ அக்பர்னு கத்துற மாதிரி அவங்க சாமியைத் தொழும் மதம் ஏதாவது உண்டா? 

26.  பாஸ்டன்ல குண்டு .. சமீபத்திய இஸ்லாமியத் திருவிளையாடல்களை இங்கே பாருங்கள்.

27.  இதைப்பத்தி சொல்ல ஒன்றும் இல்லாததால் அந்த ஒற்றை வார்த்தை வைத்து சாமியாடுகிறீர்கள்.  !  பாவம்!!
2

8.  கொடுத்த accusationகளுக்குப் பதில் ஏதும் இல்லையென்றால் இந்தப் பல்லவியை வழக்கம் போல் பாடிவிட்டு போய்விடுவீர்கள் என்று தெரியாதா

29.  இன்றைய செய்தி - சுடச் சுட .- பதில் ஏதும் உண்டா இதற்கு?

30.  மத நல்லிணக்கம் என்றால் வீசை எவ்வளவு என்று வஹாபியர்களுக்கு என்றாவது புரியுமா...?

31.  இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! 
32.  கடவுள் மனிதனை முழுமையாக - as a perfect one - ஆகப் படைத்துள்ளார் என்று குரானில் சொல்லியாகி விட்டது. இதை அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட முழுமையான உடலில் ஒரு குறை கண்டு, விருத்த சேதனம்’ செய்வது  எதற்காக?
 


*****
 15.03.2014
நைஜீரியாவிலிருந்து ஒரு செய்தி. ”அல்லாஹூ அக்பர்”*****
99 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறள் ஒன்றே போதும்...!

suvanappiriyan said...

//அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதான் எங்க கேள்வி. ஆட்ச்சியாளர்கள் கொடுமைப்படுத்தினால், உங்கள் கடவுள் ஆட்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியாதா? உங்கள் கடவுளால் முடியும் என்றால் ஏன் இதுவரை காப்பாற்றவில்லை. முடியாது என்றால், அந்த வக்கில்லாத கடவுளை பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?//

இந்த உலக வாழ்ககை என்பது நிரந்தரமான மறு உலக வாழ்வுக்கு பரீட்சை ஹால் என்று சொல்லலாம். சொற்ப நேரம் இந்த பூமியில் தங்குகிறோம். இங்குள்ள மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. நன்மை எது தீமை எது என்பதை பட்டியலிட்டு சொல்லியாகி விட்டது. இந்த பரீட்சையில் உங்களுக்கு சோகமும் கிடைக்கலாம். அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.

இந்த பதில் பலமுறை சொன்னதாலேயே சாய்ஸில் விட்டேன். மற்றபடி தருமி சார் கேட்ட பல கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது.

திருப்பி...திருப்பி ....திருப்பி.... எத்தனை முறை சார். :-(

வவ்வால் said...

தருமிய்யா,

தவிர்க்க நினைத்து ஒதுக்கியவற்றை அழகா தொகுத்து கிடுக்கி போட்டுட்டிங்க,வராங்களாப்பார்ப்போம்.

# இதுல இன்னொன்னும் சேர்க்கலாம்,

யாராவது புதுசா மார்க்கத்துக்கு வந்தா பெருசா மகிழும் இவர்கள்,மார்க்கத்தை விட்டு போறேன்னு கிளம்பினால் கொலை வெறியாவதேன்?

ஏன்னா யுவன் விரும்பிய மார்க்கத்தை பின் தொடர ராசா தடுக்கலாமா,தப்பாச்சேனு சொல்றார்,அப்போ வேண்டாம்னா போகவும் விடனும்ல!

தருமி said...

//மற்றபடி தருமி சார் கேட்ட பல கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது.//

வழக்கமான பாட்டு .....
31 -க்கும் தனித்தனியே கேட்க முடியும். வேண்டாமென்று சில சாம்பிள்கள் மட்டும் கேட்கிறேன்.

9. இது இந்தப் பதிவைப் பொருத்த கேள்வி. இதுக்குமா முந்தியே பதில் சொல்லிட்டீங்க?

21. இதே கேள்வியை இதுவரை உங்களிடம் குறைந்தது 10 தடவையாவது கேட்டிருப்பேன். ஆம்ப்ள பொம்ப்ளன்னா உங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு தானா... கடவுளே ...!

23. பல தடவை கேட்ட கேள்வி. இஸ்லாம் - வன்முறை என்றால் உடனே //அசீமானந்தா, பிரக்யாசிங் // என்ற பாட்டை தாளம் தவறாமல் இசைக்கிறீர்கள்.

25. இந்தக் கேள்வியைப் பல பலமுறை கேட்டாச்சு. பதில் சொல்லவேயில்லை.

29. இதுபோன்ற செய்தியைச் சொன்னால் எல்லாம் ஊடக விளையாட்டு என்பீர்களே...

31. தயவு செய்து இதற்குப் பதில் கூற வேண்டாம்.


Ant said...

//அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வருவதாக சொல்லியுள்ளார். வெளியுலகுக்கு அவர் அறிவித்தது போன மாதம் தான். // அப்படியானால் இஸ்லாம் அவரை நொடியில் மாற்றவில்லை (ஒரு வருடமாகியுள்ளது) என்பது நிறுபிக்க படுகிறது, தங்கள் முடிவு தவாறனது.

suvanappiriyan said...

//இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! //

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்த தவ்ஹீது இயக்கம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் இந்துக்களை கேள்வி கேட்க வைத்து அவர்களின் சந்தேகங்களை போக்கி வருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் பதட்டமான சூழல் குறைந்தது. எவ்வளவு கிண்டலாக கேட்டாலும் புன் சிரிப்போடு அதற்கு பதிலளிக்கும் முறையை வஹ்ஹாபிகள்தான் கொண்டு வந்தனர்.

படிப்பில் ஆர்வம் இல்லாதிருந்த முஸ்லிம்களின் கவனத்தை திருப்பி இன்று மற்ற சமூகத்தோடு போட்டியிடும் அளவுக்கு இஸ்லாமியர்களை தயார்படுத்தியுள்ளோம்.

தட்டு, தாயத்து, தர்ஹா, என்று மூடபபழக்கத்தில் மூழ்கியிருந்தவர்களை குர்ஆனின் பக்கம் கொண்டு வந்துள்ளோம்.

இன்று தமிழகத்தில் ரத்ததானத்தில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது இதே தவ்ஹீத் ஜமாத்தான்.

காவல்துறையினர் கூட மதிக்கும் ஒரு ஜமாத் இந்த தவ்ஹீத் ஜமாத்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். இன்று அதனை அதிகரிக்க போராடி வருகிறோம். இன்னும் 20 ஆண்டுகளில் எங்களின் சதவீதத்துக்கு தக்க அரசு வேலைகளை பெற்று விடுவோம்.

இதெல்லாம் தெரிந்தும் கண்ணை இறுக மூடிக் கொள்ளும் உங்களை நினைத்து பரிதாபம்தான்பட முடியும்.


suvanappiriyan said...

//இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! //

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்த தவ்ஹீது இயக்கம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் இந்துக்களை கேள்வி கேட்க வைத்து அவர்களின் சந்தேகங்களை போக்கி வருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் பதட்டமான சூழல் குறைந்தது. எவ்வளவு கிண்டலாக கேட்டாலும் புன் சிரிப்போடு அதற்கு பதிலளிக்கும் முறையை வஹ்ஹாபிகள்தான் கொண்டு வந்தனர்.

படிப்பில் ஆர்வம் இல்லாதிருந்த முஸ்லிம்களின் கவனத்தை திருப்பி இன்று மற்ற சமூகத்தோடு போட்டியிடும் அளவுக்கு இஸ்லாமியர்களை தயார்படுத்தியுள்ளோம்.

தட்டு, தாயத்து, தர்ஹா, என்று மூடபபழக்கத்தில் மூழ்கியிருந்தவர்களை குர்ஆனின் பக்கம் கொண்டு வந்துள்ளோம்.

இன்று தமிழகத்தில் ரத்ததானத்தில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது இதே தவ்ஹீத் ஜமாத்தான்.

காவல்துறையினர் கூட மதிக்கும் ஒரு ஜமாத் இந்த தவ்ஹீத் ஜமாத்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியருக்கு தனி இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். இன்று அதனை அதிகரிக்க போராடி வருகிறோம். இன்னும் 20 ஆண்டுகளில் எங்களின் சதவீதத்துக்கு தக்க அரசு வேலைகளை பெற்று விடுவோம்.

இதெல்லாம் தெரிந்தும் கண்ணை இறுக மூடிக் கொள்ளும் உங்களை நினைத்து பரிதாபம்தான்பட முடியும்.


suvanappiriyan said...

//9. தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் ‘நல்ல மனிதர்களாக’ இருந்துள்ளார்கள்.
இவர்களில் யார் நல்லவர்?//


எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை இருக்கிறது. மனிதாபிமானத்தினால் சிலர் நல்ல செயல்களை செய்யலாம். வாழ்வின் அனைத்து நாட்களிலும் அவர்களால் அவ்வாறு வாழ்ந்து விட முடியாது.

ஆனால் இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு. இங்கு செய்யும் தீய செயல்களுக்கான தண்டனையை இந்த உலகில் கிடைக்கா விட்டால் மறு உலகில் கண்டிப்பாக நான் அனுபவித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அவனை எத்தனை கோடிகளாலும் விலை பேசி விட முடியாது. இஸ்லாமிய வரலாறுகளில் இதனை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மேலும் நல்லது எது தீயது எது என்ற பாகுபாடு கொண்டு வரப்பட்டதே முந்தய இறை வேதங்களால்தானே. அது ஆழ்மனதில் குடி கொண்டதால்தான் அவ்வாறு அவனால் நேர்மையாக நடக்க முடிகிறது. அதற்கு மனிதாபிமானம் என்று பெயர் வைத்துக் கொள்கிறீர்கள். அவ்வளவே!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ஆனால் இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு. இங்கு செய்யும் தீய செயல்களுக்கான தண்டனையை இந்த உலகில் கிடைக்கா விட்டால் மறு உலகில் கண்டிப்பாக நான் அனுபவித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அவனை எத்தனை கோடிகளாலும் விலை பேசி விட முடியாது. இஸ்லாமிய வரலாறுகளில் இதனை தொடர்ந்து பார்த்து வருகிறோம். //

எந்த ஒரு மனுஷனுக்கும் விலை இருக்குனு சொல்றிங்க, அப்போ எப்படி மேலோகத்துக்கு போனப்பிறகு தண்டனை கிடைக்கும்னு நம்புறவனுக்கு விலை இருக்காதுனு சொல்றிங்க?

எப்படியும் இந்த உலகில் கஷ்டத்தான் படுகிறோம், அதுக்கு விலைப்போய் சந்தோஷமா வாழ்வோம், மேல போனப்பிறகு என்ன தண்டனைக்கொடுத்தால் என்னனு தான் மனநிலை வரும்.

எனக்க்கு ஒரு டவுட்டு நீங்க முன்ன பின்ன மேலோகம் போய் யாருக்கு பாவத்துக்கு தண்டனைக்கிடைச்சு கஷ்டப்படுறா, யாரு புண்ணியத்துக்கு நித்தியக்கன்னிகளோடூ ஜாலியா இருக்கானு பார்த்துட்டு வந்தீங்களா?

மேலோகத்தில என்னக்கிடைச்சா என்ன,இப்போ நல்லா அனுபவிப்போம்னு வாழ்கிறவங்க தான் "பணக்கார இஸ்லாமியர்கள் :-))

புருனை சுல்தான்,சவுதி ஷேக்லாம் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் பாலைவனத்துல கஷ்டப்பட்டு உழைக்கிற ஏழைகளோ ,மேல போய் சுக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் ஷேக்குகளுக்கு அடிமையா கிடக்காங்க :-))

suvanappiriyan said...

//யாராவது புதுசா மார்க்கத்துக்கு வந்தா பெருசா மகிழும் இவர்கள்,மார்க்கத்தை விட்டு போறேன்னு கிளம்பினால் கொலை வெறியாவதேன்?//

போகிறவர்களை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

தஸ்லீமா நஸ்ரீன் போன்றவர்களின் நிலையே வேறு. குர்ஆனில் இல்லாத கற்பனைகளை தனது எழுத்துக்களை 'இதுதான் இஸ்லாம்' என்று சொல்லி மேற்கத்திய ஊடகங்களை மகிழ்விக்கும் போக்கைத்தான் கண்டிக்கிறோம். பெய்யான கருத்து எதற்கு. விவாதத்துக்கு நாங்கள் தைரியமாக அழைக்கிறோம். அங்கு வந்து கருத்துக்களை வைக்க வேண்டியதுதானே!

தருமி said...

////இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! //

இதற்குப் பதில் வேண்டாம் என்றேன். நீங்களோ கொடுத்து விட்டீர்கள்.
நீங்கள் சொன்னவை பலவும் சரி. ஆனால் //இதன் மூலம் தமிழகத்தில் பதட்டமான சூழல் குறைந்தது.// இது தான் உதைக்குது.

எனக்குத் தெரிந்த வரை அண்ணன், தம்பி, மாப்பிள்ளை, மச்சான் என்றிருந்த உறவுகள் இப்போது இல்லை. நிறைய மாணவிகள் படிக்க வருவது நலம். ஆனால் முன்பு இல்லாதது போல் இப்போ புர்க்கா ஒரு கட்டாயமாக்கப்பட்டது உங்கள் சேவை. (புர்க்கா எதிர்த்து ‘நீயா நானா’ சண்டை போட்டது வஹாபிகள் தானே?!) நீண்ட சட்டை, கலர் தாடி, விழுந்து வணங்குவதால் நெற்றியில் ஏற்படும் கருப்பு நிற காய்ப்பு, -- எல்லாவற்றிற்கும் மொத்தமாக ‘இஸ்லாமியரைத் தனிமைப் படுத்தும்’ வழக்கம் நிறைய வந்தாயிற்று. இடைவெளி அதிகமாக்கியதையும் உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.
இக்குறையை நான் மட்டும் சொல்லவில்லை. பல இஸ்லாமியர்களே சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

தருமி said...

////9. தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் ‘நல்ல மனிதர்களாக’ இருந்துள்ளார்கள்.
இவர்களில் யார் நல்லவர்?////

கண்ணை மூடி பதில் சொல்லவேண்டிய கேள்விக்குக் கூட உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.

தனி மனித ஒழுக்கத்திற்கும் அல்லாவுக்கும் போடும் முடிச்சு அம்புட்டு ஸ்டாராங்!
எக்கட்டுப்பாடும் இல்லாமல் தனி மனிதர்களாக நகைகளைத் திருப்பிக் கொடுத்தவர்களை - அவர்கள் இஸ்லாமியர் இல்லாததால் - நல்லவர்கள் என்று சொல்ல மனம் கூசுகிறது. இல்லையா?

தருமி said...

//நல்லது எது தீயது எது என்ற பாகுபாடு கொண்டு வரப்பட்டதே முந்தய இறை வேதங்களால்தானே. அது ஆழ்மனதில் குடி கொண்டதால்தான் அவ்வாறு அவனால் நேர்மையாக நடக்க முடிகிறது. //

என்ன சொன்னாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியாதா? எந்தக் கல்வியும் மாடலும் இல்லாமல் மனிதர்கள் நல்லவர்களாக இருக்க முடியும் என்றெல்லாம் இங்கே மக்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் நீங்கள் எப்படியோ தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போல் ’முந்திய இறை வேதங்களால் தான்’ என்கிறீர்கள்.

இதனால தான் ‘தனி மனித ஒழுக்கம்’ என்றால் என்ன என்று கேட்ட ஆஷிக்கிடம் எல்லாம் அல்லா தான் என்று கூறினேன்.

தருமி said...

//மார்க்கத்தை விட்டு போறேன்னு கிளம்பினால் கொலை வெறியாவதேன்?////

கேட்ட எந்தக் கேள்விக்காவது முறையாக நேரடியாக பதில் தரவே மாட்டீர்களா? please ...
உங்கள் மதத்திலிருந்து வெளியில் வரலாமா? மனம், அது இதுன்னு சொல்ல வேண்டாம். அதுவும் இஸ்லாம் கோலோச்சும் இடங்களில் வெளியில் வரலாமா?

அட நம்ம ஊர் கடையம் நல்லூரில் (அல்லது கடையமா?), தக்கலை (ரசூல்)போன்ற இடங்களில் நடந்த ‘தள்ளிவைப்புகள்’ பலரும் அறிந்தது தானே!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக செயல்ப்பட்டால்,அது அவர்களின் மனிதத்தன்மைனே பார்க்க மாட்டேங்கிறிங்களே அவ்வ்!

அல்லா பார்க்கிறார்னு இறையச்சத்துடன் இருப்பவர்கள் என எடுத்துக்கொண்டாலும் உலகம் முழுக்க அல்லாவை நம்புறவங்க இல்லையே,அப்போ அல்லாவை நம்பாதவங்க எல்லாம் ,நேர்மையாக இருக்க மாட்டாங்கனு சொல்றிங்களா?

# உலகத்திலேயே நம்பிக்கைகளின் அடிப்படையில் ,சதவீதத்தில் பார்த்தால் நாத்திகர்கள் 3 வது இடத்தில் இருக்காங்க, சுருக்கமா சொன்னா மூன்றாவது பெரிய மதமே நாத்திகம் தான் :-))

"You wouldn't believe it… but having no religious affiliation is now world's third biggest 'faith' after Christianity and Islam"

http://www.dailymail.co.uk/news/article-2250096/You-wouldnt-believe-atheism-worlds-biggest-faith-Christianity-Islam.html

இந்த நாத்திகர்கள் எல்லாம் "நேர்மையாக" இருப்பதில்லையா?

எழுதப்படிக்க தெரியாத , பொது அறிவு இல்லாத ஆன்மீக வாதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்,ஆனால் நாத்திக கொள்கையுடையவர்கள் பெரும்பாலும் கல்வியறிவுப்பெற்றவர்கள், அவங்க எல்லாம் சூதும்,வாதும் செய்யப்புகுந்தால் உலக்க அமைதியே போய்விடும். இவ்வுலகு அமைதியாக இயங்க பெரும் காரணம் நாத்திகர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தனிமனித ஒழுக்கம்,நேர்மை என வாழ்வதால் தான் ,மற்றபடி எந்த அல்லாவும் உலகில் அமைதியை கொண்டு வருவதேயில்லை,மாற்றாக வன்முறைக்கு தான் உரமிடுகிறார்கள்.

# விலைபோவதில் முதலிடமே இந்த இஸ்லாமிய ஜிகாதிகள் தான் , குண்டு வைக்க ஒரு ரேட், கொலைப்பண்ன ஒரு ரேட்னு வாங்கிட்டு தானே இறைப்பணியென வன்முறை செய்றாங்க :-))
---------------
//தஸ்லீமா நஸ்ரீன் போன்றவர்களின் நிலையே வேறு. குர்ஆனில் இல்லாத கற்பனைகளை தனது எழுத்துக்களை 'இதுதான் இஸ்லாம்' என்று சொல்லி மேற்கத்திய ஊடகங்களை மகிழ்விக்கும் போக்கைத்தான் கண்டிக்கிறோம். பெய்யான கருத்து எதற்கு. விவாதத்துக்கு நாங்கள் தைரியமாக அழைக்கிறோம். அங்கு வந்து கருத்துக்களை வைக்க வேண்டியதுதானே!//

நீங்க ஏன் தஸ்லீமா வரைக்கும் போறிங்க, தமிழ்நாட்டில் காயல்ப்பட்டிணத்து ஜமாத் ,ஒரு இஸ்லாமியர் நாத்திகராகிட்டார்னு என்ன பாடுப்படுத்துச்சுன்னு ,முன்னரே செங்கொடி என்பவரின் பதிவில் எழுதப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளேன் ,அப்போவும் நழுவிட்டிங்க.

இப்படியே நழுவிட்டு ,எல்லாத்துக்கும் முறையா பதில் கொடுத்தாச்சுனு சொல்லிக்கிறது.

#ஷியாக்களின் மீதான வன்முறை ஏன்? அல்லாவைத்தானே அவங்களும் கடவுள்னு சொல்லுறாங்க?

எனவே அல்லாவை கடவுள்னு சொன்னாக்கூட கொலைத்தான் பண்றிங்க,அவரு கடவுள் இல்லைனு சொன்னாலும் கொலைத்தான்,அப்ப என்ன தான் முடிவு?

தருமி said...

வவ்ஸ்
சில பேரோட பின்னூட்டம் சும்மா நச்சுன்னு இருக்கு.
எப்டிங்க இதெல்லாம் ....

பிடித்தது:
* அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக செயல்ப்பட்டால்,அது அவர்களின் மனிதத்தன்மைனே பார்க்க மாட்டேங்கிறிங்களே

* இப்படியே நழுவிட்டு ,எல்லாத்துக்கும் முறையா பதில் கொடுத்தாச்சுனு சொல்லிக்கிறது.

* அல்லாவை கடவுள்னு சொன்னாக்கூட கொலைத்தான் பண்றிங்க,அவரு கடவுள் இல்லைனு சொன்னாலும் கொலைத்தான்,அப்ப என்ன தான் முடிவு?

தருமி said...

வவ்ஸ்
நீங்க கொடுத்த தொடுப்பில்: //showed Islam and Hinduism are the faiths most likely to expand in the future...//
என்னங்க ... இந்துத்துவாவும் கோதாவில் இருக்கே! அப்ப என்ன சொல்றீங்க ... மோடி வந்திருவாரா ...?!

//

suvanappiriyan said...

வவ்வால்!

//அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக செயல்ப்பட்டால்,அது அவர்களின் மனிதத்தன்மைனே பார்க்க மாட்டேங்கிறிங்களே//

அடடா! மனிதத் தன்மை இதுதான் என்று நிர்ணயித்தது யார்?

கொலை, பொய், விபசாரம், திருட்டு, போன்ற செயல்களை தவறு என்று நாத்திகர் முதற்கொண்டு அனைத்து மதத்தவரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த பொதுப் புத்தியை மனிதனின் மனத்தில் விதைத்தது எது?

திருக்குறள், பைபிள், பகவத் கீதை, ருக், யஜூர்,சாம, அதர்வண வேதங்கள், என்று உலகில் உள்ள அனைத்து இறை வேதங்களின் வழி காட்டுதலில் இவை எல்லாம் குற்றம் என்று காலகாலமாக சொல்லப்ட்டு வந்துள்ளது. பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இறை வாக்கியத்தோடு தங்கள் கருத்துகளையும் புகுத்தி விட்டனர். எனவே தான் கடைசியாக குர்ஆனை இறைவன் இறக்கினான்.

இது போன்ற வேதங்களின் சட்ட திட்டங்களே மனிதத் தன்மையாக பின்னாளில் உருமாற்றம் பெற்றது. அதற்கு தான் நாத்திகம், கம்யூனிஸம் என்று புதுப் புது பெயராக வைத்துள்ளீர்கள். எனவே இந்த கொள்கைகளின் காப்புரிமை உங்களையும் என்னையும் படைத்த இறைவனையே சாரும்.

suvanappiriyan said...

வவ்வால்!

//விலைபோவதில் முதலிடமே இந்த இஸ்லாமிய ஜிகாதிகள் தான் , குண்டு வைக்க ஒரு ரேட், கொலைப்பண்ன ஒரு ரேட்னு வாங்கிட்டு தானே இறைப்பணியென வன்முறை செய்றாங்க :-))//
'ஒரு மனிதரை கொன்றவர் ஒரு சமூகத்தையே கொன்றவராவார்' என்பது குர்ஆன் விடுக்கும் செய்தி. அப்படிப்பட்ட குர்ஆனை விளங்கிய ஒருவன் தற்கொலை குண்டுதாரியாக ஏன் மாறுகிறான். அஜ்மல் கசாபை பற்றி தெரிந்திருக்கும். அவனும் அவனது நண்பர்களும் மும்பையில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவனை குர்ஆன் வசனங்களை தவறாக விளக்கி அவன் குடும்பத்துக்கு லட்ச ரூபாய் தருவதாக மூளை சலவை செய்தது யார்? குஜராத் கடற்கரையை ஒட்டி ஒரு படகில் வந்து இறங்கியவர்களை மும்பையில் கொண்டு வந்து விட்டது யார்? இந்தியாவில் நுழைய பல வழிகள் இருக்க குஜராத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து ஏன்? கடற்படை அவர்கள் உள்ளே நுழைய எப்படி அனுமதித்தது? பழக்கமில்லாத மும்பை நகரில் அந்த கூட்டத்தை வழி நடத்தி சென்றது யார்? ஆயிரக்கணக்கான நபர்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓட குறிப்பாக ஹேமந்த் கர்கரேயின் உயிரை எடுக்க அந்த கூட்டம் ஏன் ஆர்வம் கொண்டது? அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்? முஸ்லிம்களை விரும்பும் ஒருவன் இஸ்லாமியர்கள் பலரை சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்த ஹேமந்த் கர்கரேயை கொல்ல துணிவானா? இந்துத்வாவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இறப்பதற்கு சில நாள் முன்பு தொலைக்காட்சிக்கு ஹேமந்த கர்கரே பேட்டி கொடுத்ததை நாம் மறந்து விட முடியுமா? நரேந்திர மோடி ஹேமந்த் கர்கரே நினைவாக ஒரு பெரும் பண முடிப்பை அவரது மனைவியிடம் கொடுக்க முயற்சித்த போது 'அவர் கையால் அந்த பணத்தை வாங்க மாட்டேன்' என்று அந்த வீரத் தாய் கூறக் காரணம் என்ன?

இது ஒரு சிறிய உதாரணமே....

இதை எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உலகில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் பல குண்டு வெடிப்புகளின் பின்னணியில் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளான இந்துத்வாவினரும் இருப்பது தெரிய வரும்.

நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில மடையர்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்றனர்.
'அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடமிருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர்.'
-குர்ஆன் 3:78

இவ்வாறு குர்ஆனின் கருத்துக்களில் தங்களின் கருத்துக்களை புகுத்தி இளைஞர்களை மூளை சலவை செய்யும் ஒரு கூட்டமும் உள்ளது. அந்த நபர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கு உண்மையான குர்ஆனின் போதனைகளை போதித்தாலே வன்முறையை கைவிடுவர். தவ்ஹீத் ஜமாத் அந்த பணியை பல ஆண்டுகளாக செய்து பலரை நேர்வழிப்படுத்தியுள்ளது.

Anonymous said...

இன்று உலக வரைப்படத்தில் கலகம், வன்முறை, வறுமை, பிணி, பசி நிறைந்திருக்கும் இடங்களை புள்ளியிட்டால் பெரும்பாலும் மதவாதங்கள் நிரம்பிய பகுதிகளாகவே இருக்கின்றன. :((

வவ்வால் said...

தருமிய்யா,

//சில பேரோட பின்னூட்டம் சும்மா நச்சுன்னு இருக்கு.
எப்டிங்க இதெல்லாம் .//

நம்ம சு.பி.சுவாமிகளோடு உரையாட ஆரம்பித்தால் எல்லாம் தானா வருதுங்கய்யா, ஒரு வேளை அரேபியாசாமியின் இறையருள் நம்ம மீதும் இறங்குதோ என்னமோ அவ்வ்!

#//என்னங்க ... இந்துத்துவாவும் கோதாவில் இருக்கே! அப்ப என்ன சொல்றீங்க ... மோடி வந்திருவாரா ...?!//

அதான் எனக்கும் கிலியா இருக்கு!

இந்து மதம் எண்ணை வித்தகாசில்லமலே விரிவாகுதாம், இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு ,இந்த அரேபிய,இந்துத்வா மோதல் நிக்காதுனே நினைக்கிறேன்!

# சு.பி.சுவாமிகள் ஆனாலும் அசாத்திய பொறுமைசாலி 101வது தடவையாக சொன்னதையே சொற்களை மட்டும் மாற்றியமைச்சு ,வார்த்தை விளையாட்டு விளையாடுறார்,நல்ல கைதேர்ந்த ஆட்டக்காரரா இருப்பார் போல அவ்வ்!
---------------------------------

சு.பி.சுவாமிகள்,

//அடடா! மனிதத் தன்மை இதுதான் என்று நிர்ணயித்தது யார்?//

இதெல்லாம் ஐ.எஸ்.ஓ,ஐ,எஸ்.ஐ( இது தரநிர்ணய அமைப்பு now called as BIS) போல எதாவது அமைப்பு வந்து தான் நிர்ணயிக்கும்னு நினைச்சிட்டு கேட்கிறிங்களா?

இறை நூல்களையே படிச்சே இல்லாதவனும் "மனிதத்தன்மைய" உணர்ந்து இருக்கான்னு இங்கே பலரும் சொல்வதை கொஞ்சம் சிந்தையுள் ஏற்றுங்கள்!

#//முஸ்லிம்களை விரும்பும் ஒருவன் இஸ்லாமியர்கள் பலரை சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்த ஹேமந்த் கர்கரேயை கொல்ல துணிவானா? //

ஹேமந் கர்கரே மரணத்தில் மர்மம் இருப்பது என்னவோ உண்மை மற்றபடி உங்கள் வாதமெல்லாம் சொத்தை.

சம்பவம் நடந்த இடம், காங்கிரஸ் கூட்டணி ஆளும் மகாராஷ்ட்ரா மாநிலம், அப்போ மகாராஷ்ட்ரா போலீசும் , மோடி பேச்சை கேட்குதா,இல்லை சம்பவத்துக்கு பின்னர் மூடி மறைக்க காங்கிரசும் மோடிக்கு துணை போகுதா?

#//இவ்வாறு குர்ஆனின் கருத்துக்களில் தங்களின் கருத்துக்களை புகுத்தி இளைஞர்களை மூளை சலவை செய்யும் ஒரு கூட்டமும் உள்ளது. அந்த நபர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கு உண்மையான குர்ஆனின் போதனைகளை போதித்தாலே வன்முறையை கைவிடுவர்//

மூளை சலவை செய்யும் கூட்டத்தின் கை தான் ஓங்கி இருக்கு ,அதையாவது ஒத்துக்கிறிங்கிளா?

எல்லாத்துக்கும் யூதர்களின் சதி, இந்துத்வா சதினு சொல்றிங்களே,பாகிஸ்தானிலும் குண்டு வெடிக்குது,அதுவும் ஷியாக்கள் தொழுகை செய்யும் மசூதியில் தான் ,அதுவும் யூத/இந்துத்வா சதியா?

இப்ப வரைக்கும் அல்லா தான் கடவுள் என நம்பும் ஷியாக்களை கொல்வதை பற்றி சொல்லவே இல்லை, அதனை நியாயப்படுத்த "இறைவசனம்" தேடிக்கிட்டு இருக்கிங்களா?

# Aṣmāʼ bint Marwān என்ற அரேபிய பெண் கவிஞர் ,முகமதுவிற்கு எதிராக கவிதை பாடினார் என்பதற்காகவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், அதுவும் முகமதுவின் உத்தரவின் பேரில்.

அதெல்லாம் கூட யூத/இந்துத்வா சதியா :-))

இன்னும் இது போல நிறைய அக்கால படுகொலைகளே இருக்கு,அப்போ என்ன மனிதநேயத்தினை "மார்க்கம்" சொல்லிக்கொடுத்திருக்கும்?

தருமி said...

// முகமதுவின் “கனிந்த” உள்ளத்தை இன்னொரு ஹதீஸ் காட்டுகிறது. புகாரி Vol 8, நூல் 82, எண் 796 –ல் Oreyneh, Oqayelh என்ற இடங்களிலிருந்து வந்த சிலர் இஸ்லாமிற்குள் சேர முகமதுவிடம் அனுமதி கேட்கிறார்கள். முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார். அவர்கள் பிறகு முகமதுவின் ஆடு மேய்ப்பாளரைக் கொன்று விடுகிறார்கள். முகமது அவர்களைப் பிடித்து, கட்டி வைத்து, கண்களை நோண்டியெடுத்து, அவர்கள் கை கால்களை வெட்டி வனாந்திரத்தில் தண்ணீருக்கும் வழியின்றி இருக்கச் செய்து சாக விடுகிறார். முகவதுவின் கருணை வெள்ளத்தை இதைவிட எந்த ஹதீஸ் தெளிவாகக் காண்பிக்கும்?//

தருமி said...
This comment has been removed by the author.
? said...

திரு சு.பிரியன்,
//கொலை, பொய், விபசாரம், திருட்டு, போன்ற செயல்களை தவறு என்று நாத்திகர் முதற்கொண்டு அனைத்து மதத்தவரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த பொதுப் புத்தியை மனிதனின் மனத்தில் விதைத்தது எது?//

யாரும் விதைக்க வேணும்கறது இல்லை. இவையெல்லாம் பரிணாமத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு விலங்குகள் ஒன்றாக சமூக வாழ்வு கற்றுகொண்ட போது உருவான கூடி வாழ உதவும் விதிகள்தான் இவை. மனிதர்கள் இவற்றை இன்னும் மேம்படுத்தி திருமணம் போன்றவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவையும் சமூகத்துக்கு சமூகம் வேறுபடும். முற்கால தமிழர்களிடையே விபச்சாரம் தவறு என்பதில்லை. ஆனால் விபச்சாரம் யூத, கிருத்துவ, இசுலாம் ஆரம்பித்த இனக்குழுகளிடையே பெரும்பாவம். திருடுவதை அங்கீகரிப்பட்ட தொழிலாக வைத்திருந்த தமிழ் இனகுழுக்கள் (சாதிகள்) உண்டு.

சமூகவியலார்கள் கூடி வாழ நான்கு முக்கிய அடிப்படை குணங்கள் தேவை என வரையறுத்துள்ளார்கள். 1.மற்றவரின் உணர்வுகளை அறிதல், 2.குழு விதிகள் புரிந்துகொண்டு, கற்று பின்பற்றுதல், 3.ஒருவருகொருவர் உதவுதல் மற்றும் 4. சமாதனமாக போவது. இவற்றை குரங்குகள் கடைபிடிப்பதை விலங்கு நடத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிவர். உதாரணமாக சிம்பன்சிகள் இன்னொரு சிம்பன்ஸிக்கு தரப்பட்ட உணவைவினை தான் தின்றுவிடாதாம். வயதான குரங்குகளையும் உணவு தந்து பராமரிக்குமாம். ஒரு ஆராய்ச்சியில் இரு Capuchin குரங்குகளை அருகே வைத்து, சிகப்பு பச்சை அட்டை இவற்றின் ஒன்றினை தேர்தெடுக்க வைத்துள்ளார்கள். சிகப்பு அட்டை எடுத்தால் அந்த குரங்குக்கு மட்டும் உணவு அல்லது பச்சை எடுத்தால் இரண்டு குரங்குக்கும் உணவு. பச்சை அட்டை எடுத்தால் இன்னொரு குரங்கிற்கு உணவு தர படுவதை அறிந்த குரங்குகள், சக குரங்கை ஏமாற்ற விரும்பாமல் பச்சை அட்டை மட்டும் எடுக்க ஆரம்பித்துவிட்டனவாம். இதெல்லாம் சமூகமாக வாழ குரங்குகள் கடைபிடிக்கும் விதிகள். இந்த குரங்குகள் எந்த கடவுளை அறியும்? எந்த வேதத்தை அறியும்?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//இந்த குரங்குகள் எந்த கடவுளை அறியும்? எந்த வேதத்தை அறியும்?//

i very much appreciate you, நந்தவனத்தான்.

என் பதிவுகளை விட வரும் பின்னூட்டங்கள் சிறப்பானவை என்ற என் எண்ணத்தை உறுதிப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி

தருமி said...

ராவணன்,
உங்கள் பின்னூட்டம் ஏனோ ஏற மறுக்கிறது; நானே பதிப்பிடுகிறேன்.
========
என்னோட அண்ணாச்சி சுவனப் பிரியன் என்ற மாணிக்கம் அண்ணாச்சி அனைவரது கேள்விக்கும் பதில் சொல்வார். எனக்கு மட்டும் சொல்ல மாட்டார்.

…அண்ணாச்சி....நம்ம முனியாண்டி சாமியைவிட வேறு இறைவனை வணங்குவது முட்டாள்களின் செயல். நம்ம முனியாண்டிசாமி தான் ஒரே இறைவன். நாம் எப்போதும் ஒரே இறைவனை வணங்குவோம்... அது அந்த முனியாண்டிசாமி மட்டுமே...

suvanappiriyan said...

//முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார்.//

உடலின் கழிவுகளான சிறுநீரும் மலமும் அசுத்தமானவை. அந்த நிலையை அடைந்து கொண்டால் தண்ணீர் விட்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த ஹதீதும் முகமது நபி சொன்னதில்லை என்ற முடிவுக்கு உடன் வந்து விடலாம்.

இதையே எத்தனை தடவைசார் நான் சொல்வது? திருப்பி...திருப்பி...திருப்பி....:-)

//இந்த குரங்குகள் எந்த கடவுளை அறியும்? எந்த வேதத்தை அறியும்?//

உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்கின்றன. ஆனால் நாம் அதனை அறிய முடியாது. பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?

//முற்கால தமிழர்களிடையே விபச்சாரம் தவறு என்பதில்லை. ஆனால் விபச்சாரம் யூத, கிருத்துவ, இசுலாம் ஆரம்பித்த இனக்குழுகளிடையே பெரும்பாவம். திருடுவதை அங்கீகரிப்பட்ட தொழிலாக வைத்திருந்த தமிழ் இனகுழுக்கள் (சாதிகள்) உண்டு.//

ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே! அதற்கு காரணம் இஸ்லாமும் கிறித்தவமும். அதே பழங்காலத் தமிழர்களின் முன்னோர்களின் வாழ்வை ஆராய்ந்தால் அங்கும் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலே இருந்திருக்கும். ஆனால் அந்த வரலாறுகள் நமக்கு கிடைக்கவில்லை.

Ant said...

//"எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை இருக்கிறது". மனிதாபிமானத்தினால் சிலர் நல்ல செயல்களை செய்யலாம். வாழ்வின் அனைத்து நாட்களிலும் அவர்களால் அவ்வாறு வாழ்ந்து விட முடியாது. // .. //இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..!// விலை இன்னும் கட்டுபடியாகவில்லை என்றே முடிவு கட்டயாக வேண்டியுள்ளது. அப்ப இறையச்சம்?

காரிகன் said...

இஸ்லாமியர்களின் யூத வெறுப்பு இணையில்லாதது. (பங்காளி சண்டை போன்றது). அகில உலக அளவில் யூதர்கள், இந்திய அளவில் இந்துத்வா சக்திகள், கீழ்த்திசை நாடுகளில் பவுத்த இயக்கங்கள், அதையும் தாண்டினால் மேற்கத்திய கிருஸ்துவ சதி என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகவே மற்ற எல்லா மதத்தவர்களும் செயல்படுவதாக சில இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வப்போது கருத்து சொல்வதுண்டு. paranoia பீடித்தவர்களின் மூளையற்ற கூச்சலால் பல அமைதி விரும்பும் மற்றவர்களை புரிந்துகொள்ளும் சக இஸ்லாமிய மக்களின் குரல்கள் கேட்பதேயில்லை.

Ganesan said...

//அடடா! மனிதத் தன்மை இதுதான் என்று நிர்ணயித்தது யார்?//

சுவனப்ரியனின், இந்த கேள்வியை இன்று காலையில் பார்த்தவுடன், நிர்ணயித்தது பரிணாமம் அப்படின்னு இன்று சாயந்தரம் வந்து பதில் எழுதுனுமென்று நினைத்து கொண்டு வேலைக்கு போனேன். வந்து பார்த்தால் திரு நந்தவனம் என்னை விட சிறந்த முறையில் இதை விளக்கிவிட்டார்..

ஒரு வேலை, பரிணாமம் என்ற பதில் பிடிக்கவில்லை என்றால் ( செமிடிக் மதத்தவர்க்கு தான் இந்த வார்த்தையே பிடிக்கலையே), சுவனபிரியன், மனித தன்மையின் முக்கிய காரணி இறை அச்சம் அல்ல, அது oxytocin என்ற நரம்பு மண்டல வேதியல் பொருள் என்றாவது அறிந்து, ஏற்று கொள்ளலாம்.

http://www.livescience.com/25587-greed-empathy-oxytocin.html
http://www.ted.com/talks/paul_zak_trust_morality_and_oxytocin.html

oxytocin ஐ வாயுவாய் சுவாசித்தால் கூட, மனிதருள் சக சமூகத்தாரின் மேல் அன்பு அதிகமாவதாய் ஆராய்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளதால், பேசாமல் நாமெல்லாம் அல்லாவை வணங்குவதை விட மனிதத்தன்மையை நிர்ணயிக்கும் oxytocin ஐ வணங்கலாம். நந்தவனத்தாரின் குரங்குகளுக்கும் oxytocin தான் ஒழுக்க காரணி என்று கண்டுபிடிக்கபட்டால், அதை ஏக இறைவன் ஆக்கிவிடலாம்.

வவ்வால் said...

சுபி.சுவாமிகள்,

அந்த குரங்கெல்லாம் அரேபிய குரங்குகள், மொகமதய்யா குரான் வாசிக்கும் போது மரத்துல இருந்து கேட்டு , இறையச்சம் பெற்றன என ஒரே வரியில் "டமால்"னு அடிக்க வேண்டாமோ!!!

என்ன சுவாமிகளே இத்தினி நாளா தாவா,தாக்கியானு செய்தும் , வாய்யை அடைக்க தெரியாமல் இருக்கேள்!!!

//ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே! அதற்கு காரணம் இஸ்லாமும் கிறித்தவமும். அதே பழங்காலத் தமிழர்களின் முன்னோர்களின் வாழ்வை ஆராய்ந்தால் அங்கும் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலே இருந்திருக்கும். ஆனால் அந்த வரலாறுகள் நமக்கு கிடைக்கவில்லை.//

அப்படிப்போடுங்க அருவாள!!!

இஸ்லாத்துக்கு முன்னர் இருந்த கிரேக்க,ரோமானிய, எகிப்திய, யூத மனிதக்குழுக்களிலும் விபச்சாரம் ஒதுக்கப்படவேயில்லை.நல்லா கனஜோரா செய்துட்டு தான் இருந்தாங்க.

ரோமானிய, கிரேக்க வரலாற்றினை எடுத்துப்பாருங்கள், தனியா மாளிகைக்கட்டியே சல்லாப சேவைகள் செய்தார்கள்.

# யூதர்கள், எகிப்திய பாரோக்களிடம் குடும்ப முறை அடிமைகளாக இருந்தார்கள், பெண்கள் எல்லாம் பொதுவுடமை.

ஒவ்வொரு எகிப்திய குடும்பமும் பல யூத குடும்பங்களை "குடும்ப சொத்தாக வைத்திருந்தார்கள்.

மோசஸ் தான் அவர்களை மீட்டு இஸ்ரேலை தேடி செங்கடலை எல்லாம் பிளக்க வைத்து அழைத்து வந்தாராம்.

மோசஸ் பத்துக்கட்டளைகள் பெற மலைக்கு போனப்போது , கீழ இருந்த யூதர்கள் குடித்து விட்டு முறையற்ற உடலுறவில் ,பலப்பெண்களுடன் சல்லாபம் செய்துக்கொண்டிருந்ததாகவும், திரும்ப வந்து பார்த்த மோசஸ் கோபத்தில் கட்டளைகள் எழுதிய பலகையை கீழ போட்டு உடைத்து , தவறான வழியில் ஈடுபட்டோர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு சாக சாபம் விட்டாராம்.

# இஸ்லாம் வரும் முன்னர் அரேபியாவில் இருந்த பழக்கம் என்னவெனில், எந்த பெண்ணும் ஆண் உறுப்பினர் இல்லாமல் குடும்பமாக வசிக்க கூடாது,அப்படி ஆண் இல்லாத பெண்கள் எல்லாம் பொது சொத்து,யார் முதலில் தூக்கிட்டு போறானோ அவனுக்கே சொந்தம் :-))

அப்படி தனியா வசிக்கனும்னா ,அப்பெண்கள் எல்லாரிடம்மும் உறவுக்கொள்ள தயார்னு அறிவிக்கணும்,அதுக்கு அடையாளமா விட்டுக்கூறையில்(கூடாரத்தின்) மீது ஒரு கொடியேத்தி வைக்கணும்.

தேவைப்படும் ஆண்கள் போய் அனுபவித்துக்கொண்டு சாப்பாட்டுக்கு உதவுவார்கள்.

அப்படி பல பேரிடம் உறவுக்கொண்டாலும், குழந்தை பிறந்து விட்டால் அப்பானு காட்ட ஒரு விதி வைத்திருந்தார்கள், அப்பெண் யாரிடம் எல்லாம் உறவு கொண்டாளோ அவர்களை எல்லாம் அழைத்து நிற்க வைத்து குழந்தையை முன்னால் போட்டு இந்த குழந்தைக்கு இன்னார் தான் அப்பானு அடையாளம் காட்டினால் போதும், அந்நபர் கண்டிப்பாக குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பெண்னையும் மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மொகமது வந்து இம்முறையை மாற்றினார்,ஆனால் ஒரு பெண் தனியா போனால் அவளை யாரு பார்த்தாலும் தூக்கிட்டு போய் புணரலாமாம்.

அதனால் தான் முறையான உறவுள்ள ஆணுடன் தான் பயணிக்க வேண்டும் என சட்டம் போட்டிருக்கார், அப்படியே ரத்த உறவில்லாத ஆணுடன் பயணம் செய்துவிட்டால் அவனே கணவன் :-))

இப்ப சொல்லுங்க இஸ்லாமில் விபச்சாரம்ம் ஒழிக்கப்பட்டதா இல்லை "வன்புணர்வு" வளர்க்கப்பட்டதா?

இன்னும் பெண்களை அடிமையாக வாங்கி தேவைக்கு பயன்ப்படுத்திக்கலாம்,ஆனால் அது திருமணமல்ல என்றும். உறவுக்கென ஒரு 2 மணி நேரம் மட்டுமே "மூட்டா" திருமணம் என செய்துக்கொள்ளலாம் என்றும் விதி போட்டாரு அவ்வ்!

மூட்டா நிக்காஹ் செய்துக்கொண்டால் உறவு முடியும் வரை கணவன் மணைவி, முடிஞ்சதும் மணப்பந்தம் முறிஞ்சிடும், பின்னர் கையில காசுக்கொடுத்து அனுப்பிடலாம், விபச்சாரம்னு சொன்னால் அபச்சாரம்ம் :-))

தருமி said...

////சுபி.சுவாமிகள்,
உங்க குரூப்லயே நீங்க மட்டும் எப்படி கண்ணியமா மரியாதையா இருக்கீங்க? //

போன பதிவில் Alien இப்படிக் கேட்டுட்டாங்க. ஆனா நீங்க அதில் எல்லாத்தையும் குளிர் காய வச்சிருக்க முயற்சி பண்றது மாதிரி இருக்கே!

////எவ்வளவு கிண்டலாக கேட்டாலும் புன் சிரிப்போடு அதற்கு பதிலளிக்கும் முறையை வஹ்ஹாபிகள்தான் கொண்டு வந்தனர்.//

அவங்க சொன்னது உங்கள மட்டும் தான். நீங்க மட்டும் பொறுமாயா பதில் சொல்றீங்க அப்டின்னாங்க. நீங்க என்னடான்னா மொத்த வஹாபிகளோடு கூட்டமா இறங்குறீங்களே!

உங்க தல மனுஷ்ய புத்திரன், கமல் ஹாசன் பற்றிப் பேசியது எம்புட்டு பெரிய தத்துவங்கள். அட போங்க ... சார்!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே//

திருக்குறள் 2000 ஆண்டுக்கு முந்தையது,அதிலேயே தப்புனு சொல்லியாச்சே.

அக்காலத்தில் பரத்தையரும் இருந்தாங்க,அது தவறு என அற நெறியும் சொன்னாங்க.

அப்போ சுதந்திரமா இருந்தாங்க,எனவே எதையும் சட்டம் போட்டு தடுக்கல.

சரக்கு பாட்டிலில் மது,வீட்டுக்கு,நாட்டுகு கேடு எனப்போட்டு விக்கிறாப்போல :-))

தருமி said...

//உடலின் கழிவுகளான சிறுநீரும் மலமும் அசுத்தமானவை. அந்த நிலையை அடைந்து கொண்டால் தண்ணீர் விட்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை.//

ஆக நம்ம ஆளுக இது மாதிரி சுத்தமா இருக்கணும்னு சொல்லிட்டார். ஆனால் தண்டனையா அடுத்த ஆளுகளுக்குக் கொடுத்துட்டார் என்கிறேன்.

இப்படிச் சொன்னா உடனே // ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். // - இப்படிச் சொல்லி ஓடி விடுவீர்கள். எது ஓட்டை ஹதீஸோ அதை இ.க. என்று சொல்லி ஓடி விடுவது ... என்னங்க நியாயம். அப்போ அந்த ஹதீஸை இன்னும் எதுக்கு வச்சிக்கிட்டு இருக்கீங்க? தூற எறிய வேண்டியது தானே!

இதைத் தான் <a href="dharumi.blogspot.in/2012/06/576.html”> இந்தப் பதிவில் “முன்பே” கேட்டிருந்தேன்.</a>
//முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.
ஒரே கேள்வி: • பின் ஏன் ஹதீஸ்?//

ஹ்தீஸை quote பண்ணுவீங்க. நாங்க ஒண்ணு சொன்னா அது ஓட்டை உடைசல் என்பீங்க.

ஹதீஸைப்பத்தி இந்தக் கேள்வி கேட்டு பல காலமாகப் போச்சு. பதில் ஏதும் இதுவரை இல்லை; கேட்டால் ..இதையே எத்தனை தடவைசார் நான் சொல்வது? திருப்பி...திருப்பி...திருப்பி....:-)// என்பீர்கள்!
என்னமா விவாதம் பண்றீங்க...!

தருமி said...

"வஹாபிகளின் spokesperson" என்ற பட்டத்தை தம்பி சு.பி.க்கு கொடுக்க நினைக்கிறேன்.

பாருங்கள் .. இவர் வந்து கச்சை கட்டியதும் ஏனைய தீவிர அடிப்படைவாதிகள் கூட ஒதுங்கி விடுகிறார்கள்.

உங்களுக்கெல்லாம் சம்மதம் தானே?

Ganesan said...

தருமி நீங்க கேட்ட பல கேள்விகளில், இந்த வரிகள்

//so what? தகப்பன் ஆசை; வைத்து விட்டுப் போகட்டுமே! இதற்காக அல்லா வீட்டை இரண்டாகப் பிளந்து விடுவானோ? அல்லது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி யுவன் கழுத்தைச் சீவி விடுவானா?

என் வீட்டில் சாமி கும்பிட்டால் நான் வெளியே ஓட மாட்டேன். ஓடினால் அது தவறு. அதனால் மீண்டும் சொல்கிறேன்: உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //

ஒரு அடிப்படை விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. யாருக்காகவும் இவர்களின் மட நம்பிக்கையை சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்ற பிடிவாதம் தான் வஹாபி தீவிரவாதத்தின் அடி நாதம் என்று.

யாராவது வேற சாமியை கும்பிட்டால் எதற்காக ஓட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரவே இல்லை என்று நினைக்கிறேன்.

Anonymous said...

வேலையின் காரணமாக நான் கொஞ்சம் லேட்.
பதிவும் பின்னூட்டங்களும் நல்ல த்ரில்லிங்-ஆ போய்டிருக்குது.

//"வஹாபிகளின் spokesperson" என்ற பட்டத்தை தம்பி சு.பி.க்கு கொடுக்க நினைக்கிறேன். //

Dharumi sir, அண்ணன் சு.பி.சுவாமிகள் is well deserved. முழு சம்மதம்.
------------------------------------

வவ்வால்,

//சரக்கு பாட்டிலில் மது,வீட்டுக்கு,நாட்டுகு கேடு எனப்போட்டு விக்கிறாப்போல :-)) //

நச்ச்......
இந்த பஞ்ச் இந்த காலத்துக்கு கூட பொருந்தும்.
குண்டு வைக்கிறது தவறு என்று சொல்லிவிட்டு, குண்டு வச்சிக்கலாம்.

வவ்வால் said...

தருமிய்யா,

//"வஹாபிகளின் spokesperson" என்ற பட்டத்தை தம்பி சு.பி.க்கு கொடுக்க நினைக்கிறேன்.
//

தாரளமா செய்யலாம்,மேலும் சு.பி.சுவாமிகள் தான் தமிழக வஹாபிகளின் ,ஞானபீடம்,ஆன்மீகஸ்குரு!

சிறந்த ஆன்மீகவாதி, மேலும் தீவிர சிவபக்தரும் கூட!

அதிர்ச்சியடையாதீர்கள், ஏக இறைவன் சிவனின் மீது தனித்துவமான பற்றுதல் கொண்டு,தேவாரம்,திருவாசகம்,எல்லாம் ஓதுகிறார். ஶ்ரீலஶ்ரீ தருமபுர ஆதீனகர்தாரார் விட அழகாக உரைவிளக்கங்கள் அளிக்கக்கூடியவர்.

ஏக இறைவன் சிவனின் அருமைப்பெருமைகளை விளக்கி அவரது பிலாக்கில் ஆன்மீகபேருரைகள் பல எழுதியிருக்கிறார்.

ஆன்மீக நெறியும்,அன்பு நெறியும் அவரிடம் மிகுந்திருக்க காரணம் திருவாசகம்,தேவாரம் போன்ற சைவ நெறி நூல்களை மனம் ஒன்றி வாசிப்பதாலே ஆகும்.

மேலும் திருஅருட்பா, திருப்புகழ் போன்றவற்றிலும் பண்ப்பட்ட ஞானம் உண்டு.

இப்படி ஆன்மீக செம்மலாக திகழும் சு.பி.சுவாமிகளை வஹாபிச ஊடக தொடர்பாளராக-ஸ்போக்ஸ் பெர்சனாக நியமித்தல் சாலச்சிறந்த ஒரு முடிவாகும்!

ஒரு மனதாக வழிமொழிகிறேன்!

தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அரோகரா!!!

suvanappiriyan said...

பின்வரும் செய்தியை அதிகமாக
ஷேர் (SHARE) செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,
இன்ஷா அல்லாஹ்.!!

இறைவனை நெருங்க எளிய வழிகாட்டும் ‪#‎இஸ்லாம்‬!

ஊட்டி அருகே நஞ்சநாடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் இரு தரப்பினரில் யார் முதலில் வழிபாடு நடத்துவது என்று ஏற்பட்ட தகராறில் இருவர் படுகொலை செய்யப்ப்டுள்ளனர். பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

கடவுளை வழிபடுவதில் யாருக்கு முன்னுரிமை என்ற போட்டியில் இரு உயிர்கள் பலியானது வேதனையான சம்பவம்.

மொழியால், குலத்தால், பணத்தால், நிறத்தால், தேசத்தால் பல பிரிவினையை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை போதிப்பதுதான் கடவுளை வழிபட பெரும் தடையாக உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் இஸ்லாம் அழகான தீர்வை சொல்லித்தருகின்றது.

வழிபாட்டுத்தலத்திற்குள் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களுக்கு முதல் வரிசையில் முன்னுரிமை. அவ்வாறு முதலில் வருபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி; அரசனாக இருந்தாலும் சரி! முதலில் வருபவருக்கே முன்னுரிமை; அப்படி வரிசையில் நின்று வணங்கும்போதும் கூட பின்னால் நிற்பதால் இறைவனை வணங்குவதில் பின்னாடி போய்விட்டோம் என்று அஞ்சத்தேவையில்லை.

தொழுகையின் போது இறைவனுக்காக நம்முடைய நெற்றியை நிலத்தில் வைத்து அவனுக்கு சிரம் பணிவதுதான் அவனை மிகமிக அருகில் நெருங்குவது என்று அழகான ஒரு வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்குகின்றது.

இவ்வாறு சிரம் பணிந்து இறைவனிடத்தில் மிக அருகில் நெருங்குவதற்கு
பணம் தேவையில்லை;
பட்டம் தேவையில்லை;
பதவி தேவையில்லை;
அந்தஸ்து தேவையில்லை;

பணக்காரனும் நெருங்கலாம்; ஏழையும் நெருங்கலாம்.
வெள்ளையறும் நெருங்கலாம்; கறுப்பரும் நெருங்கலாம்.
எந்த ‪#‎மொழி‬ பேசக்கூடியவரும் நெருங்கலாம்.

இப்படி இறைவனை மிக எளிய வழியில் நெருங்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

மற்ற மதங்களிலோ இத்தகைய வழிகாட்டுதல்கள் இல்லாமல் அமைதியை தொலைத்துவிட்டு ஆன்மீகத்தை தேடி வருகின்றனர்.
கடவுளைத் தேட புறப்பட்டு அமைதியை தொலைத்தவர்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அன்பான அழைப்பு விடுக்கின்றோம்.

வாருங்கள்... எளிய வழியில் இனிய முறையில் இறைவனை நெருங்கி அவனது அன்பைப்பெறுவோம் என்று அழைக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்

video : http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/

suvanappiriyan said...

//யாராவது வேற சாமியை கும்பிட்டால் எதற்காக ஓட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரவே இல்லை என்று நினைக்கிறேன். //

ஏற்கெனவே பதில் கொடுத்துள்ளேனே!

முகமது நபியை வளர்த்த அவரது பெரிய தந்தை கடைசி வரை இஸ்லாத்தை ஏற்காமலேயே இறந்தார். அந்த நாட்டு ஆட்சியாளராக இருந்தும் அவரை கட்டாயப்படுத்தவில்லை.

ஒரு தோழர் தனது பெற்றோர் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் அவருக்கு பணிவிடை செய்ய வெண்டுமா? என்று கேட்டதற்கு 'ஆம்! அது உன் மீது கடமை' என்றார் நபிகள் நாயகம்.

கிறித்தவர்களை பள்ளி வாசலிலேயே தொழ அனுமதித்துள்ளனர். யூதர்களிடம் பல முறை முகமது நபி கடன் வாங்கியுள்ளார். அந்த அளவு சகோதரத்துவத்துடனேயே மாற்று மதத்தவரோடு பழகியுள்ளார் நபிகள் நாயகம்.

suvanappiriyan said...

//ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.
ஒரே கேள்வி: • பின் ஏன் ஹதீஸ்?//

குர்ஆனின் ஒரு வசனம் நமக்கு விளங்கவில்லை என்றால் அதற்கான விளக்கத்தை முகமது நபியின் விளக்கவுரையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இறைவன் கூறுகிறான். ஆனால் நபி மொழிகளைப் பற்றி அவ்வாறு சொல்லவில்லை. எனவே குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு நபி மொழி கிடைத்தால் அது நபி சொன்னது அல்ல என்ற முடிவுக்கு உடன் வந்து விடலாம்.

ஆனால் ஹதீதுகளை தொகுத்தவர்கள் சொல்பவர்களின் அனைத்து கருத்துக்களையும் பதிந்து விடுவார்கள். அதன் அடியில் இவர் முகமது நபியை பார்க்க வில்லை. இவர் பொய் சொல்லக் கூடியவர். இவருக்கு ஞாபக மறதி உண்டு. முகமது நபி வரை தொடர் செல்லவில்லை என்ற குறிப்புகளையும் எழுதி வைப்பார்கள். எனவே இஸ்லாத்தை சரியாக விளங்கிய ஒருவனுக்கு எந்த குழப்பமும் ஏற்படாது.

suvanappiriyan said...

//அவங்க சொன்னது உங்கள மட்டும் தான். நீங்க மட்டும் பொறுமாயா பதில் சொல்றீங்க அப்டின்னாங்க. நீங்க என்னடான்னா மொத்த வஹாபிகளோடு கூட்டமா இறங்குறீங்களே!//

பி.ஜெய்னுல்லாபுதீன், ஜாகிர் நாயக், அமெரிக்கரான யூசுஃப் எஸ்ட் போன்ற வஹாபிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சியை பார்த்தால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்.

//உங்க தல மனுஷ்ய புத்திரன், கமல் ஹாசன் பற்றிப் பேசியது எம்புட்டு பெரிய தத்துவங்கள். அட போங்க ... சார்!//

மனுஷ்ய புத்திரன் வஹாபிகளுக்கு எதிரானவர் ஆச்சே! அவரது பேட்டிகளை படித்ததில்லையா?

தருமி said...

//இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் இஸ்லாம் அழகான தீர்வை சொல்லித்தருகின்றது.//

ஓ! அப்டியா? அப்போ சன்னி -ஷியா சண்டையெல்லாம் என்னங்க?
தினமும் பாக்.கில் பல பேர் உயிர் போகுதாமே!

தன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து விட்டு ... அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பைப் பாருங்களேன்!

தருமி said...

//ஏற்கெனவே பதில் கொடுத்துள்ளேனே!//

சும்மா சும்மா இதே பஜனையைப் பாடாதீர்கள். முகமது அப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார். பின் ஏன் யுவன் பம்பாய்க்கு ஓடணும். அதுக்கு நீ விசில் அடிக்கணும் தெரியலையே. அப்பா அவர் பாட்டுக்கு கொண்டாடட்டும் என்றல்லவா விட்டிருக்கணும்!

நீங்க சொல்றதுல்ல முன்னுக்குப் பின் முரணாக இருக்கு ...

தருமி said...

//இஸ்லாத்தை சரியாக விளங்கிய ஒருவனுக்கு எந்த குழப்பமும் ஏற்படாது.//

எல்லாருமா வஹாபிய spokesperson மாதிரி எல்லாம் தெரிந்து இருக்க முடியும். பாவம், யுவன் இதைப் படிச்சா எப்படி புரிஞ்சுக்குவார்னு பார்க்கணுமில்ல....

அதை விடுங்க ...//முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். // இப்படி வேறு சொல்லிட்டு போன பின் எதுக்கு ஹதீஸ் அப்டின்னும் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே.

ஆனாலும் இந்த வீக் ஹதீஸ், தப்பான ஹதீஸுக்கு நீங்க கொடுக்கிற முட்டுக் கட்டைகள் கொஞ்சம் கூட தாங்கிப் பிடிக்கலைங்க.

//முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார்.//

தருமி said...

//உங்க தல மனுஷ்ய புத்திரன், கமல் ஹாசன் பற்றிப் பேசியது எம்புட்டு பெரிய தத்துவங்கள். அட போங்க ... சார்!//

உங்க தல, ....ஒரு சின்ன கமா போட உட்டுப் போச்சு. நான் சொன்னது உங்க தலை பி.ஜே., கமல் பற்றியும், மனுஷ்ய புத்திரன் பற்றியும் பேசிய “நல்ல” வார்த்தைகள் எல்லோருக்கும் தெரியுமே என்றேன். அதுனால தான் உங்கள் ஒரு விதி விலக்கு என்று சொன்னார்கள்.

Ant said...

//மொழியால், குலத்தால், பணத்தால், நிறத்தால், தேசத்தால் பல பிரிவினையை ஏற்படுத்தி// இது சரி. //பணக்காரனும் நெருங்கலாம்; ஏழையும் நெருங்கலாம். வெள்ளையறும் நெருங்கலாம்; கறுப்பரும் நெருங்கலாம்.
எந்த ‪#‎மொழி‬ பேசக்கூடியவரும் நெருங்கலாம்// இது ஏன்? யார் உருவாக்கியது இப்படி? மனிதனா?

Ant said...

//எந்த ‪#‎ மொழி‬ பேசக்கூடியவரும் நெருங்கலாம்// அரபு மொழி அல்லாதவர்களுக்கு அல்லா யார் என்றே தெரியாதே? அல்லாவின் சட்டமும் தெரியாதே பின்னர் எப்படி தெரியவைப்பது? புரிய வைப்பது?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அன்பு மார்க்கத்தின் சில சாம்பிள்களைப்பாருங்க.

ஷியா மீது தாக்குதல்:

பாக்கிஸ்தானில் ஷியா இஸ்லாமியர்கள் தொழுகைக்கு செல்லும் போது அல்லது மசூதியில் வைத்து, சன்னி இஸ்லாமியர்களால் வெடிக்குண்டு வீசி அல்லது தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்படுகின்றனர்.

http://www.bbc.co.uk/news/world-asia-22999668

http://www.gulf-times.com/pakistan/186/details/360828/suicide-bombs-kill-39-near-shia-mosques-in-pakistan

http://english.ahram.org.eg/NewsContent/2/9/89402/World/International/Bomb-kills-three-near-Shiite-mosque-in-Pakistan.aspx

http://www.theguardian.com/world/2013/mar/03/pakistan-car-bomb-karachi

http://news.yahoo.com/blast-pakistan-kills-9-near-shiite-mosque-155405923.html

# ஹஜ்ஜில் நடக்கும் அவமரியாதைகள்:
"At 15, I was groped as I was performing the rites of the Haj pilgrimage at Mecca, the holiest site for Muslims. Every part of my body was covered except for my face and hands. I’d never been groped before and burst into tears, but I was too ashamed to explain to my family what had happened"
http://www.monaeltahawy.com/blog/?p=63

# "On 11 June 2013, Al Sabary travelled from Dhamar in Yemen to Saudi Arabia accompanied by his wife and two children on a pilgrimage to Mecca. He used to live in Al Madina in Saudi Arabia, which he left in 2009 to resettle in his homeland. Before traveling, he made sure he complied with all administrative procedures to enter the country, and obtained an entry visa for himself and his family at the Saudi embassy in Sana'a.
A few kilometers after having crossed the Saudi-Yemeni border, Tawfiq Al Sabary's car was stopped by Saudi police. The police asked him to get out of the car and to show them his identity documents. His wife told Alkarama that Mr Al Sabary was then arrested without being shown any warrant. She was also not given any reason for the arrest her husband and return to Yemen directly.''
http://en.alkarama.org/index.php?option=com_content&view=article&id=1155:saudi-arabia-risk-of-torture-of-yemeni-national-arrested-on-his-pilgrimage-to-mecca&catid=33:communiqu&Itemid=179

#
http://www.arabnews.com/news/467800

சூடான் அதிபருக்கு கைது வாரண்ட்;

The International Criminal Court led calls Wednesday for the government of Democratic Republic of Congo to arrest visiting Sudanese President Omar Bashir, who is wanted on charges of genocide in Darfur.

http://www.middle-east-online.com/english/?id=64513

# தெற்கு சூடானில் ஆயுதம் கொண்ட அனைவரும் மக்களை தான் தாக்குகிறார்கள்.

""Armed forces from both sides have extensively looted and destroyed civilian property, including desperately needed aid facilities, targeted civilians, and carried out extrajudicial executions, often based on ethnicity," HRW said in a report."

http://www.middle-east-online.com/english/?id=64525

# சிரியாவில் கொலைப்பட்டினி:

"Gaunt, ragged figures fill the streets for as far as the eye can see in the besieged Palestinian refugee camp of Yarmuk outside Damascus, where some 40,000 are said to be slowly starving to death."
http://www.middle-east-online.com/english/?id=64539

# அன்பு வெள்ளம் ஓவரா பொங்கி வழிஞ்சி அதுல மூழ்கி மூச்சு திணறி செத்து இருப்பாங்கனு சொன்னாலும் சொல்வீங்க அவ்வ்!

நாங்கலாம் என்ன உலக நடப்பு என்னனு தெரியாத வரப்பட்டிக்காட்டுல இருக்கோம்னு நினைச்சிட்டு ,நீங்க மானாவாரியா கதைய விடுறிங்களே, சொல்லும் போது இதெல்லாம் எப்படி நம்புவாங்க என உங்களுக்கே கொஞ்சம் கூச்சம் ஆகாதா?

------------------------

#//அந்த அளவு சகோதரத்துவத்துடனேயே மாற்று மதத்தவரோடு பழகியுள்ளார் நபிகள் நாயகம்.//

கடன் கொடுக்கலைனா அடிப்போம்னு திட்டமா இருக்கும்,ஆனால் யூதர்கள் கொடுத்திருப்பாங்க, சரி கடனை திருப்பிக்கேட்டால் அடிப்போம்னு வாங்கியிருப்பார் :-))

சரி வாங்கின கடனை திருப்பிக்கொடுத்தாரா?

? said...

@தருமி ஐயா, கணேசன் நன்றி.
அல்லா குரங்குகளுக்காக குரங்கு இறைதூதர்களை அனுப்பி வேதங்களை எறக்கியுள்ளார் என்று
சு.பிரியன் அடித்துவிடுவார் என எதிர்பார்த்தேன்..ம்ம்ம்

@திரு.சு.பிரியன்
//பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?//

நானா??? சரிதான்!

//உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்கின்றன. ஆனால் நாம் அதனை அறிய முடியாது. //

அடடா, மற்ற உயிரிகளை காஃபிர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். அவர்களும் முமின்களா?

[எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குரான் 4.93)]]

சக முஃமின்களை தபிஹாஹ் ஹலால் பண்ணி பிரியாணியாக்கிவிடுகிறீர்களே... அடக்கண்டாவியே அப்ப உமக்கும் நரகம்தானா?

தருமி said...

sorry about a spelling mistake .........//அதுக்கு நீ விசில் அடிக்கணும் தெரியலையே. //

அதுக்கு நீங்க விசில் அடிக்கணும் தெரியலையே. -- என்று வாசித்துக் கொள்ளவும்

தருமி said...

நந்தவனத்தான்
என்ன உங்களோட அநியாயமா போச்சு. //அல்லா குரங்குகளுக்காக குரங்கு இறைதூதர்களை அனுப்பி வேதங்களை எறக்கியுள்ளார் என்று சு.பிரியன் அடித்துவிடுவார்//

அப்படித்தானே இருக்க வேண்டும். மனுஷங்களுக்கு அங்கங்க இருந்து நபிகள். அதே மாதிரி குரங்குகளுக்கு ஒருகுரங்கு நபி வரும;. ஆனைகளுக்கு ஆனை நபி வரும்; ஆமா .. புல்லு, பூண்டு, மரம் இதுக்கும் அதே மாதிரி நபி வந்திருக்கும்லா...

உங்களுக்கு பரிணாமம் தான் தெரியலைன்னு சொல்லியிருக்கார்னு பார்த்தா... உங்களுக்கு இந்த நபி விவகாரமும் புரியாமல்லா இருந்திருக்கு.

தருமி said...

ரொம்ப நாளா நச்சரிக்கிற கேள்வி ஒண்ணு இருக்கு, சுபி.

அதென்ன 23 வருஷமா வஹி வருது. ஆனால் அத்தனை ஆண்டுகளும் ஒரு மனுஷனுக்கு எழுதப் படிக்க ஒரு மொழியாளுமை இல்லைன்னா என்ன மனுஷன் அவர்? அப்படிப்பட்ட ஒரு அறிவிலியையா கடவுள் நபியா தேர்ந்தெடுப்பார்.

நாமளே தேவைன்னா சில மாதத்தில் ஒரு மொழியை எழுதப் படிக்க தெரிந்து கொள்கிறோமே... நம்மள விட நம்ம நபி அம்புட்டு மோசமா?

suvanappiriyan said...

திரு தருமி!

//ரொம்ப நாளா நச்சரிக்கிற கேள்வி ஒண்ணு இருக்கு, சுபி.

அதென்ன 23 வருஷமா வஹி வருது. ஆனால் அத்தனை ஆண்டுகளும் ஒரு மனுஷனுக்கு எழுதப் படிக்க ஒரு மொழியாளுமை இல்லைன்னா என்ன மனுஷன் அவர்? அப்படிப்பட்ட ஒரு அறிவிலியையா கடவுள் நபியா தேர்ந்தெடுப்பார்.

நாமளே தேவைன்னா சில மாதத்தில் ஒரு மொழியை எழுதப் படிக்க தெரிந்து கொள்கிறோமே... நம்மள விட நம்ம நபி அம்புட்டு மோசமா?//

"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."
(அல்குர்ஆன் 29:48)

உங்கள் கேள்விக்கு அழகிய பதிலை இறைவன் கொடுப்பதை பாருங்கள். முகமது நபி எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருந்தால் பைபிளிலிருந்தும் தோராவிலிருந்தும் அனைத்து வசனங்களையும் காப்பி அடித்து விட்டார் என்று அன்றைய அரபுகள் குற்றம் சுமத்துவர். ஏனெனில் முந்தய வேதங்களின் வரலாறுகள் சில மாற்றங்களுடன் குர்ஆனில் வருகின்றன. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பது அந்த மக்களுக்கும் நன்றாக தெரிந்திருந்தது. எனவேதான் யாரோ சொல்லிக் கொடுத்து இந்த முகமது வேதத்தை தருகிறார் என்றும் குற்றம் சுமத்தினர். அனைத்து குற்றச்சாட்டுகளும் அந்த மக்களாலேயே பொய்யாக்கப்பட்டு இஸ்லாம் வளர ஆரம்பித்தது.

எனது கம்பெனியில் பஞ்சாபை சேர்த்த ஜெஹூருத்தீன் என்ற கார்பெண்டர் வேலை செய்கிறான். ஆள் பார்க்க ஹீரோவைப் போல் இருப்பான். எந்த வேலையைக் கொடுத்தாலும் மிகக் கச்சிதமாக முடிப்பான். ஆனால் அவனது பெயரை அவனால் உருதுவில் எழுதத் தெரியாது. கேள்வி ஞானத்தில் அவன் அருகில் எவருமே செல்ல முடியாது. எனவே எழுதப்படிக்கத் தெரியாதது ஒரு குறைபாடு அல்ல. இழிவும் அல்ல.

அரபு மொழி பாண்டித்தியம் பெற்றவர்களுக்குத்தான் குர்ஆனின் வசனங்கள் எந்த அளவு உயர்ந்த நடையில் இருக்கிறது என்பதை விளங்க முடியும். அதோடு சாமான்யனுக்கும் விளங்கும் வகையில் உள்ளது. புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்கள் கூட 'குர்ஆனைப் படித்து விட்டுத்தான் நான் இஸ்லாத்தை தழுவினேன்' என்று கூறுவதைப் பார்க்கிறோம். அன்றைய அரபுகள் குர்ஆனின் வசனத்தில் உள்ள கவி ஆளுமையை கண்டு ஆச்சரியப்பட்டனர். ஆட்டையும் ஒட்டகத்தையும் மேய்த்துக் கொண்டிருந்த முகமதுக்கு இவ்வளவு கவித்துவம் வாய்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அடுத்து 'இனி எக்காலத்தில் உம்மால் எழுத படிக்க தெரிந்தவராக ஆக முடியாது' என்றும் குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு எழுதப் படிக்க கற்றிருந்தால் அதனை வைத்தே எதிரிகள் குர்ஆனைப் பொய்யாக்கியிருப்பர். உலக அறிஞர்கள் இன்று வரை ஆராய்ந்து ஒரு அறிவியல் குற்றத்தையோ வரலாற்றுக் குற்றத்தையோ கண்டு பிடிக்க முடியவில்லை என்பதிலிருந்து இது இறை வேதம்தான் என்ற முடிவுக்கு எவரும் வருவர்.suvanappiriyan said...

//அதுக்கு நீங்க விசில் அடிக்கணும் தெரியலையே. -- என்று வாசித்துக் கொள்ளவும்//

என்னை விட வயதில் மூத்தவர்தானே நீங்கள். எனவே என்னைப் பொருத்த வரை இது ஒரு குறையே அல்ல.

அந்த அளவு உங்களை கோபப்படுத்தியிருக்கிறோனோ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். :-)

suvanappiriyan said...

திரு ஆண்ட்!

//அரபு மொழி அல்லாதவர்களுக்கு அல்லா யார் என்றே தெரியாதே? அல்லாவின் சட்டமும் தெரியாதே பின்னர் எப்படி தெரியவைப்பது? புரிய வைப்பது?//

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110

நீங்கள் இறைவன், கடவுள் என்று எப்படி அழைத்தாலும் அது அந்த ஏக இறைவனையே குறிக்கும். நமது தமிழ் மொழியிலும் ஏக இறைவனைப் பற்றிய பல பாடல்கள் வந்துள்ளன.

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'
-ரிக் வேதம் 1:164:46

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.


இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் சொல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180

எனவே தவறு இறை வேதங்களில் இல்லை. அதனை தவறாக விளங்கிக் கொண்ட மனிதர்களிடம்தான் உள்ளது.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

ஹி...ஹி எனக்கும் கூட எழுதப்படிக்க தெரியாது,இனிமேல் கத்துக்கவும் மாட்டேன்.

இப்பக்கூட இணைய இணைப்பே இல்லை,ஆனால் இந்த கருத்த தருமிய்யா வலைப்பதிவில சொல்லுறேன், எனக்கும் இறையருள் இறங்கிடுச்சு,இனிமே நான் சொல்றதுலாம் "இறைவேதம்" ஆகிடும் :-))

இத நம்ப மாட்டேன்னு சொன்னிங்கன்னா, நீங்க சொல்லுற இறைவேதம் இறங்கின கதையும் நம்பக்கூடாது அவ்வ்!

# //அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110
//

பேரு மட்டும் அழகா இருந்தா போதுமா அவ்வ்!

அது சரி பலப்பேருல அழைத்தாப்போல ,பல வகையில வணங்கிக்கலாமே, அல்லாவுக்கு சூடம் கொளுத்தி,தேங்கா உடைச்சு ,பொங்க வச்சா வேண்டாம்னா சொல்லிடுவாரு?

# எனக்கு ஒரு டவுட்டு,

மொகமது என்றப்பெயர் ,அவரோட தாத்தாவின் பெயர் அதனையே வைத்துள்ளார்கள்.

சிலைவணங்கியாக இருந்து ,அல்லாவை வணங்க ஆரம்பித்த பின் மொகமது என்றப்பெயரை மாற்றி வைத்துக்கொள்ளவில்லை,ஆனால் ஏன் யுவன் ஷங்கர் ,திலிப் போன்றவர்கள் அல்லாவை வணங்க ஆரம்பித்ததும் ,அப்துல் ஹாலிக், ரஹ்மான் எனப்பேரை மாத்திக்கிட்டாங்க?

மூடத்தனம் தானே?

இல்லை அல்லாவை வணங்க ஆரம்பிச்சதும் பேரு மாத்திக்கிறதுக்குனு சடங்கு எதுவும் இருக்கா? அதில் இருந்து முகமதுவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டதா?

அபுபக்கர், ஓமர் என எல்லாரும் அதே பேருல இருந்து இருக்காங்க, என்னமோ இதில் சதில் இருக்குனு நினைக்கிறேன்,நீங்க தான் ஆன்மீகப்பேரொளி ,இந்த சதியை உடைக்க முடியும்!!!

suvanappiriyan said...

//அது சரி பலப்பேருல அழைத்தாப்போல ,பல வகையில வணங்கிக்கலாமே, அல்லாவுக்கு சூடம் கொளுத்தி,தேங்கா உடைச்சு ,பொங்க வச்சா வேண்டாம்னா சொல்லிடுவாரு?//

தன்னை பல பெயர்களில் கூப்பிடலாம் என்று அனுமதிக்கும் இறைவன் தன்னை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று இறை வேதங்கள் மூலமாக கட்டளையும் இடுகிறான். எனவே அந்த இறைவன் எப்படி வணங்க வேண்டும் என்று சொன்னானோ அதன்படிதான் வணங்க வேண்டும்.

//மொகமது என்றப்பெயர் ,அவரோட தாத்தாவின் பெயர் அதனையே வைத்துள்ளார்கள்.

சிலைவணங்கியாக இருந்து ,அல்லாவை வணங்க ஆரம்பித்த பின் மொகமது என்றப்பெயரை மாற்றி வைத்துக்கொள்ளவில்லை,ஆனால் ஏன் யுவன் ஷங்கர் ,திலிப் போன்றவர்கள் அல்லாவை வணங்க ஆரம்பித்ததும் ,அப்துல் ஹாலிக், ரஹ்மான் எனப்பேரை மாத்திக்கிட்டாங்க?

மூடத்தனம் தானே?

இல்லை அல்லாவை வணங்க ஆரம்பிச்சதும் பேரு மாத்திக்கிறதுக்குனு சடங்கு எதுவும் இருக்கா? அதில் இருந்து முகமதுவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டதா?//

திலிப் குமாராகவும், யுவனாகவும் பழைய பெயர்களிலேயே இஸ்லாத்தில் தொடரலாம். அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ராமன், முருகன் போன்ற கடவுள் பெயர்களை தவிர்த்து தருமி, அன்பழகன், அறிவழகன் என்ற பெயர்களில் இஸ்லாமியராக இருக்கலாம்.

ஆனால் தமிழகத்தில் சாதி வெறி புரையோடிப் போயிருக்கிறது. ரஹ்மான் எந்த சாதி என்று 90 சதமான தமிழர்களுக்கு தெரியாது. அடுத்த தலைமுறையில் 10 சதமான தமிழர்களுக்கும் அவரது சாதி என்ன என்பது தெரியாமல் மறைந்து விடும். யுவன் சங்கர் ராஜா பழைய பெயரிலேயே தொடர்ந்தால் அவரது சாதி அடையாளத்தை பலரும் முன்னிலைப்படுத்துவர். எனவே தான் தமிழகத்தில் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தங்களது பெயர்களை மாற்றிக் கொள்கின்றனர். சாதி வெறி தமிழகத்தில் குறைந்து விட்டால் பழைய பெயர்களிலேயே இஸ்லாத்தில் தொடரலாம்.

எங்கள் கிராமத்து தெரு பெயர்கள் எல்லாம் என்ன தெரியுமா? ஞாயக்கர் தெரு, கொல்லன் தெரு, பாப்பான் தெரு, செக்கடித் தெரு. ஆனால் வசிப்பது அனைவரும் இஸ்லாமியர்கள். எவருக்குமே தாங்கள் முன்னால் எந்த சாதியில் இருந்து வந்தோம் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் பெயர் மாற்றம்.

முனாஃப் என்பது அன்றைய அரபிகள் வணங்கி வந்த ஒரு தெய்வத்தின் பெயர். சில முஸ்லிம்கள் விபரம் அறியாமல் தங்கள் குழந்தைகளுக்கு அப்துல் முனாஃப் அதாவது முனாஃப் என்ற சாமிக்கு அடிமை என்ற பொருள்பட பெயர் வைத்து விடுகிறார்கள்.

அப்துல் முகமது என்று பெயர் வைத்தாலும் தவறு. முகமதுக்கு அடிமை என்ற பொருள் தரும். முகமது நபி குர்ஆனை விளக்க வந்த தூதர்தானோயெழிய அவருக்கு முஸ்லிம்கள் அடிமை அல்ல. இதனையும் பலர் தவறாக வைக்கின்றனர்.

தற்போது அதனை நாங்கள் விளக்கி அந்த பெயர்களை மாற்றச் சொல்லுகிறோம். எனவே அரபியில் பெயர் வைத்தாலும் அர்த்தத்தோடு வைக்க வேண்டும்.

Anonymous said...

//"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."
(அல்குர்ஆன் 29:48)//

சந்தேகம் கொண்டால், அவர்கள் வீணர்களா?
இதிலிருந்தே தெரிகிறது இது கடவுளின் வார்த்தை இல்லை என்று. இல்லை இது உண்மையிலேயே கடவுளின் வார்த்தை என்றால், உங்கள் கடவுளுக்கு பிறரை மதிக்க தெரியவில்லை.

Anonymous said...

//ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)//

//............அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'//

சு.பி.சுவாமிகள்,

இவ்வளவு (99) பெயரையும் கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா? இல்லை, அவரது துதி பாடிகள் (உங்களைப்போல) வைத்த பெயரா?

1. கடவுள் தனக்குத்தானே வைத்துகொண்டால், அவர் ஒரு சுய தம்பட்டக்காரர் (Self Pride).

2. அவரது துதி பாடிகள் இவ்வளவு பெயரையும் வைத்திருந்தால், குரானிலிருக்கிர வார்த்தை எல்லாம் கடவுளின் வார்த்தை அல்ல. அவரது துதி பாடிகளின் வார்த்தை? (புலவர்கள் எல்லாம் போற்காசுக்காக அரசனை போற்றி பாடுவது போல).

இந்த இரண்டில் நீங்கள் எதை ஒத்துக்கொள்ள போகிறீர்கள்?

Anonymous said...

தருமி சார்,
இந்த பதிவில் உள்ள கேள்விகளே இன்னும் இரண்டு பதிவுக்கு தேறும் போலிருக்கே? Part-1, Part-2 என்று.....

சு.பி.சுவாமிகளை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. தனி ஆளா நின்று தன் மதத்தை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்.
அவர விட்டுருவோமா?

Ant said...

//இறைவன், கடவுள் என்று எப்படி அழைத்தாலும் அது அந்த ஏக இறைவனையே குறிக்கும்// இது உண்மையாயின் //அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.' குர்ஆன் 7 : 180// அல்லா கவலைபடுவானேன்? அப்ப தவறு இறைவேதங்களில் (?) உள்ளது.?

Ant said...

// இது, தாய் கிராமத்தை(மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். குர்ஆன் 6:92// தமிழர்களுக்கு அல்ல.

புரியாமல் இருந்தவர்கள் அரபியர்கள் எனவே தான்// நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். // என்று அல்லா குர்ஆன் 12:02 ல் அருளியுள்ளார்.


// எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்... குர்ஆன் 14:04// சமுதாயம் என்றால் சாதியா இனமா? மொழியினரா? அப்ப குரான் தமிழினத்திற்கு தமிழர்களுக்கு தமிழ் சமுதாயத்திற்கு இல்லை.

//ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. குர்ஆன் 16:103// ஒருவர் தனது தாய்மொழியில் மட்டும்தான் புலமை உள்ளவராக இருக்கு முடியும் மற்ற மொழியல் புலமையற்றவர்கள் என்றால் (ஆங்கிலத்தில் புலமை கொண்ட இந்தியர்கள் எத்தனை பேர் இருந்துள்ளனர் / இருக்கின்றனர்) குரான் அரபியர்கள் மட்டுமே பின்பற்ற தக்கது. தமிழர்களுக்காக அல்லா அனுப்பி தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வேதத்தை மட்டுமே தமிழர்கள் பின்பற்ற வேண்டும். பின் எதற்காக அரபி குரான் தமிழர்களுக்கு? ”அவரது மொழி வேற்று மொழியாகும்” என்பதுபோல் இந்த ”குரானும் வேற்று மொழி குரானே” இதை தமிழர்கள் பின்பற்ற தக்கதல்ல.


அவரது மொழி வேற்று மொழியாகும் அப்படி ்யாரையும் முகமது சந்திக்கவில்லை என்று அல்லா மறுக்கவில்லை முகமது வாழ்வில் தினசரி பலரை சந்தித்தே இருக்க முடியும் இருப்பினும் முகமது ஒருவரை சந்தித்து வந்ததை அல்லா மறுக்கவில்லை மாறாக அவரது மொழிவேறு என்பதால் அரபி மொழியில் வசனம் தெரியாது என்ற அல்லாவின் வாதம் ஏற்புடையதல்ல அவர் அரபி மொழி அல்லாத நபராக இருந்தால் அரபி மொழியில் எழுத படிக்க தெரியாக முகமது தொடர்ந்து சந்திப்பதில் என்ன பயன்? வாதம் பொய்த்து போகிறதே

suvanappiriyan said...
This comment has been removed by the author.
Anonymous said...

//தன்னை பல பெயர்களில் கூப்பிடலாம் என்று அனுமதிக்கும் இறைவன் தன்னை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று இறை வேதங்கள் மூலமாக கட்டளையும் இடுகிறான். எனவே அந்த இறைவன் எப்படி வணங்க வேண்டும் என்று சொன்னானோ அதன்படிதான் வணங்க வேண்டும்.//

தன்னை ஒருவன் வணங்க வேண்டுமென்பதே ஒரு சர்வாதிகாரத்தனம். கருணையே வடிவான கடவுள் தன்னை வணங்க வேண்டுமென்று கட்டளையிடுவது, ஒரு இழிவான செயல்.
இதில் வேறு, இப்படித்தான் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டால், அது இழிவிலும் இழிவான செயல். நீங்களா வணங்கினால் கூட பரவாயில்லை. கட்டாயப்படுத்தி வணங்கச்சொன்னால், கடவுள் ஹிட்லர்-ஐ விட மோசமான ஆளா இருப்பாரு போலிருக்கே!

suvanappiriyan said...

//அவர் அரபி மொழி அல்லாத நபராக இருந்தால் அரபி மொழியில் எழுத படிக்க தெரியாக முகமது தொடர்ந்து சந்திப்பதில் என்ன பயன்? வாதம் பொய்த்து போகிறதே//

எப்படி பொய்க்கும்? அரபி மொழி எழுதப் படிக்கத் தெரியா விட்டாலும் அந்த மொழியை சரளமாக பேசக் கூடியவர். அவரது மனைவி குடும்பத்து உறவினர்.

நமது தமிழகத்தில் வெளி மாநில ஆட்கள் நிறைய வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் தமிழில் சரளமாக பேசுவர். மும்பையில் பல ஆண்டுகளாக வசிக்கும் நமது தமிழர்களுக்கு ஹிந்தி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் ஹிந்தியில் சரளமாக பேசுவர். இது எப்படி சாத்தியப் படுகிறதோ அதே போல்தான் முகமது நபியை சந்தித்த அந்த மத குருவின் சந்திப்பும். மேலும் அந்த மத குரு நம்பிக்கை கொண்டிருந்த கிறித்தவ நூலான பைபிளுக்கும் முகமது நபி பெற்றுத் தந்த குர்ஆனுக்கும் அடிப்படையிலேயே பெருத்த வித்தியாசம் உண்டு. இரண்டு வேதங்களையும் படித்தவர்கள் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்வர்.

//பின் எதற்காக அரபி குரான் தமிழர்களுக்கு? ”அவரது மொழி வேற்று மொழியாகும்” என்பதுபோல் இந்த ”குரானும் வேற்று மொழி குரானே” இதை தமிழர்கள் பின்பற்ற தக்கதல்ல.//

'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185

இங்கு இறைவன் முஸ்லிம்களை பார்த்து பேசவில்லை. தருமி, வவ்வால், ஆண்ட், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன் என்று உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசுகிறான். எனவேதான் யுவன் ஹாலிக்காக மாறியது. திலீபனை ஏ ஆர் ரஹ்மானாக மாற்றியது.

//இவ்வளவு (99) பெயரையும் கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா? இல்லை, அவரது துதி பாடிகள் (உங்களைப்போல) வைத்த பெயரா?//

இவை அனைத்தும் அந்த இறைவனுக்கு இருக்கக் கூடிய ஆற்றல்கள்: தன்மைகள். இந்த ஆற்றல்கள் அனைத்தையும் கொண்டவனே இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள அனைத்து வேதங்களும் இதனை ஒத்துக் கொள்கின்றன.

தருமி said...


குரானிலிருந்து ஒரு மேற்கோளோடு இப்பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதன எண்: 33:49-51. இதில் தவறுதலாக 3:49-51 என்று போட்டு விட்டேன். இதற்கு சு.பி. - //இது தருமி குர்ஆனில் உள்ளதாக பொய்யுரைத்து எழுதியது.! // என்று மொட்டையாகக் கூறி விட்டார்.

அதற்கு நான் ‘’சுவனப்பிரியன்,உங்கள் மனசாட்சிக்கு ஒரு சின்ன கேள்வி: 33:49-51 என்பதற்குப் பதிலாக 3:49-51 என்று தப்பாக தட்டச்சி எழுதியுள்ளேன். தவறுக்கு மன்னிக்க.

ஆனால் குரானைத் தலைகீழாக படித்திருக்கும் நீங்கள் இந்த தவறைச் சுட்டிக் காட்டியிருந்தால் அது உங்களது நல்ல மனதைக் காட்டியிருக்கும்.

ஆனால் நீங்கள் நான் தவறாக எண்ணிட்ட வசனத்தை இங்கே மேற்கோளிட்டு நான் //பொய்யுரைத்து எழுதியது // என்று சொல்லிவிட்டுப் போய் விட்டீர்கள்.

இப்படித்தான் மனசாட்சி இன்றி, பொய் சொல்லி (உண்மையைச் சொல்லாவிட்டால் அது பொய்தானே?!) உங்கள் மதத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமா? உங்கள் மேல் இருந்த மரியாதையை மிகவும் தாழ்த்திக் கொண்டீர்கள்.

என்னைப் பொய்யன் என்று கூறி நீங்கள் யாரென அறிவித்துக் கொண்டு விட்டீர்கள். நன்றி.
--------------
அதற்கு சு.pi.யின் பதில்: அது எப்படி பொய்யாகும். உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய குர்ஆனை திட்டம் போட்டு குறை சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எழுதுபவருக்கு அல்லவா இந்த அக்கறை இருக்க வேண்டும்? குறை சொல்லி அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நான் எப்படி உதவ முடியும்?
-------
உதவ வேண்டாம். ஆனால் கடைசி வரை அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை; இப்போது கேட்டால் “திருப்பி திருப்பி” என்ற பல்லவியைப் பாடி விடுவார். இருந்தாலும் கேட்டு விடலாமா அந்தக் கேவலமான் நீள மேற்கோளைப் பற்றிய அவரது உயர் கருத்தை: (அதை அடுத்த பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.)

தருமி said...

//33:49-51 - இது குரானிலிருந்து.. ஹத்தீசெல்லாம் இல்லை ... அதாவது கடவுள் நபிக்கு மட்டும் கொடுக்கும் “நன்கொடைகள்”!!!! நன்கொடைகளைக் கணக்கு வைக்க அடைப்பானுக்குள் எண்கள் கொடுத்துள்ளேன். // நபியே! நீர் மஹர் கொடுத்து விட்ட (1)உம்முடைய மனைவியரையும், அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது (2)கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத் செய்த பெண்களாகிய (3)உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், (4) உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், (5) உம் தாயின் சகோதரிகளின் மகள்கள், ஆகியோரையும் திண்ணமாக நாம் உமக்கு ஆகுமாக்கியிருகின்றோம்.மேலும் இறை நம்பிக்கை கொண்ட (6) பெண்ணையும் அவள் தன்னைத்தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் )உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்.) இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும். ... இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்த சிரமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்! //

எப்படி நபிக்கு மட்டும் இப்படி “ஆகுமாக்கியிருக்கிறார்” நம் நல்ல அல்லா!

தருமி said...

எனது நேயர் விருப்பம். மேற்சொன்ன கேள்விக்கும், பட்டியலில் 25-ம் எண்ணுள்ள கேள்விக்கும் பதில் வேண்டுகிறேன், ஐயா.

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

//சு.பி.சுவாமிகளை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. தனி ஆளா நின்று தன் மதத்தை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்.
அவர விட்டுருவோமா?//

நம்ம சுபி.சுவாமிகள், நல்லவர்,வல்லவர்,ஆன்மீகத்தில் கரைகண்ட ஞானம் கொண்டவர் ஆனால் கொஞ்சம் பொய் மட்டும் தான் சொல்வார் :-))

எவ்வளவு போட்டு தாக்கினாலும் வலிக்கலையேனு சிரித்தபடி கூறும் ரொம்ம்ப்ப நல்லவர்!

எனவே மடக்கிப்போட்டு கேள்விகள் கேட்கலாம்,ஆனால் பெரும்பாலும் கண்ணுல படாத போல நழுவிடுவார், சமாளிக்க கூடியவற்றுக்கு மட்டும் பத்இல் சொல்லிட்டு எல்லாத்துக்கும் சொல்லியாச்சுனு மட்டையடி அடிப்பார் அவ்வ்!
---------------------

சு.பி.சுவாமிகள்,

//. உலக அறிஞர்கள் இன்று வரை ஆராய்ந்து ஒரு அறிவியல் குற்றத்தையோ வரலாற்றுக் குற்றத்தையோ கண்டு பிடிக்க முடியவில்லை என்பதிலிருந்து இது இறை வேதம்தான் என்ற முடிவுக்கு எவரும் வருவர்.//

குரான் என்ன அறிவியல் ஆய்வு நூலா?

சரி அறிவியல் குற்றமே இல்லையா?

களிமண்ணை எடுத்து ஆதாம் அலை செய்து, மூக்கில் ஊதிவிட்டு உயிர் கொடுத்தார் ,அவர் உயரம்ம் 66 முழமாம்.

இதுல எதாவது அறிவியல் படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

அதை விட பொறந்ததும் அரபில "சலாம் அலைக்கும் சொன்னராம்" அரபிய மொழி தோன்றியதே சுமார் கி.மு 5-6 ஆம் நூற்றாண்டு தான், ரொம்ப காலத்துக்கு எழுத்து வடிவே இல்லாமல் இருந்தது!

அப்போ ஆதாம் என்ன கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோன்றி ,அவரிலிருந்து உலக மக்கள் எல்லாம் தோன்றிட்டாங்களா?

# உலகைப்பாய்ப்போல விரித்தேன் என்கிறார் அப்போ உலகம் பாய் போல தட்டையாவா இருக்கு அவ்வ்!

இன்னும் ஆயிரம் ஓட்டைகளை சொல்ல முடியும்.
------------------

பல கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை. ஆனால் எல்லாம் சொல்லியாச்சு என்பீர்கள்.

இஸ்லாத்தில் விபச்சாரம்ம் இல்லைனு சொன்னீங்க "முட்டா நிக்கா" பத்தி ஒன்னும் சொல்லக்காணோம்.

பணம் கொடுத்து இன்பம் அனுபவிக்கலாம், என சுராவே குரானில் இருக்கு. அடிமைப்பெண்களுடன் உறவுக்கொள்ளலாம்,ஹராம் அல்லனும் இருக்கு.

அப்படிலாம் இருப்பதால் தான் அரபு ஷேக்குகள் தாராளமா ஜலபுல ஜங்க் ஆடிக்கிட்டு இருக்காங்க ,நீங்க என்னனா ,இஸ்லாமில் விபச்சாரமில்லை அதைப்பார்த்து தான் உலகமே கத்துக்கிச்சுனு கப்சா விடுறிங்க.

suvanappiriyan said...

திரு தருமி!

//33:49-51 - இது குரானிலிருந்து.. ஹத்தீசெல்லாம் இல்லை ... அதாவது கடவுள் நபிக்கு மட்டும் கொடுக்கும் “நன்கொடைகள்”!!!! நன்கொடைகளைக் கணக்கு வைக்க அடைப்பானுக்குள் எண்கள் கொடுத்துள்ளேன். //

இது மட்டும் அல்ல. இன்னும் சில விஷேஷ சட்டங்கள் நபிக்கு உண்டு.

1.ஜகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தாமும் தமது குடும்பத்தாரும் எதையும் பெறுவது ஹராம் என்று தடை போட்டது.

2. உலகம் உள்ள வரை எனது பரம்பரைக்கு இந்த விதி பொருந்தும் என்று கட்டளையிட்டது.

3. தனது இறப்புக்குப் பின் தமக்கு சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமைக் கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது. ஆனால் மற்றவர்களுக்கு இந்த சட்டம் கிடையாது.

4. தாமும் தமது குடும்பத்தவரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.

5. மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை கடமையாக்கிக் கொண்டது.

6. இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்த சிரமத்தை தாம் மட்டும் மேற்கொண்டது.

இப்படி பல விஷயங்கள் முகமது நபிக்கு மட்டும் சிறப்பாக இருந்துள்ளது. இவை அனைத்தும் அவருக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் சட்டங்கள். மேலும் இறைவன் முகமது நபியை கண்டித்த பல வசனங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் உலகுக்கு அறிவித்து விட்டார்.

திருமணம் சம்பந்தமாக வரும் இந்த சலுகை ஒன்றுதான் அவருக்கு சாதகமான ஒன்று மற்ற அனைத்தும் அவருக்கு சிரமத்தைக் கொடுப்பவையே! முதல் திருமணம் 25 ஆம் வயதில் நடந்தது. அன்றிலிருந்து 25 ஆண்டுகள் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கை நடத்தியுள்ளார். 50 வயதுக்கு பிறகுதான் மற்ற பெண்களை திருமணம் முடிக்கிறார். உடல் பசிக்காக திருமணம் முடித்திருந்தால் இளமையிலேயே முடித்திருக்க வேண்டும்.

பிறகு எதற்கு இந்த திருமணங்கள் என்ற கேள்வி வரலாம்.

மனிதனின் வாழ்வில் குடும்பவியல் சட்டங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. தாம்பத்ய உறவு, குழந்தைகள் வளர்ப்பு, மனைவியின் தேவைகளை கவனித்தல், சுற்றத்தாரை கவனித்தல், மனைவி மகனுக்கான பாகப்பிரிவினை, என்று அனைத்து சட்டங்களும் மனித குலத்துக்கு கிடைக்க வெண்டும் என்றால் அது அவரின் மனைவிகள் மூலமாகத்தான் கிடைக்க முடியும். ஹதீதுகளை அறிவித்தவர்களில் அன்னை ஆயிஷா அவர்களின் ஹதீதுகள் அதிகமாக நாம் பார்க்க முடிகிறது. நபிகளின் மனைவிகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு பல ஆயிரக்கணக்கான சட்டங்கள் கிடைத்துள்ளன. இந்த காரணத்துக்காகத்தான் இறைவன் முகமது நபிக்கு சில சலுகைகளை வழங்குகிறான். அந்த சலுகைகளால் பயன் பெற்றது முகமது நபியை விட இந்த மனித குலம்தான். எனது இந்து நண்பர் (வழக்கறிஞர்) பாகப்பிரிவினை சட்டங்களை படித்து விட்டு அசந்து விட்டார். இவ்வளவு தெளிவான சட்டங்களை எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் வகையில் கண்டிப்பாக ஒரு தனி மனிதனால் தரவே முடியாது என்று அடித்து சொல்கிறார்.

நமது இந்திய சட்டங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 50 முறைகளுக்கு மேல் திருத்தங்கள் பெற்று விட்டது. ஒரு நாட்டுக்கே இந்த நிலைமை. ஆனால் முகமது நபி வகுத்துத் தந்த சட்டங்கள் உலக முஸ்லிம்களால் எந்த மாற்றமும் இன்றி எந்த குழப்பமுமின்றி இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருவதிலிருந்து இந்த சட்டங்களின் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.

http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_2.html

வவ்வால் said...

தருமிய்யா,

//எப்படி நபிக்கு மட்டும் இப்படி “ஆகுமாக்கியிருக்கிறார்” நம் நல்ல அல்லா!//

இன்னும் நிறைய ஆகுமாக்கியிருக்கிறார் அல்லா :-))

சிறுப்பெண்களை மடியில் வைத்திருப்பது ஹராமானு ,மொகமது அவர்களிடம் கேட்டப்போது பதில் சொன்னதாக ஒரு ஹதித் இருக்கு,

அப்படி சிறுமிகளை மடியில் வைத்திருப்பது தவறில்லை,ஆனால் அப்படி செய்யும் போது "ஆணுறுப்பு" உள்நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நுழைந்துவிட்டால் மணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எனக்கு என்ன டவுட்டுனா,
சின்னப்பொண்ணுகளை பார்த்தாலுமா "கிளர்ச்சியடையாவர்கள்"?

சரி அப்படியே கிளர்ச்சியடைந்தாலும் , ஆடையில்லாமலா இருக்கிறார்கள் தானாக உள்ளப்போயிட?

அப்போ வேண்டும்னே செய்யத்தானே இந்த ஹதீத்.

இப்படிலாம் கேட்டால் யூதசதினு சொல்லிடுவார் சுவாமிகள்,ஏன் இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் யூதசதி ஹதீத்களை நீக்காமல் இருக்கணும்?

சார்வாகனை காணோம் ,அவரா இருந்தால் ஹதீத் எல்லாம் உதாரணம் காட்டி மிரட்டுவார் :-))

Ant said...

//அப்துல் முகமது என்று பெயர் வைத்தாலும் தவறு...// முனைவர் பெரியார் தாசன் முதலில் பெரியாருக்கு மட்டும் அடிமை என்று பெயரை வைத்திருந்தார் ஆனால் இஸ்லாமிற்கு சென்றபின் அவரது பெயரில் இருந்த பெரியாரை மட்டும் நீக்கீவிட்டு அல்லாவின் அடிமை என்று அரபு மொழியில் வைத்து அடிமை ஆக்கியது ஏன்? பெரியார் மீதான வெருப்பாலா?

தருமி said...

//உடல் பசிக்காக திருமணம் முடித்திருந்தால் இளமையிலேயே முடித்திருக்க வேண்டும். //


1400 வருஷக் கதை. யுவன் மாதிரி ஒரு ஆளிடம் போய் சொல்லுங்கள் . அங்க தான் உங்க பப்பு வேகும்.

அட ... போங்கய்யா... நீங்களும் உங்கள் கடவுளும்,...

இன்னொறு கேள்வியும் சொன்னேனே... அதுக்கும் இது மாதிரி ஒரு 1400 கதை சொல்லுங்களேன்........

Ant said...

//
http://vimarisanam.wordpress.com/2013/01/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA/
//
அல்லாவின் துாதர் அவதரித்துளளார்

Ant said...

//இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்' -குர்ஆன் 2:185 // அதுதான் குர்ஆன் 6:92 ல் //இது, தாய் கிராமத்தை(மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற் காக நாம் அருளிய வேதம். // ஒட்டு மொத்த குரானும் யாருக்காக என்று தெளிவாக்கிய பின் // எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்... குர்ஆன் 14:04// என்று தெளிவுரையும் கொடுத்த பின் தமிழர்களுக்கு இது இல்லை என்பதை குரானே உறுதி செய்யும் போது //உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசுகிறான்// என்பது அல்லாவின் அருள்வாக்குக்கு எதிராகவே உள்ளது.

//அரபி மொழி எழுதப் படிக்கத் தெரியா விட்டாலும் அந்த மொழியை சரளமாக பேசக் கூடியவர். அவரது மனைவி குடும்பத்து உறவினர். .. அந்த மத குரு நம்பிக்கை கொண்டிருந்த கிறித்தவ நூலான பைபிளுக்கும் முகமது நபி பெற்றுத் தந்த குர்ஆனுக்கும் அடிப்படையிலேயே பெருத்த வித்தியாசம் உண்டு.// ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்பதற்கு தங்கள் கூற்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் அல்லாவின் வாதம் பொய்யாகிறதே! உங்கள் கூற்று சரியா? அல்லாவின் வாதம் சரியா?

வவ்வால் said...

சுபி.சுவாமிகள்,

நான் கேட்டப்பல கேள்விகளுக்கு பதிலே சொல்ல இயலாத நிலையில் என்னமா ,கொரான் சுத்தமான நூல்னு பேச முடியுது?

//ஆனால் முகமது நபி வகுத்துத் தந்த சட்டங்கள் உலக முஸ்லிம்களால் எந்த மாற்றமும் இன்றி எந்த குழப்பமுமின்றி இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருவதிலிருந்து இந்த சட்டங்களின் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.//

தேவையான நல்ல மாற்றம் செய்யணும்னு நினைச்சால் தான் ஃபத்வா போட்டு கொன்டேப்புறிங்க,அப்புறம் எப்படி மாற்றம் செய்ய?

ஆனால் கடைப்பிடிக்க முடியாதவற்றை ஈசியா மறைச்சு மாத்திக்கிறிங்க :-))

# இந்திய அரசியல் சட்டம்லாம் மனிதர்களுக்காக போடப்பட்டது ,எனவே மனிதர்களின் தேவைக்கருதி திருத்தம் செய்யப்படுகிறது.

அரேபிய கொரான் "நாகரிகமில்லாத காட்டுமிராண்டிகளுக்கு" உருவாக்கப்பட்டது ,அதில் மாற்றம் வரணும்னா ,அம்மக்கள் நாகரீகம் அடைந்தால் தான் சாத்தியம்!

# குர்ரானில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து தான் பயன்ப்படுத்திட்டு இருக்காங்க, ஆனால் ஒவ்வொரு புதிய காப்பியையும், மாற்றமில்லாத ஒரிஜினல்னு "முத்திரைக்குத்திக்க" வேண்டியது தான் அவ்வ்!

முட்டா நிக்கா பத்தி சொன்னேன் வாயே தொறக்கலை,ஏன்?

குரானில் அல்.நிசாவில் முட்டா நிக்கா செய்யலாம்னு வருது ,ஆனால் ஓமர் அதனை பின்னர் தடை செய்தார் ,அதாவது குரானை மாற்றினார்.

இப்போ இஸ்லாமில் என்னாச்சுனா , சிலர் ஓமர் சொன்னது படி முட்டா நிக்கா செய்யலை, ஆனால் பலர் குரான் சொன்னப்படி முட்டா நிக்கா செய்துகிறாங்க.

ஆக மொத்தம் குரானில் மாற்றம் அப்பவே செய்ய ஆரம்பிச்சது தெளிவு.

உங்களூக்கு இந்த விவரமெல்லாம் யாரும் சொல்லி தரலை போல அவ்வ்!

# குரானில் அடுத்த மாற்றம் என்னவெனில், ஹிஜாப் அல்லது புர்க்கா கட்டாயமே இல்லை, ஆனால் அது கட்டாயம்னு சொல்லிக்கிட்டு திரிவது குரானில் மாற்றம்.

# பெண்கள் பள்ளி வாசலில் தொழுக வரலாம்னு தான் குரான் சொல்லி இருக்கு,ஆனால் வரவிடாமல்ல் செய்வது குரானில் மாற்றம்.

# வட்டிக்கு விடக்கூடாதுனு குரான் சொல்லி இருக்கு,ஆனால் அரேபிய ஷேக்குகள் எண்ணைப்பணத்தை அமெரிக்கவில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து வட்டியுடன் அசலை பெருக்கிறார்கள்.

பின்ன பில்லியன் கணக்கில் டாலர் வட்டியா வந்தால் வேண்டாம்னு சொல்ல முடியுமா ,குரானாவது கூமுட்டையாவது அதெல்லாம் சு.பி.சுவாமிகள் போன்ற சோற்றால் அடித்த பிண்டங்களுக்கான விதினு ஷேக்குகள் தெளிவா இருக்காங்க :-))

இவ்வளவு ஏன் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் "நடப்பு கணக்கில்" அளிக்கப்படும் வட்டியை வாங்கிட்டு தான் இருக்காங்க!

# பெண்ணுக்கு தான் வரதட்சணை கொடுக்கணும்னு இருக்கு ,ஆனால் பெண்ணிடம் வாங்குவது தான் சகஜமாக இருக்கு.

இன்னும் பல சொல்ல முடியும்!

#//நபிகளின் மனைவிகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு பல ஆயிரக்கணக்கான சட்டங்கள் கிடைத்துள்ளன. இந்த காரணத்துக்காகத்தான் இறைவன் முகமது நபிக்கு சில சலுகைகளை வழங்குகிறான்//

ஆக மொத்தம் ,சொந்த பந்தங்களை நிர்வாகத்தில் தலையிட வைத்து என்ன வேண்டுமானாலும் சட்டமக்காலாம் என வழிக்காட்டினார்னு சொல்றிங்க அவ்வ்!

அப்புறம் ஏங்க மஞ்சத்துண்டு மனைவி,துணைவிலாம் அரசியல் தலையீடு செய்தால் கொதிக்கிறீங்க?

ஒரு முக்கியப்பிரமுகரின் மனைவியாக இருப்பது சட்டம் போடத்தகுதியை உருவாக்கும்னு சொல்றிங்க ஆவ்வ்!

இதே போல எல்லா முக்கியப்பிரமுகரின் மனைவியும் சட்டம் போடக்கிளம்பினால் என்னாகும்?

# ஆயீஷானு சொல்றிங்களே ,அவங்க சொன்ன கதையெல்லாம் படிச்சதேயில்லையா?

இரவில் தூங்கும் போது கட்டிப்புடிச்சுட்டு தான் தூங்குவார், மாதவிடாய் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் உறவு கொள்வார், மாதவிடாய் காலத்திலும் மெல்லிய துணியை போர்த்தி மடியில் உட்கார வைத்துக்கொள்வார், சாகும் போது , எனது எச்சிலும் அவரது எச்சிலும் ஒன்றாக கலக்க ,மார்பில் அணைத்தப்படியே இறந்தார் எனலாம் எழுதினதும் ஆயீஷா "அன்னையாரே தான்"

வைரமுத்து முத்தமிட்ட நெத்தியில் மார்புக்கு மத்தியில் செத்துவிட தோனுதடி எனக்குனு எழுதுவார்னு ,அப்போவே இறையருளால் மொகமது அய்யாவுக்கு தெரிஞ்சிருக்கும் போல அவ்வ்!

இதுல உடல்ப்பசிக்காகவா கண்ணாலம் கட்டினார்னு பீத்தல் வேற?

மேலும் வளர்ப்பு மகளையே மணந்தார் ,அதெல்லாம் சொன்னால் தான் தெரியுமா?

உங்களுக்கு இஸ்லாம்மிய ஞானத்தை விட தேவாரம்,திருவாசகம், ரிக் வேதம்ல எல்லாம் நல்ல ஞானம் இருக்கு பேசாம மதுரை ஆதினத்தை போய்ப்பாருங்க அடுத்த இளைய ஆதீனம் போஸ்ட் வேகண்ட்டா இருக்காம் அவ்வ்!

Anonymous said...

தலைவரே (சு.பி),
இறைவனுக்கு எல்லா ஆற்றலும் இருக்கட்டும். அது என் கேள்வி அல்ல. என் கேள்வி ரொம்ப simple.

99 பெயரையும் கடவுளுக்கு வைத்தது யார்?
# கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா?
# அல்லது, அவரது துதி பாடிகளா?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//99 பெயரையும் கடவுளுக்கு வைத்தது யார்?
# கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா?//

அவரே ‘பீத்திகிட்டது’ தான்.

இப்படி ஒரு கடவுள்! ஆண்டவா ...!

தருமி said...

சு.பி.
இப்ப நீங்க. முன்னால் நல்லடியார்னு ஒருத்தர் வஹாபிகளின் spokesperson ஆக இருந்தாரே. எங்கே காணோம்?
I miss him !

Anna said...

பல நாட்கள் இப்பக்கம் வரவில்லை. சில நாட்களுக்கு முன் இதற்கு முன் எழுதிய கட்டுரையில் எனது எண்ணங்களைச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் இருந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்போது முயல்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. அதனால் மனித இன survival க்கு அடிப்படை ஒழுக்கம் அவசியம். அதனால் பரிணாம வளர்ச்சியிலேயே பின்னிப் பிணைந்துள்ளது. அதனால் அடிப்படையான கொலை செய்யாதே, களவெடுக்காதே, அக்கம் பக்கத்தாருடன் ஒத்து வாழ் போன்ற அடிப்படை ஒழுக்க விதிகள் மதங்கள் இருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த tribal சமுதாயங்காளிலேயே இருந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த அடிப்படை ஒழுக்கத்தையே மதங்களிலும் காணலாம். ஆனால் இரு குழுக்களுக்கிடையே எதிர் பார்க்கபடும் இவ்வொழுக்கம் மற்றைய வெளிக் குழுவினரைச் சந்திக்கும் போது பல சமயம் பின்பற்ற மாட்டார்கள். இந்த அடிப்படை ஒழுக்கங்களை மூறுவோருக்கும் அநேகமாக கொடூரமான எல்லோருக்கும் முன்னிலையில் கொடுக்கப்படும் தண்டனைகளும் இருக்கும்.

ஆனால் இது மிகவும் அடிப்படையானதே. Very primitive. சும்மா கொலை செய்யாதே/களவெடுக்காதே என்பது ஒழுக்கத்தை மிகவும் எளிமையாக black and white ஆகப் பார்ப்பது. But reality is very different. Is consists of lots of grey areas in between black on one end and white on the other. உதாரணத்திற்கு களவெடுப்பது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னிடம் எவ்வசதியும் இல்லை. என் பிள்ளைக்குப் பசியாற்ற கள்வெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனில், அநேகமாக எடுக்கவே செய்வேன். இந்த இடத்தில் எனது கையை வெட்டுவதை விட, எனக்கு வாழ்வாதாரம் சிறக்க வழியமைப்பதே சிறந்த வழி.

ஒழுக்கமென்பது மிகவும் தற்சார்பானது. அத்தோடு ஒழுக்க விதிகள் கூட மத நூல்கள் சொல்வது போல் ஒரு செயல் சரி அல்லது பிழை என மிகவும் எளிமையாக முடிவெடுத்து விட முடியாது. ஒழுக்க நெறி மாறிக்கொண்டேயிருக்கும். அதனால் மிகவும் கடினம். நமது ஒவ்வொரு செய்கையும் மற்றவரில், சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறதென்பதை எப்போதும் சிந்த்ஹித்துக் கொண்டேஇருக்கவேண்டும். However, it is a whoel lot better than following some old book blindly.

ஒரு செயல் நல்லதா கெட்டதா என்று முடிவெடுப்பது எமது அறிவாலேயே ஒழிய கடவுளால் அன்று. சில செயல்கள் நாமே முன்பு எமது அறிவிற்கேற்ப பிழையென்று முடிவெடுத்தது பின் சரியானதாக மாறலாம். எளிமையான உதாரணமாயின் - ஓரினச் சேர்க்கை. முன்பு அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இரு வயது வந்தோருக்கிடையில் அவர்கள் இருவரினதும் உடன்பாட்டுடன் நடக்கும் உறவால் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதனால் இதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. As simple as that.

Anna said...

Have you heard of prisoner's dilemma?
It was an influential thought experiment from game theory.

ஒரு குற்றம் புரியும் கும்பலிலிருந்து இரு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி அறைக்குள் மற்றவருடன் தொடர்பு ஏற்படுத்த முடியாதவாறு அடைக்கப்படுகிறார்கள். பொலிசிற்கு அவர்கள் இருவரையும் குற்றம் சாட்டுவத்ற்குத் தேவையானளவு ஆதாரம் கையில் இல்லை. அதனால் அவர்களை ஒரு குறைந்தளவு குற்றத்திற்கு ஒரு வருடம் சிறையில் போட ஒழுங்கு செய்யும் அதே வேளை, ஒவ்வொரு கைதிக்கும் அவர்கள் ஏதாவது மற்றவரைப் பற்றி பொலிசுக்குச் சொன்னால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் பேரம் பேசுகிறார். ஒரு கைதி மற்றயவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் - அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மற்றையவருக்கு மூன்று வருடங்கள் தண்டனை கிடைக்கும். ஆனால் இருவரும் இருவருக்குமெதிராக வாக்கு மூலம் கொடுத்தால் இருவருக்கும் ஒரு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சிறைக்கைதிகள் என்ன முடிவெடுப்பார்கள் என நினைக்கிறீர்கள்? அதுவே prisoner's dilemma.

இருவரும் எதுவுமே சொல்லாமல் இருந்தால் அதை அவர்காள் ஒருவருகொருவர் கொடுக்கும் ஒத்துழைப்பு (cooperation) என game theorists கூறுவர். இந்தச் செயல் நன்மை பயக்கும் ஒத்துழைபிற்கான ஆய்வுகூட மாதிரியாக பல வேறுபட்ட சந்தர்ப்பங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்கள் (using computer programming). இது ஒத்துழைப்பு, ஒத்துழைப்பு, நம்பிக்கை, சமூகப் பிணைப்பு, என்பவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்பதை ஆராய முக்கியமானது.

அண்மையில் உண்மையான சிறைக்கைதிகளைக் கொண்டும் இந்த விளையாட்டை பரிசோதனை செய்துள்ளனர்.

A bit old documentary about how natural selection can favour co-operation in nature - it also explains the prisoner's dilemma.
Nice guys finish first

ஒத்துழைப்பு எப்போதும் ஒழுக்கமானதென்றும் சொல்ல முடியாது. எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்தது.

தருமி said...

//இப்படி பல விஷயங்கள் முகமது நபிக்கு மட்டும் சிறப்பாக இருந்துள்ளது. இவை அனைத்தும் அவருக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் சட்டங்கள். //

அப்படியா ... சிரமத்தைக் கொடுக்கும் சட்டங்களா? ஆனால் தலைவர் ரொம்ப ஈசியா நிறைய செய்ததாக செய்திகள் இருக்கே!

//உடல் பசிக்காக திருமணம் முடித்திருந்தால் இளமையிலேயே முடித்திருக்க வேண்டும். //

அப்போ அவரு ரொம்ப நீட்டி முழக்கினார் என்று ஹதீசுகள் சொல்லுதே... அதெல்லாம் நொண்டி ஹதீஸ் அப்டின்னு சொல்லிடுவீங்கள்?

இந்தப் பட்டியலையும் பாருங்களேன்:
Bukhari,Volume 1, Book 5, Number 268:
“Prophet was given the strength (sexual) of thirty men”.
Apostle could make love (continuously) to all his wives (9 to 11) in one night.
Volume 1, Book 5, Number 268:
"The Prophet used to visit all his wives in a round, during the day and night and they were eleven in number. Prophet was given the strength of thirty (men)."

Bukhari, Volume 1, Book 5, Number 270:
Aisha said, "I scented Allah's Apostle and he went round (had sexual intercourse with) all his wives."

His lovemaking was complimented by visits of archangel Gibraeel. Once apostle even introduced Gibraeel to Ayesha.

Bukhari, Volume 9, Book 83, Number 38:
Narrated Sahl bin Sa'd As-Sa'idi:

ALLAH BLESSED HIM WITH SPECIAL PRIVILEDGES FOR SEX
Allah not only gave him extraordinary capability for sexual activity but also gave him special privileges to use those capabilities.

Bukhari,Volume 7, Book 62, Number 24:
A woman came to Allah's Apostle and said, "O Allah's Apostle! I have come to give you myself

Bukhari,Volume 7, Book 62, Number 58:
Apostle got aroused at sight of (attractive) women.

Once he entered his wife Hafsa’s room for some reason. Hafsa was not there but he found her lovely young maid Maria instead. He grabbed her and jumped into the bed with her for a quickie. But the quickie was not quick enough and Hafsa walked in and started yelling. To quieten her down and to please her he promised never to touch her maid again. However Allah did not approve of this sacrifice and revealed the following ayas:

Q66.1 SHAKIR: O Prophet! why do you forbid (yourself) that which Allah has made lawful for you (slave girl Maria); you seek to please your wife(Hafsa)

காரிகன் said...

சில தகவல்கள் முகம்மது சர்ச் ஆப் அரேபியா வின் பிஷப் ஆக மாறியிருக்கவேண்டியவர் என்று சொல்கின்றன. ஆல்பர்ட் ரிவர்டோ என்னும் எக்ஸ்-கேதலிக்க பிஷப் போப் ஆண்டவரின் கட்டளைப்படி ஜெருசலம் நகரத்தை கைப்பற்றவே இஸ்லாம் என்கிற மதமே உருவானது என்று சொல்கிறார். இவை எல்லாமே உறுதி செய்யப்பாடாத தியரிகள். இருந்தாலும் முகமதுவின் முதல் மனைவி ஒரு கிருஸ்துவராக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் அப்போது இஸ்லாம் என்கிற மதமே உருவாகவில்லை. மேலும் ஹதீஜாவின் அண்ணன் (அல்லது தம்பி) ஒரு கிருஸ்துவர். எனவேதான் ஹதீஜா இருக்கும் அல்லது இறக்கும் வரை முகம்மது வேறு திருமணம் செய்யவில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள். முதல் மனைவின் மரணதுக்குப்பிறகே முகமதுவின் வாழ்கையில் திருப்பம் ஏற்பட்டது என்பது வெளிப்படை. முகமதுக்கு கொடுக்கப்பட்ட முதல் ஆணையே படித்துச் சொல் (ஆங்கிலத்தில் recite )என்பதுதான். குரானே இறக்கப்படாத நிலையில்எந்த வேதத்தை குறித்து கேபிர்யேல் தூதர் இவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்ற கேள்வி வருவது இயற்கையே. குரானின் 80 சதவிகித கருத்துக்கள் தோரா அல்லது பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்தே வருகின்றன. இப்போது recite என்ற சொல்லின் அர்த்தம் சுலபத்தில் விளங்கக்கூடியது. புள்ளிகளை இணைத்தால் தெளிவான படம் வரும்.

Ant said...

//இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்' -குர்ஆன் 2:185 உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசுகிறான். // அடைப்பு குறிக்குள் அப்படி ஏதும் இல்லையே!

வவ்வால் said...

காரிகன்,

நீங்க சொல்ற அந்த கிருத்துவ கதையும் கேள்விப்பட்டிருக்கேன், அதனை சு.பி சுவாமிகளிடம் கூட விவாதித்தும் இருக்கேன். அவரோட பதிவுகளில் பலவற்ரை பேசியாச்சு,ஆனால் எப்பொழுதும் சரியான பதிலே வராது.

# குரான் மாற்றமே செய்யப்படாததுனு கதை விடுவதையும் முன்னரே விரிவாக பேசியுள்ளேன்.

இப்போ சவுதிகள் மற்ற நாடுகள் இடையே பெரிதாக இணக்கம் இல்லாமல் இருப்பதை பார்த்தாலே தெரியும்,காரணமே குரான் தான் :-))

சவுதிகள் ஓமர் எழுதிய/தொகுத்த "உம்மயாத்" இனக்குழு குரானை பின்ப்பற்றுகிறார்கள், அதே போல முவாவியா, குரேஷி ,எனப்பல இனக்குழுவுக்கு பல குரான்கள் இருக்கு :-))

இதுக்குலாம் விடை தேடினால் கர்பலா யுத்தம் வரைக்கும் போகணும்,அங்கே போனால் இப்போ ஏன் சிரியாவில் இனக்கலவரம்ம் நடக்குது, ஷியா,சன்னி ஏன் முட்டிக்கிறாங்க எல்லாம் புரியும்!

சுருக்கமா சொன்னால் ,அன்று சிரியாவை சேர்ந்த சன்னி 'யசீர்" மொகமதுவின் பேரன் இமாம் ஹீசைன் அலியை கொன்றுவிட்டு ,கலிபா ஆனார், அதுக்கு அப்புறம் இமாம் ஹூசன் அலி வழியைப்பின்ப்பற்றுபவர்களே ஷியாக்கள்.

இப்போ அதே சிரியாவில ,இருக்கும் அப்துல் பஷீர் ஷியா,ஆனால் அங்கே இருக்க சன்னிக்கள் வழக்கம் போல ஒத்துக்கல, எனவே போராளிக்குழுவுக்கு சவுதி ஆயுதம் கொடுக்குது ,சண்டை நடக்குது.

ஷியாக்கள் பின்ப்பற்றும் குரான் வேற , சன்னிக்கள் பின்ப்பற்றும் குரான் வேற.

அதே போல இரான் ,இராக்,துருக்கி, எகிப்த்னு எல்லா இடத்திலும் சற்றே வேறுப்பட்ட இனக்குழுக்களால் உருவாக்கப்பட்ட குரான் தான்.

இதுல இந்தியா போன்ற "இஸ்லாமிய இனக்குழு"னா என்னனே தெரியாம இஸ்லாமியர்களாக ஆனவங்க தான் ,எந்த நாட்டின் ஆதரவுல இஸ்லாமியராக வாழுங்களோ அதோட "நம்பிக்கைய" பரப்புராங்க.

ஷியா,சன்னினு கூட வேண்டாம், எகிப்திய சன்னி கூட , சு.பிசுவாமிகள் சொல்லும் பலவற்றை ஏத்துக்க மாட்டார் :-))

# இஸ்லாம்ம்ல பன்றியை ஒதுக்க காரணம் என்னனு கேட்டால் பன்றி அசுத்தமான விலங்குனு ஒரு கதைய சொல்லுவாங்க, அந்தக்காலத்தில சவுதி அரேபியாவில ஏது பன்றி? அங்கே குதிரை கூட கிடையாது, குதிரைலாம் இரான் ல இருந்து தான் கொண்டு வரனும்.

அரேபிய குதிரைனு சொல்வதெல்லாம் , இரான், ஆப்ரிக்காவில இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகளை அரேபிய வணிகர்கள் வாங்கி விற்றதால் உருவன பெயர்.

காரணம் ஒரு இஸ்லாமியனுக்கும் தெரியாது, பன்றி துருக்கியர்களிடையே புனித விலங்கு!

முகமது நபி துருக்கிய ஒட்டமான் வகையில வந்தவர். இதுல செம டிவிஸ்ட் என்னானா ,முகமது நபி பெர்றோர்கள் பற்றிய விவரமே லேது! சின்ன வயசிலே பெற்றொர்களை இழந்தவ்ரை மாமா எடுத்து வளர்த்தார் னு போகும்,அவரு அரேபிய பாகன் கோயில் பூசாரி! எனவே அவரது முன்னோர்களால் புனித விலங்குனு வழிப்பட்டதை அடிச்சு சாப்பிடக்கூடாதுனு சொன்னால் ஒத்துப்பாங்களா, பேசாம ஹராம்னு ஆக்கிட்டார் :-))

இஸ்லாம்ல இருப்பது எல்லாமே முன்னுக்கு பின் முரண் ஆனவையே,என்னமோ மாத்தாத புக்கு, இது போல உண்டானு , புதுசா மதப்பற்று கொண்டவர்கள் தான் கூவுறது!

தருமி said...

என்னங்க வவ்ஸ் ... சொல்றதை கேட்கவே ரொம்ப வித்தியாசமா, ‘பயமா’ இருக்கே ...

//ஷியாக்கள் பின்ப்பற்றும் குரான் வேற , சன்னிக்கள் பின்ப்பற்றும் குரான் வேற.//

இப்படி வேற சொல்றீங்க ......!

வவ்வால் said...

தருமிய்யா,

//என்னங்க வவ்ஸ் ... சொல்றதை கேட்கவே ரொம்ப வித்தியாசமா, ‘பயமா’ இருக்கே ...//

என்ன இப்படிக்கேட்டுடிங்க, அப்போ இத்தினி நாளா கேள்விப்பட்டதேயில்லையா?

ஏகப்ப்பட்ட நூல்களே இணையத்தில இலவசமா கிடைக்குதே!

மேலும் இங்கே பேசியவற்றை விட நிறைய ,சு.பி.சுவாமிகளின் பதிவில் எப்பவோ பேசிட்டேன், பலவும் மறு ஒளிபரப்பே அவ்வ்!

நீங்க சு.பி.சுவாமிகள் பதிவெல்லாம் படிக்கிறதில்லைனு நினைக்கிறேன், ஒரு ரெண்டு வருஷம் முன்ன ரோமானியர்களின் ஆளுகை, அரேபியர்களின் நிலைனு சு.பி சுவாமிகளை போட்டு வாங்கியாச்சு.

யூத சதினு எதுக்கெடுத்தாலும் பேசும் சு.பி.சுவாமிகள் ரோமானிய(கிருத்துவ) சர்ச்சைகளை பற்றி பேசாததை கவனித்தீர்களா?

காரிகன் ஆரம்பிக்கவும் அப்போ பேசியவை எல்லாம் நினைவுக்கு வந்திடுச்சு,ஆகா அப்போ இத எல்லாம் பேசினோமேனு மீண்டும் சொன்னேன்.

அக்காலத்துல அரேபியாவே ரோமப்பேரரசின் கீழ் தான் இருந்தது, ரோமானியர்கள் கிருத்துவர்கள். அவங்க கூட சண்டைப்போட்டு தான் இஸ்லாமை பரப்பினார்களே ஒழிய ,யுதர்களோடு அல்ல, அப்போ யூதர்கள் மிகச்சிறிய மைனாரிட்டி,பலர் கிருத்துவத்துக்கு மாறியாச்சு, பலர் நாடு விட்டு ஓடிப்போயாச்சு, எஞ்சியவர்கள் ஒரு சின்ன கூட்டமே,அவங்க என்ன சதி செய்து அழிக்கப்பார்த்தார்கள்?

ரோமானிய ஆளுகையில் ,ஒரு புதிய மதம் முளைத்தால் அது அவர்களுக்கு தானே தொல்லை. ரோமானிய கவர்னர்கள் ஒவ்வொரு முறையும் அடக்க முயன்றது ,போர் எல்லாம் நடைப்பெற்றது. எல்லாரையும் வெட்டிக்கொன்னுட்டு , பெண்களை கற்பழித்து கிருத்துவர்களை இஸ்லாமியர்களாக ஆக்கிவர்கள் :-))

15 ஆம் நூற்றாண்டு வரையில் ரோம அரசு கான்ஸ்டாண்டிநோபிளில்(இஸ்தான்புல்- துருக்கி) ஆட்சி செய்தது என்றால் , ரோமானியர்களின் கீழ் மற்றப்பகுதிகள் எல்லாம் எப்போ வரைக்கும் இருந்திருக்கும்.

கான்ஸ்டாண்டின் நோபிள் படைஎடுப்பை பத்திலாம் பேசினால் "வாள் முனையில்" இஸ்லாம் எப்படி பரப்பப்பட்டது என்பது தெளிவாகும்.

கிருத்துவம் போல இன்னொரு பெரிய மதம் "ஜொராஷ்ட்ரம்" (இரான்)அதை எப்படி அழித்தார்கள் என்பதும் "இரத்த சரித்திரம்" ,இன்றைக்கு இரான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும் சவுதியோடு ஒத்துப்போகவே மாட்டாங்க. அவர்கள் ஷியாக்களிலேயே இன்னொரு பிரிவு (சபாவிட்- பதின்மர் ஷியா)என்பது ஒருக்காரணம்,அடிப்படையில் ஜொராஷ்டிர மக்கள்(ஆரிய வம்சம்) என்பதும் ஒருக்காரணம்.

#////ஷியாக்கள் பின்ப்பற்றும் குரான் வேற , சன்னிக்கள் பின்ப்பற்றும் குரான் வேற.//

ஆமாம் இனக்குழு அடிப்படையில் உருவான இஸ்லாமியர்களில் ஆளுக்கு ஒரு குரான் வச்சிருக்காங்க,ஆனால் எல்லாருமே இதான் ஒரிஜினல் ,இறைவேதம் என்பார்கள்.

இதனால தான் இஸ்லாமிய நாடுகளிடையே கூட ஒற்றுமையே இல்லை.

இந்திய இஸ்லாமியர்களை எல்லாம் மத்த எந்த நாடும் பெருசாவே எடுத்துக்கிறதில்லை, சும்மா இஸ்லாமிய எண்ணிக்கைய" கணக்கு காட்டத்தான் அவ்வ்!

அஷ்ரபி ,அஜ்லபினு பிரிச்சு வச்சிருக்காங்க, இந்திய இஸ்லாமியர்கள் எல்லாம் அஜ்லபி, அரேபியவ்ழியில் வந்தால் அஷ்ரபி. இதுக்காகவே பலரும் பேருக்கு பின்னால் அஷ்ரப்னு சேர்த்து "உயர்த்திக்கிறதும்" உண்டு :-))

இப்படி பிரிச்சு பிரிச்சு வச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரு இனக்குழு குரான்,ஷரியானு சொல்லிக்கிட்டு , இந்து மதத்தில் எத்தனை பிரிவுனு சு.பி.சுவாமிகள் கவலைப்படுறார் :-))


# அரேபிய கலாச்சாரத்தில் லுங்கி என்பது ஆண்களுக்கும், பெண்களுக்குமே பொதுவான உடை,அதுக்கு மேலதான் புர்க்கா,எனவே தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெண்களை லுங்கி கட்ட சொல்லுங்க பார்ப்போம் :-))


மலேசியா,பார்மாவில் எல்லாம் பெண்கள் லுங்கி கட்டுவதை காணலாம்.

சு.பி.சுவாமிகள் இனிமே இந்த பக்கம் எட்டிப்பார்க்கவே மாட்டார்,அப்படியே வந்தாலும் இதெல்லாம் வெள்ளைக்காரன் திரிச்சு எழுதின வரலாறுனு ஒரே அடியா அடிப்பாரு :-))

வவ்வால் said...

தருமிய்யா,

ஒன்னு விட்டு போச்சு,

ஷியாக்கள் பயன்ப்படுத்தும் குரான் முகமது நபியின் மருமகன் அலி அவர்களே எழுதியது, முகமது சொல்லும் போதெல்லாம் எழுதிய குறிப்புகளின் படி எழுதியதாம்.

சன்னிக்கள் வைத்திருப்பது ,உம்மயத் இனக்குழு தலைவர் உத்மான் என்ற கலிபா தொகுத்தது. அதுக்கு முன்னாடி ஒமர் கட்டாப் சில மாற்றங்கள் செய்திருந்தார்,அதனுடன் உத்மான் செய்த மாற்றம் கொண்டது.

ரெண்டுப்பிரிவும் அவங்க குரான் தான் ஒரிஜினல்னு அடிச்சிக்கிட்டது,கூடவே கலிபா யார்னு சண்டை,இதுல முகமது வம்சாவழி யில் அனைவரும்,6 மாத குழந்தை உட்பட கர்பலாவில் வெட்டிக்கொள்ளப்பட்டார்கள்.

Anonymous said...

வவ்வால்,
உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுதேன்னு பாராட்ட வாய் வருது, ஆனால் நம்ம நந்தவனம் அண்ணன் group-ல இருக்கிறதால நான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிக்கிறேன். எனக்கு நந்தவனம் அண்ணாச்சின்னா, ரொம்ப ரொம்ப பயம் அவ்வ்....

தருமி said...

வவ்வால்,
உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுதேன்னு பாராட்டுகிறேன். அதோடு படித்தவைகளை இவ்வளவு கோர்வையாக நினைவில் வைத்திருப்பதற்கும் என் பாராட்டு.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டியதிருப்பதால் தான் தொடர்பு கொள்ளச் சொன்னேன்.

suvanappiriyan said...

வவ்வால்!

//ஷியாக்கள் பின்ப்பற்றும் குரான் வேற , சன்னிக்கள் பின்ப்பற்றும் குரான் வேற.//

இது ஒன்றே போதும் உங்களுக்கு எந்த அளவு விஷய ஞானம் உள்ளது என்பதற்கு. ஷியாக்களில் ஒரு பிரிவினர் அதிகமாக 10 பக்கங்களை குர்ஆனில் சேர்த்து வைத்திருப்பர். ஆனால் உலகம் முழுக்க தற்போது நமது இந்தியாவில் பயன் படுத்தும் குர்ஆனின் அடிப்படையிலேயே 6666 ஆயத்துகளோடு குர்ஆன் உள்ளது. 90 சதமான இஸ்லாமியருக்கு இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஹதீதுகளை வைத்துதான் பிரிவுகளே உண்டானது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் வளங்கியவர்கள் இந்த பிரிவுகளுக்குள் நுழைய மாட்டார்.

ஷியாக்களிலும் குர்ஆனை தங்களது வாழ்வியலாகக் கொண்டவர்களும் உள்ளனர். நீங்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு முன்பே பதில் கொடுத்து விட்டேன். திரும்பவும் அதனை தொட விரும்பவில்லை. தற்போது அதற்கு நேரமும் இல்லை.:-) எனது பழைய பதிவுகளை படித்தாலே உங்களின் பல கேள்விகளுக்கு விடை உள்ளது.

யுதர்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் இணையத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளையே நீங்கள் படித்துள்ளீர்கள். இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் கூட உங்கள் வாதங்களை நம்பமாட்டார். :-)

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

எந்தகிரகம்யா உமக்கு? சனி கிரகமா சொந்த ஊரு?

இப்படி சும்மா இருக்க என்னை எதாவது சொல்லி ,ஊருல போறவங்க,வரவங்கக்கிட்டேலாம் பாட்டு வாங்க வைக்கிறீர் அவ்வ்!

ஆனாலும் பாராட்டினால் விரும்பாத மனித மனம் உண்டோ, எப்படியோ பாராட்டி பொன்னாடையே போர்த்தினதா எடுத்துக்கிறேன்(இதுக்கு என்ன வினை வருமோ அவ்வ்)
-----------------

தருமிய்யா,

உங்களுக்கு தாரள மனசு ,ஏதோ கூகிளாண்டவரின் புண்ணியத்தில் வண்டி ஓட்டியதற்கே பாராட்டுறிங்க,நன்றி!

# பின்னாடியே பாருங்க,சுவாமிகள் ஒன்னுமே தெரியலைனு ஞானவாக்கு சொல்லி இருக்கார் :-))

ஆனால் ஒரு பத்துப்பக்கம் மட்டும் கூட இருக்குனு ஒத்துக்கவும் செய்றார், இத தானே நாமளும் சொன்னோம்.

இதுல இன்னொரு இக்கு என்னனா சில குரான்ல சிலது கட்டாயம்னு இருக்கும் சிலது செய்யலாம்,ஆனால் செய்யனும்னு கட்டாயமில்லைனு அடைப்புக்குறில போட்டுப்பாங்க, குரானைப்பொறுத்த வரையில் அடைப்புக்குறியில் தான் "முக்கியமான சமாச்சாரமே" ,அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி ஹதீத்கள்! அப்புறம் என்ன அடி ,வெட்டு ,குத்து தான்!

# தொடர்புக்கொள்கிறேன், நமக்கு அந்த அளவுக்குலாம் விஷய ஞானம் இல்லை,தேடிப்பிடித்து சொல்வது தான்.
-------------------

சு.பி.சுவாமிகள்,

//இது ஒன்றே போதும் உங்களுக்கு எந்த அளவு விஷய ஞானம் உள்ளது என்பதற்கு. //

ஆமாம்ங்க நீங்க எதிர்ப்பார்க்கிற அளவுக்குலாம் ஞானம் லேது!

#//ஷியாக்களில் ஒரு பிரிவினர் அதிகமாக 10 பக்கங்களை குர்ஆனில் சேர்த்து வைத்திருப்பர்//

அதுக்கா இப்படி பார்க்கிற எடத்துல எல்லாம் வெட்டுறது, குண்டு வைக்கிறது அவ்வ்!

#// 6666 ஆயத்துகளோடு குர்ஆன் உள்ளது. 90 சதமான இஸ்லாமியருக்கு இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஹதீதுகளை வைத்துதான் பிரிவுகளே உண்டானது. //

ஆயக்காள் அம்புட்டு தான் ,ஆனால் அடைப்புக்குறிகள் பொருளை மாத்துதே. பெரும்பாலும் அதே எண்ணிக்கையில் ஆயாக்கள் இருந்தாலும் , பொருளை திரிப்பது ,ஹதித்கள் மூலம் தானே. மேலும் அதனை தான் ஷரியா என சொல்லி இருக்கிறேன் கவனிக்கலையா?

இந்தியாவிலேயே ஷியா ஷரியா போர்டு ,சன்னி ஷரியா போர்டு ரெண்டு இருக்குன்னு தெரியும் தானே.

# //நீங்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு முன்பே பதில் கொடுத்து விட்டேன். திரும்பவும் அதனை தொட விரும்பவில்லை. //

உங்க விடைலாம் ஊசிப்போன வடை,வேகவேயில்லை பருப்பு, வடைய பிச்சா நூல் நூலா வருது அவ்வ்!

உங்க பதில்கள் என்னமாதிரி "சுத்தமான அக்மார்க் பதில்கள்" என அனைவருக்குமே தெரியுமே :-))

#//யுதர்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் இணையத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளையே நீங்கள் படித்துள்ளீர்கள்.//

இதத்தானே அல்டிமேட் பதிலா சொல்வீங்கனு தெரியுமே :-))

தருமி said...

//அதிகமாக 10 பக்கங்களை குர்ஆனில் சேர்த்து வைத்திருப்பர். //

// 90 சதமான இஸ்லாமியருக்கு இதில் மாற்றுக் கருத்து இல்லை. //

ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி.

என் நேயர் விருப்பம் அப்படியே ‘அம்போன்னு’ நிக்குதே!

சார்வாகன் said...

சகோ சுபி கூறுவது!!!
/ஆனால் உலகம் முழுக்க தற்போது நமது இந்தியாவில் பயன் படுத்தும் குர்ஆனின் அடிப்படையிலேயே 6666 ஆயத்துகளோடு குர்ஆன் உள்ளது. /
விக்கிபிடியா கூறுவது!!!
http://dharumi.blogspot.com/2014/02/720.html/
A common myth persists that the number of verses in the Quran is 6,666.[5] In fact, the total number of verses in all chapters is 6,236, although this varies depending on how (or if) the Basmala appearing at the start of each chapter are counted./
நம் காஃபிர் அண்ணன் கூறுவது!!!
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/
வசனங்களின் எண்கள் குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள். ஹுமைத் என்பார் 6212 என்கிறார்கள். அதா என்பார் 6177 என்கிறார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார். """மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்""". இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் '''6236''' வசனங்கள் உள்ளன. வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/
Copyright © www.onlinepj.com
ஆகவே ஏக இறைவனின் பக்தர்கள் சுவனப் பிரியனின் பொய்ப் பிரச்சாரங்களில் மயங்கி, தயாராக இருக்கும் கிளுகிளு சுவனத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.
ஏக இறைவனே (குரான் வசன எண்ணிக்கை உள்ளிட்டு)அனைத்தும் அறிந்தவன்!
நன்றி!!! நன்றி!

தருமி said...

15.03.2014
நைஜீரியாவிலிருந்து ஒரு செய்தி.
அல்லாஹூ அக்பர்”

தருமி said...

32. கடவுள் மனிதனை முழுமையாக - as a perfect one - ஆகப் படைத்துள்ளார் என்று குரானில் சொல்லியாகி விட்டது. இதை அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட முழுமையான உடலில் ஒரு குறை கண்டு, விருத்த சேதனம்’ செய்வது எதற்காக?

Post a Comment