Sunday, September 28, 2014

789. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....


*
என் பழையபதிவொன்று ..........

TUESDAY, APRIL 26, 2005  

4.அரசியல் பற்றி... 


அரசியல் பற்றி எதுவுமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன் - அது எதுக்கு? நாமளும் திருந்தப்போறதில்லை; நம்ம அரசியல்வாதிகளும் மாறப்போவதில்லை. பிறகு எதுக்கு அதைப்பற்றி எழுதிக்கிட்டு.

ஆனாலும், ஒரே ஒரு ஆசை. அது மட்டும் நடந்துவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும். ஒரு வீண் ஆசைதான்.

ஏதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது நமது "மதிப்பிற்குரிய" நீதித்துறையால் கொஞ்சமாவது தண்டிக்கப்படவேண்டும். 

நடக்கிற காரியமான்னு கேக்றீங்களா? எனக்கும் இது நடக்கப் போறதில்லைன்னு தெரியும்.

இருந்தும் ஒரு கனவுதான்.

 இது ஏங்க...?

=========================================================

 *
பதிவுலகிற்கு வந்ததும் நான் எழுதிய நான்காவது பதிவு இது.  கனவு சிறிதே பலித்திருக்கிறது.  ஆனாலும் எத்தனை நாளைக்கு இந்தக் கனவு இருக்குமென்பதே தெரியவில்லை. ஏதோ ஒரு நீதிபதிக்காவது இந்த அளவு மனசாட்சியும், தைரியமும், நேர்மையும் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

நிச்சயம் மேல் நீதி மன்றங்களில் உள்ள நீதிபதிகளுக்கு இத்தகைய நேர்மை இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் இரண்டு மாதிரிகள் தருகிறேன்  --

இரண்டு மாடி ஹோட்டல் ஒன்றை கொடைக்கானலில் உத்தரவின்றி முதலமைச்சரே கட்டுகிறார். ஒரு மாடியை இடிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னும் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று அடுத்த வழக்குப் போடும் “திறமை’ நம் அரசியல்வாதிகளுக்கு உண்டு.

டான்ஸி வழக்கு ஒரு open and shut case என்று சொல்லுமளவிற்கு ஆதாரங்களோடு இருந்த வழக்கு. மகா நீதிபதி ஒருவர் குற்றம் நடந்தது உண்மைதான். ஆனால் நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார். இப்படி  தீர்ப்பளிக்கும் ’வல்லமை’ ஒரு நீதிபதிக்கு இருந்தது என்பதை நினைக்கும் போது மயிர்க் கூச்செறிகிறது!!

இப்படிப்பட்ட நிலை  இருந்தும் டி குன்ஹா இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததும் மிகவும் அதிசயமான ஒன்று.

X  Y  Z என்று எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் ஒரு தொழில்; ஒரு வியாபாரம் என்றாகிப் போனது. இன்னும் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வருகிறோம் என்று சொல்பவர்களை எதை வைத்தும் ..... ம்ம் ... ம்.. அதெல்லாம் வேண்டாம்... ..என்ன செய்தாலும் தகும். இந்த நிலையில் Xக்குத் தண்டனை என்றால் முதலில் அதற்கு சந்தோஷப்பட வேண்டும். உடனே, ‘ஆஹா... Y,   Zக்குத் தண்டனை இல்லையா’? என்று கேட்பதை விட, ஆஹா...அடுத்து Y  Z க்கும் வந்து விடும் என்று எதிர்பார்ப்பதே மேல்; மகிழ்ச்சி. Y,  Zக்கு வராமல் Xக்கு வந்து விட்டதே என்று வருந்துவதை நமது பதிவர்கள் மத்தியில் பார்க்கும் போது  கொஞ்சம் வேடிக்கையாகவும். நிறைய வேதனையாகவும் உள்ளது.


எப்படியோ 2005ல் இருந்த ஒரு ஆசை இன்று சிறிதாவது நிறைவேறியதே என்ற மகிழ்ச்சி எனக்கு. இந்த மகிழ்ச்சி வாரக் கணக்கில் இருக்குமா ... மாதக் கணக்கில் இருக்குமா என்று தெரியவில்லை. மேல் கோர்ட்டுகள் எப்போதும் அரசியல்வியாதிகளின் பக்கம் தான். நிச்சயமாக செயலலிதாவின் மீதுள்ள அத்தனை தண்டனைகளையும் பெரும் நீதிபதிகள் துடைத்துப் போடுவார்கள் அல்லவா ... அதுவரை இந்த மகிழ்ச்சியோடு இருந்து விட்டுப் போகிறேன்.

X  Y  Z -- “இதுகளை’ விட்டால் நமக்கு வேறு வழியே இல்லையா ...?இன்னும் சில பழைய பதிவுகளை வாசித்துப் பாருங்களேன் .......

http://dharumi.blogspot.in/2006/08/170.html

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112102&format=print&edition_id=200112105 comments:

Unknown said...

தருமி அய்யா, எந்த ஒரு துறையிலும் நேர்மையாளர்கள் வரும்பொழுது இப்படி ஒரு அதிசயம் நடக்கத்தான் செய்கிறது. ஐ ஏ எஸ் ஆபிஸர்களில் உமாசங்கர், சகாயம் போல.. . நீங்கள் சொல்வது போல் மேல் கோர்ட் அப்பீல்களில் நடக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது. ஆனாலும் ஒரு மா நில முதல்வரை அவர் செய்த தவறுக்கு தண்டிக்கப்பட்டதே, மற்றவர்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணியாகவே நான் பார்க்கிறேன்.
பூனைக்கு மணியை கட்டி விட்டார் நீதியரசர் குன்ஹா. வேறு மொழியில் சொல்வதானால்
'மரண பயத்தை காட்டிண்டா பரமா'

Unknown said...

பின் தொடர ..........

துளசி கோபால் said...

தொடர்கின்றேன் !

”தளிர் சுரேஷ்” said...

நீதித் துறை மீது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது இந்த தீர்ப்பினால்!

தருமி said...

அப்போ மறுபடி தீர்ப்பு மாறும்போது நம்பிக்கை மறுபடி நீர்த்துப் போகுமா?

Post a Comment