Friday, October 17, 2014

793. பலித்த ஆருடங்கள் .........




*

முந்திய பதிவில் நான் சொல்லிப் பலித்த ஆருடங்கள் ..........



சில வாரக்கணக்கில் மம்மிக்கு பெயில் கிடைக்கும். மம்மி இப்போ புது வேஷம் எடுப்பாங்க. காளி வேஷம் தான். ஒரு கையில் துண்டமாக ஒரு தலை -- அதைப் பார்த்து மட்டும் எனக்குப் பயம். 


நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

8 comments:

G.M Balasubramaniam said...

எனக்கென்னவோ வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எதுவும் டிசம்பர் கடைசிவரை காத்திருக்க வேண்டும்.

வேகநரி said...

என்ன ஒரு நாசமான வழக்கமோ.
//நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம்//

அ. வேல்முருகன் said...

ஆத்தா எந்த வேஷம் எடுத்தாலும் ரசிக்க மக்கள் இருக்காங்களே

குறும்பன் said...

அய்யய்யோ உங்க ஆருடம் பலித்தால் என்னாகறது? :( ஆனா பலிக்கத்தான் போகுது. ஏன் லாலுவுக்கும் சௌதாலாவுக்கும் தண்டனை (பிணை கிடைத்தாலும் பல மாதங்கள் கலி தின்னவங்க தானே) மம்மிக்கு தண்டனைகிடைத்தவுடனே ஒரு மாதம் ஆவதற்குள் பிணை? மம்மின்னா நீதிபதிகளும் "கனிந்து" விடுகிறார்களோ? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வேண்டிய வழக்கா இது? பிணையெல்லாம் அவர் விசாரிப்பாரா?

KILLERGEE Devakottai said...

Unmai vel murugan sir

வேகநரி said...

ஜப்பான் நாட்டில் கட்சிக்காக கிடைத்த நன்கொடை பணத்தை தவறாக பாவித்தார்கள் என்ற குற்சாட்டில் இரு அமைச்சர்கள் இராஜினாமாச் செய்துள்ளார்கள். அதுவும் ஒரு நாடு.அப்படியும் ஒரு மக்கள் கூட்டம்.
இங்கே தண்டணை கிடைக்க பெற்ற முதல் அமைச்சர் பதவியில் இருந்த ஒரு ஊழல் குற்றவாளி ஜாமீனில் வந்தபோ அவரை மலர்கள் தூவி நடனமாடி,வாழ்த்துபாடி வரவேற்ற தமிழ் மக்கள் கூட்டம். ஊழலுக்கு ஆதரவாக 193 தமிழர்கள் தற்கொலையாம்.
இந்த மக்கள் கூட்டத்திற்கு எப்படி தான் விடிவு கிடைக்கும்?

தருமி said...

//193 தமிழர்கள் தற்கொலையாம். //

இத்தனை எண்ணிக்கையா? நெஜமாகவா/ அடக் கடவுளே...! இவ்வளவு நாறிப்போன ஜடங்களா நாம்?

தருமி said...

இத்தனை பேர் கிறுக்குத்தனமாக செத்ததற்கு ஒரு வருத்தமோ, இதைத் தவறு என்று சொல்லித் திருத்தவோ அந்தப் பெண்மணிக்கு மனதே வரவில்லையோ?

Post a Comment