Friday, May 08, 2015

836. UPGRADE MY CASTE
*வழக்கமாக சாதிகளைப் பற்றிப் பேசும் போது உயர்ந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் சொல்லாமல் உயர்த்தப்பட்ட ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்ல வேண்டுமென நாம் கருதுகிறோம். உண்மையில் நமக்குள் அப்படி உயர்வு தாழ்வு இல்லை ... உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்பது தான் சரியென்று நினைக்கிறோம். ஆனால் இப்பதிவில் எது வேண்டாமென நினைக்கிறோமோ அதை வார்த்தைகளையே பயன்படுத்துவது என்று நினைக்கிறேன்.

எனக்கு உயர்ந்த ஜாதியினர் மேல் ஒரு பெரும் நல்ல எண்ணம் உண்டு. அந்த ஜாதியினரில் யாருமே எங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக மாற்று என்று கோஷம், கூட்டம், கூப்பாடு, போராட்டம் எதுவும் போடுவதில்லை. They are happy as they are. ஒரு உயர்ஜாதி ஆள் தன் ஜாதி பிற்படுத்தப்பட்ட ஜாதியாக மாறினால் பல சமூக பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணி அந்த மாற்றத்தை விரும்புவதில்லை. தங்கள் “கிரீடத்தை” தாங்களே சுமக்க வேண்டுமென்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கார் மாதிரியான ஆட்கள் இவர்களை ‘வம்புக்கிழுக்கலாம்’. ஆனால் அவர்கள் வழுக்குவதே இல்லை. சமூகம் தந்த, அல்லது இவர்களால் சமூகம் தந்த உயர் நிலையை இறுகப் பிடித்து வைத்துள்ளார்கள். (ஆனாலும் உயர் ஜாதியினர் வேறு ஒரு வழியை அவ்வப்போது கையிலெடுப்பார்கள் - பொருளாதாரத்தின் வழியே இடப்பங்கீடு கொடுங்கள் என்றும் சொல்வதுண்டு. - அதை விட்டு விடுவோம்.)

ஆனால் ஏனைய ஜாதியினரைப் பாருங்கள். B.C.ஜாதிக்காரன் என்னை M.B.C. ஆக மாத்து என்று குரல் கொடுக்கிறான். M.B.C.காரன் என்னை S.C. ஆக மாத்து என்கிறான். S.T.க்கும் போட்டி. Christian B.C. என்னை S.C. ஆக மாத்து என்கிறான். ஆக பெரும் போட்டி என்னவென்றால் யார் வேகமாக கீழே போவது என்பது தான்.

வித்தியாசமாக இருக்கிறதல்லவா? வாழ்க்கையில் மேலே போக வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் இந்த விஷயத்தில் எல்லோரும் கீழே போக வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஏன் இது மாறக்கூடாது? எது நம்மை அது நோக்கிப் போகாமல் நம்மை நிறுத்தி வைத்துள்ளது? வெறும் இடப்பங்கீட்டிற்காக மட்டும் தான் நமது சாதி இன்னும் கீழ் நோக்கிப் பொக வேண்டும் என்று நினைக்கிறோமா? தெரியவில்லை.

ஆனால் இதையெல்லாம் மறந்து, விட்டு விட்டு, என் சாதி இன்னும் “உயர” வேண்டும் என்று நம்மில் யாராவது நினைக்க ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என்று பலமுறை நினைத்தது உண்டு. என் சாதிக்காரர்கள் மத்தியில் அந்த எண்ண ம் எழுந்தால் என்ன என்று தோன்றியது. என் சாதிக்காரர்களை விடுங்கள் ... ஏன் நான் மட்டுமாவது அப்படி நினைக்கக்கூடாது என்று தோன்றியது. ஆஹா ... பொறி தட்டி விட்டது போல் இருந்தது.

ஏன் நம் சாதியில் முதல் குரலாக இதை ஒலிக்கக்கூடாது என்று தோன்றியது. அதன் பயன்  -- என் சாதியை சாதிய அட்டவணையில் உயரிடத்துக்கு மாற்றுங்கள். என் சாதியை O.C.அட்டவணைக்குள் உயர்த்துங்கள். 

ஆனால்  ஒரு வேளை  O.C . ஆட்களுக்கு இது பிடிக்காமல் போகலாமோ? இது எங்க ஏரியான்னு குரல் கொடுக்க மாட்டாங்கல்ல...?

முதல் குரல் ஒலித்தாகி விட்டது. உன் சாதி என்ன என்று யாரும் கேட்டால் ... இது என் பதில். நான் எந்த சாதிக்காரனாகவும் இருக்கட்டும். நீங்கள் உங்கள் சாதியை இதைப் போல் உயர்வாக்க ஏன் முதல் குரலை எழுப்பக் கூடாது? படிப்பும் அதனை ஒட்டிய உயர்வும் ஏற்பட இந்த எண்ணங்கள் நிச்சயம் உதவும். இது ஒரு பந்தயம் போல் ஒவ்வொரு ஜாதி மக்களுக்கும் ஏற்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

உயர்வோம் .. உயர்வோம் ... நம்மில் ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் உயர்வோம். உயர வேண்டும் என்று உழைப்போம். ................... வெறும்  கனவாய் போய்விடுமோ  இது ...?*
*

30 comments:

Avargal Unmaigal said...

மிக சரியாக சொல்லி இருக்கிங்க தருமி சார்

வருண் said...

***எனக்கு உயர்ந்த ஜாதியினர் மேல் ஒரு பெரும் நல்ல எண்ணம் உண்டு. அந்த ஜாதியினரில் யாருமே எங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக மாற்று என்று கோஷம், கூட்டம், கூப்பாடு, போராட்டம் எதுவும் போடுவதில்லை. They are happy as they are. ***

There was a time, I used to get mad at some SC/ST people those who lie about their caste. I was immature and could not understand why they lie. Why can not they be honest? The problem is, as soon as one gets to know their caste they will look down on him/her. That's my culture! Well, after I learned that I started thinking from a different angle that they are afraid of telling their caste to others because people are going to judge them based on their caste not based on what they are. As I grew up in so called high class dravidian environment, it took a while for me to realize the reason why they lie about their caste. The kind of "complex" they have. I felt sorry for them and I started to correct myself that I should not get mad a them for lying about their caste. Because my culture is FILTHY!

Let us get to high class brahmins who are always INNOCENT.

As you know, there is a quota for SC/ST students. Usually the students come thru such a door are not that "bright", they will struggle in the class and always score less marks and even fail. My professor was a brahmin guy. Obviously he hates reservation bu the can not do anything about it. We all give seminars which is a requirement for graduating. Now everyone turn comes and do our best. Now the SC/ST students turn comes. They usually (exceptions are there) struggle to understand and so they usually could not give a good talk. Now, as a professor, one can help them or just let them do their best. You should not "pay off" your old score using this situation. You know what his paappaans do? He literally torture those girls and make them cry by embarrassing them and make them feel ashamed of being themselves. We cant help them that much although we feel sorry for those students. Why does the paappaan tortures those students? Just think about it. The reason is, he is mad at the reservation. He could not do anything about it as that's the LAW. Now he is abusing his power to put down the students who came thru such a door. Please dont tell me paappaans are innocent. I have seen them all They will pretend like they find Ambedkar as right person. They LIE here too. They want to use Ambetkar to put down periyaar. Once that's done, they will put down Ambedkar. That's their habit. This is what they are.

Let us be careful when we are analyzing anything. I am not supporting the "high class" dravidians. But please dont tell me Brahmins are innocent. They are NOT!

They will use Ambetkar to bring down EVR. Then they will bring down Ambedkar. They dont have any morals. They are parasites! They just want to survive. They will do anything to run their filthy life!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரும் போட்டி என்னவென்றால் யார் கீழே போவது என்ற சொற்றொடர் பதிவின் முத்தாய்ப்பாக இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு தரம் தாழ்த்திக்கொள்ள தயாராக இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

அன்புடன் நீலன் said...

மிகப் பெரும்பான்மையான OBC சமூகமும் தன்னை SC ஆக மாற்று என போராடியதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் SC/ST என்றாலே பொது சமூகத்தின் பொது புத்தியில் யார் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாவரும் அறிவோம். ஆனால் ஒரு காலத்தில் SC/ST சமூகத்தில் இருந்து கிறித்தவம், இஸ்லாமுக்கு மதம் மாறியதால் OBC ஆக சட்டத்தால் மாற்றப்பட்டவர்கள் பலரும் தம்மை SC பிரிவுக்குள் இடுமாறு கூறுகின்றார்கள் என்பது தான் உண்மை. மற்ற OBC சமூகங்கள் SC/ST பிரிவுக்குள் வர விரும்பவில்லை. மாறாக, OBC ஒதுக்கீட்டு அளவை உயர்த்தக் கூறுகின்றார்கள். சமூகத்தில் 50 - 60 % இருக்கின்ற OBC சமூகம் அதே அளவில் இட ஒதுக்கீட்டை தருமாறே கூறுகின்றார்கள். இதில் OBC சமூகத்தினர் தான் இரு முகமூடிகளை மாட்டிக் கொண்டு அலைகின்றார்கள். சமூக அந்தஸ்து, மரியாதை கௌரவம், மதச் சடங்குகள், மதச் சம்பிரதாயங்கள் என்பவற்றில் அவர்கள் FC/OC சமூகத்தினரைப் பின்பற்றுகின்றனர், பல சமயங்களில் FC/OC சமூகத்தினரது கால்களில் கதியே என விழுந்தும் கிடக்கின்றனர். தமது பண்பாட்டுக் கூறுகளை FC/OC சமூகத்தை வழியொட்டி பின்பற்றவும் செய்கின்றனர். SC/ST சமூகங்களை போட்டு மிதிக்கவும், அடக்கி ஒடுக்கவும் செய்கின்றனர். ஆனால் தமது பருப்பை FC/OC சமூகத்திடம் அதிகம் காட்டுவதில்லை. அண்மையக் காலங்களில் சுத்தமாக காட்டுவதே இல்லை.

ஆனால் இட ஒதுக்கீடு என்று வரும் போது மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள், அய்யோ பாவம் என அலறுகின்றனர். சமூகத்தில் பின் தங்கி இருப்பதாக கத்துகின்றனர், கூச்சலிடுகின்றனர். SC/ST சமூகங்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை கண்டு பொருமுகின்றனர், பொறாமையில் வயிறு எரிகின்றனர். இட ஒதுக்கீட்டைப் பற்றி FC/OC சமூகம் பேசும் போது இட ஒதுக்கீடு அவசியம் என்பதாக பேசும் அவர்கள் SC/ST சமூகத்தினருக்கு கொடுப்பதை வெறுக்கின்றனர். இந்த இரட்டை நிலைப்பாடுகளை அவர்கள் கொண்டுள்ளார்கள். இந்த OBC சமூகத்தின் FC/OC அபிமானமும் மண்டியிடுதல்களையும் தான் FC/OC சமூகத்தினர் தமக்கு ஆதாயமாக்கிக் கொள்கின்றனர்.

அன்புடன் நீலன் said...

ஒரு SC/ST பஞ்சாயத்து தலைவராகிவிட்டதை பொறுக்காமல் படுகொலை செய்தும், அந்த பதவிக்கான இடஒதுக்கீட்டின் தருமத்தையே காலாவதியாக்கத் துணிபவர்களுக்கு, தாம் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலத்தின், கட்சியின் தலைவர் பதவியை FC/OC சமூகத்தவருக்கு வழங்கவும் அவர் காலில் விழுந்து எழவும் தயங்காது செய்கின்றனர். தமது கோவில்கள், மடங்கள் இன்ன பிற மத, சமூகத் தலைமைகளை OC/FC சமூகத்தருக்கு வாரி வழங்கியுள்ளனர். அவர்களுக்கு முன் கைக்கட்டி, காலில் விழுந்து, தரையில் அமர்ந்து மண்டியிடவும் தயங்குகின்றனர். ஆனால் SC/ST சமூகத்தினர் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வருவதையும் விரும்பாமல் தாண்டவம் ஆடுகின்றனர். இந்த ஜாதி அப்கிரேடுகள் முதலில் OBC சமூகத்துக்குத் தான் மிக அவசியம். அவர்கள் இட ஒதுக்கீட்டை விட்டுவிட்டு OC என்பதாக அப்கிரேடு ஆவது தான் நல்லது. அப்கிரேடு ஆவதோடு மட்டுமின்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி தலைமை, கட்சி தலைமை, கோவில் தலைமை, இன்ன பிற தலைமைகளில் தாம் போய் அமர போராட வேண்டும். அதைவிட்டுவிட்டு OC/FC சமூகத்தின் பேச்சில் மயங்கி தமது ஜாதிவெறிக்கு SC/ST சமூகம் மீது வன்மம் தெளிப்பதை நிறுத்த வேண்டும்.

Packirisamy N said...

சுஜாதா SC/ST சம்பந்தமா, ரொம்ப மோசமாக சாவி பத்திரிக்கையில் கதை எழுதுன விவகாரம் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. வருண் சொல்லியது போல எங்கள் கல்லூரியிலும் நிகழ்ந்துள்ளது.

G.M Balasubramaniam said...

சாதிகளை முன்னிட்டு ஒதுக்கீடு என்று வந்ததால் தங்கள் சாதியை இறக்கிக் கொள்ள விரும்பலாம் ஒதுக்கீடு கிடைக்காததால் பொருளாதார ரீதியில் ஒதுக்கீடு பெற உயர் சாதியினர் விரும்பலாமிந்த ஒதுக்கீடு என்பதே ஒரு ஹாண்டி காப் பந்தயம். இந்த ஹாண்டிகாப்புடனும் ஓட்டத்தில்பங்கெடுக்கிறார்கள்வெற்றி பெற்றவர்கள் இனி இந்த ஹாண்டிகாப் வேண்டாம் என்று கூறுவதில்லை.சாதிகளே இல்லாத சமுதாயம் உருவாக சிந்திக்கவேண்டும் ஆனால் பலரும் இதில் குளிர்காயவே விரும்புகிறார்கள்சாதிகள் பற்றிய எண்ணமே உயர்வு தாழ்வுக்கு வழிவகுக்கும்

தருமி said...

//மிகப் பெரும்பான்மையான OBC சமூகமும் தன்னை SC ஆக மாற்று என போராடியதாக எனக்குத் தெரியவில்லை.//

பெரும்பான்மை OBC சமூகம் என்று சொல்லவில்லை. ஆனாலும் பல OBC, BC சமூகங்கள் முயற்சியெடுத்துள்ளன.
சில விவரங்கள்:
http://savageminds.org/2008/05/31/gujjars-obc-st-sc-or-dnt/
The Gujjars are agitating to have their official status changed from “Other Backward Classes” (OBC) to “Scheduled Tribe” (ST).

http://articles.economictimes.indiatimes.com/2015-02-24/news/59461038_1_sc-list-communities-scheduled-castes-category
the government has a proposal from the Bihar government with regard to inclusion of more castes in SC list.
As per the bill, communities such as 'Kabirpanthi and Julaha' in Haryana, 'Bhovi, od, odde, Vaddar, Waddar' in Karnatka, 'Dhoba, Dhobi, Dom, Dombo, Duria Dom, Katia, Kela, Nalua Kela, Khadala and Turi' in Odisha and the community of 'Chamar' in Dadra and Nagar Haveli are included in the SC list.
Participating in the debate, Ali Anwar Ansari (JDU) Ali Anwar (JDU) sought inclusion of Haryana's Mev community under Scheduled Tribe (ST) category on par with Meena tribe.

தருமி said...

iqbal
// SC/ST என்றாலே பொது சமூகத்தின் பொது புத்தியில் யார் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாவரும் அறிவோம்//

naked truth ......... fully endorse it

தருமி said...

varun
the pathetic situation of SC,ST candidates in higher educational institutions is not a secret. it is so open.so many instances have come up. but no brahmin has so far expressed his regret over such things. i salute T.M.Krishna who is trying to do something in his musical sphere.

but all said and done, your aversion for them is too much. we should not hate any group this much.
well this is my opinion. after all coexistence is the law of nature.

தருமி said...

//அவர்களுக்கு முன் கைக்கட்டி, காலில் விழுந்து, தரையில் அமர்ந்து மண்டியிடவும் தயங்குகின்றனர். ஆனால் SC/ST சமூகத்தினர் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வருவதையும் விரும்பாமல் தாண்டவம் ஆடுகின்றனர்.//

இக்பால்
நீங்கள் சுற்றி வளைத்துப் பேசும் அந்த இரு சாதியினரின் பெயர்களைக் குறிப்பிட்டு விடலாமோவென்று கூட எனக்குத் தோன்றுகிறது!!!!!!

தருமி said...

இக்பால்
S.C.,S.T. களை வெறுப்பதில் B.C.களுக்குள் கடும் போட்டி என்பதைச் சுட்டிக்காட்ட மறந்து விட்டேன். இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியுள்ளேன் -- ஓட்டப்பந்தயத்தில் தன்னை மீறி ஓடுபவனே நம் போட்டியாளன். நான் நான்காவது ஆள் என்றால் மூன்றாவது ஆளை முந்ததான் நான் போரிடுவேன். முதலில் ஓடிக் கொண்டிருப்பவனைப் பற்றி அப்போது நான் கவலைப்பட மாட்டேன். .. மனித இயல்பு

அதுவும் இதுவரை என் பின்னால் வந்து கொண்டிருந்த SC/ST சமூகத்தினர் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வருவதைப் பார்க்கும் போது எல்லா B.C.களுக்கும் எங்கெல்லாமோ எரிச்சல்.

இன்னும் ஒரு சோகம். SC/ST சமூகங்களுக்குள் உள்ள போட்டிகளும், பிளவுகளும் மேலும் அவர்களைக் கீழே தள்ளுகிறது. பெயர் சொல்கிறது மாதிரி SC/ST களுக்கு ஒரு சமூகத்தலைவன் ஒருவர் கிடைத்தால் நலம். அது எந்தக் காலமோ?

வருண் said...

Dharumi Sir: I understand your point. Let me get the label, "Varun is a brahmin hater". Look at what has happened to EVR today? What happened to Gandhi today? Brahmins know how to manipulate the system and succeed. If they can handle, EVR and Gandhi easily, they can handle me just like that. They are able to get FULL SUPPORT from dravidians today as you can see the paNdaarangaL everywhere in TN. They have succeeded making EVR as the villain. This is what we are. We sit down and watch all the drama and try to be polite and nice to them. They do what they have to do for their survival. They succeed. They have been succeeding all these years by pretending to be nice and innocent. That's why, we are still ruled by brahmins. That's why they could get away with Shankar raman's death. That's why dravidains are CRYING for "Raghuveeran's oppaari" rather than worrying about toilet cleaners' pathetic life.

Do you want me to get a "good name" and "decent guy" certificates from manipulative brahmins and these idiotic dravidians?

Honestly, I think such certificates are worthless!

****but no brahmin has so far expressed his regret over such things.****

They never do! That is the WHOLE POINT! I am glad at least you noticed that carefully. But brahmins know people like you are very few. They will find so many dravidian sympathizers to cover up the facts you revealed. Dravidian idiots do not even know what you mean here either. They are too busy praying their Gods and feeling sorry for raghuveerans oppaari.

Anyway, take it easy Sir.

அன்புடன் நீலன் said...

குஜ்ஜார் உட்பட சில OBC பிரிவில் உள்ளவர்கள் தம்மை SC/ST பிரிவில் இணைக்க கோருகின்றனர். அதில் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஏனெனில் குஜராத்தின் கட்ச் பிராந்தியங்களில் பயணித்த போது குஜ்ஜார் சமூகத்தினரது வாழ்க்கை முறைகளை கவனிக்க நேர்ந்தது. அவர்கள் இன்னமும் தமது பழங்குடி வழியிலான வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி குஜராத்தின் பொது சமூகத்தில் குஜ்ஜார் என்றாலே இழிவானோர் என்ற எண்ணமும் புறக்கணிப்பும் கூட இருக்கின்றது. குஜராத்தின் வல்சாட்டின் டாங்கர் உட்பட பல SC/St சமூகத்தினரை ஒத்தே அவர்கள் இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் கூட படகர்கள் தம்மை SC பிரிவில் சேர்க்க கோரிக்கை வைத்தனர். மத்திய அரசாங்கம் இதுவரை சில சாதிகளை SC/ST யில் சேர்த்தே வந்துள்ளது. ஆனால் பொதுவில் ஆதிக்கம் செலுத்துகின்ற பெரும்பான்மை OBC சமூகங்கள் தம்மை SC/ST பிரிவில் சேர்க்கச் சொல்லுவார்களா என்பதே ஐயம். அதிக ஒதுக்கீட்டு லாபம் இருக்கின்றது என்றாலும் பள்ளருக்கும், பறையருக்கும் இணையராக தேவரும், வன்னியரும், நாடாரும் போய் நிற்கத் துணிய மாட்டார்கள். அதே சமயம் தாமே உயர்வு என்ற மார்தட்டினாலும் கூட தமக்குள்ள OBC ஒதுக்கீட்டை தூக்கி எறிந்துவிட்டு பார்ப்பனருக்கு இணையாக போய் OC/FC இடத்தில் சரி சமமாக நிற்கவும் அவர்களுக்கு துணிவில்லை. வள்ளுவர் சொல்லும் செல்லாயிடத்து சினந்தீது என்பது போல, OBC சமூகங்களின் சினம் தலித்களை நோக்கியே இருக்கின்றன, அவர்களால் OC/FC ஆதிக்கத்துக்கு எதிராக பேசத் துணிவே இல்லை.

அன்புடன் நீலன் said...

SC/ST சமூகத்துக்குள் இருப்பதாக சொல்லப்படும் பிரிவினைகள் என்பது ஆழமாக நோக்கினால் இயல்பான ஒன்றை ஊடகங்கள் பூதாகரமாக ஆக்கும் பேனைப் பிடித்து பெருமாளாக்கும் பணியே என்பேன்.

SC/ST சமூகத்தில் இருக்கின்ற பேத நிலைமைகள் என்பவை பார்ப்பனருக்குள்ளே இருக்கும் வடகலை, தென்கலை, சரஸ்வாத், திராவிட, கௌட, நம்பூதிரி, ஐயர் உயர்வு தாழ்வு பிரிவினைகளைப் போலத் தான் என்பேன்.

ஆனால் ஊடகங்கள் பார்ப்பனருக்குள்ளே இருக்கின்ற பிரிவினைகளைப் பற்றி பெரிது படுத்துவதே கிடையாது. எத்தனை தென் கலை ஐயங்கார்களை, வட கலை ஐயங்கார்கள் ஏற்க மறுக்கின்றனர் என்பதை கண்கூடாக பார்த்தவன் நான்.

ஆக பறையன், பள்ளன், மள்ளன், அருந்ததியர் என்பதாக காணப்படும் SC/ST சமூகப் பிரிவினைகளை உள்ஜாதி அரசியல் மற்றும் புறஜாதி ஊடகங்கள் பெரிதாக்கிவருகின்றன. இந்தியாவில் எவ்வளவு விரைவில் ஜாதி சங்கங்களையும், ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளையும் தடை செய்கின்றோமோ அது அவ்வளவு நல்லது. இல்லை என்றால் வக்கற்றுக் கிடந்த ஜாதி சங்கங்கள், ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகள் இணையம், சமூக ஊடகங்கள் ஊடாக வலிமையடைந்து மறுபடியும் ஜாதித்துவ பிரிவினைகளை 150 ஆண்டுகளுக்கு முன் நம்மைக் கொண்டு சேர்த்துவிடும். கிட்டத்தட்ட பரமபத விளையாட்டு போலாகிவிட்டது, கொஞ்சம் அசந்தாலும் பின்னோக்கி போகின்ற பேரபாயம் இருக்கின்றது.

அன்புடன் நீலன் said...

SC/ST சமூகத்திற்கு நல்லதொரு தலைவர் அம்பேத்கார் போன்று கிடைத்தால் நல்லது தான், எல்லாவற்றுக்கும் காலந்தான் ஒரே பதில்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

அதிக ஒதுக்கீட்டு லாபம் இருக்கின்றது என்றாலும் பள்ளருக்கும், பறையருக்கும் இணையராக தேவரும், வன்னியரும், நாடாரும் போய் நிற்கத் துணிய மாட்டார்கள்.//
உடைக்கணும் போல இருக்கு என்றேன். உடைத்தே விட்டீர்கள். நல்லது!

// அதே சமயம் தாமே உயர்வு என்ற மார்தட்டினாலும் கூட தமக்குள்ள OBC ஒதுக்கீட்டை தூக்கி எறிந்துவிட்டு பார்ப்பனருக்கு இணையாக போய் OC/FC இடத்தில் சரி சமமாக நிற்கவும் அவர்களுக்கு துணிவில்லை. //

மிகச் சரியாக அளவீட்டுள்ளீர்கள்.

தருமி said...

வலிமையற்ற சமூகம் .... பிரிந்து கிடப்பதால் சேர வேண்டிய நேரத்தில் கூட சேர முடியாமல் கிடக்கிறார்கள். சமூக, அரசியல் வலிமை கிஞ்சித்தும் இல்லை அவர்களிடம். மற்றவர்கள் சாதிப்பிரிவுகள் இருந்தாலும் வேண்டிய நேரங்களில் ஒன்றிணைகிறார்கள்.

தருமி said...

வருண்
திராவிட என்ற பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு ஒரு பிராமணப் பெண்ணின் ‘தலைமை’யில் நாடு இருப்பதிலிருந்து அவர்களின் ‘தெரமை’ யும் தெரிகிறது. நமது ‘தெரமை’யும் புரிகிறது.

ஜோதிஜி said...

அரசாங்கத்திடம் இருந்து ஒரே ஒரு சுற்றறிக்கை வரட்டும். எவர் வேண்டுமானாலும் அரசின் சலுகையைப் பெற எஸ்சி எஸ்டி பிரிவுக்கு மாறலாம் என்று. அத்தனை பேர்களும் வரிசை கட்டி நிற்பார்கள். நீங்க சொல்ற முற்போக்கு சமூகமும் சேர்த்து. சாதி முக்கியமா வசதி முக்கியமா என்றால் வசதிகளைத் தான் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். வசதியான பின்பு சாதியை அழைத்துக் கொள்வார்கள். இது தான் இப்போதைய சமூகம்.

தருமி said...

//அதிக ஒதுக்கீட்டு லாபம் இருக்கின்றது என்றாலும் பள்ளருக்கும், பறையருக்கும் இணையராக தேவரும், வன்னியரும், நாடாரும் போய் நிற்கத் துணிய மாட்டார்கள்.// //-- என்கிறார் வருண். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்????

சார்லஸ் said...

சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை விட சாதிக்குள் அரசியல் செய்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் . நாமும் அந்த சகதிக்குள் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம் . முன்னேறுவதையோ பின்னேறுவதையோப் பற்றி யோசிப்போமா ? மொத்தமாய் வெளியில் வர யோசிப்போமா?

வருண் said...

***தருமி said...

//அதிக ஒதுக்கீட்டு லாபம் இருக்கின்றது என்றாலும் பள்ளருக்கும், பறையருக்கும் இணையராக தேவரும், வன்னியரும், நாடாரும் போய் நிற்கத் துணிய மாட்டார்கள்.// //-- என்கிறார் வருண். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்????***

வாசகர்கள் இங்கே வருண் என்பதை இக்பால் செல்வன் என்று வாசிக்கணும். :) மேலே உள்ளதை சொன்னவர் இக்பால் என்று நம்புகிறேன். :)

வருண் said...

தலித்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நகைக்கும் பார்ப்பனர்களுக்குள்ளும் ஒற்றுமையில்லை என்பதும் உண்மைதான். :)

Packirisamy N said...

////அதிக ஒதுக்கீட்டு லாபம் இருக்கின்றது என்றாலும் பள்ளருக்கும், பறையருக்கும் இணையராக தேவரும், வன்னியரும், நாடாரும் போய் நிற்கத் துணிய மாட்டார்கள்.// //-- என்கிறார் வருண். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்???? //

சில சாதிகளில், சாதிப்பெயருடன் சில வார்த்தைகளை சேர்த்துக்கொண்டால், அந்த சாதி SC/ST ஆகிவிடும். அல்லது BC ஆகிவிடும். சிலர் இதனை உபயோகித்துக் கொள்வதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

தருமி said...

Packirisamy N

ஒன்றிரண்டு சான்றுகள்???????

தருமி said...

தவற்றிற்கு மன்னிக்கவும், வருண்

தருமி said...

வருண்,
பார்ப்பனர்கள் மத்தியில் ஓற்றுமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எல்லோரும் காலூன்றி நிற்பவர்கள் ... நடப்பவர்கள். ஆனால் தலித்துகள் அப்படியில்லையே. அவர்களே தாழ்த்தப்பட்டு அடியில் மிதிபட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் ஏற்றத் தாழ்வு என்றால் பாவமாகவும், பரிதாபமாகவும், வருத்தமாகவும் உள்ளது.

Packirisamy N said...


//ஒன்றிரண்டு சான்றுகள்???????//

அப்படி மாற்றுவது எளிதான காரியமல்ல. மேலும் சட்டப்படி அது குற்றச்செயல். மாட்டிக்கொண்டால் பெரிய பிரச்சனை. எனக்குத் தெரிந்து இரண்டு பேர்கள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்கள். எளிதாக IIT, IIM கிடைக்கிறதென்றால் இவர்களுக்குக் கசக்கிறதா? ஆனால் இந்த மாணவர்கள், ஸ்காலர்ஷிப் வாங்க வரமாட்டார்கள். ஏனென்றால் அங்கு அவர்கள் SC, BC என்று அறிமுகப்படுத்தப் படுவதை விரும்பமாட்டார்கள்.

சட்டப்படி குற்றமென்றாலும் செய்பவர்கள், சட்டப்படி செய்யலாம் என்றால் தவிர்க்கவா போகிறார்கள்?

Post a Comment