*
அன்பு மணியை முதல்வராக்கி ....
தலித்துகள் இல்லாத தமிழகம்
ஒன்றை உருவாக்குவோமா ...?
JIHADI COLLECTION ... என்ற தலைப்பில் மதத்தீவிரவாதத்திற்கு எதிராக சில பதிவுகளைத் தொடர்ந்து போட்டு வருகிறேன். இதைவிட மோசமான சாதித் தீவிரவாதத்திற்கு எதிராகவும் கட்டாயம் இது போன்ற பதிவுகள் இட வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.
"சாதித் தீவிரவாதத் தொகுப்பு" என்ற தலைப்பின் கீழ் சில பதிவுகளையும் தொடர்ந்து போட வேண்டிய கட்டாயம் நேர்ந்தத்திற்காக வருந்துகிறேன்.
இன்று இந்துவில் வந்த ஒரு செய்தியிலிருந்து சில "மணித் துளிகள்" .....
சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த ஆண்டு காவல்துறையின் பாதுகாப்புடன் விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.
பத்து மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர் தலித்துகளை விழா நடத்த விட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.
வெண்ணிலா என்ற தலித் பெண்மணி எங்கள் உடைமைகளை அழித்தொழிப்பதே அவர்களது நோக்கம். காவல் துறையும்,சரியான நேரத்தில் வந்த மழையும் தான் எங்களை இந்த அளவாவது காப்பாற்றியது.
கலகம் நடந்த சனிக்கிழமை மாலை ராமதாஸின் பா.ம.க. கூட்டம் ஒன்று கள்ளக்குறிச்சியில் நடந்து முடிந்தது. அதிலிருந்து 200க்கும் அதிகமான (சிலர் 500 என்கிறார்கள்) முரட்டுக் கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது.
பெண்கள் தங்கள் சேலைகளில் கற்களை கட்டி எடுத்துக் கொண்டு, வீட்டு மாடிகளிலிருந்து எங்களை நோக்கி கற்களை எரிந்தார்கள். அதே நேரத்தில் ஆண்கள் எங்களைத் தாக்கினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
காவல் துறை அதிகாரி தாங்கள் பெரும் கூட்டத்தால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ஏழு குடிசைகள் முழுவதுமாக எரிக்கப்பட்டன. கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை இழந்தார்கள்.
கோவில் விழா மட்டுமல்ல இதற்குரிய காரணம்; தலித்துகள் மீதான வன்னியர்களின் சாதிய வெறியும், சாதிய அடக்கு முறையும் தான் காரணம்.
எரிக்கப்பட்ட வீடுகளில் முதன் முதல் எரிக்கப்பட்ட வீடு வேறு கிராமத்தின் வன்னியர் பெண்ணை மணந்த ஒரு தலித்தின் வீடு.
சோலையம்மா என்ற தலித் பெண்மணி, "இங்கு வாழ்வதுஎன்பது மிகவும் சிரமம்" என்றார். அதோடு. எப்படி சாமியின் தேரைக்கூட எரிக்க அவர்களால் முடிந்தது என்று வேதனையும், ஆச்சரியமும் கலந்து கேட்கிறார்.
வன்னியர் குல "வீரப் பெண்மணிகள்" பலர் தலித்துகள் தங்கள் வீதி வழியே தேரை இழுக்க அனுமதிக்கவே மாட்டோம் என்றனர்.
தையல் நாயகி என்ற இன்னொரு வன்னிய வீரப் பெண்மணி, "எவ்வளவு தைரியம் இந்த தலித்துகளுக்கு! எங்கள் உடலில் ஓடும் ரத்தம் உங்கள் ரத்தத்திலிருந்து வித்தியாசமாகவா இருக்கிறது என்று தைரியமாகக் கேட்கிறார்கள்" என்கிறார்.
*
தங்களில் பலரையும் காவல் துறை கைது செய்து விட்டதாக வன்னியர் குறை சொல்லுகிறார்கள்.
*
இத்தனை சாதி வெறியர்களைப் பார்க்கும் போது நிச்சயமாக இதே போன்ற சோகமான நிகழ்வுகள் இன்னொரு நாளில் ... இன்னொரு இடத்தில் ... கட்டாயம் நடக்குமென்று தான் தோன்றுகிறது. அழியாமல் ஆழமாக சாதிவெறி மனதில் ஊறிக் கிடக்கிறது.