Sunday, February 19, 2017

928. பிப்ரவரி பொங்கல்



*

Great show, #DrRichardBeale

#DrRichardBeale never ever knew that you are such a great actor in a TV show!

#DrRichardBeale thanks for coming for the treatment for the CM. Double thanks (?) for coming again for the re-enactment in a TV show!

#DrRichardBeale "All the world is a stage" says your Bard. But why should you re-enact the #treatmenttoCM once again, that too in a TV broadcast?

#DrRichardBeale better serve the patients and not any other political or corporate coterie.

#DrRichardBeale thanks for treating our CM.But sad for being a circumstantial slave for our political minions during treatment!

#DrRichardBeale why do you degrade yourself by getting into the nitty-gritties of our local politics?

#Apollo charges just 5.5 crore. What a great hospital! So poor are the charges!

எப்போது சிங்கை physiotherapists & AIIMS மருத்துவர்கள் இங்கே வந்து தந்தி டிவியில் அடுத்த show காண்பிப்பார்கள்?

#DrRichardBeale thanks for treating our CM. hope you got paid. Good. But did you get any further remuneration for 'rewinding' the treatment thru TV channels?

I HAVE COME HERE TO BURY ......

“Friends, Romans, countrymen, lend me your ears”....

I come to bury MAFIA.
The evil that men do lives after them;

My heart is in the coffin there with Caesar,
And I must pause till it come back to me.

'தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' ... இப்படியும் சொல்லலாம்!!

TV விவாதங்களில் எல்லோர் மைக்கையும் ஆண்/ஆஃப் பண்றதை நடுவர் வச்சிக்கிட்டா என்ன?

50 நிமிஷம் ... அசத்தல் ... யார் கொடுத்த ஐடியாவோ!

50 நிமிஷம் ஐடியா கொடுத்தவர் வாபஸ் வாங்குறதுக்கு முந்தியே வாய்ஸ் கொடுத்திருந்தால் இன்னைக்கி ஓ பி எஸ் டாப்ல இருப்பார்.

பதவில இருந்து ஓபிஎஸ் வாய்ஸ் கொடுத்திருந்தா ‘எலும்புக்கு நிறைய பேர் பின்னால் ஓடியாந்திருப்பார்கள்.

பஸ்ஸில ஏறும் போது அத்தனையில் ஒண்ணுக்குமா எந்த வித எதிர்ப்புணர்ச்சியும் வரலை. சோற்றாலடித்த பிண்டங்கள் என்பார்களே ... அதுகளா இதுக?
தமிழண்டா ....

ஏன் ஒரு நடுநிலையாளர் கூட உண்மைகளைக் கேட்பதில்லை என்று புரியவில்லை. எல்லோருக்கும் தெரியும் யார் எந்த அளவு கொள்ளை அடித்தார்கள் என்பது. ஆனால் விவாதங்களில் ஒருவர் கூட அதைத் தோலுரிக்க ஏன் தயங்க வேண்டும்? ஜெயலலிதாவும், சசிகலாவும், பன்னீர் செல்வமும் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதை உடைத்துப் பேச யாருக்கும் ஏன் தைரியம் வரவில்லை. எல்லோரும் எல்லோருக்கும் பயப்படுகிறார்கள்.

அட போங்கப்பாநீங்களும் உங்கள் ஊடகங்களும்!

போட்டு உடைச்சா கொஞ்சமாவது அவர்களுக்கு ஒரு சின்ன பயம் வரலாம். இப்படியெல்லாம் கேட்டால் தானே நாளைக்கு ஊடகங்கள் மீது பயமும், மரியாதையும் வரும். இப்படிதடவி தடவிக் கேட்டால் எந்த அரசியல்வியாதிக்கு ஊடகங்கள் மீது மரியாதை வரும். நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டே இருங்கள். அவர்களும் அச்சமில்லைஅச்சமில்லைன்னு ஜாலியா மேலும் மேலும்உயரட்டும்ஊழலில்!

சாத்து சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
எழுந்திருச்சி மறுபடி வந்திருவ ….?

அந்தக் கட்சிக்காரங்களுக்கு கொஞ்சம் அது குறைவோ என்னவோ அரசியல்வியாதிகள், தொண்டர்கள் எல்லோரும் இன்னும் செய்யும் ஒரே ஜெபம் … அம்மா .. அம்மா தான். மம்மிட்ட இருந்து விடுபட மாட்டாங்க.

mini-mum ஏன் சீக்கிரம் மு.அமைச்சராகணும்னு நினச்சிது தெரியுமா? தீர்ப்பு இப்படி வந்தா பதவியை ஊட்டுக்காரர் கையில் கொடுத்து வச்சிருக்காலாம்ல. அதுக்குத் தான் பாடுபட்டுச்சு. அதுக்கு இந்த ஆளுநர் தடை போட்டுட்டாரே……….

சாத்து சாத்துன்னு சாத்தியாச்சி மூணு தடவை.
உயிரோடு இருக்கும் போது சாத்துனது பத்தாதா?

இப்படி ஒரு தீர்ப்பு வந்த பிறகும் கூட ”அம்மா பாசம் குறையலையே. அது சரி .. எல்லாம் ரத்தத்தின் ரத்தங்கள் தானே!

ரொம்ப ஆசைப்பட்டேன். மம்மி ரிசல்ட் வந்த பிறகு போகணும்னு ஆசைப்பட்டேன். பாருங்க இப்போ. இன்னும் மம்மி தான்! ஒருவேளைஉயிரோடு இருந்திருந்தாலும் இதை பஜனையைத் தான் செய்து கொண்டிருப்பார்களோ? அப்டின்னா .. எப்பதான் புத்தி வரும்?

பார்லிமென்ட்ல ஒரு பெரிய சிலை மம்மிக்கு செய்யணும். காமராஜர் சிலையில் அவர் கால் உயரத்திற்கு படிக்கும் சிறு குழந்தைகள் சுற்றி நிற்குமே அது மாதிரி மம்மிக்கு உயரமான சிலை. வெண்கலத்தில. அவரு காலடியைச் சுத்தி தலை தரையைத் தொட, குண்டியைத் தூக்கிக்கிட்டு நிறைய பேர் கால்ல விழுந்து கிடக்கிறது மாதிரி டிசைன். பெரிய பீடம். பார்லிமென்ட் வாசல்ல வைக்கணும். அந்தப் பீடத்தில ”4+6 வருஷம் + 100 கோடிஅப்டின்னு போட்டு உயிரோடு இருந்திருந்தா எந்த ஜெயில்ல போட்டிருப்பாங்களோ அந்த ஜெயில் பெயரையும் போட்டால் …. வர்ர அரசியல்வியாதிகளில் யாருக்காவது ஒருவருக்காவது கொஞ்சமாவது நல்ல புத்தி வரலாமில்லையா? எதிர்காலத்திற்கு ஒரு படிப்பினை தான்.
இதுக்குப் பிறகு நோபெல் பரிசு, பாரத ரத்னா, ரூபாய் நோட்ல அவர் படம் எல்லாத்தையும் அடுத்த வரிசையில வச்சுக்குவோமே.
எல்லாம் ஒரு negative inspiration தான்.
என்னசெலசெஞ்சிருவோமா?

ஜென்மம் சாபல்யமடைஞ்சிருச்சு.....
ரொம்ப பெரிய ஆசை தான். ஏதாவது ஒரு அரசியல்வியாதியாவது தண்டிக்கப்படணும்னு ரொம்ப வருஷமா பெரிய ஆசை. அம்புட்டுதான் ... இனிமே எங்க நடக்கப் போகுதுன்னு நினச்சப்போ ... வந்துச்சே ஒரு சுனாமி
/ வர்தா. அடிச்சி சாச்சிருச்சே... மகிழ்ச்சி
மகிழ்ச்சிக்குக் காரண கர்த்தாக்கள் மூவருக்கும் எம் வணக்கங்களும், வாழ்த்துகளும்.உரித்தாகட்டும்.
அந்த நாலாவதுக்கு …. அதுக்கு என்ன சொல்ல?

என்ன செஞ்சாலும் நமக்கு வேண்டிய அரசியல் ஆளுக செஞ்சா தப்பில்லைன்னு நம்ம மக்கள் நினைக்கிறாங்களேன்னு நினச்சா ரொம்ப பயமா இருக்கு. ஓட்டுப் போடுற பய பிள்ளைக எல்லாம் ஏதாவது ஒரு தல அல்லது சின்னம் அப்டின்னு ஆயுசுக்கும் நிலச்சி நின்னுர்ராங்க. அவங்க ஆளுக என்ன செஞ்சாலும் நாங்க அவங்க பின்னால மட்டும் தான் போவோம்னு அப்படி ஒரு திண்ணமான எண்ணம். அப்புறம் எங்க இருந்துமாற்றம்வரும்.

ஒரு ஊழல் பேர்வழின்னு நீதி மன்றமே சொல்லிருச்சு அப்டின்னா மக்கள் அந்த ஆளை வெறுத்து ஒதுக்கினால் தான் அடுத்த அரசியல்வாதிக்கு ஒரு பயம் இருக்கும். கொஞ்சமா ஜாக்கிரதையா கொள்ளையடிக்கலாம்னு நினைக்கலாம்.

இப்போதும் மம்மி, சித்தின்னு பின்னால ஓடினா என்ன அர்த்தம். ம்ம்அர்த்தமே இல்லை. வெறும் வாய்க்குதவாத charisma இருந்தால் மட்டும் போதும்னு நினப்புதான் வரும். அதுக்கு வேண்டியது மாதிரி ஓசியா நாலு சாமான்களை நம்ம வரிப்பணத்திலேயே வாங்கிக் கொடுத்து அது மூலமா charisma வருதான்னு பார்க்கலாம். இல்ல ஏதாவது ரெண்டு சினிமாவில நடிச்சி சான்ஸ் வருதான்னு பார்க்கலாம்.
நிச்சயமா நல்ல ஆட்சி நடத்தணும்னு மட்டும் நினைக்கவே வேண்டியதில்லை போலும்.

அம்மா மேல் அத்தனை உயிர். மண்சோறு, மொட்டை, அலகு அது இதுன்னு காமிச்சாச்சி. ஆனால் செத்ததும் எல்லாமே மண்ணோடு மண்ணாச்சோ. ஏன்னா, மம்மியைக் கண்ணில காமிக்காமலே சித்து வேலை செஞ்சி கதையை முடிச்சாச்சின்னு மக்கள் கோபமா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
ஆனால் இப்போ எப்படி சித்தி என்ன செஞ்சாலும் சரின்னு தலைய ஆட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க?

காசேதான் கடவுளடா …

டிவி விவாதங்களில் வருபவர்கள் கேட்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வார்களோ என்னவோ! ஜெயலலிதா ஊழல் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து ஊழியாட்டம் மற்ற மூவரும் ஆடினார்கள் என்பது தீர்ப்பு. இதனால் சித்தி முதலமைச்சராக ஆக முடியாது என்பது உறுதியாகிவிட்டது. வேட்டுகள், லட்டுகள் என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
பன்னீர் குழுவில் இருந்த ஒருவரிடம் ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று சொல்ல்ப்பட்ட பிறகும் எப்படி வேட்டு போட்டீர்கள் என்று கேட்டார் நெறியாளர். வந்தவர் சொன்னார்: நாங்கள் வேட்டு போடவேயில்லை. வேட்டு போட்டதெல்லாம் கருணாநிதி ஆட்கள் என்றார். பன்னீர் வீட்டு முன் வேட்டு போட்டது திமுக என்றா சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அந்த மனுஷன் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் ஏதுமில்லாமல் ஆமாம் .. திமுக தான் என்றார். நெறியாளர் அப்படியே விட்டு விட்டார்,
அது என்னங்கநாமெல்லோரும் அத்தனை முட்டாள்கள் என்று அரசியல் ஆட்கள் நினைத்து விட்டார்களா?

சசிகலா காரின் ஓட்டுனர் காரில் ஏறி உட்கார்ந்ததும் சீட் பட்டையை ஒழுங்காக மாட்டிக் கொண்டார்.
அதன் பின் ஒரு பெரிய போலீஸ் ஐயாவின் கார் சென்றதைப் பார்த்தேன். அந்த ஓட்டுனர் சீட் பட்டையை மாட்டவில்லை.
Law makers are the first law breakers!

சசிகலாவின் கார் போய்க்கொண்டிருந்தது. உள்ளே அவர்அந்தக் காலத்தில்உட்கார்ந்திருப்பாரே அதே இடத்தில் ஒரு சின்ன பெண் உட்கார்ந்திருந்தது.
அந்தப் பெண்ணுக்கும் பல கனவுகள் தன்னிச்சையாகவே வந்திருக்கும். இல்ல …?


பாவம் ஸ்டாலின்.
தீர்ப்பு வந்ததும் அவர் ஏதாவது ஒன்றைச் சொல்லியேயாக வேண்டிய கட்டாயம்.
நாலு பக்கமும் கல்லை வீசிக்கொண்டிருந்தார்கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து!

தீரன் என்று ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பேராசிரியர் என்றார்கள்.
பேராசிரியர்கள் மீது இருந்த கொஞ்ச மரியாதையையும் காணாமல் போய் விட்டது.
எனக்குத் தெரிந்த பேராசிரியர்களின் முதுகெலும்பு நன்கு வளையக்கூடியதே. அதுவும் இவர்சாஷ்டாங்க கட்சிக்குள் நுழைந்து விட்டாரல்லவா …. கேட்கவா வேண்டும்!

பஞ்சப் பராரிகளா நம் சட்டசபை உறுப்பினர்கள். ஆனாலும் பஸ்ஸில் ஏறிப்போ என்றதும் மந்தைகள் போல் ஏறிய மகத்துவம் எப்படி நடக்கிறது.
இதுதான் ராணுவ ஒழுங்கோ? இருக்கும் .. இருக்கும்.

அட எங்கப்பா நம்ம V.C. பெருந்தகைகள் எல்லோரும்? சித்திய பார்க்க வரலை; அடுத்து வந்த ரெண்டு மு.அமைச்சர்களைப் பார்க்கவே வரவில்லை. ச்சே! கல்வியின் தரமே ரொம்ப தாழ்ந்து போச்சுபா!

88 பேர் நின்னாங்க. அட .. ஒருத்தருக்குக் கூட நரைத்த மீசை, தலை முடின்னு இல்லை. எல்லோருமே அப்படி
ஒரு இள மையோடு நின்னாங்க.

யாருப்பா அங்க? சித்தி சித்தப்புட்ட சொல்லி நம்ம தீரனுக்கு ஒரு V.C. post வாங்கிக் கொடுங்கப்பா …


ரகசிய ஓட்டெடுப்பு கூட வேண்டாம். புதன் கிழமை அடுத்த ஓட்டெடுப்பு வச்சுக்கலாம். ஆனா அதுக்கு முந்தி சித்தி க்ரூப்பை சுதந்திரமா உட்டுடுங்கப்பா









*

Thursday, February 16, 2017

927. மதங்களும் ... சில விவாதங்களும் பற்றிய ஒரு குறிப்பு





*
R. DEVADOSS PANDIAN, Ph.D.

Doctor of Humane Letters (Honorary)
Professor of Mathematics and Dean of Faculty Emeritus
Vice-President for Academic Affairs  and Dean of Faculty
North Central College, Naperville, Illinois, USA 


Dear Sam,

Finally, I read your book from beginning to the end. It was a good read. Given the nature of the subject, it was not an easy read. I was deeply impressed by your knowledge on this subject.  Apparently, you have done a lot of research and read voluminous amount of work in this area. You write well. I liked your writing style; it was almost like you were teaching your readers--which I enjoyed--while at the same time exhibiting great deal of sensitivity in handling this difficult subject.  

I felt that the articles by the three authors starting from page 71 were a bit of digression from the main focus of the book as they did not cohere well with your good essay in the first 70 pages. Perhaps they belong to appendices. Congratulations on your book--a bold venture indeed. People may not agree with you but Tamil Nadu needs people like you, independent thinkers, who are willing to push us into uncomfortable zone. 


Best,

Pandian


*

Friday, February 10, 2017

926. சல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டுவோம்







*


*

”லென்ஸ்’ என்ற அமைப்பு, தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ”ஐடியாஸ்’ என்ற 3 அமைப்புகள் மெரீனா போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கை நேற்று (9.2.17) நடத்தினார்கள்.

பலர் போராட்டங்களில் நடந்த நிகழ்வுகள், மனதைத் தொட்ட நிகழ்ச்சிகள், போராட்டம்  முடிந்த முறை, காக்கிச் சட்டைகளின் உண்மை நிறம் …. என்று பலவற்றையும் பேசி முடித்தார்கள். அவைகளில் என் மனதில் பதிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

நானும் கூட இது போன்ற போராட்டங்கள் என்று 1965ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், அடுத்து இந்த போராட்டம் என்று இரு போராட்டங்களைப் பற்றி மட்டும் எழுதினேன். ஆனால் 1935ல் நடந்த ஒரு போராட்டம் பற்றி இங்கு பேசிய பிறகு அறிந்து கொண்டேன். அப்போராட்டம் பலராலும் மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. ஒரு வேளை அப்போராட்டம் பெரியார் தலைமையில் நடந்ததால் அப்படி ஒதுக்கப்பட்டிருக்குமோ என்றார் திரு. பாண்டியன்.

கூட்டம் முடிந்து கேள்வி நேரத்தில் விழுந்த மூன்று கருத்துகளைக் குறிப்பிட விழைகிறேன்.

கூட்டம் முடியும் தறுவாயில் ஒரு இளைஞன் வெடித்தான். இதெல்லாமே தோல்வி தவிர வேறொன்றுமில்லை. இன்னும் சல்லிக்கட்டு என்பதை ஜல்லிக்கட்டு என்று சொல்லிக் கொண்டு தான்  இருக்கிறோம்.  வடமொழி ஆளுமையை விட்டு நாம் இன்னும் விலகவில்லை என்று சினந்து கூறினான். நாமும் வடக்கின் வழியில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் தோன்றியது.

 அடுத்து ஒரு இளைஞன் இப்போராட்டங்களில் அரசியல் கலக்காமல் பார்த்துக் கொண்டது ஒரு தவறு என்றான். போராட்டம் காக்கிக் கலகத்தில் முடிந்ததற்கும் இதுவே காரணம் என்றான். இது ஒரு அரசியல் குடைக்குள் வர வேண்டும். அதுவே போராட்டங்களுக்கு ஒரு முகமும், முனைப்பையும் கொடுக்கும் என்றான். அரசியல் உருவாக்கம் தேவை என்றான்.

இறுதியாகப் பேசியவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது:  குப்பத்து மக்கள் போராட்டத்தைத் தாங்கிப் பிடித்து உதவி செய்து காக்கிச் சட்டைகளின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொண்டார்கள். பாவம் அந்த மக்கள். நம்மோடு நின்று அதற்காக அடி வாங்கி பெரும் நட்டம் அடைந்தார்கள். 

அரசு, காக்கிகள் அழித்த சந்தையை 40 லட்சம் செலவில் கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறதாம். ஆனால் நடுவில் கமிஷன் எல்லாம் போக 20 லட்சம் ரூபாயில் அவர்களுக்கு ஒரு சந்தை ஒருவேளை உருவாகலாம். அது நிச்சயம் போதாது.



ஆகவே போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு குளிர் அறைகளோடு கூடிய மீன் சந்தை ஒன்றைக் கட்டிக் கொடுக்கலாம். ஆர்வத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களும், I.T. நண்பர்களும் முன்னெடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அவர்களோடு நிச்சயமாக சேர்ந்து கொள்ளும்.




என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அமைப்பு கட்டி முடிக்கப்பட்டால் அது  மெரினா போராட்டம் / ஜனவரி 18 போராட்டம் / தை மாதப் போராட்டம் / சல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததை காலம் காலமாய் நினைவு கூறும் அடையாளச் சின்னமாக  நிலைத்து நின்று என்றும் இந்தப் போராட்டத்தின் உயர்வை உரத்து வரலாற்றிற்கு நிரந்தரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.





இப்பதிவு உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ … நிச்சயம் இந்தக் கடைசிப் பத்தி பிடித்தவர்கள் பலர் இருப்பீர்கள். இப்பதிவை FBல் SHARE செய்து/ blogல் மறு பதிவிட்டு  பலரின் பார்வைக்கு எடுத்து செல்ல உதவுங்களேன்.



மறு பதிவுகளை blogல் இடுவோர் அதன் தொடுப்பு முகவரிகளை பின்னூட்டத்தில் இடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.







*

Wednesday, February 08, 2017

925. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஜார்ஜ்…? *





*
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்  ஜார்ஜ்…? *


 மெரீனா வாரம்.
நல்லா ஓடிச்சி.
 ஆறு நாள்.

ஊரு உலகமே கண்ணு போட்டிருச்சி! ஆன்னு எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் … பார்த்தாங்க. மாடல் மாதிரி நம்ப பசங்களை எடுத்துக் கிட்டாங்க.


என்ன நடந்துச்சோ .. எப்படி நடந்திச்சோ. ஏழாம் நாள். கலஞ்சி போறதுக்கு 4 மணி நேரம் கேட்டிருக்காங்க பசங்க. ஆனா நம்ம க.த. காவல் துறை, அதாவது கடமை தவறாத காவல் துறைக்கு அங்கங்கே வேர்த்திருச்சி. 2 மணி நேரம் …ஒரு மணி நேரம் அப்டின்னு கேட்டிருக்காங்க. கா.துக்கு தாங்கலை. பாஞ்சிட்டாங்க. கண் திருஷ்டி மாதிரி என்னென்னமோ ஆகிப் போச்சு.


இப்போ ஓபிஎஸ் பேசுறதப் பார்த்தா அவர் காவல் துறைக்கு அப்படி ஒரு ஆர்டர் போட்டிருக்க மாட்டார்னு தோணுது. ஒரு வேளை அவர் சொல்றது மாதிரி mini-mumக்கு ஒரு பொறாமை வந்து காவல் துறையை உசுப்பி உட்டுட்டாங்களோ. அல்லது காவல் துறைக்கு ஆறு நாளா அடக்கி வச்சிருந்த தோள் தினவுகள் அதிகமாகப் போய், அதுனால சாமி அவங்க மேல இறங்கி ஒரு ஆட்டம் போட வச்சிருச்சோ என்னவோ…அல்லது சண்டை போடாமல் களத்தை விட்டு போராட்டக்காரர்களை விடுவிக்கக் கூடாது என்ற high level philosophy ஆகக் கூட இருக்கலாம். எல்லாம் அந்த .... கே வெளிச்சம்!


அதுல நான் பார்த்த காணொளிகள் எல்லாம் … அட .. எப்படிப்பட்ட காவல் துறை. மக்கள் நண்பர்களாயிற்றேன்னு தோணும்படி ஆகிப் போச்சு. என்னமா சும்மா ரோட்ல நிக்கிற வண்டிகளை அடிச்சி நொறுக்குறாங்க. ஒரு வண்டிய ரெண்டு போலீசு அடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய்ட்டு … on second thoughts திரும்ப வந்து மீதி இருக்கிற கண்ணாடி அது இதுன்னு போட்டு சதாய்க்கிறாங்க.


ஆனாலும் எனக்கு என்னமோ அந்த பொம்பிள போலீஸ் ரொம்ப பிடிச்சிப் போச்சு. மஹாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு.என்னே அவர்களது கடமை உணர்ச்சி. தூரத்தில எரிஞ்சிக்கிட்டு இருந்த எடத்தில இருந்து ஒரு குச்சியைப் பத்த வச்சி… அப்படியே ஓட்டமா ஓடியாந்து… அங்க இருந்த ஒரு பாவப்பட்ட ஷெட் ஒன்றினை எரிச்சது உணர்வு பூர்வமாக இருந்தது. கார்த்திகைத் தீபம் ஏத்துறது மாதிரி எப்படி ஓடி ஓடி எரிச்சாங்க. அம்மணி நல்லா இருக்கட்டும் பிள்ளை குட்டியோட.


இன்னொரு காணொளி. அலங்காநல்லூர்னு நினைக்கிறேன். நாலைந்து பேர். பாவம். அஹிம்சாவாதிகள் போலும். போலீஸ் விரட்டி விரட்டி அடிக்கிறப்போ இவர்கள் உட்கார்ந்த இடத்தை விட்டு அகலாமல் உக்காந்திருந்தாங்க. நம்ம காக்கி சட்டை வந்ததுகள். ஒரு இளைஞன். என்ன நினைப்பில் உட்கார்ந்திருந்தானோ… எழுந்திருக்காமல் அப்படியே உக்காந்திருந்தான். பக்கத்தில் சில பெண்களும் உட்கார்ந்திருந்தனர். நம்ம க.உ. காக்கிக்கு உணர்வு கொப்புளிக்க அவனை நாலு சாத்து சாத்தி துரத்தினார். பையன் ஓடவில்லை. ஆனால் நகர்ந்து விட்டான். நம்ம க.உ.கா.க்கு இன்னும் கடமை உணர்வு தீரவில்லை. அங்கிருந்ததில் ஒரு வயதான அம்மா. அதாவது ஒரு கிழவி. அதை நாலு சாத்து சாத்தினார். இப்படித்தான் இருக்கணும்… கடமைன்னு வந்திட்டா கிழவியாவது… குமரியாவது. என்ன நான் சொல்றது …? ஆட்டோவை தீ வச்ச காவல் துறை ஆளைக் கண்டு பிடிச்சி ஒரு பரிசு ஒண்ணு கொடுங்கப்பா. இது மாதிரி நிறைய க.த. ஆட்களை கட்சியில … சாரி …சாரி … துறையில எடுத்துப் போடுங்க. மக்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கும்.


அந்த நடுங்குப்பம் காண்டம் இருக்கே …. அது ஒரு பெரிய சுந்தர காண்டம் மாதிரி. அதில மூணு போலீஸ்காரங்க … ரெண்டு ஆம்பிளை + ஒரு பொம்பிளை ... பெரிய மீனாகப் பார்த்து ஆளுக்கு ஒண்ணு ஆட்டை போட்டதைச் சொன்னாங்க. அதுவும் அவங்க வச்ச நெருப்புல வெந்து வேஸ்ட் ஆகக் கூடாதே அப்டின்ற கடமை உணர்ச்சிலதான் அப்படி எடுத்துட்டு போயிருப்பாங்க. இல்ல?



இதெல்லாம் ஏன் பண்ணினாங்கன்னு தெரியலை. ஆனால் சமீபத்தில் வாசித்த ஒரு நூலில் பார்த்த சில வாக்கியங்கள் இந்த நிகழ்வு மேல் சிறிது அதிகமான வெளிச்சத்தை வீசியது. அதைத் தமிழ்ப் படுத்தி சில வரிகள் தருகிறேன். இங்கேயும் அது பொருந்துமா என்று பாருங்கள்:



“இதே போன்ற “எழுச்சி” இதற்கு முன்பும் இந்தியாவில பல இடங்களில் நடந்து வந்துள்ளன. தெலுங்கானாவிலும், மிசோராமிலும் காவல் துறையும், ராணுவமும் இணைந்து இதே போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியுள்ளன.


1984ல் தில்லியிலும், 2002ல் குஜராத்திலும் நாம் கண்ட நிகழ்வுகள் சீக்கியருக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நடந்த அந்த நிகழ்வுகள் மக்கள் திரளின் “பெரும் சினத்தால்” எழுந்தது என்று சொல்லப்படலாம். ஆனால் உண்மையில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும், ப.ஜ. கட்சியும் தான் இதற்கான அடிப்படைக்காரணங்களாக இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.


2014ல் மோடி அரசு பதவியேற்றதும்  சிறுபான்மையினரையும், முற்போக்காளர்களையும் கண்காணிப்பதும் தொடர்ந்து நடந்து வந்தன, … நாட்டில் எங்கெல்லாம் அரசியல் தொடர்பில்லாத வலதுசாரிகளின் போராட்டங்கள் ஆரம்பமாகின்றனவோ அங்கெல்லாம் காவல் துறையினரின் அடக்கு முறைகள் தலையெடுத்தன. 

இவை ஒரு வழக்கமான முறையாக நாடளவில் நடைபெற ஆரம்பித்தன. 

 *
இதை எழுதியது ஒரு ஜார்ஜ். டைட்டில்ல வர்ர ஜார்ஜ் இந்த ஜார்ஜ் தான்.


 நீங்க வேற ஜார்ஜை நினச்சிருந்தீங்கன்னா … அது உங்க கனவு ..



 *

Monday, February 06, 2017

924. மதங்களும் ... சில விவாதங்களும், .......... தமிழ் இந்துவில் ஒரு குறிப்பு.






*


மதங்களின் அடித்தளத்தை உலுக்கி ….

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை அவர்கள் பிறந்த உடனேயே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. வீடு, உறவினர், புழங்கும் வெளி ஆகியவற்றின் மூலமும் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை ஆழமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவரவர் மதத்தை விமர்சன பூர்வமாகப் பார்க்கும் புறவயமான பார்வை இல்லாமல் போகிறது. தருமியின் இந்த நூல் பல்வேறு மதங்களையும் புறவயமான பார்வையுடன் விமர்சிக்கிறது. 

மதங்களின் புனித நூல்களின் நதிமூலம், ரிஷிமூலத்தையும் தருமி ஆராய்ந்திருக்கிறார். கேள்வியே கேட்கப்படாமல் காலம் காலமாகப் பின்பற்றப்படும் மத வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் அடித்தளம் மீதே கைவைக்கிறார். இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம் இம்மதங்களின் உட்பிரிவுகள் அவற்றின் உள்முரண்கள் என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தருமி அலசியிருக்கிறார். மதவாதிகளின் கண்ணுக்குப் படாமல் அவர் தப்பிக்க வேண்டும்!

இந்த நூலில் தருமியின் கட்டுரைகள் மட்டுமல்லாமல் தமிழ்ப்படை, ஜமாலன், ஆர். கோபால் ஆகியோரின் கட்டுரைகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பெரியதொரு விவாதத்தைக் கோரும் நூல்.

-       தம்பி





தமிழ் இந்துவில் உள்ள “நூல் வெளி”யில் வரவேண்டும் என்று விரும்பிய என் நூலைப்பற்றிய குறிப்பு ஒன்று சென்ற சனிக்கிழமை – 4.2.2017 – அன்று வெளி வந்துவிட்டது.

பெரும் மகிழ்ச்சி.

குறிப்பாளர் – திரு தம்பி –நூலை முழுவதுமாக வாசித்து நல்லதொரு ஆய்வின் அடிப்படையில் கொடுத்திருப்பது அறிந்து அவருக்கு என் பாராட்டுகள். அதிலிருந்த ஆழமும் அழுத்தமும் மிகவும் பிடித்திருந்தது. மிக்க நன்றி.

lay out நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  நல்ல top slot கொடுத்துள்ளார்கள்.








*