Sunday, April 29, 2018

981. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...8 லேவியர்

*

3. லேவியர்

முன்னுரையில் வரும் வார்த்தைகளே என் விவாதத்திற்கு நல்ல சான்றாக விளங்குகிறது. எல்லா மதங்களும் ஏதோ ஓரிடத்தில் ஆரம்பித்தது. அதனால் அம்மதத்தின் புராண / இதிகாச நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்த நாட்டு எல்லைக்குள் நடப்பதாகவே இருக்கும் என்பது மதங்களுக்கு எதிரான  முக்கியமான விவாதங்களில் ஒன்றாகக் கருதுவேன். இந்த முன்னுரையில் சொல்லப்படுவது: ”பழங்கால இஸ்ரயேலர் தம் கடவுளின் தூய தன்மையையும், அவரை வழிபடுவதற்கான முறைகளும், … அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் …”  இந்நூலில் இடம்பெறுகின்றன என்று சொல்கிறது. அதாவது, இம்மதம் இஸ்ரயேலர்களின் மதம் என்ற உண்மை இங்கு உரத்துச் சொல்லப்படுகிறது. தனி ஒரு இனத்துக்கான கிறித்துவ மதம் ஐரோப்பா சென்ற பின் பெரும்பான்மையாக காலனியாதிக்கத்தின் மூலம் உலகெங்கும் பரப்பப்பட்டது என்ற வரலாற்று உண்மை நமக்கெல்லாம் தெரியும். மேலும், 11:45ல் “உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே” என்று கூறப்படுவதும் மேல் சொன்ன விவாதத்திற்கு சார்பான ஒரு மேற்கோள். இந்தக் கடவுள் இஸ்ரயேலரின் கடவுளே; உலகின் எல்லா மக்களுக்கும் இம்மதம் என்பது பரவிய பின் இட்டுக்கட்டப்பட்ட கதையே!

இந்த நூலில் லேவியர் என்ற இனத்தவர் பற்றிப் பேசப்படுகிறது. கடவுள் இந்த இனத்தவருக்கு (நம்ம ஊர்ல ஐயர்மாருக்குக் கொடுக்கப்படும்) ‘உயர்ந்த இடம்’ மாதிரி இவர்களுக்கும் கொடுக்கப்படுவது போல் உணர்ந்தேன். விளக்கம் பார்க்க முனைந்தேன். சரியாக ஏனிந்த லேவியருக்குத் தனியான உயர்ந்த இடம்  என்பது எனக்குத் தெரியவில்லை. யாரும் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வேன்.

இப்பகுதியில் இரண்டு முக்கியாமான விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. இந்த மதத்து கடவுள் – ஜெஹோவா? – பயங்கரமான ‘காசு பிடுங்கும்’ கடவுளாக எனக்குத் தெரிகிறார். ஏனெனில் இந்தப் பகுதியில் பேசும் இரு விஷயங்கள்; பலி & காணிக்கை. தலைப்புகளைப் பாருங்களேன் … எரி பலிகள்; தானியப் படையல்கள்; நல்லுறவுக் காணிக்கைகள்; பாவங்களுக்கான காணிக்கைகள்; பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள்; பதிலாகச் செலுத்த வேண்டிய காணிக்கைகள்; ….இப்படியே போகின்றன. 

என்ன காணிக்கை கொடுக்க வேண்டும்; எப்படி கொடுக்க வேண்டும்; எதெதில் தீட்டு உள்ளது; அதிலும் ”ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப் படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது”. Why this allergy for acidity to the Almighty??!! Allergy even to honey … “தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப் பலியாக்க வேண்டாம்.” ஆண்டவர் கொடுக்கும் பலிகளை அப்படியே சாப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. “இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப் பலி உணவாகும். (3:11)

பாவங்களுக்கான பரிகாரங்களும் சொல்லப்படுகிறது. A big list of food and their recipe. தீட்டு பற்றியும் பல விவரங்கள். எப்படி தீட்டு விழுகிறது; எப்படி பகலெல்லாம் நீரில் கிடந்தால் அப்பொருளின் தீட்டு விலகி தூய்மையாகிறது போன்றவைகளின் தொகுப்பு இங்குள்ளது. குழந்தை பெறும் தீட்டும், அதனை நீக்குவது பற்றியும் சொல்லப்படுகிறது. அட … தொழுநோயைப் பற்றிய விவரங்கள் சிரிப்பு மூட்டுவதாக உள்ளது. It is all bad medication and poor sanitization. 

என்னைப் போன்ற வழுக்கைத் தலையர்களுக்கும் நல்லது ஒன்று சொல்லப்பட்டுள்ளது. 11:40 – “தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால் அவர் தூய்மையானவர்”! அடே … அப்போ நான் தூய்மையானவன் தான். ஆனால் … பாவம் முடியிருப்பவர்கள். 19:27 தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம். தாடியின் ஓரங்களைச் சிரைக்க வேண்டாம்”.  

இன்னொரு ஆச்சரியம். எல்லோருக்கும் தெரிந்த ஒரு குரான் வாக்கியம் உண்டு: ‘உன் வேலையாளின் வியர்வை காயும் முன் அவனுக்குக் கூலியைக் கொடுத்து விடு’.  இங்கே 19:13ல் “வேலையாளின் கூலி விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது” என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் ஒரு copy & paste தான்.


*


4 comments:

Unknown said...

கிறிஸ்து பிறந்த பின்னர்தான் கிறிஸ்தவம் உருவாகிறது, லேவியராகமத்தில் சொல்லப்படுகிற சடங்குகள் யூத மதத்தை சார்ந்தவை.

தருமி said...

//லேவியராகமத்தில் சொல்லப்படுகிற சடங்குகள் யூத மதத்தை சார்ந்தவை.//

அப்போது ஏன் இன்னும் லேவியராகத்தையோ / பழைய ஏற்பாட்டையோ ஒரு கிறித்துவ வேத நூலாக வைத்திருக்கிறீர்கள்?
இதே போல் மிக மட்டமான கதைகள் ப.ஏற்பாட்டில் உண்டே என்று சொன்னாலும் இதை பதிலைத்தான் சொல்வீர்கள்.

இஸ்லாமிய மதத்தில் ஹதீஸ்கள் உண்டு. அதை அவர்கள் நல்லது .. கெட்டது...சரியானது .. சரியில்லாதது என்று பல வகைகளாகப் பிரித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஹதீஸ்களை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். இதுவரை அவர்களிடமிருந்த எப்பதிலும் இல்லை. அதே கேள்வியை உங்களுக்குக் கொடுக்கிறேன்: ப. ஏற்பாடு யூதர்களுக்குரியது என்றால் பின் ஏன் அது கிறித்துவ மதத்தில் இருக்கிறது? அதிலும் லேவியராகமம் மட்டும் தான் யூதர்களுக்கானதா ... இல்லை பழைய ஏற்பாடு முழுவதும் யூதர்களுக்கானதா என்றும் சொன்னால் நல்லது.

G.M Balasubramaniam said...

ஒரு மதம்பற்றியே சரியாகப் புரியவில்லை பல மதங்களையும் சிர்தூக்கி பார்க்குமுங்களை நினைத்தால் சந்தோஷமாய் இருக்கிறது

தருமி said...

நானும் ஒரு அரைகுறைதானே....!

Post a Comment